Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவானில் வைத்து குலுங்கியது ஸ்ரீலங்கன் விமானம் ; ஐவர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பைரவன்,

செமத்தியான நெத்தியடி.

தயவு செய்து அடிக்கடி யாழுக்கு வந்து எழுதவும்.

வாசி,

ஏர் தேர்புலன்சை பற்றி நீங்கள் தந்த பதிவுகள் நல்ல ஆதாரம். விமானம் ஆடியதை வைத்து பயங்காட்டுற கூட்டத்துக்கு தெரியாமலில்லை. தெரியாத மாரி நடிக்கீனமாம்.

சனத்த பேய் காட்ட்டீனமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

In 2013, only 11 passengers and 13 crew members were injured because of turbulence on commercial flights, a fraction of the 826 million travelers on domestic and international flights from the U.S., according to federal statistics

தம்பி புழுகுறதுக்கு ஒரு அளவு இருக்கு கண்டியளோ...

Just move on.

  • கருத்துக்கள உறவுகள்

domestic and international flights from the U.S.,

இதைத்தான் நுனிப்புல் மேயுறது என்பது.

யூ எஸ் மட்டுமே உலகமில்லை கண்ணுகளா :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு என்ன பிரச்சனை ஐயா? பச்சை பிழை பிழையாக எழுதி கொண்டு அது பிழை என்றால் அது இல்லை இது, இது இல்லை அது என்று கொண்டு.... நீங்கள் திருத்துவது உங்கட விருப்பம். ஆனா எனக்கு தெரிந்ததை நான் சொல்லி இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்ன பிரச்சனை ஐயா? பச்சை பிழை பிழையாக எழுதி கொண்டு அது பிழை என்றால் அது இல்லை இது, இது இல்லை அது என்று கொண்டு.... நீங்கள் திருத்துவது உங்கட விருப்பம். ஆனா எனக்கு தெரிந்ததை நான் சொல்லி இருக்கிறேன்.

 

அது, அவர்களின்... குணம். எரிமலை... வொல்கானோ. :rolleyes:  :)  

திருந்தாத, ஜென்மங்கள். இதுக்கெல்லாம்.... மண்டையை, பிய்க்காதீர்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வால்கனோ,

உங்களுக்கு தெரிந்தது தான் மற்றயவர்களுக்கும் தெரியோணும் என்பதில்லை.

ஏர் டேபுனன்ஸ் ஒரு சாதாரண விசயம். காயம் வருவது ஒரு செய்தியாகும் அளவுக்கு அசாதாரண விடயம். அதுக்கு மேலே இதில் ஒன்றுமில்லை.

இதை வைத்து இங்கே பேயோட்டி சனத்தை பயப்பிடுத்தும் வேலையை செய்யப் பார்ப்போரைத்தான் நானும் வைரவனும் எதிர்கிறோம்.

உங்க நல்ல மனசுக்கு நீங்கள் ஏர் டெபுனன்சில் மாட்டபில்லை. சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமாரே,
வானில் பறக்கும் விமானம் சந்தர்ப்பங்களில் உயர்/தாழ் அமுக்கத்தில் சிக்கும் போது விமானத்தில் குலுக்கம் / ஆட்டம் / ஏற்படுவது சாதாரண விடயமே. அமுக்கத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்ப விளைவுகளும் பாரதூரமாக அமையலாம்.
அதனை தடுப்பதற்கு பல யுக்திகள்,  தொழில் நூட்பங்கள் இருக்கின்றன.
உதாரணம் அதனை முன்கூட்டியே அறிந்து அந்த உயர்/தாழ் அமுக்க பிரதேசத்தை தவிர்த்து பயணிப்பது.
பயணிகள் முதல்,  பணியாளர்கள் வரை இருக்கைகளில் பட்டி அணிந்து இருப்பது..
இவை எல்லாவற்றையும் மீறி எதுவும் நடக்குமானால் அதன் பெயர் விமான விபத்து!!!
இது உலகில் இருக்கும் எல்லா விமான சேவைக்கும் பொருந்தும்.
ஸ்ரீலங்கன் விமானம் என்ற உடன் " குசுவுக்கு பயந்து கோட்டையை உடைத்த கதையாய்" இங்கே ஒரு சிலர் கதைப்பது தான் ஆச்சர்யம்.
ஸ்ரீலங்கன் விமான விமான சேவை பற்றி குறிப்பிடும் போது:
விமான பாதுகாப்பு குறித்து அளிக்கப்படும் 7 நட்சத்திர குறியீட்டில் - ஸ்ரீலங்கன் 7 / 7
Safety rating : 7/7
Product rating : 5.5/7

இதையும் சிங்களவன் காசு கொடுத்து ஏற்பாடு செய்திருப்பான் என்றும் உங்கள் பட்சி சொல்வதில்  வியப்பு ஏதும் இல்லை. 

http://www.airlineratings.com/ratings/53/srilankan-airlines

 

தன் எல்லாம் தெரிந்தவர் ஈகோவுக்கு ஆபத்து வந்துவிடுமோ என யாருக்கும் பயம் வேண்டாம்.

 

உங்கள் பேச்சை கேட்டு ஆஹா ஓகோ போட ஒரு வில்லுப் பாட்டு கோளயாக் கூட்டம் எப்பவும் இருக்கும்

:)

 

Air turbulence தான் சாதாரண விடயம் என எழுதினேனே தவிர air turbulence resulting in injury ஐ சாதாரண விடயம் என்று எழுதவில்லை.

 

சொறிலங்காவில் படித்த தத்து பித்து ஆங்கிலத்துக்கு இது விளங்காது தான்.

 

இந்தத் தலைப்பின் செய்தி காற்று அமுக்கத்தால் நிகழ்ந்த பணியாளர்களின் காயம் பற்றியது, காற்று அமுக்கம் பற்றியது அல்ல.
மேலும் ஒருவர் எழுதுகிறார் புறக்கணிப் போராட்டம் வெற்றி பெறவில்லை அதனால் நாங்கள் அதனை மேலும் தோற்கடிப்போம்  என்று,  இது எத் தகைய    தர்க்கம் என்று விளங்கவில்லை.

சிறிலங்காவில் நடக்கும் எந்த விபத்துக்களும் முறையாக விசாரிக்கப்படுவதில்லை ஏனேனில் , சிறிலங்கன் எயார்லையினின் அரசியல் செல்வாக்கை மீறி, சிவில் எவியீசன் ஆதொரிட்டி செயற்பட முடியாது. அதில்   சுயாதீனமாக விசாரிக்க வெளிக்கிட்ட பலர் நாட்டை விட்டுச் செல்ல வைக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் அரச அதிகாரிகள். இந்தக் குறிப்பிட்ட சம்பவம் எதனால் நிகழ்ந்தது என்பது பற்றி விசாரணை அறிக்கை வெளியிடப்பட மாட்டாது. அமெரிகவிலோ  அய்ரோப்பவிலோ  இவ்வறான விசாரணை அறிக்கைகளை மக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்படும். சுயாதீனாமன விசாரணைகள்  நடை பெற்று விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு, அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கபடுவார்கள், அக் காரணம் மீண்டும் நிகழாத வண்ணம் பரிந்துரைகள் மேற் கொள்ளுவார்கள்.

தொடர்ச்சியாக இங்கே  கற்பனைகள் , அவதூறுகள் , பொய்யான விடயங்கள் ' நையாண்டி' என்னும் பெயரில் எழுதப்பட்டு வருகின்றன. இவ்வாறான கருத்துக்கள் மேல்  அல்லாத கருத்தாளர்கள் மீதான தாக்குதலைச் செய்பவர்கள் மீது யாழ்க் களம் கடந்த  காலங்களில்  கடுமையான நடவடிக்கைகளை எடுத்து , உண்மையான கருத்தாடல்களைச் செய்வதற்கான சூழலை உருவாக்கி இருக்கிறது. ஆனால் இப்போது அது நிகழ்வதில்லை.      

தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று இங்கு பல சொற்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதுவே தனது அறிவின் தகுதி என ஒரு அறிவிலி எழுதி இருக்கிறார். இதுவும்  யாழ்க் கள விதிகளுக்கு முரணானது. உனக்கு ஆங்கில அறிவு இல்லை அதனால் உனக்கு அறிவு இல்லை எனவும் தனி நபர் தாக்குதலை நடாத்தியுள்ளார். அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அவருக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நீண்டகாலமாக யாழ்க் களத்தில் இருப்பவர்கள், என்னோடு தொடர்பில்  இருந்தவர்கள் இருப்பவர்களுக்கு நான் யாரென்று தெரியும். நான் என்ன என்ன வேலை செய்கிறேன்  என்பதுவும் தெரியும். நான் செய்யும் வேலைக்கு ஆங்கில அறிவு முக்கியமானது, அந்த அறிவையே எனது உழைப்பாக இன்றும் எமது போராட்டத்துக்குச்  செய்து கொண்டு வருகின்றேன்.    வெறும் சாய்மனைக் கதிரையில் இருந்து கொண்டு, போராட்டம் பற்றிய, போராடுபவர்கள் பற்றிய எந்தத் தெளிவும் இன்றி, இணையத்தில் 'நய்யாண்டி ' என்னும் பெயரில் பலரைக் காயப்படுத்தி கூரூர இன்பம் காணும் செயற்பாட்டைச்  செய்பவர்கள் , பெரும்பாலும் காழ்புணர்வு உடைய வாழ்வில் தோல்வியுற்ற மனிதர்களாகவே  இருப்பர்கள்.என்னைப் பற்றி மேற்கொள்ளப்படும் தனி நபர் தாக்குதலுக்கு பதில் சொல்ல நான் என்னைப் பற்றி எழுதியே  பதில் முன் வைக்க முடியும்.  அப்படி எழுதினால் அது சுய தம்பட்டம்  என மேலும் தனி நபர் தாக்குதல் நடாத்தப்படுகிறது. இப்படியான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து யாழ்க் களம் அவர்களைத் திருத்தி இருக்கிறது. ஆனால் இன்று அது நடைபெறுவது இல்லை என்பது கவலைக்குரிய விடயம்.               

இதில் மேலும் எழுதி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மீண்டும் நேரம் வரும் போது எழுதுவேன்

 

கொந்தளிப்ப
:  turbulence

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி முனையில் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்திய, காவாலிகளை வைத்து புலத்தில் விமர்சிப்பவர்களை அடித்து நொருக்கிய காலம் மலை ஏறி விட்டதை ஏற்க கஸ்டமாய்த்தான் இருக்கும்.

யாழ் எப்போதும் தமிழ் தேசியத்தை, மாவீரர்களை இழிவு படுத்தும் பதிவுகளை அன்று போல் இன்றும் கத்தரித்தே வருகிறது.

முன்பு இருந்த அச்சமூட்டும் சூழ்நிலை, ஊரில் இருப்போருக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படும் சூழல், யாழ் உட்பட பல புலத்து இணையதள உரிமையாளருக்கு இப்போ இல்லை.

The worst form of censorship is being forced to implement self-censorship என்பார்கள்.

ஆசிரியர் பீட முடிவுகளை "கிளிநொச்சியின் எழுதப் படாத விதிகளுக்கு" அமைய எடுக்க வேண்டிய நிர்பந்தம் யாழ் உள்ளிட்ட புலம்பெயர் இணயங்களுக்கு இப்போ இல்லை என்பது ஒரு முக்கியமான ஆரோக்கிய சூழல்.

 

புலிக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு, இணைய தளங்களில், ஒண்டுக்கும் உதவா பேப்பர்களில் கருத்து வன்முறை செய்தோருக்கு, இந்த புது யதார்த்தம் கசப்பதில் ஆச்சரியமில்லை.

எல்லோரையும் பற்றி, அவர்களின் நிஜ முகங்கள் தெரிந்துதான் நானும் எழுதுகிறேன்.

 

உங்கள் நேரம் பொன்னானதெனில் அதை ஏதேனும் நகை கடையில் அடகு வைக்கலாம், அநியாயமாய் யாழில் ஏன் செலவழிப்பான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கன் விமான சேவைக்கு எந்த நேரத்திலும் ஆதரவில்லை!

ஆனால் டர்புலன்ஸ் மூலம் பயணிகள் பந்தாடப் பட்டுக் காயம் வருவது எந்த விமானத்திலும் நடக்கலாம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றே ஒன்றைத்தான், நான் சொல்லுகிறேன்: விமான பறப்பில் பயணிகள் / பணியாளர் காயமடைவது சாதாரண நிகழ்வு அல்ல. அது 2013ம் ஆண்டு, 800 மில்லியன் பேர் பறந்த போது , 15-20 க்கு நடந்திருக்கிறது. அது, ஒவ்வொரு இலங்கையரும் , ஒவ்வொரு நாளும் 40 நாட்கள் எங்கேயாவது விமானத்தில் பறந்தால், 15-20 பேருக்கு இத்தகைய விபத்து வரும். 

 
அது ஒரு சாதாரண நிகழ்வு என்றால், எனது கருத்துக்கள் தவறாகும். 
 
அமெரிக்காவை நான் எடுத்ததிற்ககு காரணம், கிட்டத்தட்ட உலகின் 1/3 பறப்புக்கள் இங்கே நடக்கிறது, மற்றது தகவல்களை பெறுவது இலகு. 
 
சுபம்.
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கன் விமான சேவைக்கு எந்த நேரத்திலும் ஆதரவில்லை!

ஆனால் டர்புலன்ஸ் மூலம் பயணிகள் பந்தாடப் பட்டுக் காயம் வருவது எந்த விமானத்திலும் நடக்கலாம் என்பது என் கருத்து.

வணக்கம் ஜஸ்டின்,
உங்களை காண்பதில் மகிழ்ச்சி. 
நீங்கள் வைய்த்த கருத்தை தான் நானும் கொண்டுள்ளேன்.
கொசுறு தகவல் : நான் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றியவன்.
தூற்றி விமர்சிக்க பற் பல விடயங்களும் போற்றி விமர்சிக்க சில விடயங்களும் இருக்கின்றன.:)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்டின்,
உங்களை காண்பதில் மகிழ்ச்சி. 
நீங்கள் வைய்த்த கருத்தை தான் நானும் கொண்டுள்ளேன்.
கொசுறு தகவல் : நான் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றியவன்.
தூற்றி விமர்சிக்க பற் பல விடயங்களும் போற்றி விமர்சிக்க சில விடயங்களும் இருக்கின்றன.:)

உரையாடுவதில் மகிழ்ச்சி சசி! யாழின் புதிய அமைப்பைப் பார்க்கலாம் என்று வந்து உலவுகிறேன். நாற்சந்தியில் நீங்கள் போட்டிருக்கும் பதிவையும் இன்று தான் பார்த்தேன். எனக்குள்ள அதே ஆதங்கம் தான் உங்களுக்கும்!.

உண்மை தான்! சிறு குழந்தைகள் பயணிக்க சிறிலங்கன் எமிரேட்சை விட நல்லம் என்பார்கள். ஆனால் இப்போது எமிரேட்சையும் சிறிலங்கனையும் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது கட்டார் விமான சேவை! நல்ல சேவை, மலிவான கட்டணம் என்று அசத்துகிறார்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த கட்டணத்தில் நீறைந்த சேவை கட்டாரில்தான். சொந்த காசில் போவதெண்டால் விலையை பொறுத்து, கட்டார், சிறிலங்கன், எமிரேட்ஸ் ஓகே.

கிளையண்டின் காசில் பறப்பதெண்டால் - சிங்கப்பூர் :)

எமிறட்சில் அப்படி என்ன குறை கண்டீர்?? குறிப்பக அவர்களது  Inflight entertainment system யாராலும் மிஞ்ச முடியாது !! உணவு எப்படி என்று தெரியவில்லை , அதை விட நல்ல புதிதா விமானக்கள். இது கட்டார், எடிஹாடுக்கும் பொருந்தும் !!

Edited by Dash

 

உரையாடுவதில் மகிழ்ச்சி சசி! யாழின் புதிய அமைப்பைப் பார்க்கலாம் என்று வந்து உலவுகிறேன். நாற்சந்தியில் நீங்கள் போட்டிருக்கும் பதிவையும் இன்று தான் பார்த்தேன். எனக்குள்ள அதே ஆதங்கம் தான் உங்களுக்கும்!.

உண்மை தான்! சிறு குழந்தைகள் பயணிக்க சிறிலங்கன் எமிரேட்சை விட நல்லம் என்பார்கள். ஆனால் இப்போது எமிரேட்சையும் சிறிலங்கனையும் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது கட்டார் விமான சேவை! நல்ல சேவை, மலிவான கட்டணம் என்று அசத்துகிறார்கள்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.