Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் நடந்த திருமணம்! சிறந்த முன்னுதாரணம் !

Featured Replies

Wadeing

வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது.

தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின் திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திருமண தம்பதிகளால் பண உதவி வழங்கி வைக்கப்பட்டது.

மணமகனின் தந்தையான முன்னாள் கிராம சேவகரான முத்துராசாவினால் வவுனியா பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு நலிவுற்ற குடும்பத்திற்கு உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதை புதுமண தம்பதிகள் முன்னுதாரணமாக செய்து காட்டியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஆரோக்கியமான சம்பவங்கள் நடைபெறுமாயின், எமது சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை பெரும் ஆடம்பரமாக செய்து களியாட்ட கொண்டாட்டங்களில் ஈடுபடும் தமிழர்களுக்கு, வவுனியா புதுமண தம்பதியினரின் செயற்பாடு பெரும் சாட்டையடியாக இருக்கக்கூடும்.

http://www.jvpnews.com/srilanka/116177.html

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

முன்னுதாரணமான இந்தச் செயலைப் போற்றுகின்ற அதே வேளையில்...புலம் பெயர் தமிழர்கள் அனைவரையும் இழுத்துச் சாடியிருக்கும் ... ஜேவிபி செய்தித் தளத்தின், புரட்சி கரமான கருத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்!  

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இப்படியான திருமண மற்றும் பரிசளிப்பு வைபவங்களை வரவேற்கின்றேன்.


இருப்பினும் ஜேர்மனியில் நேற்றையதினம் நடந்த ஒரு சாமத்திய வீட்டில் 200 பேருக்கு போதுமான சோறுகறிகளை குப்பையில் கொட்டியது ஊடகங்களினதும் இணையத்தளங்களினதும் கண்களில் படவில்லையென்பதை நினைத்து பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

அத்துடன் அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட  சிறிய தூண்டாமணி விளக்கை பரிசாக கொடுத்து மகிழ்ச்சி கடலில் அமுக்கி விட்டார்கள்.

உண்மையில் வரவேற்க கூடிய நல் விடயம் .. இதனை எல்லாரும் செய்ய முனைந்தால் யாவும் இனிதே 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒரு  அழகான எடுத்தக்காட்டு. வாழ்க! வளம்பெறுக!

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும் பாருங்க மாலைக்கு பட்டுவேட்டிக்கு பட்டுச் சேலைக்கு செலவழிச்ச காசு வீண். கல்யாணத்துக்கு இதெல்லாம் எதுக்கு..?! கல்யாணம் என்பது என்ன.. ஒரு ஆணும் பெண்ணும் உடலால் உறவு கொள்ள சமூகம் அளிக்கும் அங்கீகாரம். பச்சையா சொன்னா சமூகத்தில் விபச்சாரம் செய்ய அனுமதிப்பது. இதுக்கு எதுக்கு சடங்கு சம்பிரதாயம். அதுக்கு எதுக்கு பட்டுவேட்டி.. மாலை..சேலை..?! சாதாரண உடை போதாதா. இதில... ஒரு விளம்பரம் வேற...! இந்தக் காசை இப்படி விளம்பரம் இல்லாமலும் பகிர்ந்தளிக்கலாம் தானே. எதுஎப்படியோ.. பயன்பெற்ற மக்கள் சார்பில் நன்றி.

இதிலும் பாருங்க மாலைக்கு பட்டுவேட்டிக்கு பட்டுச் சேலைக்கு செலவழிச்ச காசு வீண். கல்யாணத்துக்கு இதெல்லாம் எதுக்கு..?! கல்யாணம் என்பது என்ன.. ஒரு ஆணும் பெண்ணும் உடலால் உறவு கொள்ள சமூகம் அளிக்கும் அங்கீகாரம். பச்சையா சொன்னா சமூகத்தில் விபச்சாரம் செய்ய அனுமதிப்பது. இதுக்கு எதுக்கு சடங்கு சம்பிரதாயம். அதுக்கு எதுக்கு பட்டுவேட்டி.. மாலை..சேலை..?! சாதாரண உடை போதாதா. இதில... ஒரு விளம்பரம் வேற...! இந்தக் காசை இப்படி விளம்பரம் இல்லாமலும் பகிர்ந்தளிக்கலாம் தானே. எதுஎப்படியோ.. பயன்பெற்ற மக்கள் சார்பில் நன்றி.

அண்ணைக்கு கலியாணத்தில கண்டம் போல.....

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் பலரை கண்டமாக்கிக் கிடக்கு. இதில..... :LOL:

அண்மையில்.. தல படத்தில் வந்த ஒரு வசனம்...... காதல்.. நட்பை பிரிச்சிடுண்டா... கல்யாணம்.. குடும்பத்தையே பிரிச்சுடுண்டா. :grin:

 

Edited by nedukkalapoovan
வசன மீள் அமைப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாணம் பலரை கண்டமாக்கிக் கிடக்கு. இதில..... :LOL:

அண்மையில்.. தல படத்தில் வந்த ஒரு வசனம்...... காதல்.. நட்பை பிரிச்சிடுண்டா... கல்யாணம்.. குடும்பத்தையே பிரிச்சுடுண்டா. :grin:

 

கலியாணம் இல்லாட்டி நட்பும் இல்லை....காதலும் இல்லை....குடும்பமும் இல்லை ராசா :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும் பாருங்க மாலைக்கு பட்டுவேட்டிக்கு பட்டுச் சேலைக்கு செலவழிச்ச காசு வீண். கல்யாணத்துக்கு இதெல்லாம் எதுக்கு..?! கல்யாணம் என்பது என்ன.. ஒரு ஆணும் பெண்ணும் உடலால் உறவு கொள்ள சமூகம் அளிக்கும் அங்கீகாரம். பச்சையா சொன்னா சமூகத்தில் விபச்சாரம் செய்ய அனுமதிப்பது. இதுக்கு எதுக்கு சடங்கு சம்பிரதாயம். அதுக்கு எதுக்கு பட்டுவேட்டி.. மாலை..சேலை..?! சாதாரண உடை போதாதா. 

அப்ப இதற்கும் உங்கள் கருத்து பொருந்துமா?

050809040448wedded.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண ஒரு வேட்டி. சாதாரண சேலை. கழுத்துக்கு ஒற்றமாலை. இரண்டு குத்துவிளக்கு. இதற்கு ஆகும் செலவும் மேலே சோடனை மண்டபம் ஐயர் பட்டு நகை போட்டு நடத்தினதுக்கு ஆகும் செலவும் ஒன்றா..?! ஆனால் இரண்டும் திருமணம் தான். தேசிய தலைவர் திருமணம் என்பது புனிதம்.. புண்ணாக்கு என்று சொன்னதாகத் தெரியவில்லை. திருமணமே செய்யாமல் போராடி வீழ்ந்த மாவீரர்கள் ஆயிரம் ஆயிரம். :grin:

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.