Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழின் இரு பெரு விருப்பிற்கு உரியவர்கள் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

அர்ஜூன் யாழின் என்று சொன்னது யாழ் தேர்தல் தொகுதியை அல்ல. யாழ் களத்தை. இங்கே அதிகம் அர்சிக்கப் படுவோர் என்ற பொருளில்.

 

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலை அரசியலுக்கு தான் இப்ப மக்கள் புள்ளடி போட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

ஒருவர் ஆயுத சன நாய் அக பாசிசவாதி.

மற்றவர் பின்கதவு சன நாய் அகவாதி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றுவேசன் சோங்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு பேரும் வேவ்வேறு துருவங்களாக தங்களை காட்டிக்கொண்டு....
இவர் சொல்லுறதுக்கு அவர் ஆமா போடுறார்
அவர் சொல்லுறதுக்கு இவர் ஆமா போடுறார்

இரண்டுபேருக்கும் ஐயர் வைச்சு கலியாணம் கட்டாத குறை :lol:

மைத்திரிக்கு வாக்களிக்கும் போதே யாழ் களத்தில் மூலையிலிருந்து சிலர் மகிந்தவுக்கே வாக்களியுங்கள் என்று கத்தினார்கள் போல யாரின் காதிலும் விழவில்லை.மீண்டும் டக்கியும் மஹிந்தவும் ஏதோ ஒரு இடத்தில் உட்காருவது நிச்சயமாகிவிட்டது.இதே போல தொத்துபறியிலிருந்த புலம் பெயர்க்கட்டமைப்புகளையும் அறுத்து துண்டாடியாயிற்று.அடுத்தது என்ன கிணறுகளில் கலக்கும் ஒயிலுக்கு பதிலாக நஞ்சைக்கலந்து விடுங்கள் ஒவ்வொரு நாளும் செத்து பிழைக்கும் உறவுகள் ஒரே நாளில் போய் முள்ளி வாய்க்கால் உறவுகளுடன் இணையட்டும்.கீழ் உள்ள இணைப்புகளையும் தவறாது வாசியுங்கள்.இப்படியான காலகட்டத்தில் இப்படியும் செய்வார்கள் சிலர்......

நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் விடுதலைப்புலிகள் பிரபாகரன் , பொட்டு அம்மான் தமிழக தலைவருக்கு கடிதம் !

இலங்கையில் தனி ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடி வந்த விடுதலைப்புலிகளுக்கு கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் பின்னடைவு ஏற்பட்டது. சிங்கள ராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீசி ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மே மாதம் 18-ந்தேதி நடந்த சண்டையில் பிரபாகரனை கொன்று விட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. பிரபாகரன் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரது உடலையும் சிங்கள வீரர்கள் முள்ளி வாய்க்காலில் இருந்து எடுத்து வந்து காண்பித்தனர்.
விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து காட்டிக் கொடுக்கும் வேலை செய்த கருணாவும், அந்த உடலை பார்த்து விட்டு, “அது பிரபாகரன் உடல்தான்” என்றார். ஆனால் விடுதலைப்புலிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், தேசியத் தலைவர் பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். உரிய நேரத்தில் அவர் வெளியில் வருவார் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவுத்தலைவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது தொடக்கம் முதலே உறுதியாக தெரிய வந்தது. சிங்கள ராணுவ உயர் அதிகாரிகளும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கலாம் என்று கூறினார்கள்.
பிரபாகரனுக்கு மரணச் சான்றிதழ் ஒன்றை தற்காலிகமாக தயாரித்துக் கொடுத்த சிங்கள அதிகாரிகளால், பொட்டு அம்மான் விஷயத்தில் அப்படி ஒரு தற்காலிக சான்றிதழைக் கூட கொடுக்க இயலவில்லை.

இந்திய உளவு அமைப்பான ராவும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். என்று கருதுகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச போலீஸ், பொட்டு அம்மானை தேடி வருவதாக இணையதளத்தில் அறிவித்துள்ளது.விடுதலைப்புலி தலைவர்கள் அனைவரையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள அரசுக்கு சர்வதேச போலீசின் அறிவிப்பு தலைவலியைக் கொடுத்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள அவர்கள் பொட்டு அம்மான் போரின் கடைசி நாட்களில் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு தகவலை பரப்பி வருகிறது.
ஆனால் இது சிங்கள உயர் அதிகாரிகள் நடத்தும் நாடகம் என்று உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர்களுக்கு புரிந்தது. வழக்கம்போல சிங்கள அதிகாரிகள் தமிழர்கள் மனதை திசை திருப்புவதற்காக நடத்தும் ஒரு உளவியல் யுத்தம் என்பதை புரிந்து கொண்டனர். பொட்டு அம்மான் விஷயத்தில் தாங்கள் பரப்பிய தகவல் எடுபடாமல் போய் விட்டதே என்ற ஆதங்கம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கள அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை விடுதலைப்புலி தலைவர்கள் கொடுத்துள்ளனர் நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரனும், பொட்டு அம்மானும் கடிதம் எழுதி உலகம் முழுக்க வாழும் தங்கள் ஆதரவாளர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
அத்தகைய ஒரு கடிதம் தமிழக அரசியல் தலைவர் உள்பட 5 பேருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் தளபதிகள் உயிருடன் இருப்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை தொடங்குவார்களா? களத்தில் எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையில் அதற்கு சாத்தியம் உள்ளதா? சிங்கள பேரினவாதத்தை ஆயுதப் போராட்டத்தால் வீழ்த்த எவ்வளவு நாட்கள் தேவைப்படும்? என்றெல்லாம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கும் வல்லமை விடுதலைப்புலிகளிடம் இருப்பதாக சர்வதேச போர் நிபுணர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். ஆனால் சொந்த நாட்டில் எல்லா உரிமையும் பெற்று வாழ கேட்கும் கோரிக்கையை தீவிரவாதம் என்று சிலர் முத்திரை குத்துவதை சாத்வீக முறையில் எதிர் கொள்ள விடுதலைப்புலிகள் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. உலக வரலாற்றில் சொந்த மண்ணில் வாழா விட்டாலும் நாடு கடந்த அரசை உருவாக்கி பல இனம் வெற்றி பெற்றிருப்பது போல, ஒரு முயற்சியை தற்போது விடுதலைப்புலிகள் முன் எடுத்துள்ளனர்.

அதாவது நாடு கடந்த ஈழ அரசை விடுதலைப்புலிகள் உருவாக்கி வருகிறார்கள். இதற்கான நடடிவக்கைகளில் விடுதலைப்புலிகளின் சர்வ தேச பிரிவு ஈடுபட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

11216575_10153473585774396_3676218957206

எதை வைத்து நீங்கள் தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்? முதலில் உனது மொழி உன்னிடம் இருக்கிறதா? கேவலம் ஒருநிமிடம் கூட உன்னால் உன் சொந்த மொழியைப் பேசக்கூடத்தெரியவில்லை. வெட்கமில்லாமல் வேறுமொழி கலந்து இன்னொரு தமிழனிடம், அரைவேக்காட்டு ஆங்கிலம் பேசும் சூப்பர் தமிழனாகிவிட்டாய். மொழிக்கலப்புடன் பேசுவதை அவமானமாகக் கருதாமல், பெருமையோடு மிதப்பில் அலைகிறாய்.
எதைவைத்து உன்னை நீ தமிழன் எனச்சொல்கிறாய்? உன் போன்றவர்கள் மட்டுமே பெருகிவிட்ட இந்த மாநிலத்தை எதற்காக இன்னும், தமிழ்நாடு என நாக்குக் கூசாமல் அழைக்கிறாய். பேசாமல் மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால் குற்றவுணர்ச்சியில்லாமல் மகிழ்ச்சியாக எதைப்பற்றியும் சிந்திக்காமல் வாழலாமே!
தமிழா.. 
உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே? திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது மட்டுமே நமது பெரும்சாதனையாக இருக்கிறது. உன் நிலம், உன் கல்வி, உன் உணவு, உன் மருத்துவம், உன் கலைகள், உன் போராட்ட குணம் எதுவுமே உன்னிடமில்லை. உன் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசினால் தண்டனை தருகிறான். தமிழ்ப் பாடம் ஒன்றையாவது படியென்று சொன்னால், அதுவும் முடியாது என்று நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில்தான் உன் குழந்தைகளைச் சேர்க்க இரவு பகலாக நாய்போல் தெருவில் காத்துகிடக்கிறாய்.
நீயே அனைத்தையும் இழந்து, தமிழன் என்ற தகுதியை இழந்து, அகதியாகப் பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகு நீ எப்படி ஈழத்தமிழனுக்காக போராட முடியும்?
ஈழத்தமிழனுக்கு நாடு மட்டும்தான் இல்லை. அதனால் அவன் அகதியாகி விட்டான். உனக்கு நாடு ஒன்று மட்டும்தான் இருக்கிறது. அவனிடமிருக்கும் மொழிப்பற்று, போராட்ட குணம், அரசியல் தெளிவு எதுவுமே உன்னிடம் இல்லை. ஒருநாள் ஈழத்தமிழனுக்கு இழந்த மண் கிடைக்கும். ஆனால் நீ இழந்த எதுவுமே உனக்கு கிடைக்கப்போவதில்லை. இப்போது சொல் யார் அகதி? நீயா? ஈழத்தமிழனா? நீ முதலில் தமிழனாக மாறு. உனக்கு எல்லாமே கிடைக்கும். ஒருநாளும் ஈழத்தைத் தமிழக அரசியல்வாதிகளால் பெற்றுத் தரமுடியாது. அதற்கு இந்திய அரசும் இடம் கொடுக்காது. தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து உண்மையான தமிழனாக மாறுங்கள். அப்போது இந்திய அரசு உங்களை நோக்கி ஓடிவரும். ஈழம் என்ன, நீ கேட்கும் அத்தனையும் அப்போது உனக்குக் கிடைக்கும். அதுவரை உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.