Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தை வெளியேற்றும் நிலைப்பாட்டில் இருந்து விலகமாட்டோம்! - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இராணுவத்தை வெளியேற்றும் நிலைப்பாட்டில் இருந்து விலகமாட்டோம்! - சுமந்திரன்
[Monday 2015-06-29 20:00]
வலிகாமம் வடக்கு காணிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் அடுத்த கட்டமாக அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக இன்று சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு காணிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் அடுத்த கட்டமாக அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக இன்று சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  

'1000 ஏக்கர் விடப்படுவதாகக் கூறப்பட்ட போதும், அதற்கும் குறைவான இடங்களே விடப்பட்டுள்ளன. சில பகுதிகளில் சிறிய சிறிய பகுதிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலை பக்கமாக 46 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டால் மக்கள் வைத்தியசாலைக்கு இலகுவாக சென்றுவரமுடியும்' என்றார். 'இது தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசு செய்வதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்தார். மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் அசையவில்லை. காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுப்போம்' என்று அவர் மேலும் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=135054&category=TamilNews&language=tamil

 

 

பிரதமர் பதவிக்கு என் பெயர் வராவிட்டால் பிறகு தெரியும்; மிரட்டுகிறார் மகிந்த
news
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து தான் அன்றைய தினம் பார்த்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
கண்டி ஸ்ரீ தலமா மாளிகையில் இன்று வழிபாட்டில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அதன்பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார். 
 
அதன்போது மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை அக்கட்சியின் சார்பில் வேட்புமனு வழங்கப்படப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டு வரும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
 
அதற்குப் பதிலளிக்கும் போதே மகிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கட்டாயம் போட்டியிடுவார் என்றும் அவர் போட்டியிடும் கூட்டமைப்பிலேயே தே.சு.மு.வும் இணைந்து போட்டியிடும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=322164115529107563#sthash.GwnXx2CC.dpuf

அண்மையில் ஒரு ஊடகத்தில் வரையப்பட்டிருந்த கார்ட்டுன் நினைவிற்கு வருகிறது.

 

ஒரு தமிழ் அரசியல்வாதி சொல்கிறார் அரசியல் தீர்வு காண்பதற்கான அழுத்தத்தை அரசிற்குக் கொடுக்க எம்மைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். என்று.

அதற்கு பொதுமகன் கேட்கிறார் அப்படி அவர்கள் தீர்வு காண முன்வராவிட்டால் என்று

அதற்கு அந்த அரசியல்வாதி சொல்கிறார் அடுத்த முறையும் உங்களிடம் வந்து அழுத்தம் கொடுக்க வாக்குக் கேட்போம் என்று.....

முதல்ல நீங்கள் அந்த கொள்கையில் இருந்தால் தானே விலகுவதற்கு ...
இந்தாளின் அலுப்பறை தாங்க முடியல .... போதையில் உளறிக்கொண்டே இருக்கின்றார் ...

கொள்கை உள்ளவன் தான் அதை பற்றி கதைக்க வேண்டும் .. காதலித்து கட்டிபிடிக்கின்ற அரசியல் செய்யும் உங்களுக்கு கொள்கை உள்ளதோ ?   என்ன காமெடியா ? 

அண்ணன் தெளிவாக ஒருசெய்தியை நரியார் ரணிலுக்கு சொல்லுகிறார்
" இராணுவத்தை வெளியேற்றும் நிலைப்பாட்டில் இருந்துமாறமாட்டோம்"

தெளிவாக பார்த்தால் அண்ணன் இராணுவத்தை வெளியேற்றியே தீருவோம் என்று கூறவில்லை 

இது தான் கூட்டு அரசியல்... அதாவது மிஞ்சி இருக்கின்றதையும் கூட்டி தள்ளுற அரசியல்.....

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இராணுவத்தை வெளியேற்றமாட்டன் ரணில் வீட்டில் விருந்தாம். என்ன ஒரு வாக்குப் பொறுக்கி.. நடிப்பு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முயல் பிடிக்கிற "டோக்கை", மூஞ்சையில பார்க்க தெரியும்.
கறுமம்..... இதுகளெல்லாம், அரசியலில் இருப்பது.... தமிழனின் சாபக்கேடு.:mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.