Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவிற்கு உதவ போராளிகளை புலிகளுக்கு எதிராக செயற்படுத்தினேன்: கருணா

Featured Replies

Karuna

 

தேசியப்பட்டியல் மூலம் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்.

தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பாவும் தனக்கு வாக்குறுதி அளித்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கூறியிருந்த நிலையில், கடைசியில் தனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

‘போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், லக்ஸ்மன் ஹூலுகல்லவும் அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று எனது உதவியைக் கோரினர்.

அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் ஒரு பிரிவினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் 600 தமிழ் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும், இந்தச் சூழலில் இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://athavansrilanka.com/?p=253882#sthash.nXNX9GDO.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் உண்மையை அழித்த பொய்யர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..

"வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை; வேந்த! நின்
பித்து இன்றி உணர்தியேல், அளவைப் பெய்குவேன்;
'உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தற்பாற்று' எனா,
கைத்து ஒன்று நெல்லிஅம் கனியின் காண்டியால்.

 

வித்து இன்றி = விதை இல்லாமல்

விளைவது ஒன்று இல்லை = எதுவும் முளைக்காது

வேந்த = வேந்தனே 

நின் பித்து இன்றி = பித்து இல்லாமல், மயக்கம் இல்லாமல்

உணர்தியேல் = உணர்வாயானால்

அளவைப் பெய்குவேன் = வழியை கூறுவேன்

உய்த்து = உன் மனதை அதில் செலுத்தி

ஒன்றும் ஒழிவு இன்றி = இடை விடாமல்

உணர்தற்பாற்று ' எனா = சிந்தித்து இருப்பாயானால்

கைத்து ஒன்று நெல்லிஅம் கனியின் காண்டியால் = உள்ளங்கை நெல்லிக் கனி போல் காண்பாய்

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா..... இந்த நேரம் என்று பார்த்து, யாழ் களத்திலுள்ள.... கருணாவின் அபிமானிகளை, காணவில்லை.:unsure:

என்ன இவருக்கு இப்ப சிங்கள அல்லது கேரள குட்டிகள் இல்லையோ இப்படி பீல் பண்ணுகின்றார் ..தலைவரின் புண்ணியத்தால் சிறந்த போர் தளபதியாக இருந்து கடைசியில் வஞ்சகன் ஆகி மகிந்தவினை கழுவி வாழ்ந்து ....

இப்ப .......

  • கருத்துக்கள உறவுகள்

 தலைவர் இருந்தால் உனக்கு சீற் என்ன அதுக்கு மேலேயே தந்திருப்பான் சிங்களவன். நீதான் எல்லாத்தையும் கூட்டி பெருக்கிப்போட்டியே. உன்னை வேள்விக்கு அவன் வளக்க நீதான் தலை கால் தெரியாமல் ஆட்டம் போட்டாய். கொஞ்சம் கூட குற்ற உணர்வு, வெட்கம் இல்லாமல் நீ போட்ட அகந்தை கூத்து இப்ப போக இடம் இல்லாமல் முழிக்கிறாய். தொடர்ந்து உன் துரோகப் புத்தியை காட்டு. கேக்கிறத்துக்குத்தான் ஆள் இல்லை. ஏதோ நாடு உன்ர தலையில இருந்தமாதிரி நாட்டுக்காக ஆபத்தான முடிவை எடுத்தனான் எண்டு சொல்லுறாய், பிறகேன் போராடப்போனாய்? பதவி வழங்கப்படும் என்றுதான் செய்தனான் எண்டும் சொல்லுறாய். எல்லாம் உன்ர சுயநலம் எண்டு சொல்லு. "அத்தைக்கு பவுசு வந்தா அர்த்தராத்திரியில குடை பிடிக்குமாம்". இப்ப குடையுமில்லை, கோமணமுமில்லை. போர் குற்றத்தை எதிர் கொள்ள தயாராகு.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் எத்தனை பேரை உயர்த்தி விட்டிருக்கிறார்.

 வெளி நாட்டில் இருந்து தீட்டின மரத்தையே பதம் பார்ப்பதும் அவராலே, இதுகள் எல்லாம் சிங்கள சிம்மாசனம் ஏறினதும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.