Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றத்திற்கு தயாராகுங்கள்! கஜேந்திரகுமார் அழைப்பு!!

Featured Replies

தமிழ் தேசியத்தின் புதிய அரசியல் போராட்டப் பாதைக்காக வழிகாட்டும் மாற்றத்திற்கான அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு வாக்களிக்க முன்வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 5 வருடமாக தமிழ் மக்களுடைய நலன்கள் அனைத்தினையும் திட்டமிட்டு புறக்கணித்து, மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிய தலமைகளை மக்கள் இணங்கண்டு நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.பதிவு இணைச் செய்தி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று இரவு மருதனால் மடப் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வழைப்பினை விடுத்துள்ளார்.பதிவு இணைச் செய்தி

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றால் எங்களுடைய தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும். இதனை மக்கள் விளங்களிக் கொள்ள வேண்டும். தேச அங்கிகாரத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரவில்லை. எங்களுடைய முன்னைய மாபெரும் தலைவர்கள் எடுத்த முடிவுதான் இது.

இந்த தேச அங்கிகாரம் நடமுறை சாத்தியமற்ற ஒன்று என்றும், வெறும் வெற்றுக் கோசம் இது என்றும் கூறுகின்றார்கள். பிரித்தானிய நாட்டினை எடுத்துப் பார்த்தால் அங்கு நான்கு தேசங்கள் இருக்கின்றது. கனடாவிலும் இரண்டு தேசம் உள்ளது. எனவே இது கற்பனை இல்லை. தேச அங்கிகாரம் என்பது உலகத்தில் வேறு எங்கும் இல்லாத தீர்வு இல்லை. முன்னேறிய நாடுகளில் தேச அங்கிகாரம் இருக்கின்றது. இப்படிப்பட்ட நாடுகளில் உள்ள தீர்வினைத்தான் நாங்ளும் தமிழ் தேசத்திற்காக கேட்கின்றோம்.பதிவு இணைச் செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான ஒற்றையாட்சியே தமிழ் மக்கள் மீது நடைபெறுகின்ற இனஅழிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. தமிழ் தேசிய வாதம் எங்களுடைய மனதில் இருக்கின்றவரைக்கும். ஒரு போதும் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.பதிவு இணைச் செய்தி

சாதாரண தமிழ் மகள் தான் ஒரு தேசிய வாதி என்று சொல்வதற்கு 5 அடையாளங்கள் உள்ளது.

தமிழ் தேசத்தினை திட்டமிட்டு அழிக்கின்ற சிங்கள தேசத்தினுடைய கொடியினை (சிங்கக் கொடியை) அவன் நிராகரிக்க வேண்டும். சிங்கள தேசத்தின் சுதந்திரமாக கருதப்படும் மாசி மாதம் 4 ஆம் திகதியை கறுப்பு தினமாக பகிஸ்கரிக்க வேண்டும். பௌத்த தேசியவாதத்தை கடைபிடித்து கட்சிக்கு எங்களுடைய மண்ணில் அடம் கொடுக்கக் கூடாது. இதே சிங்கள கட்சிகளோடு இணைந்து செயற்படுகின்றவர்களை துரோயாக பார்க்க வேண்டும். ஒன்றையாட்சியை அடியோடு நிராகரிப்பது என்பதே எங்களை தேசியவாதிகாக காட்சிக் கொள்வதற்காக கொண்டுள்ள அடையாளங்கள்.பதிவு இணைச் செய்தி

சிங்கக் கொடியை பிடித்தும், சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டும், அரசின் தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகித்தும், மேதினத்திற்கான சிங்க கட்சியை இங்கு அழைத்தும் அந்த 5 அடையாளங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறந்தள்ளி தேசிய வாதத்தினை இழந்துவிட்டது.

இந்த தேர்தலில் சமஸ்ரியை கையிலேடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச தலைவர்களிடம் 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாணசபை அதிகாரத்தினை விட வேறு ஏதையாவது இவர்கள் கேட்டுள்ளார்களா? தேர்தலுக்காகவே இவர்கள் சமஸ்ரியை கையிலேடுத்துள்ளார்களே தவிர அவர்களுடைய உள்ளத்தில் இருந்து சமஸ்ரி என்ற நாமம் எழவில்லை.பதிவு இணைச் செய்தி

எங்களுடைய மக்களுடைய நலன்கள் போனப்படாமம், எங்களுடைய மக்களுடைய இருப்பு உறுதிப்படுத்தப்படாமல், எங்களுடைய தேசம் அங்கிகரிக்கப்படாமல் நாங்கள் அமைதியாக இருப்பதற்கு எமக்கு எந்தவிதமான தேவையும் கிடையாது.பதிவு இணைச் செய்தி

எதிர்வரும் 17 ஆம் திகதி மிக முக்கியமான நாள். இது சாதாரண தேர்தல் இல்லை. இந்த தேர்தலில் வரும் முடிவு எங்களுடைய இனத்தின் விடிவுகாலம் தொடர்பாக ஒரு திருப்புமுனையை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.பதிவு இணைச் செய்தி

இந்த தேர்தலில் கடந்த 5 வருடங்களாக எங்களுடைய மக்களின் நலன்கள் அத்தனையும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு எங்களுடைய மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிவந்த தலமைகளை இணங்கண்டு மக்கள் நிராகரிக்க வேண்டும்.பதிவு இணைச் செய்தி

அல்லது தொடர்ந்தும் இன்னும் 5 வருடங்களுக்கு இதே தலமைகளைத்தான் தெரிவு செய்யப் போகின்றீர்கள் என்றால் அதனுடைய விளைவுகளை பாதாகங்கள் அனைத்திற்கும் முகம் கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.பதிவு இணைச் செய்தி

நாங்கள் கூறுகின்ற கருத்துக்கள் உண்மை என்று நீங்கள் நம்பிலால், நாங்கள் நேர்மையாக செயற்படுகின்றோம் என்று மக்கள் நம்பினால் நாம் பதவிக்காக விலைபோகவில்லை என்பதை ஏற்றுக் கொண்டால், எங்களுடைய கொள்கை உறுதியான கொள்ளை இந்த கொள்கை ஊடாகத்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பதை புரிந்து கொண்டால் எமது சைக்கில் சின்னத்திற்கு புள்ளடியிடுங்கள்.பதிவு இணைச் செய்தி

எமக்கு புள்ளடியிடுவதுடன் நீங்கள் நின்றுவிடக் கூடாது. எங்களுடைய கொள்கைகளை நீங்கள் எடுத்துச் சென்று ஏனையவர்களுக்கு பகிர வேண்டும். எங்களுடைய இயக்கத்தின் பங்காளிகளாக மாற வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.பதி

http://www.pathivu.com/news/42289/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாவற்றையும் விட இலங்கை அரசுக்கும் ஒற்றை ஆட்சிக்கும் விசுவாசமாய் இருப்பேன் என 6ம் சரத்தின் அடிப்படையில் பாராளுமன்ற கதிரைக்காக உறுதி மொழி எடுக்காமல் விடவேண்டும்.

விடுவாரா பொன்னம்பலத்தார்? :)

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணய உரிமை எனும் சம்பந்தர் கோஸ்டி எவ்வாறு உறுதி மொழி எடுக்கப் போகிறார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாவற்றையும் விட இலங்கை அரசுக்கும் ஒற்றை ஆட்சிக்கும் விசுவாசமாய் இருப்பேன் என 6ம் சரத்தின் அடிப்படையில் பாராளுமன்ற கதிரைக்காக உறுதி மொழி எடுக்காமல் விடவேண்டும்.

விடுவாரா பொன்னம்பலத்தார்? :)

ஐயா... கோசான் அவர்களே....
தந்தை செல்வாவும், ஸ்ரீலங்கா  பாராளுமன்றத்தில் அந்த உறுதி மொழியை தான்... எடுத்தார். 
அந்த உறுதி மொழி எடுக்காவிட்டால், அவர் ஸ்ரீலங்கா  பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதி அற்றவர் என்று.. 
ஆரம்பத்திலேயே... கழுத்தைப் பிடித்து, வெளியெ.... தள்ளி விடுவார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.
அட.... இது கூட, தெரியாமலா, இவ்வளவு நாளும்...... யாழ் களத்தில், குப்பை கொட்டிக் கொண்டு இருந்தீர்கள்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவை போல இவையும் சுத்த வாக்குப் பொறுக்கி கூட்டம் தானோ?

பிறகென்ன மாற்றமும் மண்ணாங்கட்டியும்?

சுதந்திர தினத்தில் பங்கெடுக்கும், கொடி பிடிக்கும் சம் சும்முக்கு 6 ம் சட்ட உறுதி மொழி பெரிசில்லயே? 

ஆனால் பொன்ஸ் அப்படியா ? தமிழ் தேசியசிங்கமாச்சே?

  • கருத்துக்கள உறவுகள்

70 இல் தமிழீழம் என முழங்கிய சம்பந்தன் மாவை மற்றும் சுரேஷ் சித்தர் எடுத்தது கூட தெரியாதா? 

  • கருத்துக்கள உறவுகள்

சிறி

6ம் திருத்தம் வந்தது 83 க்கு பின். அப்போ செல்வா செத்துச் சுண்ணாம்பாய் போனார்.

உங்களுக்கெல்லாம் அறிவு மூக்கு வழியா கொட்டுதப்பா.

மாவை சம் சும் சித் - எல்லோரும் செய்ததையே பொன்னரும் செய்யப்போறர் எண்டா - இந்த மாற்றம் மண்ணாங்கட்டி என்பது யாரை ஏய்க்க?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவை போல இவையும் சுத்த வாக்குப் பொறுக்கி கூட்டம் தானோ?

பிறகென்ன மாற்றமும் மண்ணாங்கட்டியும்?

சுதந்திர தினத்தில் பங்கெடுக்கும், கொடி பிடிக்கும் சம் சும்முக்கு 6 ம் சட்ட உறுதி மொழி பெரிசில்லயே? 

ஆனால் பொன்ஸ் அப்படியா ? தமிழ் தேசியசிங்கமாச்சே?

கூட்டமைப்பை வாக்குப் பொறுக்கி கூட்டம் என ஒத்துக் கொள்கிறீர்கள். 

தேர்தலுக்கு பிறகு பலர் வெள்ளை கொடி பிடிக்க போயினம் .(சரண்டர் )

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்,

ஆனா அதைவிட மோசமான பிணந்தின்னிகள் புலவாலுகளும், பொன்னர் கூட்டமும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிணந்திண்ணிகள் கூட்டம் இங்கிருக்கும் மாற்றுக்கருத்து காக்காக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

புலவாலுகளைப் போல் நான் புலியிடம் சுட்ட காசில் காசில் மனிசி பிள்ளயளுக்கு உள்பாவாடை எடுப்பதில்லை. ஆகவே பிணந்தின்னிகள் புலவாலுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

புலியிடம் சுட்ட காசு என ஊளையிடும் நீங்கள் அதை பகிரங்கமாக தெரிவிக்கலாமே? இங்கு யாழில் அப்படி யாரும் இல்லை என்றே நினைக்கின்றேன்.

உள்பாவாடையை நீங்கள் கட்டுகிறீர்களோ? 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்... இன்னும் , நீங்கள் ஸ்ரீலங்கா அரசு 6´ம் திருத்தத்திலிருந்து 13´ம் திருத்தம் தாண்டி...  99´ம் திருத்தம் வந்தாலும்,
தமிழனுக்கு எதுவும் கிடைக்க, சிங்கள அரசியல் வாதிகள் தரத்  தயாரில்லை.
உங்களைப் போன்ற.... "காதில், பூ" வைத்தவர்கள்..... நம்பும் கதை அது.:grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலியிடம் காசு சுட்டவர்களைச் சொன்னா உங்களுக்கு ஏன் டென்சன் ஆகுது?

தொப்பி கிப்பி ஏதேனும்......

நான் உள்பாவடை கட்டுவதில்லை. ஆனால் புலியிடம் காசை சுட்ட ஈனப் பிறப்புகள் மனிசிமாருக்கு என்ன செய்தாலும் - அதில் எல்லா மக்களுக்கும் பங்குண்டு. ஏண்டா அது மக்கள் பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் ஸ்கொட்லாந்து மாதிரி அதிகாரம் உள்ள அலகு வேண்டுமென்கின்றார். அதனைத்தான் தேசம் என்று சொல்கின்றார். பிரித்தானியாப் பாராளுமன்றம் போதிய அதிகாரங்களைப் பகிரவில்லையென்று ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி சொன்னாலும் ராணியின் முடியாட்சியை ஏற்றுக்கொள்வதாகத்தானே சத்தியப்பிரமாணம் செய்தார்கள். அதுமாதிரி கஜேந்திரகுமாரும் 6ஆம் சரத்துக்கு உட்பட்டு சத்தியப்பிரமாணம் செய்யலாம். பின்னர் அந்தச் சரத்தை அகற்ற அழுத்தம் கொடுத்தால் தமிழர் தேசத்தை ஒரு அதிகாரமுள்ள அலகாக மாற்றக்கூடிய நிலைமை இன்னும் முப்பது வருடத்திலாவது சாத்தியமே.

கூட்டமைப்பை நம்பினால் ஒவ்வொரு ஐந்தாறு வருசத்திலும் சமஸ்டிப் பல்லவியைத் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கவேண்டியதுதான். பின்னர் அதுவும் தேவையில்லாத மூன்றாவது சிறுபான்மையினமாக வந்துவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. தனிநாடாகவே போனாலும் ராணியின் முடியின் கீழேதான் இருப்போம் ( அவுஸ்ரேலியா போல) என்பதுதான் SNP யின் நிலைப்பாடு. ஆக அவர்கள் சத்தியப் பிரமாணம் எடுப்பதில் ஒரு கொள்கை முரணுமில்லை.

 இவர்களுக்கு சரியான உதாரணம் வட அயர்லாந்தின் சின்பெயின்.

அவர்கள் தேர்தலில் வெண்டாலும் பிரமாணம் எடுக்க மாட்டார்கள். அதனால் ஒரு சலுகையும் கிடையாது ஆனால் moral right to represent இருக்கும்.

பொன்பம்பலம் இப்படிச் செய்தால் - நானே அவருக்கு இறங்கி வேலை செய்வேன்.

 

கிருபன்,

நீங்கள் இப்படிச் சொல்லுறியள்.

ஆயுதப் போருக்கு முன் தமிழர் கிழக்கில் 65%. இன்று 33. முதலமைச்சர் இல்லை.

இன்னும் 20 வருடம் முண்ணணி போக்கிரி அரசியல் செய்தால் - வடமாகாண முதல்வராக ரிசாட் பதியுதீன் இருப்பான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலியிடம் காசு சுட்டவர்களைச் சொன்னா உங்களுக்கு ஏன் டென்சன் ஆகுது?

தொப்பி கிப்பி ஏதேனும்......

நான் உள்பாவடை கட்டுவதில்லை. ஆனால் புலியிடம் காசை சுட்ட ஈனப் பிறப்புகள் மனிசிமாருக்கு என்ன செய்தாலும் - அதில் எல்லா மக்களுக்கும் பங்குண்டு. ஏண்டா அது மக்கள் பணம்.

இதென்ன... கரைச்சலாய் கிடக்கு.......
யாரப்பா... ரென்சன் ஆனது? 
அடிக்கடி.... உள் பாவாடையை பற்றி, நினைத்துக் கொண்டிருக்கும்....
உங்களுக்குத் தான்.... ரென்சன் வருது.

டிஸ்கி: இப்போது..... பெண்கள் உள் பாவாடை, அணிகின்றவர்களா? லெகின்ஸ்க்கு மேல், சீலை கட்டலாம் தானே.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற அவங்க இப்ப வெளிப்பாவாடையே கட்ட வேணுமோ எண்டெல்லே யோசிக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு 13 ஆசனங்களை வென்றால் தமிழ் மக்கள் இதுவரை நம்பிவந்த எதிர்ப்பு அரசியலில் இருந்து மாறி இணக்க அரசியலுக்கு பச்சைக்கொடி காட்டுகின்றார்கள் என்றுதான் அர்த்தம். கஜேந்திரகுமார் கட்சியில் உள்ளவர்கள் ஒரு ஆசனத்தை வென்றால் கூட எதிர்ப்பு அரசியல் மீது மக்கள் இன்னும் நம்பிக்கைகொண்டுள்ளனர் என்றுதான் கருதவேண்டும். 

இப்படியான கருத்தியல் மாற்றங்களை உருவாக்க விவாதங்களையும் விளக்கங்களையும் பாவிக்காமல் வெறும் சேறடிப்புக்களையும், character assassination களையும் பாவிக்கின்றார்கள். புலம்பெயர்நாடுகளில் இருந்துகொண்டு தாயக மக்கள் சுதந்திரமான, ஜனநாயக ரீதியில் முடிவெடுக்கும் நிலையில் குழப்பத்தை உண்டுபண்ணப் பலர் முயற்சிக்கின்றனர். அதனால்தான் பல அநாமேதய துண்டுப்பிரசுரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

70-80 களில் அரசியல் விழிப்புணர்வுள்ள இளைஞர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் பலருக்கு வாக்களிக்கும் வயதுகூட இல்லை. ஆனால் அதே வயதில் தாயகத்தில் உள்ளவர்கள் இன்று அரசியலில் அக்கறையற்றுப் போயுள்ளனர். இந்த நிலை மாறும்வரை ஒரு சரியான தலைமை தமிழர்களுக்குக் கிட்டாது. அதுவரை கிழடுகளின் கலாட்டா நடந்துகொண்டிருக்கும். நாமும் கூயாய், மாயாய் என்று கூச்சல் போடுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் அன்பான உறவு கோ சான் அவர்களை கனநாட்களாகக் காணவில்லை என நினைச்சனான், ஆனால் அவர் புலிவால்களது பெண்டாட்டிமாரில் யார் யார் அடிச்சகாசில் தங்கள் அந்தரங்கங்களை மறைச்சிருக்கினம் எண்டு கணக்கெடுக்கப்போயிருக்கிறார் என இப்பதான் தெரியுது.

இப்படியான உள்ளாடைகளில் கவனமெடுக்கும் சிலரை அழைக்க ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை இருக்கு மறந்துபோயிட்டன். பரவாயில்லை யாழ்களம் பல்வேறுதரப்பட்ட உறவுகளை தன்னகத்தே உள்ளடக்கி புதிய வரலாறுபடைக்கின்றது.

 

மனிதசமுதாயம் மிகவும் முன்னேறிக்கொண்டு வருகுதையா நாங்களும் கொஞ்சமாவது மாறமுயற்சிக்கவேண்டும் என என்னை நானே நுள்ளிவிட்டிச் சொல்லுறன் உங்களுக்குச் சொல்லவில்லை.

கிருபன்,

அப்போ, கஜேந்திரகுமார் குழுவுக்கு எதுவித பாராளுமன்ற ஆசனமும் கிடைக்கவில்லை என்றால் எதிர்ப்பரசியல், தாயக அரசியலில் ஈடுபடும் மற்றும் புலிவால்கள் உட்பட்ட புலம்பெயர்தேசத்தவர்கள் அனைவரும் களத்திலிருந்து வெளியேறுவது நல்லம்தானே.

அப்படியாகில் உங்களது எந்தவகையான உதவியும் தேவையில்லை நீங்கள் அங்கினைக்க கழுவிக்கொண்டு இருங்கோ என புலத்துத் தமிழர்கள் கூறுகிறார்கள் எனப் புரிந்துகொள்ளலாமா?

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

Underwear Fetishism 

 

கோசான் அப்படியானவர் இல்லை என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

எழுநாயிறு, கஜேந்திரகுமார் தேர்தலில் வெல்லாவிட்டால் அவரை எதிர்ப்பு அரசியல் செய்யத் தகுதியானவர் என்று மக்கள் நம்பவில்லை என்றுதான் கொள்ளவேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளதவர்கள் ஒருபோதும் தலைமையாக உடனடியாக வரமுடியாது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி grass root அளவில் ஆதரவோடு இருந்ததாக தெரியவில்லை. கடந்த ஒரு மாதத்தில் நிலைமை மாறி இருந்தால் திங்களன்று தெரியும்தானே.

மேலும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் அரசியல் ரீதியில் இடைவெளி அதிகமாகிக்கொண்டுவருகின்றது என்பது தாயகமக்களின் சிந்தனையோட்டத்தை புலம்பெயர்ந்தவர்கள் புரியவில்லை அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை என்று அர்த்தப்படுத்தலாம். அரசியல் மாற்றங்களை மக்களில் விதைக்க அதிக காலம் எடுக்கும். அதற்கு பொறுமையுடன் அடிமட்டத்தில் சென்று வேலைசெய்யவேண்டும். உடனடிப் பலனை எதிர்பார்ப்பவர்கள் சண்டையைத்தான் ஆரம்பிக்கவேண்டும். ஆனால் அதற்கு இப்போது தாயகத்தில் ஒருவரும் தயாரில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கிருபன் எனது கருத்துப்படி எதிர்ப்பு அரசியலை புலத்துமக்கள் விரும்பவில்லை எனத்தான் நாம் பொருள்கொள்ளவேண்டும், நான் நிறையப்பேருடன் உரையாடியபோது அதையே அவர்கள் கூறுகிறார்கள், போர்க்குற்றம் இன அழிப்பு இவைகளை புலம்பெயர்தேசத்தவரே பெரிதாகத் தூக்கிப்பிடிக்கினம் மற்றது அவர்களது கருத்துப்படி உங்கடவேலையை நீங்கள் பாருங்கள் எனக்கூறுவதுபோலத்தான் எனக்குப்படுகிறது. இந்தத் தேர்தலின்பின்பு புலத்துக்கும் புலம்பெயர்தேசத்தவருக்குமிடையிலான தூரம் அதிகமாகிவிடும் என்பது எனது கணிப்பு.

புலம்பெயர் தேசங்களில் தாயகம்நோக்கிய செயல்பாடுகளை எடுத்துச் செல்பவர்களுக்கு எனது கருத்தாக, இனிமேல் கொஞ்சம் விலகி இருந்துபாருங்கள் எதிர்காலத்தில் நிலைமைகள் மாறினால் பார்க்கலாம் எனத்தான் எனது கருத்தைக்கூறியிருக்கிறேன்

தவிர நானும் இனிமேல் வேறுவழியில போவமெண்டு நினைக்கிறன் புலிவால்கள் எனக் கூறுபவர்கள் சில்வேளை அடிச்ச காசை அனுபவிக்கவேணும்தானே எனக்கூறலாம். அப்பிடியும் எடுத்துக்கொள்ளுங்கள்.

எனிலும் யாழ்கள உறவு வாலி அவர்களுக்கு நான் விடுத்த அழைப்பு இப்போதும் காலவதியாகாமலே இருக்கு வருக வருக.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எதிர்ப்பு அரசியலுக்கு ஆதரவானவர்கள் என்பதால்தான் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையும் சமஸ்டி, தாயகம் என்றெல்லாம் கூறியுள்ளது. இணக்க அரசியல் செய்து உரிமைகளை வென்றெடுப்போம் என்று அவர்கள் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் மறைமுகமாக அதைத்தான் செய்யப்போகின்றார்கள். அதாவது கூட்டமைப்புக்கும் மக்களின் நிலைப்பாடு என்னவென்று புரியவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை பிரச்சாரத்தின்போது சந்திப்பவர்களுக்கு அவர்களின் நிலைப்பாடுகள் தெரிய வாய்ப்பில்லைத்தானே.

தாயக மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விரும்புவதால் வெளிப்படையாக போர்க்குற்றம், இனவழிப்பு பற்றியெல்லாம் துணிந்து முன்னெடுக்கமாடார்கள். ஆனால் தமது கோபங்களையும், உரிமைக்கான விருப்பங்களையும் சத்தமில்லாமல் வெளிப்படுத்துவார்கள் என்றுதான் நினைக்கின்றேன். 

டக்ளஸுடன் இன்னுமொரு ஈபிடிபி உறுப்பினர் வென்றால் மக்கள் இணக்க அரசியலுக்குத் தயார் எனக் கருதலாம்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.