Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்புக்கு ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினரை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் தீர்மானம்

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் பீடத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனி தமிழர்களைக்கொண்ட தேர்தல் தொகுதியாக கருதப்படும் பட்டிருப்பு தொகுதிக்கு இந்த தேசிய பட்டியலை வழங்க தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த தேர்தலில் பட்டிருப்பு தொகுதிக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்வுப்போக்கு காணப்படுகின்றது.

இந்தநிலையில் பல தரப்பினராலும் பட்டிருப்பு தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்காக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் பெரும் பங்காற்றி வருவதுடன் தமிழ் தேசியத்தினை மட்டுமே இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது.

இம்முறை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரண்டு மடங்கு அதிகமான வாக்குகளை தமிழ் மக்கள் அளித்துள்ளனர்.

குறிப்பாக பட்டிருப்பு தொகுதியில் சுமார் 80 வீதமான வாக்குகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பட்டிருப்பு தொகுதியில் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்த உறுப்பினருக்கு தேசியப் பட்டியல் மூலம் நியமனம் வழங்க கட்சி தலைமை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.tamilwin.com/show-RUmtyIRVSVlw3H.html 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லமுடிவு...

  • கருத்துக்கள உறவுகள்

2 தேசியப்பட்டியலும் கிழக்கு மாகாணத்துக்கே தரப்படவேண்டும் என்பதே எனது விருப்பம். மட்டக்களப்புக்கு ஒன்றும், அம்பாறைக்கு ஒன்றுமாக கொடுத்தால் நல்லது. வடமாகாணத்துக்கு மாகாணசபையும் இருப்பதால் தேவையில்லை. ஆனால் கிழக்கு மாகாண தமிழரின் அரசியல் பலம் மேலும் உறுதியாக்கப்படுவதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

2 தேசியப்பட்டியலும் கிழக்கு மாகாணத்துக்கே தரப்படவேண்டும் என்பதே எனது விருப்பம். மட்டக்களப்புக்கு ஒன்றும், அம்பாறைக்கு ஒன்றுமாக கொடுத்தால் நல்லது. வடமாகாணத்துக்கு மாகாணசபையும் இருப்பதால் தேவையில்லை. ஆனால் கிழக்கு மாகாண தமிழரின் அரசியல் பலம் மேலும் உறுதியாக்கப்படுவதே நல்லது.

நல்ல... யோசனை வாலி.:)

தலிவர்.... அம்பாறையில், சிங்கள பியசேனாவுக்கு.... கொடுத்திட்டார் என்றால், என்ன செய்வது? crazy

தலிவர்....மூதூர் மு நாவுக்கு தான் கொடுப்பார்  :cool:

http://www.omlanka.net/news/2431-we-will-work-for-tamil-muslim-solidarity-sampanthan-vows-in-muthur.html

  • கருத்துக்கள உறவுகள்

தலிவர்....மூதூர் மு நாவுக்கு தான் கொடுப்பார்  :cool:

http://www.omlanka.net/news/2431-we-will-work-for-tamil-muslim-solidarity-sampanthan-vows-in-muthur.html

தலீவர்... அதனையும் செய்து போட்டு, தனது சாணக்கியம்... என்று சொல்ல,
அதுக்கும்.... வக்காலத்து வாங்க, பல அல்லக்கைகள்.... இங்கு, வாய்... உழையாமல்.... 
இஸ்கூலுக்கு..... போய் படிச்சவர், கறுப்புக் கோட்டு போட்டு... அதிலை, பேனையையும் செருகி வைத்திருக்கிறவர், எண்டு... புளுக வெளிக்கிட்டிடும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நினைப்பது  மாதிரி எல்லாம் சம்பந்தர் யோசிக்க மாட்டார்.
இன்னொரு சுமந்திரனை உருவாக்கவே அவர் விரும்புவார். tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நினைப்பது  மாதிரி எல்லாம் சம்பந்தர் யோசிக்க மாட்டார்.
இன்னொரு சுமந்திரனை உருவாக்கவே அவர் விரும்புவார். tw_anguished:

நிச்சயம்... வாத்தியார்.
சம்பந்தனின்.... கள்ள முழியிலேயே... அந்தாளின்  செயல் தெரியும்.
இதுக்கு... கிடைச்ச, வாழ்வு.  ஆரோ... விதை போட, இந்தாள்.... அறுவடை செய்து, கீரீடம் சூட்டுது.கேவலம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின் கருத்துதான் என் கருத்தும். யாழுக்குப் போதியளவு பிரதிநிதித்துவம் உண்டு.

மட்டு, அம்பாறை அல்லது திருமலைக்கு 2 யும் கொடுப்பதுதான் கிழக்கில் தமிழ் தேசியத்தை தக்க வைக்க உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.