Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா இலக்கிய தோட்டமும் கவிஞர்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கனடா இலக்கிய தோட்டம் - கவிஞர் இந்திரனின் கவலை

கவிஞர் இந்திரனின் இரண்டு பதிவுகள்

 

Indran Rajendran added 4 new photos.

 

இலக்கிய உலகம் அரசியலை விஞ்சி விட்டது
------------------------------------------------------------------------------
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வெளியிட்ட உலகத் தமிழ்க் கவிதைகள் ”எமது மொழிபெயர் உலகினுள் – IN OUR TRANSLATED WORLD” நூலில் நான் எழுதிய “மியூசியம் “எனும் கவிதையை வ.ஐ. ச ஜெயபாலன் பெயரில் வெளியிட்டு இருக்கிறது.. அதன் முதற்பதிப்பு முற்றும் விற்றுத் தீர்ந்தது. இரண்டாம் பதிப்பு விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ளது.
 
முதற்பதிப்பின் நன்றிக் குறிப்பில் அ.முத்துலிங்கம் ” தொகுப்பில் கவிதைகளை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய 78 கவிஞர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். நான் எழுதிய கவிதையை என் உத்தரவில்லாமல் வ.ஐ.ச.ஜெயபாலன் பெயரில் வெளியிட இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது.? INTELLECTUAL PROPERTY RIGHTS பற்றி அ. முத்துலிங்கத்துக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அ.மு நன்றிக் குறிப்பில் சொல்வது உண்மையாக இருக்குமானால் வ.ஐ. ச.ஜெயபாலன் நான் எழுதிய மியூசியம் கவிதையை அவர் பெயரில் வெளியிட ஒப்புதல் கொடுத்திருக்கிறரா? அப்படி யாரும் தன்னிடம் ஒப்புதல் பெறவில்லை என்று வ.ஐ.ச.ஜெயபாலன் சொல்கிறாரே. அப்படியானால் அந்த கடிதத்தை அ. முத்துலிங்கம் வெளியிடத் தயாரா?. இரண்டு கவிஞர்களை ஒரே நேரத்தில் அவமதிக்கும் இச்செயல் குறித்து கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதில் என்ன? 
அ.முத்துலிங்கம் கவிதைத் தேர்வுக் குழுவின் என்.சுகுமாரன், அ.யேசுராசா, செல்வம் அருளானந்தம், உஷா மதிவாணன், திருமாவளவன், லதா, அனார் என்பவர்களின் கடின உழைப்புக்கும் நன்றி கூறியுள்ளார். இவர்கள் யாருமே இதை கவனிக்கவில்லையா? . மேலும் பொது ஆலோசனைகள் வழங்கியவராக அ. முத்துலிங்கத்தால் குறிப்பிடப்படும் சேரனிடம் சென்னை புத்தக வெளியீட்டில் நேரிடையாக நான் இதை சுட்டிக் காட்டியும் பலனில்லையே. இத்தொகுப்பு தயாரிப்பில் பங்கு கொள்ளாத கவிஞர் சுகிர்தராணி புத்தக வெளியீட்டு மேடையில் பேசிய ஒரே காரணத்துக்காக தெரிவித்த வருத்தம் கூட கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் தெரிவிக்கவில்லையே ? அது ஏன்? இந்த தவறை கூட்டத்தில் அறிய வந்த எந்த இலக்கிய ஆளுமையும் தங்களது இலக்கிய இதழ்களில் இது குறித்து ஒரு சிறு குறிப்பைக் கூட வெளியிடவில்லை.காரணம் தவறு செய்திருப்பது இயல் விருது வழங்கும் ஒரு குருபீடம். அதன் வெறுப்புக்கு யாரும் ஆளாகத் தயாரில்லை. தமிழ் எழுத்துலகம் இப்படியாக முதுகெலும்பில்லாத புழுவாக நெளிந்து கொண்டிருப்பது வெட்கக் கேடு இல்லையா நண்பர்களே?

 

2

 

அ.முத்துலிங்கம் , செயலர், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 
----------------------------------------------------------------------------------------------------------
இன்னமும் பதிலிடப்படாத என் கடித நகல்
--------------------------------------------------------------------------

 

என் இதயம் கவர்ந்த புனைகதையாளர் அ.முத்துலிங்கத்துக்கு, 
வணக்கம். 
எனது முதல் மடல் ஒரு புகார் குறித்ததாக அமைந்ததற்கு வருந்துகிறேன். 
நீங்கள் செயலராக இருந்து தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக வெளியிட்ட “ எமது மொழிபெயர் உலகினுள் - IN OUR TRANSLATED WORLD” நூலில் 1991இல்” முப்பட்டை நகரம்” எனும் எனது நூலில் 32ம் பக்கத்தில் வெளியிடப்பட்ட நான் எழுதிய “முதுமக்கள் தாழிகளில் எதிர்காலம் “எனும் கவிதையை “மியூசியம் “ எனும் தலைப்பில் உங்கள் நூலின் 200வது பக்கத்தில் கவிஞர் வ.ஐ. ச. ஜெயபாலன்( நோர்வே) எழுதியதாக வெளியிட்டு இருக்கிறீர்கள் அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கவிஞர் வ.ஐ. ச. ஜெயபாலன் பற்றிய குறிப்புடன் வெளிவந்திருக்கிறது. இது எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம்.இந்த இடத்தில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் INTELLECTUAL PROPERTY RIGHTS என்பதை மதியாமல் செயல்பட்டிருப்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

 

இந்தத் தகவல் நீங்கள் அந்நூலை விகடன் பிரசுரமாக வெளியிட்டபோதுதான் நான் அறிந்தேன். விகடன் பிரசுரத்திலும் இதே தவறு நிகழ்ந்துள்ளது. அந்நூல் வெளியீட்டு விழாவுக்கு யதேச்சையாகச் சென்ற நான் நூலை வாங்கிப் புரட்டிப் பார்த்தபோது அதிர்ந்து போனேன். கூட்டத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பர் காலச்சுவடு கண்ணனிடம் சுட்டிக் காட்டினேன். அவரும் பார்த்து தவறு நடந்துள்ளதுதான் என்று உறுதிப் படுத்தினார். அந்த கூட்டத்திலேயே இதனை மேடையில் வைத்து கேட்டிருக்கலாம் .ஆனால் என்னால் பாசத்தோடு நினைக்கப்படுகிற சேரன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், சுகிர்தராணி போன்ற பலரும் பேசிய அருமையான கூட்டத்தை அசிங்கப் படுத்த வேண்டாமென பொறுத்துக் கொண்டேன். கூட்டம் முடிந்தவுடன் இந்த புத்தகத் தயாரிப்பில் பொது ஆலோசனை வழங்கியவராக உங்களால் அப்புத்தக நன்றியுரையில் குறிப்பிடப் படும் கவிஞர் சேரனிடம் நடந்த தவறைச் சுட்டிக் காட்டினேன். அவர் மறுபதிப்பில் சரி செய்து விடலாம் என சொல்லி நகர்ந்து விட்டார். மறுநாள் தொலைபேசுவதாகத் தெரிவித்தார். ஆனால் மறுநாள் அவரிடமிருந்து சத்தமே இல்லை. அவர் உங்களிடம் இது குறித்து சொல்லியிருப்பார் என்றும் உங்களிடமிருந்து வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் வருமென்றும் இதுநாள் வரை காத்திருந்து ஏமாந்து போனதால் இக்கடிதம்.
1 முதலாவதாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் INTELLECTUAL PROPERTY RIGHTS என்பதை மதியாமல் செயல்பட்டிருப்பதை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்
2 முதற்பதிப்பின் நன்றிக் குறிப்பில் நீங்கள் இத்தொகுப்பிலுள்ள 78 கவிஞர்களுக்கும் அவர்கள் ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து இருக்கிறீர்கள். அப்படியானால் கவிஞர் வ. ஐ. ச ஜெயபாலனிடமும் ஒப்புதல் கடிதம் வாங்கினீர்களா? அப்படியானால் அவர் எனது “மியூசியம்” கவிதையை அவர் பெயரில் வெளியிட ஒப்புதல் கொடுத்தாரா? வ.ஐ. ச. ஜெயபாலன் தன்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை என்று என்னிடம் தெரிவிக்கிறாரே? நீங்கள் அப்படி
வ. ஐ.ச. ஜெயபாலனிடம் ஒப்புதல் வாங்கியிருப்பதாக நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமென்றால் அக்கடித நகலை எனக்கு அனுப்ப முடியுமா?
3 இந்திரன், வ.ஐ. ச .ஜெயபாலன் ஆகிய இரு கவிஞர்களையும் இதன் மூலமாக அவமதித்து இருக்கிறீர்கள்.

 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் செயலர் என்ற வகையில் COPY RIGHT விதிமுறைகளை அலட்சியப் படுத்தி என் மன நிம்மதியைக் கெடுத்ததற்கு தங்களின் விளக்கம் என்ன என்பதை அறிய காத்திருக்கிறேன்.

 

அன்புடன்
இந்திரன் Indran48@gmail.com கைபேசி: O9840738224

 

3

 

வ,ஐ,ச,ஜெயபாலனின் பதிவு.

 


Jaya Palan

 

தெரு நாய்கள் தாங்கள் சிறுநீர் கழித்து அடையாளாப் படுத்திய புலத்துக்குள் (Territory) தங்கள் கோஸ்ட்டி சாராத இன்னொரு நாய் நுழைய அவை அனுமதிப்பதில்லை. காலமெல்லாம் அவை அந்த புலத்தை இறுக பற்றி வைத்திருக்கும்.

*

ஆரம்பத்தில் இருந்தே ரொறன்டோ பல்கலைக் களகத்தின் தமிழருக்கான வளங்களையும் Ontario Trillium Foundation போன்ற நிதி உதவும் நிறுவனங்களையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள் என  கனடாவை கண்டுபிடித்த யாழ்பாண கொலம்பஸ்சின் கோஸ்டியினர்மீது  குறச்சாட்டு உள்ளது. எங்கள் மரியாதைக்குரிய அமரர் இருந்தபோது கொலம்பஸ் கோஸ்டியினர் ஓரளவு அடக்கி வாசித்தனர். இந்திரனைப் போன்ற கலைஞர்களை அவமதிக்கும் சதிச் செயல்களுக்கு அங்கு வாய்பிருக்கவில்லை. எந்தக் கோஸ்டியையும் சாராத எங்கள் கவிதைகளை அவரே மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த நல்ல உள்ளம் இருந்திருந்தால் இந்த அசிங்கமான விவாதம் இடம்பெறுகிற சூழல் ஏற்பட்டிருக்கது.

*

கனடாவில் மேமாதம் தோறும் நிகழும் ஆய்வரங்குக்கு என்னை அழைக்க தான் விரும்பியும் இன்னும் சாத்தியமாகவில்லை என்று பலவருடங்களின்முன் என்னிடம் பேராசிரியர் ஒருவர் வருத்தம் தெரிவித்தார், நான் இதைபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை.                                   

*

சிறந்த கவிஞர் இந்திரன் கவிதைகளை கவிஞர் சுகுமாரன் போன்றவர்களும் என்னுடைய சிறந்த கவிதைகளை கவிஞர் திருமாவளவன் போன்றவர்களும் சிபார்சு செய்தபோதும் அவற்றை கனடா இலக்கிய தேட்டம் நிராகரித்தது. அத்துடன் விட்டிருக்க வேண்டியதுதானே?   ஏன் இந்திரனின் கவிதையை திருடி என் பெயரில் வெளியிட்டு எனக்கு திருட்டுப் பட்டம் கட்டவேண்டும்?. இந்த சதிக்கு “நாம் எல்லா கவிஞர்களதும் சமதத்தைப் பெற்றோம்” என்கிற முத்தாய்ப்பு வேறு.ஏன் இப்படி பொய் பேசுகிறீர்கள் இந்திரன் கவிதைகளை தனது பெயரில் வெளியிட ஜெயபாலன் சம்மதம் கொடுத்தாரா? என இந்திரன் கேட்க்கிறார். புத்தக வெளியீட்டுக் அமைப்பில் இருக்கிற சிங்கபூர்க் கவிஞர் லதாவே புத்தகத்தைப் பார்த்துத்தான் தனது கவிதை வெளிவந்திருபதை  அறிந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.  இனியும் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோன்ற பொய்களைப் பேச வேண்டாம்.

 

*

நானோ இந்திரனோ உங்கள் கோஸ்டியில் இல்லை என்பதற்க்காக எங்களுக்கு அவமானம் விழைவிக்கும் உங்கள் கோஸ்ட்டி அரசியலுக்கு ஏன் கனேடிய வளங்களை பயன் படுத்துகிறீர்கள்.

*

கனடாவிலும் ரொறன்ரோ பல்கலைக் களகத்திலும் ரொறன்ரோ தமிழ் சமூகத்தின் மத்தியிலும் உங்களைவிட உண்மையான பலர் இருக்கிறார்கள். கொஞ்சமாவது உண்மை இருந்தால் மன்னிப்புகூட கேட்க்கவேண்டாம் உங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு நேர்மையானவர்களுக்கு வழிவிடுங்கள். அதுபோதும்.

 

இதன்பின்னும் இவர்கள் பதவிகளில் ஒட்டி இருப்பதை கனேடிய தமிழ் மக்களும் கனேடிய அரசும் அனுமதிக்கக் கூடாது.

 

Edited by poet

மன்னிப்பு கேட்டால் அவர்களுக்கு மசிர்உயிர்   போய்விடும் அவ்வளவு மானத்துடன் வாழ்பவர்கள் அவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆக்களின் தமிழ் இலக்கியம் என்பதே நான் பெரிசா நீ பெரிசா.. போட்டி பொறாமை..அடிபிடி.. மோதல்..இழுபறி.. மாற்றுக் கருத்து அரசியல் தான். இதுக்கு அப்பால்.. இதுங்க நகரவே போறதில்லை. அதைத் தாண்டிய இலக்கிய பார்வையும் படைப்பு படைக்கும் ஆற்றலும் இவையிட்ட இல்லை. உப்படியே மாற்றி மாறி ஒவ்வொரு இலக்கிய நிகழ்வுக்கும் பெயர் வைச்சு குடுமி பிடிச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியான். தமிழ் உங்களால்.. வளரும். :grin:

Edited by nedukkalapoovan
இலக்கண திருத்தம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இத்தனை நாட்களாக பேசவில்லை என்று சிலர் கேட்கிறார்கல்>

கவிதை வெளியிட எங்களிடம் அனுமதி பெறவில்லை. வெளியிட்டபின் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை. விகடன் பதிபாக 2ம் பதிப்பு வருகிற சேதிகூட எமக்குச் சொல்லப் படவில்லை. புத்தகக் கண்காட்ச்சியில் நடந்த 2ம் பதிப்பு வெளியீட்டுக்கு கனடாவில் இருந்து சேரனை அனுப்பியவர்களுக்கு சென்னையில் இருக்கும் இந்திரனுக்கும் எனக்கும் தகவல் சொல்லவில்லை. தவற்றை மறைக்கவே அவர்கள் விரும்பியிருக்கிறார்கள்.
இந்திரன் தற்செயலாக புத்தக வெளியீட்டுகுப்போய் தற்செயலாக புத்தகத்தை புரட்டிப் பார்த்தபோதுதான் நடந்த தவறு இந்திரனுக்குத் தெரிய வந்ததுனப்போது ஆண்டுகள் கடந்து 2ம் பதிப்பும் வெளிவந்திருந்தது. அதன்பின்னர் இந்திரன் கூறித்தான் நடந்த மோசத்தை நான் அறிந்தேன். அதன் பின் இருவரும் சேர்ந்துதான் விகடன் பிரசுரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இன்றுவரை இருவரும் சேர்ந்தே செயல் படுகிறோம்.
பிரச்சனையை எதிர்நோக்குவதற்க்குப் பதிலாக என்னையும் இந்திரனையும் பிரிதாளாவே முயற்சிக்கிறார்கள்.

அன்புக்குரிய திரு அ.முத்துலிங்கம் செயலாளர் கனடா இலக்கிய தோட்டம் அவர்களுக்கு.

1.நீங்கள் என்னை பொருட்படுத்தாதபோதும் கவிஞர் இந்திரனையாவது பொருட்படுத்தி அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவிதிருக்கிறீர்கள். இதன்மூலம் அரைக்கிணறு தாண்டினால் போதும் என முடிவு எடுத்திருக்கிறீர்கள். இதுவும் தற்செயலானதுதானா?

2.. இந்திரனுக்கும் எனக்கும் கவிதை மாறிப் பிரசுரமான அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. மேலதிகமாக எனக்கு திருட்டுப் பட்டமும் கிடைதிருக்கிறது. எனினும் நீங்களும் சேரனும் என்னோடு பேசுவதை தவிர்திருக்கிறீர்கள். . இதுவும் தற்செயலானதுதானா?

3. நீங்கள் ஏன் கவிதையை என்னிடம் கோரிப் பெறவில்லை? அதற்க்கு உன்கள் அளவீட்டில் நான் அசல் கவிஞன் இல்லை என்பது காரணமா? இதுவும் தற்செயலானதுதானா?

3. நீங்களாகக் கவிதையைத் தெரிவு செய்திருக்கிற்இர்கள். அந்த சூழலில் நீங்கள் ஏன்  ஜெயபாலன் நீங்கள் எழுதிய  இன்ன தலைப்புள்ள கவிதையை பிரசுரிக்க அனுமதி தேவையென எனக்கு எழுதி அனுமதி பெறவில்லை? அப்படி பெற்றிருப்பின் தவறு நிகழ்ந்திருக்காதல்லவா? அப்படிப் பெற்றாமை சட்டப்படி குற்றமல்லவா? TRILLIUM FOUNDATION விதிகள் இத்தகைய எழுத்தாளர் உரிமை மீறலை அனுமதிக்கிறதா? இதுவும் தற்செயலானதுதானா?

4. நீங்கள் ஏன் புத்தகம் அச்சடிக்கு முன்னம் எழுத்து சொற் பிழைகள் சரிபார்க்க எனக்கு பிரதி அனுப்பவில்லை? இதுவே வளமையல்லவா? அப்படி செய்திருந்தால் தவறு நிகழ்ந்திருக்காதல்லவா?  இதுவும் தற்செயலானதுதானா?  

5.. உங்கள் அமைப்புக்கு உள்நோக்கம் இல்லதிருந்திருப்பின்  பிரசுரமானதும் எனக்கும் இந்திரனுக்கும் புத்தகம் அனுப்பி இருப்பீர்களல்லவாளதுதானே வளமை? புத்தகம் அனுப்பததுமட்டுமல்ல தகலைக்கூட மறைதிருக்கிறீர்கள். நீங்களோ சேரனோ இதனை எமக்கு ஏன் எமக்குச் சொல்லவில்லை? இதுவும் தற்செயலானதுதானா?

6. தர்செயலாக ஆனந்த விகடன் வெளியிட்ட இரண்டாவது பதிப்பை தற்செயலாக அங்குபோன இந்திரன் தற்செயலாக பார்திருக்காவிட்டால் இன்றுவரை எமக்கு விசயம் தெரிந்திருக்காது அல்லவா? இது தர்செயலாக தெரியவில்லை. இதுவும் தற்செயலானதுதானா?

7. சென்னையில் நடந்த சேரன் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏன் எனக்கோ இந்திரனுக்கோ அழைப்பு அனுப்பவில்லை? இதுவும் தற்செயலானதுதானா?

5. குட்டு உடைந்து இந்திரன் உங்கள் அமைப்பைசேர்ந்த அசல் கவிஞர்களான சேரனிடமும் சுகுமாரனிடமும் இதுபற்றி குறிப்பிட்டபோதும் ஏன் உடனடியாக வருத்தம் தெரிவிக்கவோ விகடன் பதிப்பிலாவது தவறைத் திருத்தவோ அவர்களோ கனடா இலக்கிய தோட்டமோ விரும்பவில்லை? இதுவும் தற்செயலானதுதானா?

8 அசல் எழுத்தாளரும் தோட்ட செயலாளர்மான நீங்கள் இதுவரை பொறுப்பை ஏற்று மன்னிப்புக் கேட்க்கவும் தவற்றைத் திருத்தவும் ஆனந்த விகடன் பதிப்பில் பிழைத் திருத்தமாக இந்திரன் பெயரை ஒட்டவும் ஏன் முன்வரவில்லை? இதுவும் தற்செயலானதுதானா?

9. இதுபோன்ற ஒரு சட்டப்பிரச்சினையில் நிறுவனப் பொறுப்பில் இருக்கும் நீங்கள் பழி அனைத்தையும் அமரர்அன ஒருவர்மீது சுமத்திவிட்டு தப்பிக்க முடியாது அல்லவா? இதுவும் தற்செயலானதுதானா?

10. சட்ட அடிப்படையிலும் தர்ம அடிப்படையிலும் ஒரு குற்றத்துக்கு இத்தனை தற்செயல் நிகழ்ச்சிகளைக் காரணம் காட்ட முடியுமா? இதை யாராவது நம்புவார்களா?

திரு முத்துலிங்கம் - செயலாளர் கனடா இலக்கிய தோட்டம் அவர்களே

நிபந்தனையில்லாமல் நடந்த தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோருவதுமட்டும்தான் இப்பிரச்சினையில் நாகரீகமான முடிவுக்கு வழிவகுக்கும்.

எனது இலக்கம் 0091 9941484253

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் என்ன நடந்தது உங்களுடைய கவிதையும் இந்திரனுடைய கவிதையும் பெயர் மாற்றங்களுடன் பிரசுரிக்கப்பட்டுவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் இப்போது மேலே நீங்கள் இணைத்திருக்கும் விடயம் தொடர்பாக சுமூகமான நிலைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது அதனையும் பதிவிடலாமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.