Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தேர்தலை நடத்தாதிருந்தால் இன்றும் மஹிந்த தான் ஜனாதிபதி - கோத்தாபய

Featured Replies

வடக்கில் தேர்தலை நடத்தியதன் விளைவே மஹிந்த ராஜபக்ஷவின் சாம்ராச்சியம் சரிய காரணமாகிவிட்டது.

gotta.JPEG

வடக்கின் தேர்தலை நடத்தாதிருந்தால் இன்றும் மஹிந்த தான் ஜனாதிபதி, நான் பாதுகாப்பு செயலாளராக இருந்திருப்பேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மீண்டும் மஹிந்த அரசாங்கத்தை உருவாக்கி நாட்டின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

நாட்டில் நல்லாட்சி, ஜனநாயகம் பற்றி பேசி எம்மை சர்வாதிகாரியாக சித்தரித்தவர்கள் இன்று நாட்டில் என்ன செய்கின்றனர். மஹிந்த ராஜபக் ஷவை அன்று அடக்குமுறை காரனாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிரானவனாகவும் சித்தரித்து மட்டுமில்லாது இந்த நாட்டில் எம்மை கள்ளர்கள் என சித்தரித்தனர். மக்கள் மத்தியில் எம்மை தவறான தலைவர்கள் என்ற கருத்தினை கொண்டுசென்று எமது அரசாங்கத்தை வீழ்த்தினர். இந்த சூழ்ச்சியில் சர்வதேச அமைப்புகள் மட்டும் அல்லாது மாதுலுவாவே சோபித தேரர், இலங்கையின் சிவில் அமைப்புகள் அனைத்தும் எமக்கு எதிராக செயற்பட்டன. இவர்கள் கொண்டு வந்த மாற்றம் இன்று நல்ல மாற்றமாக உள்ளதா என நான் இவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

எமது ஆட்சியில் வேலைத்திறன் மற்றும் தூரநோக்கு சிந்தனை மிக்க வேலைத்திட்டம் ஒன்று இருந்தது. அதனால் தான் இந்த நாட்டில் 3௦ ஆண்டுகாலம் நிலவிய விடுதலைப்புலிகள் தீவிரவாதத்தை மூன்று ஆண்டுகளில் நாம் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. அதேபோல் நாட்டில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. ஆசியாவின் சிறந்த நகராக கொழும்பை மாற்ற முடிந்தது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறு அல்ல. இன்று நிலைமைகள் முழுமையாக தலைகீழாக மாறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் மீண்டும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தலைதூகியுள்ளது.

எமக்கும் இதனால் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் அண்மையில் இந்தியாவில் தமிழ் நாட்டில் ஆயுதங்களுடன் விடுதலைப்புலிகள் இயக்க அங்கத்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே இவை அனைத்தும் இந்த நாட்டுக்கு மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழல் ஏற்படுவதற்கான அடையாளங்களாகவே நாம் கருதுகின்றோம். எமது கட்டுப்பாட்டின் கீழ் நாடு இருக்கையில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் இலங்கையார் ஒருவர் தொடர்புபட்டிருபதத்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது உலகின் மிகவும் பயங்கரமான தீவிரவாத கும்பலான ஐ.எஸ் அமைப்புடன் இலங்கையின் முஸ்லிம் நபர் தொடர்பு பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆகவே இவை தான் இப்போது நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுருதல்கலாகும்.

இன்று நல்லாட்சி பற்றி பேசுபவர்கள் முழுமையாக தனிப்பட அரசியல் பழிவாங்கலை மட்டுமே மேற்கோள்கின்றனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் ராஜபக் ஷ குடும்பத்தில் உள்ள அனைவரையும் இவர்கள் விசாரித்தனர். எம்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களால் எம்மை குற்றவாளியாக்க முடியாமல் போயுள்ளது. இவர்கள் மேற்கொண்ட எந்தவொரு விசாரணையின் இறுதி முடிவை வெளியிட முடியாமல் போயுள்ளது. என்னெனில் எம்மை குற்றவாளியாக நிருபிக்க தகுந்த ஆதாரங்கள் இவர்களிடம் இல்லை.

எமது அரசாங்கத்தில் முன்னெடுத்த அபிவிருத்திகள் அனைத்தும் முடக்கி நாட்டின் வளங்களை கொள்ளையடித்துள்ளனர். இந்த ஆறுமாத காலத்தில் நாட்டில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்துவிடனர். ரணில் விக்கிரமசிங்க தான் இந்த அரசாங்கத்தின் மிக முக்கிய கொள்ளைக்காரன் ஆவர். அவரே நாட்டின் அனைத்து வளங்களையும் கொல்லையடிக்கின்றார்.

எம்மை சர்வாதிகார அரசியல்வாதிகள் எனவும், இராணுவ அடக்குமுறை ஆட்சியை கையாள்வதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் நாம் வடக்கில் தேர்தலை நடத்தாது, இராணுவ அடக்குமுறைக்குள் தேர்தலை நடத்தியிருந்தால் இன்றும் நாம் தான் ஆட்சியில் இருந்திருப்போம். வடக்கின் தேர்தலை நடத்தியதால் தான் மஹிந்த ராஜபக் ஷ தோற்கடிக்கப்பட்டார். இல்லையென்றால் இன்றும் அவர்தான் ஜனாதிபதி, நாம் இன்றும் பாதுகாப்பு செயலாளராகவே இருந்திருப்பேன். ஆனால் ஜனநாயகத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த விரும்பியதன் காரணத்தினால் தான் எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

எனவே மீண்டும் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லவேண்டிய நேரம் வந்துள்ளது. மஹிந்தவின் தலைமையில் மீண்டும் இந்த நாட்டை ஆளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமாக இறந்த நபர்கள் தான் இறுதி நேரத்தில் மஹிந்தவை வீழ்த்த காரணமாக அமைந்தார்கள். அன்று அவர்களை பற்றி மஹிந்த தெரிந்து கொள்ளாது செயற்பட்டதன் விளைவுகள் இப்போது அனுபவிக்கக் கூடியதாக உள்ளது. இனிமேலாவது மஹிந்தவின் உண்மையான விசுவாசிகள் யார் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் அனைவரும் மஹிந்தவை இந்த நாட்டின் பிரதமராக்கி இந்த நாட்டில் பாதுகாப்பையும், அதேபோல் நல்லாட்சியையும் உருவாக்க துணை நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/articles/2015/07/22/வடக்கில்-தேர்தலை-நடத்தாதிருந்தால்-இன்றும்-மஹிந்த-தான்-ஜனாதிபதி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கும் இதனால் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் அண்மையில் இந்தியாவில் தமிழ் நாட்டில் ஆயுதங்களுடன் விடுதலைப்புலிகள் இயக்க அங்கத்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே இவை அனைத்தும் இந்த நாட்டுக்கு மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழல் ஏற்படுவதற்கான அடையாளங்களாகவே நாம் கருதுகின்றோம். எமது கட்டுப்பாட்டின் கீழ் நாடு இருக்கையில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் இலங்கையார் ஒருவர் தொடர்புபட்டிருபதத்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது உலகின் மிகவும் பயங்கரமான தீவிரவாத கும்பலான ஐ.எஸ் அமைப்புடன் இலங்கையின் முஸ்லிம் நபர் தொடர்பு பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆகவே இவை தான் இப்போது நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுருதல்கலாகும்.

 அண்மைய பி ரி ஐ செய்தி குப்பி பிடிபட்ட செய்தி.. தான் கோத்தாவின் பிரச்சார குண்டு. அந்தக் குண்டை யார் போட்டிருப்பினம் என்று இப்ப விளங்குதோ..?! மகிந்தவை மீண்டும் பதவியில் இருத்த விரும்பிற அயல்நாட்டுக்காரர்கள் தான். குப்பி புலி புரளியின் பின்னணியில்...! உந்த அயல் நாடு தமிழனை உருப்படவே விடாது போல. :grin::unsure:

மீண்டும் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லவேண்டிய நேரம் வந்துள்ளது. மஹிந்தவின் தலைமையில் மீண்டும் இந்த நாட்டை ஆளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமாக இறந்த நபர்கள் தான் இறுதி நேரத்தில் மஹிந்தவை வீழ்த்த காரணமாக அமைந்தார்கள். அன்று அவர்களை பற்றி மஹிந்த தெரிந்து கொள்ளாது செயற்பட்டதன் விளைவுகள் இப்போது அனுபவிக்கக் கூடியதாக உள்ளது. இனிமேலாவது மஹிந்தவின் உண்மையான விசுவாசிகள் யார் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் அனைவரும் மஹிந்தவை இந்த நாட்டின் பிரதமராக்கி இந்த நாட்டில் பாதுகாப்பையும், அதேபோல் நல்லாட்சியையும் உருவாக்க துணை நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மீண்டும் மனித இனப்படுகொலைகளையும் வெள்ளைவான்களையும் இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் அடாவடித்தனங்களையும் பெருக்கனுன்னு சொல்லுறார் ஐயா. புலிகள் தான் ஐயாவின் முக்கிய பிரச்சனை இப்ப. இதில.. புலிகளை முற்றாக அழிச்சிட்டம்.. வெற்றி வாகை சூடிட்டம் என்றதும்... ஐயாவின் பிரச்சாரமே. என்னமா சுத்துறான்கள். சிங்களவங்களுக்கு மண்டைக்க என்ன களிமண்ணே. :)

மோட்டுச்சிங்களவனுக்கு அறிவு கொஞ்சமாவது விருத்தி அடைந்திருக்குதா என்று இந்ததேர்தலில் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

அட சாமி,

வடக்கில நடத்தாம விட்டதால தானே முதலில் அந்தாள் (2005) ஜனாதிபதி ஆனார். :(

அட சாமி,

வடக்கில நடத்தாம விட்டதால தானே முதலில் அந்தாள் (2005) ஜனாதிபதி ஆனார். :(

வணக்கம் தலை,

கோத்தாவுக்கு ஒரு கொத்து போட்டிருந்தால் நிலைமை வேறமாதிரி இருந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கிழக்கில்?தேர்தல் நடத்தியிருகலாமோ?....... தமிழன்,புலி,வடக்கு....இந்த மூன்றூமில்லாமல் சிறிலங்காவில் தேர்தல் இல்லை........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.