Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் வாக்குகளைச் சிதறடிக்க முயற்சி! - என்கிறார் அரியநேத்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பின் வாக்குகளைச் சிதறடிக்க முயற்சி! - என்கிறார் அரியநேத்திரன்
[Wednesday 2015-07-08 07:00]
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பல்வேறுபட்டவர்கள் ஊடுருவி வருவதாக  கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துரைத்த அவர், 'எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல்வேறுபட்டவர்கள் ஊடுருவியுள்ளனர். இந்த ஊடுருவலிலிருந்து விலகிச்சென்று எங்களின் அரசியல் பலத்தை  தக்கவைக்கும் கட்சியை மக்கள் இனங்காணவேண்டும்' என்றார்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது பணியை திறமையாக ஆற்றிவருகின்றது. நாங்கள் எட்டு வேட்பாளர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தவுள்ளோம். அந்த எட்டு வேட்பாளர்களையும் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும், அவர்கள் நீங்கள் நினைக்கும் தகுதியில் இல்லையென்றாலும், அந்த கட்சிக்காவது நீங்கள் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். எனவே, எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை பலமடைய செய்யவேண்டியது இளைஞர்களின் கடமையாகும். இதன் மூலம் எதிர்வரும் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக மாற்றம் பெற்று அடுத்தக்கட்ட அரசியலை நடத்துவதன் மூலமாக எதிர்கால இலட்சியங்களை அடையமுடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=135505&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கூட்டமைப்பின் வாக்குகளைச் சிதறடிக்க முயற்சி! - என்கிறார் அரியநேத்திரன்
[Wednesday 2015-07-08 07:00]
 
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது பணியை திறமையாக ஆற்றிவருகின்றது. நாங்கள் எட்டு வேட்பாளர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தவுள்ளோம். அந்த எட்டு வேட்பாளர்களையும் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும், அவர்கள் நீங்கள் நினைக்கும் தகுதியில் இல்லையென்றாலும், அந்த கட்சிக்காவது நீங்கள் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். எனவே, எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை பலமடைய செய்யவேண்டியது இளைஞர்களின் கடமையாகும். இதன் மூலம் எதிர்வரும் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக மாற்றம் பெற்று அடுத்தக்கட்ட அரசியலை நடத்துவதன் மூலமாக எதிர்கால இலட்சியங்களை அடையமுடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தானே காலம் காலமாக செய்துவருகின்றோம் ....

நீங்கள் இந்திய அரசியல் மாதிரி தேர்தல் நெருங்கும் இறுதி நேரத்தில் வந்து அறிக்கை அரசியல் செய்கின்றீர்கள்.........., 

மட்டு மாவட்டம் அண்மையில் கண்ட பல பின்னடைவுகளுக்கு மட்டு MP கள் அணைவரும் காரணம்.

கிழக்கு மாகணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குகள் சூறையாடப்பட்டு , அதன் மூலம் ஒரு ஆசனத்தை இழந்து, அதனால் ஒரு போனஸ் ஆசனத்தையும் இழந்தது 

முஸ்லிம்கள் மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து கல்முனையை தனியான கல்வி வலயமாகப் பிரித்து வளங்களைப் பிரித்து ,சென்றார்கள் (நீங்கள் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்) இன்று கல்முனை கல்வி வலயம் இலங்கையின்  கல்வி வலயங்களில் முதலாம் இடத்தில் இருக்கிறது, தமிழர்களின் மட்டக்களப்பு கல்வி வலயம் ......??

கல்முனை முஸ்லிம் பிரதேசசபை தரமுயர்த்தப் பட்டு விட்டது , ஆனால் தமிழ் பிரதேசசபையை தரமுயர்த்த முஸ்லிம்கள் விடுகிறார்கள் இல்லை, (எப்படி இருக்கு முஸ்லிம்களின் திட்டம்)
இது சம்மந்தமாக நடந்த கூட்டம் ஒன்றில் முஸ்லிம்கள் வெறி பிடித்தவர்கள் போல் தமிழ் பிரதேசசபையை தரமுயர்த்துவதற்கு எதிராக வாதிட்டார்கள் , இறுதியில் அவர்களே வென்றார்கள், அங்கு இறுதி வரை தமிழருக்காக குரல் கொடுத்தது அருண் தம்பி முத்துதான், நீங்கள்............?

மட்டு- காத்தான்குடி எல்லையில் உள்ள "மட்டக்களப்பு மாநகரசபை உங்களை அன்போடு வரவேற்கிறது" எனும் வரவேற்பு பலகை மீது ஒரு தடவை  இல்லை இரண்டு தடவயில்லை மூன்று தடவைகள் கறுப்புத் தார் ஊற்றிவிட்டார்கள், கேட்டால் தமிழ் தங்களுக்கு ஹராம் என்கிறார்கள் 

அவர்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்..........., அவர்களது எண்ணம் கிழக்கு மாகணத்தை முஸ்லிம் மயமாக்குவது அவர்களுக்கெதிராக அரசியல் செய்ய மட்டு MP கள் எவருக்கும் தகுதி இல்லை என்பது தான் , உங்களது கட்ந்த கால செயற்பாடுகள் எமக்கு காட்டி நிற்பவை.

முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள் அவர்கள் எத்தனை வெளிநாட்டு ராஜ தந்திரிகளை சந்திக்கிறார்கள் ;அவர்களது கல்வியறிவு , நடை, உடை ,பேச்சுத்திறன்........, நீங்கள் நெருஙவே முடியாது.....

உங்கள் அரசியல் எல்லாம் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், கோயில் , குளங்கள் , உதயன் பேப்பர், தமிழ்வின்  போன்றவற்றில் தான்......

கிழக்கு மாகணசபைத் தேர்தல் வாக்கு எண்ணும் போது வீட்டில் படுத்திருந்த செல்வராசா MP ............

யோகேஸ்வரன் MP .........? அவரைத் தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஓரளாவு தெரிந்தமையால் அதிகம் எழுத விரும்பவில்லை ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், அவர் ஒரு விதானையாகக் கூட இருக்கத் தகுதியற்றவர்.

நீங்கள் தான் மட்டுவைக் காப்பாற்றப் போகிறீர்கள்.........,

தயவு செய்து வலிமை மிக்க கல்வியறிவு பெற்ற மற்றோருக்கு (இளையோருக்கு) வழி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
 
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது பணியை திறமையாக ஆற்றிவருகின்றது. நாங்கள் எட்டு வேட்பாளர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தவுள்ளோம். அந்த எட்டு வேட்பாளர்களையும் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும், அவர்கள் நீங்கள் நினைக்கும் தகுதியில் இல்லையென்றாலும், அந்த கட்சிக்காவது நீங்கள் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

அட.... நல்லா சொல்றாரு.... டீரெய்லு......
கட்டுக்காசும் இல்லாமல், போகப் போறார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கிழக்கு மாகாணம் நம்ம ஏரியா 
வாங்கோ .....வாங்கிறத்துக்கு வாங்கோ ...ஆபிஸ் ரூம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 

அட.... நல்லா சொல்றாரு.... டீரெய்லு......
கட்டுக்காசும் இல்லாமல், போகப் போறார்கள்.....

கூட்டமைப்பு புலி ஆதரவாளர்கள் என்றே மக்கள் வாக்களிக்கின்றனர் என்பதை அண்ணன் அரி தெளிவாக கூறுகின்றார்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.