Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் காணாமல் போனதாக கூறப்பட்ட தம்பிராஜாவின் மகன் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுய விருப்பின் பேரில் யாழில் இருந்து கொழும்­புக்கு பஸ் வண்­டியில் சென்றுள்ளார்:-

 

 யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­த­ரான மு.தம்­பி­ரா­ஜாவின் 19 வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்­லரின் ஆலோ­ச­னைக்கு அமைய யாழில் இருந்து கொழும்­புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­வத்த ஆகி­யோ­ரு­ட­னான குழு­வுடன் இணைந்து அவரை இவ்­வாறு கைது செய்­த­தா­கவும், நேற்று இரவு 11.00 மணி­யாகும் போதும் அவ­ரிடம் விசா­ர­ணைகள் தொடர்ந்து வந்­த­தா­கவும் பொலி ஸார் தெரி­வித்­தனர்.

காணாமல் போன­தாக கூறப்­பட்ட திரு­வ­ளவன் தம்­பி­ராஜா அவ­ரது சுய விருப்பின் பேரில் யாழில் இருந்து கொழும்­புக்கு பஸ் வண்­டியில் வந்­துள்­ளமை நேற்று இரவு வரை இடம்­பெற்ற ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அத­னூ­டாக அவர் கடத்­தப்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர், முறைப்­பாட்டின் பின்­னணி மற்றும் சம்­ப­வத்தின் பின்­னணி தொடர்பில் தெரிந்­து­கொள்ள விஷேட விசா­ர­ணை­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார்.

இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் குறித்த காணாமல் போனமை தொடர்­பி­லான முறைப்­பா­டா­னது உள் நோக்கம் ஒன்றின் அடிப்­ப­டையில் செய்­யப்­பட்­டது என்பதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் பல்வேறு கோணங் களில் தொடர்வதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் உறுதிப்படுத்தினார்.

நன்றி வீரகேசரி:-

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122428/language/ta-IN/article.aspx

ஆகா! இப்படி தகிடுதத்தம்கள் செய்து அனுதாபத்தை கிறியேட் பண்ணி வோட்டுக் கேக்கிறது விட ....... குடுத்து வோட்டுக் கேக்கலாம்.. (விருப்பம◌ான வார்த்தைகளை போட்டு நிரப்புங்கோ)

கடந்த சில நாட்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளின் ஊடகங்கள் சிலவற்றில் வந்திருந்த செய்தித் தலைப்புகளை அசைபோட்டுப் பார்க்கிறேன்.

தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு முக்கியஸ்தரின் மகன் கடத்தல். அரசியலா காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகம்....

 

தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு முக்கியஸ்தரின் மகன் கடத்தல். எதிரணி அரசியல்வாதிகள் மீது சந்தேகம்

 

மகிந்தவுக்குக் குறைவில்லாத செட்டப் அரசியல் செய்யுறாங்கப்பா....

 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிய இந்த பேப்பர் கட்டிங்கோடு தம்பிராசாவின் மகன் லண்டனில் அசைலம் அடிக்க ஏற்பாடு நடக்குது போல. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நின்று தோற்ற பலர் இறுதியில் மகிந்தவால் தமக்கு நெருக்கடி என்று லண்டனில் அசைலம் அடிச்ச வரலாறு உண்டு. 

அசைலம் என்ற பொன் முட்டை வாத்து உள்ள வரை ஊரில்.. இப்படியான நாடகங்களுக்கு குறைவிருக்க வாய்ப்பில்லை. இதில் கூட்டமைப்புக்கு ஒரே கல்லில் பல மாங்காய்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த மகன் எங்கை போனது என்று தெரியாத... கூத்தமைப்பு மேதாவிகள்.
அதற்கிடையில்..... அங்கஜனின் தந்தை கடத்திருக்கலாம் என சந்தேகித்து....
எத்தனை பேருக்கு.... தகவல் அனுப்பியுள்ளார் என்பதை...
கீழுள்ள இணைப்பை அழுத்தி வாசித்தால், கூத்தமைப்பின் போலி முகம் தெரியும்.

http://www.yarl.com/forum3/topic/161063-கடத்தலில்-அங்கயனின்-தந்தையா…/

  • கருத்துக்கள உறவுகள்

Angajan 05

இவர், தனது மகன் காணாமல் போனதாக புகார் கொடுத்த நாளில்.....
மைத்திரி, யாழ்ப்பாணத்திலுள்ள  அங்கஜன் வீட்டில்..... பொது மக்களை சந்தித்தார்.
மலிவான விளம்பரம் தேட.... கூட்டமைப்பு முயன்றமை... வெட்கக் கேடானது. 

http://www.yarl.com/forum3/topic/161054-மகளை-மீட்டு-தாருங்கள்-என-கதறிய-தாய்-குளோபல்-தமிழ்ச்-செய்திகளின்-விசேட-செய்தியாளர்/

அண்ணை உது ஏதாவது லவ் கேஸ் எண்டு முடிப்பாங்கள் பாருங்கோ....

சொறிலங்கா அரசியலை தந்தையை விட மகன் அறிந்து வைத்துள்ளான் போலும்

தேர்தல் முடிய இந்த பேப்பர் கட்டிங்கோடு தம்பிராசாவின் மகன் லண்டனில் அசைலம் அடிக்க ஏற்பாடு நடக்குது போல. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நின்று தோற்ற பலர் இறுதியில் மகிந்தவால் தமக்கு நெருக்கடி என்று லண்டனில் அசைலம் அடிச்ச வரலாறு உண்டு. 

அசைலம் என்ற பொன் முட்டை வாத்து உள்ள வரை ஊரில்.. இப்படியான நாடகங்களுக்கு குறைவிருக்க வாய்ப்பில்லை. இதில் கூட்டமைப்புக்கு ஒரே கல்லில் பல மாங்காய்கள். :grin:

சரி விடுங்க பாஸ். நாங்க மட்டும் லண்டனுக்கு ஓடி வந்தா காணுமா..அவங்களும் வந்து கொஞ்சம் அனுபவிக்கட்டுமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.