Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி தமிழரசினை புறக்கணித்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-நன்றி பதிவு இணையதளம் -

ஞாயிறு, ஜூலை 26, 2015 - 22:33 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம்
வடமராட்சி தமிழரசினை புறக்கணித்தது!

சுமந்திரனிற்கு ஆதரவு தேடும் வகையினில் பருத்தித்துறை கடற்கரையினில் தமிழரசுக்கட்சியினால் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தை வடமராட்சி மக்கள் பகிஸ்தரித்துள்ளனர்.

வெறும் நூறிற்கும் குறைவான மக்களுடன் கூட்டம் கூடி கலைந்துள்ளது.கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பங்கு கொண்ட கூட்டத்தினில் பங்காளிக்கட்சிகள் எவையும் பங்கெடுத்திருக்கவில்லை.

அதன் தலைவர்கள் மற்றும் அதன் சார்பினில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் பங்கெடுத்திருக்காமை சுமந்திரனை புறக்கணிக்கும் மனோநிலையினில் உள்ளமை மற்றும் உள்கட்சி முரண்பாடுகளை வெளிப்படுத்தி நின்றதை காணக்கூடியதாக இருந்தது.


இலங்கை நேரம் 4மணிக்கு கூட்டம் ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்ட போதும் இரண்டு மணிநேர தாமதத்தின் பின்னரே கூட்டம் தொடங்கியது.முன்னதாக அப்பகுதியினில் கூட்டத்தை நடத்த வேண்டாமென அப்பகுதியை சேர்ந்த கொட்டடி பொது அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருந்தன.
 
எனினும் அவர்கள் குழப்பத்தினில் ஈடுபடலாமென்ற அச்சத்தினில் இலங்கை காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். சுமந்திரனை புகழ்ந்து பாடுவதினில் சம்பந்தர் ,மாவை குதித்திருந்தனர்.

எனினும் அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் வேட்பாளரான மதினி நெல்சனை உரையாற்ற சுமந்திரன் அனுமதித்திருக்கவில்லை.இதனால் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் கடும் சீற்றத்தினிலிருந்தனர்.

வடமராட்சி மக்களது ஒன்றிணைந்த புறக்கணிப்பு கூட்டமைப்பு தலைமைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய சமிக்ஞை என வடமாகாணசபை உறுப்பினர்

 

சுகிர்த்ன் தெரிவித்தார்.அத்துடன் தம் போன்ற வளர்ந்து வரும் அரசியல்தரப்புக்களது எதிர்காலத்தை இருண்டதாக்கிவிடுமெனவும் அவர்கள் அச்சம்

வெளியிட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிற்கு மக்களது ஆதரவு அதிகிரித்துவருகின்றமை அப்பட்டமாக தெரிகின்றது.மக்கள்,பொது அமைப்புக்கள் தத்தம் பகுதிக்கு அவர்களை அழைப்பதுடன் தாமே முன்வந்து பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரியவருகின்றது.

பல இடங்களிலும் மக்கள் தொடர்பிரச்சாரங்களை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன் சுவரொட்டிகளை பெற்று செல்வதாகவும் அதன் ஊடகப்பேச்சாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.அவர்களது கூட்டத்தை கண்காணிக்க ஜரோப்பிய கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் அங்கு பிரச்சன்னமாகியிருந்தனர்.

கூட்டமைப்பின் கூட்டத்தை மக்கள் புறக்கணித்த நேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்தினில் திரண்ட மக்களையும் காணலாம்.

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியின் பருத்தித்துறை தொகுதியிலும் உடுப்பிட்டித் தொகுதியிலும் கூட்டமைப்பு அமோக வெற்றி ஈட்டியுள்ளது! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படித்தவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டி.... விசிலடிச்சான் குஞ்சுகளை விட மதிப்பு மரியாதையில்லாமல் விசிலடிச்சுக்கொண்டு திரிகின்றார்கள். :grin:

நான் தமிழ்க்கட்சியின் உண்மையான ஆதரவாளன். ஊரில் நான் கட்சிக்கு  செய்த தொண்டுகள் எண்ணிலடங்காது.பந்தல் மேடை அலங்காரங்கள் வரவேற்புகள் பத்திரிகைகள் என எழுத்திலடங்காது..........

ஆனால் நாங்கள் தம்பட்டம் தட்டியதில்லை. தமிழ் கட்சிகளின் நோக்கமும் அதல்ல. ஆனால் இங்குள்ளவர்களின் ஆணவ தம்பட்டங்களை பார்க்கும் போது இவர்கள் உண்மையான தமிழ்கூட்டமைப்பின் ஆரரவாளர்களா என சிந்திக்கத்தோன்றுகின்றது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட்டமைப்பின் ஆதரவாளன் கிடையாது. கூட்டமைப்புக்கு எதிரான சேறடிக்கும் கருத்தியலாளர்களும், தமது சொந்தப் பிழைப்புக்காக விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தும் குறிப்பிட்ட ஒரு சாராருமே என்னை கூட்டமைப்புக்காக எழுத தூண்டினர். உதாரணமாக கூட்டமைப்பை கூத்தமைப்பு என்று ஒரு மட்டுற்த்தினர் கூட எழுதுகிறார் (அது அவரது சொந்த விடயம்) எனவே கஜே கோஸ்டியை விண்ணணி நான் எழுதினேன். இப்படியே பதிலுக்குப் பதில் எழுதும் சூழ்நிலை உருவானது. சிலர் மதில் மேல் பூனையாக நாடகமாடினர். நல்ல முறையில் தேர்தல் தொடர்பான ஓர் திரியை நகர்த்த வேண்டிய நேரத்தில் பதிவு போன்ற இணையங்களின் செய்திகள் அனுமதிக்கப்பட்டு யாழ்கள வாசகர்கள் குழப்பமடைய வைக்கப்பட்டனர். இறுதியில் தேர்தலுக்கு 2 அல்லது 3 நாள்களுக்கு முதல் அவ்விணையம் தடுக்கப்பட்டது. நான் ஒருபோதும் அரசியலை விரும்பியது கிடையாது. புலத்து மக்களின் அரசியலை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்பவும் கூட்டமைப்பு வென்றது பற்றி எனக்கு அக்கறை இல்லை, புலத்து எசமானர்கள் நிராகரிக்கப்பட்டதே எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இம்முறை நிச்சயம் ஒரு தீர்வு மக்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறேன். குழப்பவாதிகளுக்கு எப்பவுமே வாலி குழப்பவாதிதான். அவரவர்க்கு அவரவர் மொழியிலேயே பதிலளிப்பது வாலியின் பழக்கம். 

 

மாய்மாலம் இல்லாமல் கேலிப் பேச்சு இல்லாமல் இதய சுத்தியுடன் ஆக்கபூர்வமாக கருத்து எழுதவும் நான் ஆயத்தம், அதேவேளை வம்புத்தனமாக எழுதவேண்டும் எண்டாலும் நான் ஆயத்தம். 

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டி.... விசிலடிச்சான் குஞ்சுகளை விட மதிப்பு மரியாதையில்லாமல் விசிலடிச்சுக்கொண்டு திரிகின்றார்கள். :grin:

நான் தமிழ்க்கட்சியின் உண்மையான ஆதரவாளன். ஊரில் நான் கட்சிக்கு  செய்த தொண்டுகள் எண்ணிலடங்காது.பந்தல் மேடை அலங்காரங்கள் வரவேற்புகள் பத்திரிகைகள் என எழுத்திலடங்காது..........

ஆனால் நாங்கள் தம்பட்டம் தட்டியதில்லை. தமிழ் கட்சிகளின் நோக்கமும் அதல்ல. ஆனால் இங்குள்ளவர்களின் ஆணவ தம்பட்டங்களை பார்க்கும் போது இவர்கள் உண்மையான தமிழ்கூட்டமைப்பின் ஆரரவாளர்களா என சிந்திக்கத்தோன்றுகின்றது.:cool:

அதே தான்...  குமாரசாமி அண்ணை.
ஊரில் இருக்கும் போது.... மாநகராட்சி தேர்தலாகட்டும், பாராளுமன்ற தேர்தலாகட்டும் வரிந்து கட்டிக் கொண்டு தமிழரசு கட்சிக்கு வேலை பார்த்தவன்.
2009´ம் ஆண்டுக்குப் பின், தமிழரசு கட்சியின் போக்கு பிடிக்கவில்லை.

இங்கு பல திரிகளில்  தமிழரசுக் கட்சிக்கு தம்பட்டம் அடிப்பவர்களில் பலர், புலி எதிர்ப்பாளர்கள்.
இந்த இடை வெளிக்குள் அவர்கள், மறைந்து நின்று கொண்டு.... தமிழரசு கட்சி புராணம் பாடி தங்களின், புலி எதிர்ப்பை சாதகமாக விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நன்கறிவோம்.

நேர்மையான நிலைபாடு வாலி சார்.

நானும் எந்த கட்சிசார்ந்தவன் இல்லை.

எனது விருப்பெல்லாம் தமிழர்களின் இன்னல்கள் தீர்ந்து உரிமையோடும் மரியாதையோடும் வாழவேண்டும் என்பதே.

அதுக்கு கூட்டமைப்பை விட நல்ல அமைப்பு இப்பொதைக்கு இல்லை. அனாலும் அவர்கள் மீது விமர்சனம் இல்லாமல் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.