Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்தச் சரக்கில்லாத வங்கரோத்துக்காரர்கள் எம்மை குறை சொல்லிக் காலத்தை ஓட்டுகின்றனர், கஜேந்திரக்குமார் அணி குறித்து சுமந்திரன்

Featured Replies

சொந்தச் சரக்கில்லாத வங்கரோத்துக்காரர்கள் எம்மை குறை சொல்லிக் காலத்தை ஓட்டுகின்றனர், கஜேந்திரக்குமார் அணி குறித்து சுமந்திரன்
 
kajendrakumar-ponnambalam_sumanthiran.jp
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கான சமஸ்டித் தீர்வை தெளிவாக முன்வைத்து, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தைரியமாக வெளியிட்டுள்ளது.

ஆனால் இவற்றிற்கு மாற்றீடு எதையும் முன்வைக்க தைரியமும், தகுதியும் இல்லாதவர்கள், வெற்றுச் சங்குகள் போன்று கூச்சல் இடுகின்றனர் என்று M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

கரவெட்டி கிழக்கில் நேற்று  மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சட்டத்தரணி சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக சமஷ்டி முறையை முனவைத்துள்ளது.

அத்துடன் இந்தத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டு உள்ளது. ஆனால் இவை எதனையும் செய்ய தைரியமும், திறமையும் இல்லாதவர்கள், எம்மைக் குறை கூறி காலத்தைக் கழிக்கின்றனர். தம்மிடம் எதுவும் சொந்தமாக இல்லாத வெறுமையின் காழ்ப்புணர்ச்சியை, போலியான குற்றச்சாட்டுகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

போர் முடிந்தது முதல் நாம் மக்களுடன் இருக்கின்றோம், மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம், வழக்குகள் மூலம் மக்களுக்கு வெற்றியும் பெற்றுக் கொடுத்தோம், ஆனால் இவை எதையுமே செய்யாமல் இருந்தவர்கள், தேர்தல் வந்ததும், திடீரென தூக்கத்தில் இருந்து விழித்தெளுந்தவர்கள் போன்று திடீர் என்று இங்கே வந்து முகாமிட்டு எம்மைத் திட்டித் தீர்த்து காலத்தை ஓட்டுகின்றனர்.

நேற்று வரை தமிழர்களை திரும்பிக் கூடப் பார்க்கத இவர்கள், தேர்தல் முடிந்த மறுகையோடு தமிழர்களை மறந்து விடுவார்கள்.

தமிழ் மக்களுக்காக எதையுமே செய்யாமல், வெறுமனே விமர்சித்துக் கொண்டும், குறை கூறிக்கொண்டும் இருப்பது முறையல்ல, தம்மிடமுள்ள மாற்றீடு என்ன என்பதனை சொல்ல வேண்டும், ஆனால் அவர்களால் சொல்ல முடியாது.

ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வை விட சிறந்த சாத்தியமான தீர்வை இவர்களால் மட்டுமல்ல, யாராலும் முன்வைக்க முடியாது.

தமிழ் மக்கள் நாம் முன்வைத்துள்ள தீர்வை எந்த அளவு ஏற்றுக் கொள்கின்றார்கள் என்று சர்வதேசம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்திற்கு நீங்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

தமிழர்களில் யாராவது ஒரு சிலர் தமது வாக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்காமல், தவறியேனும் கொள்கை இல்லாதவர்களுக்கு வழங்கினால், அவை தீர்விற்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவதுடன் , தமிழர்களே தீர்வை விரும்பவில்லை என்று வழங்கிய அங்கீகாரமாகவும் கருதப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.

ஆகவே தமிழர்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும். வரலாற்றின் ஒவ்வொரு தீர்க்கமான சந்தர்ப்பங்களையும் தவறவிடாமல் முறையாக பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

 

http://www.tamilwin.com/show-RUmtyITVSVmrzF.html

http://www.yarl.com/forum3/topic/161114-மண்குதிரையில்-சவாரி-செய்யும்-கஜே-கோஸ்டி/

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தச் சரக்குள்ளவர்கள் வருவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு எங்களுக்கு சொந்தமானதல்ல - சம்பந்தன்

 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

10987354_995087240541379_159014725116643

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்தில் பிறந்ததால் துரோகியும் பிழைத்துப் போகிறான்.

ருதேசம் ஒரு நாடு என்ற கோஷம் ஓர் அர்த்தமில்லாத கோசமாகும்

சிவஞானம் தெளிவாக சொன்ன உண்மை 

மக்கள் சொத்தில் வாழும் ஒரு சில புலத்து பினாமிகளின் பணத்தில் குளிர்காயும் மக்கள் முன்னனி கஐன் குழுக்கள்

சிங்களத்தின் மனம் நோகாமல் இரு இதயம் ஒன்றான சிங்களத்துக்கு வாழ்க்கை பட்டுப்போன புதுமணப்பெண் சுமத்திரன் தலையில் சரக்கிருக்கின்றது என நம்புவோம் .

  • தொடங்கியவர்

10987354_995087240541379_159014725116643

இதைத்தான் அவரிடமும் நாம் கேட்கிறோம்

உங்களது அல்லது உங்கள் கட்சியினது கொள்கையை, தமிழ்மக்களுக்கு நிரந்திரதீர்வு காண நீங்கள் செல்லப்போகும் பாதையை (ஆக்கபூர்வமான அல்லது நடைமுறைச்சாத்தியமான) சற்று விளக்கிக்கூறி...கடந்தகாலத்தில் நீங்களும் உங்கள் கட்சி உறுபினர்களும் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

அதைவிடுத்து கூட்டமைப்பு மீது வாந்தியெடுக்கவேண்டாம்.

நீங்கள் கூட்டமைப்பின் மீது வாந்தியெடுத்தால் மக்கள் தங்களது 2வது விருப்பிற்கு செல்வார்கள்...அந்த 2வது விருப்பு நீங்களாக இருப்பீர்கள் என நினைப்பது பகல் கனவு ஆகிவிடும்.

நீங்கள் சம்பந்தரை போட்டு வறுத்தெடுப்பதாலேயே உங்கள் பாட்டன் செய்த வீரவிளையாட்டுக்களை இழுக்க வேண்டிவருவதுடன்...நீங்கள் GG ஆரம்பித்த தமிழ் காங்கிரசில்தான் இம்முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளீர்கள் என்பதையும் நினைவு படுத்த விரும்புகின்றோம்.

பிற்குறிப்பு: 2009இல் நீங்கள் எங்கிருந்தீர்கள் என்பதையும் கொஞ்சம் ப்பிளீஸ்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.