Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Dheepan - தீபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dheepan

 
 
Dheepan
Description de cette image, également commentée ci-après

L'équipe du film au festival de Cannes 2015.

 
Données clés
Réalisation Jacques Audiard
Scénario Jacques Audiard
Thomas Bidegain
Noé Debré
Pays d’origine Drapeau de la France France
Genre Film dramatique
Sortie 2015
 

15px-Information_icon.svg.png Pour plus de détails, voir Fiche technique et Distribution

Dheepan est un film français réalisé par Jacques Audiard, sorti le 26 août 2015.

Le film, qui retrace l'histoire d'un réfugié tamoul en France, est sélectionné, en compétition, au Festival de Cannes 2015 où il remporte la Palme d'or.

 

Synopsis[modifier | modifier le code]

Dheepan est un combattant des Tigres tamouls. La guerre civile touche à sa fin au Sri Lanka, la défaite est proche, Dheepan décide de fuir. Il emmène avec lui une femme et une petite fille qu'il ne connaît pas, espérant ainsi obtenir plus facilement l'asile politique en Europe. Arrivée à Paris, cette « famille » vivote d'un foyer d'accueil à l'autre, jusqu'à ce que Dheepan obtienne un emploi de gardien d'immeuble en banlieue. Dheepan espère y bâtir une nouvelle vie et construire un véritable foyer pour sa fausse femme et sa fausse fille. Bientôt cependant, la violence quotidienne de la cité fait ressurgir les blessures encore ouvertes de la guerre. Le soldat Dheepan va devoir renouer avec ses instincts guerriers pour protéger ce qu'il espérait voir devenir sa « vraie » famille1.

Fiche technique[modifier | modifier le code]

Cette section est vide, insuffisamment détaillée ou incomplète. Votre aide est la bienvenue !
190px-Cannes_2015_36.jpg
210px-Antonythasan_Jesuthasan_Cannes_201
210px-Kalieaswari_Srinivasan_Cannes_2015
Le réalisateur Jacques Audiardavec les comédiens Antonythasan Jesuthasan et Kalieaswari Srinivasan, lors du festival de Cannes.

Distribution[modifier | modifier le code]

Distinctions[modifier | modifier le code]

Récompense[modifier | modifier le code]

 தீபன் படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்தேன்.

புலம் பெயர் தமிழர்களின் இன்னல்களை

தியாகங்களை

நன்நடத்தையை

செய்யும் தொழிலில் காட்டும் நாணயத்தை

சட்டத்துக்கு மதிப்பளிக்கும் மனிதாபிமானத்தை

ஒரு பிரெஞ்சுக்காரர் சொல்லியிருப்பது பெரும் பேறு...

 

ஒரு காட்சி

பாடசாலையில் மகளை (பெற்றமகள் அல்ல) சேர்க்க சென்றிருக்கும் போது

மகளிடம் பாடசாலை அதிகாரி கேட்கின்றார் 

உனது நாட்டில் பாடசாலைக்கு சென்றிருக்கின்றாயா என.

பதில் - இல்லை என்பது.

அடுத்த கேள்வி - ஏன் போகவில்லை

பதில் - பாடசாலையை எரித்துவிட்டார்கள்

அடுத்த கேள்வி - யார் எரித்தார்கள்

பதில் - அரசாங்கம் என்கிறாள் சிறுமி.

தியேட்டரில் ஒரு சலசலப்பு ஏற்படுகிறது.

இந்த சலசலப்புக்காக அந்த இயக்குநருக்கு நன்றி சொல்லுங்கள் உறவுகளே...

 

இந்தப்படத்தில் நான் தேடிய ஒருவர் கடைசிவரை கிடைக்கவே இல்லை

அவர் இதுவரை நானறிந்த  சோபா சக்தி.

ஆனால் இன்னொருவர் கிடைத்தார். நடிப்பாற்றல் மிக்க திறமையான நடிகர்

அந்தோனி(தீபன்) அவர்கள்.

இந்த தீபனின் தொடர்ச்சி எம்  எல்லோர் மனதிலும்  சோபா சக்தி உட்பட 

மாற்றங்களைக்கொண்டு வரும் என விரும்புகின்றேன். வந்தால் அதுவே 90 வீதம் தமிழ் பேசும் இந்தப்படத்தைத்தந்த 

அந்த பிரெஞ்சு மகனுக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்கும்.

முடிவில் எனக்கு உடன்பாடில்லை

ஆனால் முடிவு எம் முன்னால் நடப்பவையே....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Photo de Rajeevan Ramalingam.

’தீபன்’ - பிரெஞ்சு திரைப்படம்..! - ‘சீறும் புலிவேட்டை’

’பிரெஞ்சுப் படம் என்றால், கதாநாயகியை ஒரு காட்சியிலாவது நிர்வாணமாகக் காட்டுவார்களே? அப்படியானால் ‘தீபன்’ எனும் இந்த பிரெஞ்சுப்படத்திலும் கதாநாயகி காளீஸ்வரி நிர்வாணமாக வருகிறாரா?’

‘ஆம்..! ஒரு காட்சியில் அப்படி வருகிறார்’

என்று கிளுகிளுப்பாக எழுதியாவது, எல்லா தமிழர்களையும் இந்தப் படத்தைப் பார்க்க வைக்க வேண்டும் என்று, படம் பார்க்கும்போது, மனதிலே ஒரு ஐடியா உதித்தது.

ஆனால் படத்தின் முடிவு ( க்ளைமேக்ஸ் ) - அந்த ‘மட்டமான’ சிந்தனையை தகர்த்து எறிந்தது. அதனால் இப்படம் குறித்த எனது பார்வைக்குள் நுழையலாம் வாங்கோ..!!

** ** **

புங்குடுதீவு வித்தியா கொல்லப்பட்ட சமயம் வெகுண்டெழுந்த மக்கள் ‘இருப்பவர்கள் இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா?’ என்ற பதாகையை கையில் ஏந்தியவாறு போராடினார்கள். அந்த ‘இருப்பவர்கள்’ என்ற மறைபொருளால், குறிக்கப்பட்ட விடுதலைப்புலிகள், ( அல்லது அவர்கள் கையாண்ட சில இறுக்கமான நடவடிக்கைகள் ) பிரான்சுக்கும் அவசியம் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது ‘தீபன்’ எனும் இந்த பிரெஞ்சுப்படம். சில பல வாரங்களுக்கு முன்னர், கேன்ஸ் திரைவிழாவில் விருது வென்று சாதனை படைத்த இந்தப் படம், ஒவ்வொரு ஈழத்தமிழனும் கொண்டாட வேண்டிய அற்புத படம்..!

’ இங்கிருக்கும் தமிழர் சார்ந்த அமைப்புக்கள், திரைத்துறை அமைப்புக்கள் எல்லோரும் இயக்குனர் Jacques Audiard அவர்களுக்கு நன்றி பாராட்டி கடிதம் அனுப்ப வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டு,

இந்தப் படத்தில் உள்ள இன்னொரு அற்புதமான விஷயம் என்ன தெரியுமா? இங்கு பிரான்சிலே தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், இங்கும் No Fire Zone வேண்டும் என்று படம் சொல்கிறது. ஆனால் அந்த No Fire Zone இலும் பல Firing குகள் கேட்டதுதான் - குறியீட்டின் உச்சக் கட்டம்..!

ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரியவே இல்லை..! பிரெஞ்சு இயக்குனராகிய Jacques Audiard எப்படி, ஈழத்தமிழர்களை இவ்வளவு அச்சொட்டாக எடைபோட்டார்? எவ்வளவு நுணுக்கமாகக் கவனித்திருக்கிறார்? . நாங்க பிரெஞ்சு தெரியாமல் தடுமாறுவது, ‘ஓம்’ எண்டும் சொல்லாமல் ‘இல்லை’ என்றும் சொல்லாமல் குறுக்கும் மறுக்கும் தலையாட்டுவது, கிடைக்கிற வேலைகளை பஞ்சி பார்க்காமல் செய்யிறது, பிரான்சில் இருந்து லண்டனுக்குப் போனா நல்லா வாழலாம் எண்டு நினைக்கிறது, காஞ்சிபுரம் சாறி கட்டிக்கொண்டு கோயிலுக்குப் போறது, கும்பிடுறது, குடிக்கப் பால் இல்லாவிட்டாலும் சாமி சிலைக்கு ‘கொள கொள’ எண்டு ஊத்துறது, எங்களுக்கு விளங்காத மாதிரி பிள்ளைகள் பிரெஞ்சில் ஏதாவது கதைத்தால் சந்தேகப்பட்டு அடிக்கிறது என்று ஏகப்பட்ட ‘எமது இயல்புகளை’ அடுக்கி, குவித்து வைத்திருக்கிறார் இயக்குனர். ( விசாவுக்கான விசாரணையின் போது, அங்க அடிச்சான், இங்க வெட்டினான் என்று கதை சொல்வது, அதுக்கு ட்ரான்ஸ்லேஷனுக்கு வாற தமிழன் டென்சன் ஆவது, பிரெஞ்சு அதிகாரிக்குப் போட்டுக் கொடுப்பது, பிறகு ஹெல்ப் பண்றது - இதைக் கூட விட்டு வைக்கேல இயக்குனர் ).

இதெல்லாம் அவருக்கு எப்படித் தெரிந்தது? யாராவது சொல்லிக்கொடுத்தார்களா? அல்லது அவரின் தீவிர தேடலா? எல்லாமே அதிசயம் போங்கள்.

( அட, சொல்ல மறந்துவிட்டேன். - நாங்கள் பிரெஞ்சு பொலீசை ‘மாமா’ என்று அழைப்பதை கூட படத்திலே கொண்டு வந்திருக்கிறார்கள். மன்மதன் பாஸ்கியின் குரலில் - அந்த வசனம் ஒலித்தது )

அந்தாள், ஷோபா சக்தி இருக்கிறாரே, என்ன நடிப்புடா சாமீ? சிரிக்காமல் மூஞ்சையை உம் என்று வைத்துக்கொண்டே கண்களில் பாசத்தைக் காட்டுறார். கோபம், அன்பு, விரக்தி, எரிச்சல், பயம் என்று எல்லா உணர்வுகளையும் ‘மில்லிமீட்டர் கணக்கா அளந்து’ அளவா நடிச்சிருக்கிறார். அவரைப் பற்றி மிச்சம் கடைசியில் சொல்கிறேன்.

படத்தின் முக்கிய கதை - பிரான்சில் வாழும் வெளிநாட்டு அகதிகள் பற்றியது. ஈழத்தமிழர்களாகிய நாங்களும் அகதிகள்தான். ஆபிரிக்கர்கள், அரேபியர்கள் எல்லோருமே அகதிகள்தான். ஆனால் எல்லா அகதிகளும் ஒன்றா? என்றால், ‘இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அந்த பிரெஞ்சு மனுஷன். அதிலும் ஏனைய அகதிகளை விட ‘ஈழத்தமிழ் அகதிகள்’ சிறந்தவர்கள் என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஈழத்தமிழ் அகதிகளுள் ஏ.கே, பி.கே, ரொக்கட் லோஞ்சர், ஆட்லரி என்று எல்லாவகையான ஆயுதங்களையும் Professional ஆக கையாளத் தெரிந்த பலர் இருக்கிறார்கள் என்றும் ஆனால் அவர்கள் அனைவரும் அவற்றை எல்லாம் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இந்த சமூகத்தோடு ஒத்திசைந்து வாழ்கிறார்கள் என்றும், புதுசா ஆயுதம் தூக்கிய அடை கறுவல் எல்லாம் அதை தப்பாக பயன்படுத்துகிறார்கள் என்றும் ஆணி அறைந்து சொல்லப்பட்டுள்ளது.

இப்படத்தை அந்தாள் எடுத்ததுக்கு காரணம் - பிரெஞ்சு மற்றும் ஏனைய வல்லரசுகளுக்கு சில சங்கதிகளை தெளிவுபடுத்தவாகும். அதாவது விடுதலைப்புலிகள் என்ற இயக்கம், மிகவும் கட்டுக்கோப்பானது. அது, தன் இன விடுதலைக்காக மட்டுமே ஆயுதம் தூக்கியது, அது தன் ஆயுதங்களை தவறான முறையில் பயன்படுத்தியதில்லை, சமூகத்தைக் கட்டுக்கோப்பில் வைத்திருப்பதில் அவ்வியக்கம் சிறந்தது முதலான விஷயங்களைத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்.

இப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பிரெஞ்சுக்காரனுக்கும் ஈழத்தமிழன் மீது நல்ல மதிப்பும் மரியாதையும் வரும். நாம் ‘சோலி சொறட்டு’ இல்லாத ஒரு கூட்டம் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். ஆனால் இந்த ‘அடை கறுவல்’ பாடுதான் இனி என்னாகப் போகிறதோ? ஏனென்றால், அடை கறுவலை கட்டுப்படுத்தும் வல்லமை எம்மிடம் இருக்கிறது என்று அல்லவா அந்தாள் கதையை நகர்த்தி வைச்சிருக்கிறது.

அடுத்த முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

நீங்கள் படங்களின் க்ளைமேக்ஸில் ரஜினி, அடிச்சு தூள் கிளப்பியதைப் பார்த்திருப்பீர்கள், விஜய் பட்டையைக் கிளப்பியதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு விடுதலைப் புலி, வேட்டையாடிப் பார்த்திருக்கிறீர்களா? - போய் தியேட்டரில் பாருங்கள். ஒரு நிஜப் புலியின் உறுமலையும் உக்கிரத்தையும் அங்கு காண்பீர்கள்.

எல்லாம் சரி - ஷோபா சக்தியை என்ன செய்வது?

என் அனுமானம் சரி என்றால், இனிமேல் அவரால் முன்புபோல புலிகளைத் தாக்கியோ / விமர்சித்தோ எழுத முடியாது. அப்படியே எழுதினாலும் ‘அவர் பொய் சொல்கிறார்’ என்று அர்த்தம். அவரால், அவரது குரல் மூலம் பிரெஞ்சு மக்களுக்கு எல்லா உண்மைகளும் சொல்லப்பட்டாயிற்று. பிரெஞ்சு மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு புலி. அவர் ஒரு ஹீரோ. அவரைப் போல ஒரு ஹீரோ இவர்களுக்குத் தேவை...!!

’நீங்கள்தானே அங்க எல்லாரையும் சுட்டுத் தள்ளினீங்கள்’ என்று காளீஸ்வரி கடுப்போடு ஒரு வசனம் சொல்லும்போது, ‘புலிகளைக் குறை சொல்கிறாயா?’ என்கிற கடுப்போடு, காளீஸ்வரியை கண்டிக்க வேண்டிய இக்கட்டான சம்பவம் ஒன்று படத்திலே வருகிறது. அதை மிக அநாயாசமாக ஷோபா செய்கிறார். ( இல்லாதது பிறவாது ).

ஒவ்வொரு தமிழரும் மறக்காமல் இந்தப் படத்தைப் பாருங்கள். நீங்கள் அடை கறுவலிடம் ஐ ஃபோன் பறிகொடுத்திருக்கலாம், தங்கச் சங்கிலியை பறி கொடுத்திருக்கலாம் - போய் படத்தைப் பாருங்கள் - உங்கள் வலிகளை ஒரு பிரெஞ்சுக்கார இயக்குனர் எப்படி வடித்திருக்கிறார் என்று.

தியேட்டரில் நடந்தது என்ன?

பாரிசின் இதயம் ஷத்தலேயில் உள்ள Les Halles நிலக்கீழ் சூப்பர் மார்க்கெட் கொம்ப்ளெக்ஸில் உள்ள 10 ம் இலக்க, மிகப் பிரமாண்டமான திரையரங்கில் பலநூறு பிரெஞ்சு மக்களுடன், தனியொரு ஈழத்தமிழனாக, அகதியாக, ஒரு ‘தீபனாக’ படத்தைப் பார்த்த அனுபவம் வாழ்வில் மறக்க முடியாதது. படம் தொடங்க முன்னர் மேடைக்கு வந்த தியேட்டர் ஊழியர் ஒருவர், ’உங்களுக்கு இப்போது ஒரு சேர்ப்ரைஸ்’ என்றார். அது என்னவென்றால், - இயக்குனர் Jacques Audiard நேரில் வந்ததுதான்.

வந்தார், என்னமோ பேசினார், நிறைய கைதட்டல் வங்கினார். சென்றுவிட்டார். உங்கள் எல்லோர் சார்பிலும் நீண்ட நேரம் கை தட்டினேன் அவருக்கு....!!!

நன்றி.

https://www.facebook.com/rajeevan.ramalingam?pnref=story

 

  • 2 weeks later...

தீபன் படம் திரையரங்குகளுக்கு வந்து மூன்று வாரங்களாகிவிட்ட நிலையில் அந்தப் படம் பற்றிய புரிதல் தமிழ் பரப்பிலே மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ் பொது புத்தி சார்ந்து எதெற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டு குறைகளை உருப்பெருக்கு கண்ணாடி வைத்து தேடி முன்வைத்து தங்களை மோதாவிகளாக காட்ட முறையும் ஒரு கூட்டம்….
சோபாசக்தி ஒரு புலி எதிர்ப்பாளர் அதனால் இந்தப்படம் நிச்சியமாக ஒரு புலி எதிர்ப்பு படம் அது போராட்டத்துக்கு எதிரான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல ஏற்றுகிறது எந்தவித ஆதராமும் இல்லாமல் கருத்துக்களை முன் வைக்கும் மரபுவழி கருத்தாளர்கள் ஒரு புறம்…..

“ஏதோ எங்களை பற்றி நல்லா காட்டியிருக்கிறாங்களாம்” என்று திருப் திப்பட்டுக்கொள்ளும் சராசரி ரசிகர்கள் ஒரு புறம்…
படத்தின் குறை நிறைகளை தங்கள் தளத்தில் வைத்து ஆக்க பூர்வமாக விமர்சிக்க முற்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர் ஒரு புறம் என்று இப்படி பல தரப்பட்டவர்களை இந்த மூன்று வார காலத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை இந்தப்படம் ஈழத் தமிழர்களின் அவலத்தை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட படமல்ல. ஆனால் அது அந்த வேலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு செய்திருக்கிறது.

அதே போல இந்தப்படம் தமிழ் மரபுவழி புத்தி சீவிகள் நினைக்குமளவுக்கு அவர்களது மொழியில் கூறுவதானால் அடையான் கறுவலுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று என்னால் கூறமுடியவில்லை.ஆனால் பாரிசின் புறநகர் அல்லது பிரான்சிலுள்ள ஏனைய பெரு நகரங்களின் புற நகர் பகுதிகளில் பிரெஞ்சு அரசால் உருவாக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்புகளின் களநிலை யதார்த்தத்தை இந்தப்படம் படம் பிடித்து காட்டுகிறது. உண்மையில் இந்தப் படம் பிரான்சின் விடுதலை சமத்துவம் சகோதரத்துவம் என்ற அடிப்படை கொள்கைகளை கவசமாக பயன்படுத்திக் கொண்டு வறுமையையும் வன்முறை கலாச்சாரத்தையும் மறு உற்பத்தி செய்யும் பிரெஞ்சு அரசாங்கங்களின் போலி முகத்தை கட்டுடைக்கிறது.

பிரெஞ்சு அரசாங்கத்தின் அகதிக்கொள்கையிலுள்ள போலித்தனத்தை இந்த படம் சுட்டிக்காட்டுகிறது.
பிரான்சுக்கு அகதிகளாக வரும் புலம் பெயர்ந்த சமூகங்களை பிரெஞ்சு சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டகளை முதன்மைபடுத்தாமல் “சித்தே” என்று பிரெஞ்சில் அழைக்கப்படும் தொடர்மாடி குடியிருப்புக்களை உருவாக்கி அதிலே அகதிகளை குறிப்பாக வெளிநாட்டவர்கள் மட்டும் வசிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை கட்டிக்காத்துவரும் பிரெஞ்சு அதிகார வர்க்க மனோபாவத்தை இந்தப்பட்டம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.

படத்தின் தொடக்கத்திலேயே தீபனும் யாழினியும் இளையாளும் தங்கள் வேர்கள் அறுக்கப்பட்ட நிலையில் நிச்சயமற்ற அந்நியமான உறவுகளாக ஒருங்கிணைந்து பிரான்சுக்கு வருகிறார்கள். (இது தமிழ் கலாச்சாரத்துக்கு புறம்பானது தமிழர்கள் இப்படி சேர்ந்து வாழமாட்டார்கள் என்று மரபுவழி விமர்சகர்களின் கொதிப்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.) இந்த படத்தின் இயக்குனர் ஜக் ஒடியார்; இந்த மூவரின் கையறு நிலையை இங்கே குறியீடாக காட்டுகிறார்;.இந்த இடத்தில் ஒரு சில வினாடிகளில் திரை எந்த வித சலனமும் இன்றி இருட்டாக இருக்கிறது.இது நிச்சயமற்ற அவர்களது எதிர்காலத்தையும் அந்த இருளின் ஊடே ஒளியை நோக்கிய பயணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.இந்த இருளுக்குப் பின்பு சிவப்பு நீல வெள்ளை விளக்குகள் ஒளிர்வது காண்பிக்கப்படுகிறது.இது அவர்கள் பிரான்சுக்கு வந்துவிட்டதையும் அவர்களது இருண்ட வாழ்வில் ஒரு ஒளிக் கீற்று தென்படுவதையும் வெளிப்படுத்துகிறது.அதன் பின் தீபன் சிறு பொருட்களை கூவி விற்பவராக காட்டப்படுகிறார்கள்.(இதை பார்த்துவிட்டு நாங்கள் இப்படி செய்வதில்லை இந்த தொழிலை பங்களாதேசுகாரன் தான் செய்யிறவன் என்று நம்மவர்கள் தங்கள் மானம் போய்விட்டதாக புலம்புவது குறிப்பிட வேண்டிய ஒன்று)
ஏதிலியாக வந்த அவர்கள் தங்களுக்கு கிடைத்த ஒளிக்கீற்றை தொடர்ந்து சென்று உழைத்து வாழமுடியும் என்று நம்புவதை குறிக்கிறது.
அதன் பின் பாரிசின் தற்காலிக தங்குமிடம் மொழி தொரியாமல் படும் துன்பம் அகதி விண்ணப்பத்தை விசாரிக்க வரும் மொழி பெயர்பாளரின் அலட்சிய மனப்பான்மை அல்லது திமிர் இதையெல்லாம் இந்த படத்தின் இயக்குனர் ஜக் ஒடியார் யதார்த்தமாகவே படம் பிடித்துக்காட்டுகிறார்.

அதன் பின்பு அவர்கள் மூவரும் வறுமையையும் அதன் தொடர்ச்சியான வன்முறை கலாச்சாரத்தையும் மறுஉற்பத்தி செய்யும் சித்தே(புற நகர தொடர்மாடி குடியிருப்பு)க்கு அனுப்பி வைக்கப்படும் காட்சி வருகிறது. இந்த சித்தே வாழ்க்கை இவர்களை இன்னும் சமூகத்தில் இருந்து அந்நியமாக்குவது பல காட்சிகள் மூலம் புரிய வைக்கப்படுகிறது.

இந்த சித்தேயின் வன்முறை சூழலும் தொடரும் பதட்டமும் அங்குள்ள அந்தியமாதலும் போரில் வாழ்வை தொலைத்த உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவற்றை மறந்துவிட்டு புது வாழ்க்கையை தொடங்க இவர்களுக்கு உதவவில்லை.
போராளியான தீபன் யானை பலம் கொண்டவன்.அவன் நினைத்தால் அல்லது மதங்கொண்டால் அவனால் அனைத்தையும் துவம்சம் செய்யமுடியும் ஆனால் அவான் அமைதியாக பிரெஞ்சு சமூகத்தில் வாழவே விரும்புகிறான் என்பதை காண்பிப்பதற்கே யானை ஒன்று காண்பிக்கப்படுகிறது.

புலம் பெயர்ந்த போராளிகள் அரைவேக்காட்டு வன்முறையாளர்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஏற்படும் ஆற்றாமை கோபம் வெறுப்பு விரக்தி கையறு நிலை என்பன தீபன் பாத்திரத்தின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடத்திலே தீபனாக மாறிய சோபாசக்தி என்ற போராளி வெற்றியடைந்திருக்கிறார்.புலி எதிர்ப்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்ட சோபா சத்தி தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

ஏதிரிகளின் பாசறையை நோக்கிப் போகிறோம்.தமிழீழ மண்ணை மீட்கப் போகிறோம் என்ற பாடலை பாடி அவர் நடித்த அந்தகாட்சியை அவ்வளவு தத்துரூபமாக உணர்வுபூர்வமாக ஒரு போராளியால் அல்லாமல் வேறு எவராலும் நடித்திருக்க முடியாது.இந்த ஒரு காட்சிக்காக நான் சோபா சக்தியை ஆயிரம் தடவை பாராட்டுவேன். அந்தக் காட்சியில் அவருக்கு வந்த அழுகை கிளிசறீன் போட்டு வந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.விடுதலைக்காக தங்கள் வாழ்வை இளமையை அவயங்களை என்று அனைத்துயும் கொடுத்துவிட்டு போராட்டம் தோற்றுப் போன நிலையில் மற்றவர்களிடம் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிற்கும் போராளிகளின் மன நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்வது கடினம்.

படத்தின் இறுதிப்பகுதியில் தீபன் தன்னை கொல்ல திட்டமிட்ட வன்முறைக் கும்பலை அழித்துவிட்டு பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்று அங்கு யாழினியுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி ஒரு குழந்தையும் பெற்று இளையாளையும் சேர்த்துக்குக் கொண்டு அழகிய குடும்பமாக வாழ்வதாக காட்டப்படுகிறது. பிரித்தானியாவில் அவர்கள் தொடர்மாடியில் வாழவில்லை மற்ற அகதி குடும்பங்களுடன் பவியோன் எனப்படும் தரை வீடுகளிலேயே சந்தோசமாக வாழ்வதாக காட்டப்படுகிறது.

பிரான்சில் தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற வன்முறையை காவல்துறையை பயன்படுத்தி அடக்க முற்படாததும் வன்முறையாளர்களை கொலை செய்த தீபனை காவல்துறை தேடுவது போல காண்பிக்கப்படாததும் இந்த வன் முறைக்களத்தை பிரஞ்சு அரசாங்கமே வளர்த்துவிடுகிறது,தக்கவைக்கிறது மறு உற்பத்தி செய்கிறது என்பதே இந்தப் படம் சொல்லும் செய்தியாகும்.

– சிவா சின்னபொடி

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே மிகவும் அருமையாகப் படம் எடுக்கப் பட்டருக்கு...!

துப்பாக்கி வேட்டுக்கள் தன் வீட்டினருகே வெடித்ததும், யாழினியும் இளையாலும் கடையில் வாங்கிக் கொண்டுவந்த சாமான் பைகளை வீதியில் போட்டுவிட்டு பித்துப் பிடித்ததுபோல் ஓடித் திரிந்து ஒளிச்சு வீட்டுக்கு ஓடுவதும் நம்மூர் கடந்த காலச் சம்பவங்கள்...!

பின் யாழினி நான் லன்டன் மச்சாளிட்டப் போறேன் என்று அடப் பிடிப்பதும், புகையிரத நிலையத்தில் பிரச்சனைப் பட்டு தீபன் அவரிடமிருந்து கடவுச் சீட்டை மட்டும் எடுத்துக் கொண்டு வருவதும், பின்னாலே அவ ஓடிவருவதும் தத்ரூபம்.

வீல்பறோ வண்டிலை வெல்டிங் செய்து அதில் மண்ணைக் கொட்டி  அதனாலே தனது அப்பார்ட் மென்டைச் சுற்றிக் கோடு போட்டு  இது "no fire zone" என்று சத்தமிட்டு , தன் தலைமேல் கல்லைத் தள்ளிய அல்ஜீரியன்சை அடித்து இழுத்து வந்து உறுமுவது அட்டகாசம். (அப்படியே ஒரு புலி தனது எல்லையை  சிறுநீரால் வகுத்து ஏனைய மிருகங்களுக்கு எச்சரிப்பதுபோல்) இதை தீபனை மறந்துவிட்டு சோபா சக்தியை நினைத்துப் பார்க்க கொடுப்புக்குள் புண்ணகை.

யாழினி எச்சிச் சிகரட்டை இழுத்துப் புகைவிடுவது ஒரு மாதிரி இருக்கு, எம்மினப் பெண்கள் புதுச் சிகரட்டைச் சுடுவார்களே தவிர இப்படி நான் காணவில்லை.

கவர்ச்சிக் காட்சிகள் இரண்டும் கூட கண்ணியமாகவே இருக்கின்றன...!

 

நான் இப்படத்தை ஒரு வாரத்துக்கு முன் தியேட்டரில் பார்த்து விட்டேன்.  முந்தநாள் எங்களது 32வது பதிவுத் திருமண நாள் . மனிசிக்கு ஒரு பரிசு குடுக்க வேணும் என்று யோசித்த போது , தியேட்டருக்குக் கூட்டிப் போய் இந்தப் படம் பார்ப்பம் என்று அழைத்துக் கொண்டு போனேன். கன காலத்துக்குப் பிறகு மனிசி மனந்திறந்து என்னைப்  பாராட்டியது அன்றுதான். எனக்கும் சில்க்கின் "நிலா அது வானத்தின் மேலே" இரண்டு வரி படத்தில் கேட்டது மனசில் ஒரு ஜில்...!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் லண்டன் தியேட்டர்களில் ஓடுதா?...யாராவது விபரம் தெரிந்தால் சொல்லவும்...நன்றி

16 ம் திகதி அக்டோபர் இங்கிலாந்திலும்,  10 ம் திகதி டிசம்பர் மாதம் ஜேர்மனியிலும் :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்.

  • கருத்துக்கள உறவுகள்

டொராண்டோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் (TiFF)_இன்று தீபன் திரையிடப்பட்டது.
அதிகாலை  8:30 மணிக்கு திரையிட்டு இருக்கிறார்கள். என்னால் போகமுடியவில்லை.

http://tiff.net/festivals/festival15/specialpresentations/dheepan

டொராண்டோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் (TiFF)_இன்று தீபன் திரையிடப்பட்டது.
அதிகாலை  8:30 மணிக்கு திரையிட்டு இருக்கிறார்கள். என்னால் போகமுடியவில்லை.

http://tiff.net/festivals/festival15/specialpresentations/dheepan

சனி இரவு நான் பார்த்தேன் .சனி காலை எழு மணிக்கு போய் டிக்கெட் எடுத்தார்கள் அதிலொன்றுதான் எனக்கு கிடைத்தது .

இரவு தியேட்டருக்கு போக ஒரு அரை மையிலுக்கு சனம் கியூவில் நிற்கின்றார்கள் ,இரண்டு வரிசை நின்றது .ஒன்று நோர்மல் டிக்கெட் எடுத்தவர்கள் எங்களை போல மற்றது அதிக பணம் செலுத்தியவர்களும் அங்கத்தவர்களும் .சேரன் ,ரகீம் ,லெனின் ,மீரா ,சுமதி தர்சி ,இளங்கோ ,முரளி என்று பெரிய கூட்டம் .

படம் தொடங்கமுதலும் படம் முடியவும் இயக்குனர் ,வசனகர்த்தா கதாநாயகன் மூவரும்  மேடையில் தோன்றி பேசினார்கள் .இயக்குனர் பிரெஞ் அவருக்கு மொழி பெயர்ப்பாளர் கதாநாயகன் தமிழ் அவருக்கும் மொழி பெயர்ப்பாளர் .சோபாவை பார்க்க சிரிப்பாக இருந்தது .

ஆயிரம் பேர்கள் வரை அந்த காட்சியில் இருந்தார்கள் .( விசேட தியேட்டர் ).தொண்ணுறு வீதம் வெள்ளைகள் தான் ,கை தட்டி படத்தை இரசித்தார்கள் .

நானும் ரசித்தேன் சில முரண்பாடுகளுடன் .

முடிந்தால் ஒரு சின்ன விமர்சனம் எழுதுகின்றேன் .

இந்தப் படம் லண்டன் தியேட்டர்களில் ஓடுதா?...யாராவது விபரம் தெரிந்தால் சொல்லவும்...நன்றி

லண்டன்லில் அக்டோபர் 7ம்திகதி தொடக்கம் 18 வரை நடைபெறும் film festival இல் 16 ம் திகதி இந்த படத்தை திரை இடுகிறார்கள்.:)

அதன் பிறகு சாதாரண திரை அரங்குகளில் அடுத்த வருட ஆரம்பத்தில்தான் என்று நம்புகிறேன்.

http://www.bfi.org.uk/lff

  • கருத்துக்கள உறவுகள்

மினக்கெட்டு தேடி இணைப்பை எடுத்து தந்தமைக்கு நன்றி நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
நேர்காணல்
என் திட்டமும் கனவும் இலக்கியமே
- ஷோபாசக்தி
 

இந்த வாய்ப்பு எப்படி வந்தது? ஆடிஷன் நடந்ததா? அதில் என்ன நடந்தது?

தீபன் பாத்திரத்திற்காக காஸ்டிங் இயக்குனர் பிலிப் எல்கோபி ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தபோது புதுச்சேரி நாடக இயக்குநர் குமரன் வளவன் மூலம் என்னைக் கேள்விப்பட்டு தொடர்பு கொண்டார். ஆடிஷன் நடந்தது. கொஞ்சம் நடித்துக் காட்டச் சொன்னார். அடுத்த சந்திப்பு இயக்குநர் ஜாக் ஓடியாரோடு. அவரும் நடித்துக்காட்டச் சொன்னார். அவ்வளவுதான். நான் தேர்வானபிறகு சில வாரங்கள் ஓர் ஆசிரியர் சினிமா நடிப்பு சொல்லிக்கொடுத்தார்.

dheepan.jpg

ஒரு நடிகராக மேற்கொண்டு உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதுபற்றியெல்லாம் எந்தத் திட்டங்களோ கனவுகளோ இல்லை. எனது திட்டங்களும் கனவுகளும் இலக்கியம்மீது தான். மேற்கொண்டு நடிக்க வாய்ப்பு வரும்போது பார்க்கலாம்.

படத்துக்கும் உங்களுடைய வாழ்க்கைக்குமான ஒப்பீடுகள் மனதளவில் என்ன மாதிரியான அதிர்வுகளை ஏற்படுத்திற்று?

அப்படியெல்லாம் ஏதும் கிடையாது. அதிர்வுகளை யெல்லாம் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப்போய்விட்டது. ஆனால் ஈழ யுத்தத்தையும் ஈழத்து அகதிகளின் கதையையும் சித்திரிக்கும் படமென்பதால் எனக்கு இந்தப் படத்தின்மீது அதீத ஈடுபாடு இருந்தது.

நீங்கள் எப்படிக் கடந்து ஐரோப்பா வந்தீர்கள்... ஆரம்பகால அகதி வாழ்க்கையில் கலாச்சார, மனித, சமூக உறவு நெருக்கடிகள் எத்தகையனவாக இருந்தன?

இந்திய அமைதிப்படை இலங்கையில் காட்டாட்சி நடத்திய காலத்தில் எனது ஊரைவிட்டுக் கிளம்பினேன். அய்ந்து வருடங்களாக ஆசியா முழுவதும் அலைந்து 1993இல் பிரான்ஸ் வந்து சேர்ந்தேன். வந்த காலத்தில் இரண்டு வருடங்களில் திரும்பிவிடலாம், மூன்று வருடங்களில் ஊருக்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். அதனால் பிரஞ்சுச் சமூகத்தோடு கலந்துகொள்ளவோ ஊடுருவவோ அக்கறையிருக்கவில்லை. ஊரில் பல சிரமங்களையும் தாங்கொண்ணாத வறுமையையும் அனுபவித்து உயிரைக் கையில்பிடித்தபடி பிரான்சுக்கு ஓடிவந்தபடியால் இங்கிருந்த சிரமங்கள் எனக்குச் சிரமமாகவே தெரியவில்லை என்பதுதான் உண்மை. கலாச்சாரமற்ற உதிரிமனிதனாக ரவுடிப்பயலாகத்தான் இந்த நாட்டுக்கு வந்தேன். சித்தன் போக்கு சிவன் போக்காய் 22 வருடங்கள் கடந்துவிட்டன.

எழுத்தில் தீவிரமான அரசியலுடன் செயல்படுபவர் நீங்கள். படம், அகதிகளை சட்டவிரோத போதை மருந்துத் தொழில்படுபவர்களாக சித்திரிக்கிறது... தொழில் சங்கிலியில் அவர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் அவர்கள் மட்டுமே இல்லை என்பது உண்மை நிலை... இந்தச் சித்திரிப்புடன் உங்களால் இணங்க முடிகிறதா?

படம் அரங்குகளில் வெளியாகி மக்கள் பார்ப்பதற்கு முன்னமே நான் இது குறித்து விரிவாகப் பேசுவது பார்வையாளர்களிற்கு முன்முடிவுகளைக் கொடுத்துவிடலாம் என நினைக்கிறேன். எனினும் நீங்கள் கேட்பதால் சுருக்கமாக ஒன்றைச் சொல்கிறேன்.

நான் அந்தச் சித்திரிப்புடன் இணங்குகிறேன். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக படத்தில் வருவதுபோன்றதொரு வெளிநாட்டவர்கள் செறிந்து வாழும் குடியிருப்பில்தான் வாழ்கிறேன். எனவே இத்தகைய குடியிருப்புகள் குறித்து முழுமையாக அறிவேன். இங்கிருக்கும் வேலையற்ற இளைஞர்களை மாபியாக்கள் போதைப்பொருளைச் சில்லறையாக விற்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். இந்த மாபியாக்களோடு காவல்துறையில் சிலருக்கும் தொடர்புண்டு என்பது உண்மை. அண்மையில்கூட இது விசயமாக ஒரு காவல்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டது பெரும் செய்தியானது.

தீபன் படம் போதைப்பொருளை விற்பனை செய்யும் வலைப்பின்னல் பற்றிய கதையோ ஆவணப்படமோ அல்ல. அந்தக் குடியிருப்பில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மூன்று ஈழத்து அகதிகள் பற்றிய கதையே தீபனின் மையம். அந்தக் குடியிருப்பில் வாழும் பிற குடியேறிகளுடன் இந்த மூவருக்கும் இருக்கும் உறவுகள் திரைக்கதையை வளர்த்துச் செல்ல உபயோகிக்கப்படுகிறது. அந்தக் குடியிருப்பில் மாணவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அகதிகள் இருக்கிறார்கள், அன்புள்ளம் கொண்ட மனிதர்களும் விரக்தியால் சீரழியும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் போதைப் பொருள் விற்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். இப்போதைக்கு இவ்வளவும்தான் சொல்வேன். படம் வெளியான பின்பு தேவையெனில் பேசுகிறேன்.

- ப்ரஸன்னா ராமஸ்வாமி

 

http://www.kalachuvadu.com/issue-189/page47.asp

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த படத்தைப் பார்த்தேன்.அப்பா என்ன ஒரு படம்.நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு படத்தைப் பார்த்த திருப்தி.படத்தில் எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.டைரக்கருக்குத் தான் பாராட்டு சொல்ல வேண்டும். எல்லோரும் நன்றாக நடித்திருந்தாலும் என்னுடைய வோட்டு அந்தப் பெண்ணுக்குத் தான். அவருடைய நடிப்பை விட அவரது துணிச்சலை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.ஒரு சில காட்சியில் அரை நிர்வாணமாய் நடித்திருக்கிறார்.காட்சியில் ஆபாசம் இல்லை என்டாலும் தமிழ் பெண்ணாய் இருந்து கொண்டு இந்த காட்சியில் நடித்ததற்காக ஒரு சபாஸ்.

இரண்டு நாட்களாய் திரையிடப் பெற்ற இத் திரைப்படத்தை இரண்டாம் நாள் தான் எனக்கு பார்க்க கிடைத்தது. சோபா சக்தியும்,அந்தப் பெண்ணும் வந்திருந்தார்கள்.தியேட்டர் நிறைந்த சனம்.1% தான் எங்கட சனம் வந்திருந்தது.கிருபன் இந்தப் படத்தைப் பார்த்தாரோ தெரியவில்லை.

தமிழர்களுக்கு பிரான்சை விட லண்டன் பாதுகாப்பானது டைரக்டர் சொல்கிறார் போல

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தியும்,அந்தப் பெண்ணும் வந்திருந்தார்கள்.தியேட்டர் நிறைந்த சனம்.1% தான் எங்கட சனம் வந்திருந்தது.கிருபன் இந்தப் படத்தைப் பார்த்தாரோ தெரியவில்லை.

தமிழர்களுக்கு பிரான்சை விட லண்டன் பாதுகாப்பானது டைரக்டர் சொல்கிறார் போல

ரதி நல்லபடம் என்றால் கட்டாயம் நன்றாகத்தான் இருக்கும் :)

Book செய்ய முனைந்தபோது வெள்ளி ஷோ sold out என்று இருந்தது. சனிக்கிழமை வேறு முக்கிய அலுவல்கள் இருந்தபடியால் பார்க்கமுடியவில்லை. எப்படியும் subtitles உடன் Blueray டிவிடி வாங்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல கிருபன்.நக்கலடிக்கிறீங்களோ என்று யோசிக்கிறன்.படம் முடிந்தவுடன் அவர்களிடம் கேள்வி கேட்கலாம் என்று சொல்லப்பட்டது. முதலாவதாக ஒரு தமிழர் எழும்பி தற்போதைய இலங்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என சோ.சயிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இலங்கையில் அடுத்த வாரம் இந்த திரைப்படத்தை திரையிடுகிறார்களாம்.தன்னால் போக முடியாது உள்ளது என்று சொன்னார். இலங்கையில் படத்தை திரையிட அனுமதித்தது ஆச்சரியமாய் உள்ளது. முதற் காட்சியே எனக்கு போராட்டத்தையும்,புலிகளையும் ஞாபகப்படுத்தியது.

அடுத்ததாக ஒருவர் எழும்பி மு.வாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என ஏற்றுக் கொள்கிறீர்களா என கேட்டார்.[அவர் ஏற்கா விட்டால் அது இனப் படுகொலை இல்லை என்று ஆகி விடுமா என்ன?] அதற்கு அவர் மு.வாய்க்காலில் மட்டும் இல்லை 83யில் இருந்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்டார். உந்தக் கேள்வியை கேட்டவர் கிருபனாய் இருப்பாரோ என்று ஒரு சந்தேகம்... சோ.சக்தி இப்ப எங்க போனாலும் இந்தக் கேள்வியைத்தான் எல்லோரும் கேட்கினம்.

இந்தப் படத்தை எடுத்தவர் கதையை ரெடி பண்ணிப் போட்டு நடிக,நடிகைகளை தேர்வு செய்தாரா அல்லது சோ.சக்தியை எங்காலும் கண்டிட்டு அவருக்காக படத்தை எடுத்தாரா என்றும் ஒரு சந்தேகம்.கதாநாயகி ஒரு காட்சியில் அவரைப் பார்த்து உங்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை.சிரிக்கவே வராது என்று சொல்வதெல்லாம் நிஜத்திலும் உண்மை தானே.

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

http://www.institut-francais.org.uk/cine-lumiere/whats-on/new-releases/dheepan-2/

லண்டனில் "தீபன்" படத்தை திரும்பவும் திரையிடப் போறார்களாம்...போய் பார்க்க விரும்புபவர்கள்,கிருபன் போன்றோர் போய் பார்க்கலாம். என்னால் லிங்கை இணைக்க முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அண்மையில் திரும்பவும் இந்தப் படத்தை பார்க்கக் கிடைத்தது. உறவுகளோடு போய் இருந்தாலும் படத்தில் ஒருத்தரும் ஒரு குறையும் சொல்லவில்லை. படத்தின் முடிவாக காட்டப்படும் கடைசி சீன் "தீபனின்" கனவு என ஒரு வெள்ளைக்கார மனிசி சொன்னார்.எனக்கு அது வரைக்கும் அது உறைக்கவில்லை. படத்தை பார்த்த விசுகு,அர்ஜீன்,சுவி அண்ணாக்களின் கருத்தை அறிய ஆசை.

தவிர சோ.சக்தி தலைவரையும்,இயக்கத்தையும் நினைத்து தன்ட வாயால ஒரு பாட்டு பாடுவார்/கத்துவார். அது என்ன இயக்கப் பாட்டு? யாருக்காவது முழுமையாக அந்தப் பாட்டுத் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2016 at 5:15 PM, ரதி said:

எனக்கு அண்மையில் திரும்பவும் இந்தப் படத்தை பார்க்கக் கிடைத்தது. உறவுகளோடு போய் இருந்தாலும் படத்தில் ஒருத்தரும் ஒரு குறையும் சொல்லவில்லை. படத்தின் முடிவாக காட்டப்படும் கடைசி சீன் "தீபனின்" கனவு என ஒரு வெள்ளைக்கார மனிசி சொன்னார்.எனக்கு அது வரைக்கும் அது உறைக்கவில்லை. படத்தை பார்த்த விசுகு,அர்ஜீன்,சுவி அண்ணாக்களின் கருத்தை அறிய ஆசை.

தவிர சோ.சக்தி தலைவரையும்,இயக்கத்தையும் நினைத்து தன்ட வாயால ஒரு பாட்டு பாடுவார்/கத்துவார். அது என்ன இயக்கப் பாட்டு? யாருக்காவது முழுமையாக அந்தப் பாட்டுத் தெரியுமா?

நேற்று தீபனைத் திரையில் பார்க்கமுடிந்தது. தியேட்டரில் வெகு சிலரே வந்திருந்தனர். நாலைந்து தமிழர்களும் வந்திருந்தனர். அவர்களின் புலம்பெயர் திரைப்படங்கள் சிலவற்றை இயக்கிய "புதியவன்" வேறு இரண்டு பேரோடு வந்திருந்தார். அவர் படம் எடுக்க முன்னரே பழக்கம் என்பதால் ஒரு ஹலோ சொல்லிவிட்டும் படத்தைப் பார்த்தேன். படம் வெறுமை உணர்வையே தந்தது. இது தமிழீழம் வெறும் கனவாகி விட்டதே என்பதால் வந்திருக்கலாம். அல்லது படம் பார்க்க முன்னர் சோபாசக்தி எழுதிய எம்ஜிஆர் கொலை வழக்கு தொகுதியைப் படித்ததால் வந்திருக்கலாம்.

 

 

சோபாசக்தி பாடிய பாடலைத் தெரியாமல் தமிழீழத்தைப் பற்றித் தெரியும் என்று சொல்லக்கூடாது!

முன்னர் கேட்கும்போது மயிர்க்கூச்செறியும்.

இப்போது கேட்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. இந்த உலகத்திலேயே நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்கள் கூனிக் குறுகவேண்டியுள்ளதே என்ற கவலைதான்.

புலிகளை நினைக்கும்போது இப்ப

"நந்தவனத்தில் ஒரு ஆண்டி,

அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

, கொண்டுவந்தான் ஒரு தோண்டி,

அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" என்ற பாடல்தான் வந்து தொலைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...என்ன கிருபன் இப்படி சொல்றீங்கள்.நானும் "எம்.ஜி.ஆர் கொலை வழக்கு" வாசித்தேன். ஆனால் படத்திற்கும்,நூலுக்கும் என்ன தொடர்பு என்று இந்த மரமண்டைக்கு புரியவே இல்லை.

இந்த பாட்டு கண காலம் கேட்காமல் விட்டு அதனால் மறந்து போச்சுது.நினைவூட்டியமைக்கு நன்றி. சோ.சயின் நடிப்பைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.


அர்ஜீன் அண்ணாவும் படத்தைப் பற்றி சிறு குறிப்பு எழுதுவேன் என்டார்.இன்னும் காணோம்

  • 11 months later...
 

‘தீபன்’ - நீல முயல்களின் அகதி வாழ்க்கை! தங்கப்பனை விருது வென்ற படம்

 

 

தீபன்

திரைப்படம் என்கிற கலை வடிவத்துடன் லட்சிய நோக்கமும், அரசியல் பார்வையும் இணையும் புள்ளியே அதனை மிகச்சிறந்த படைப்பாக உயர்த்தும். அதேவேளை உள்நோக்கமுடைய அரசியல் கருத்துடன் கலை வடிவத்தை இணைத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலையையும் அதே திரைப்படங்களின் வாயிலாக வெற்றிகரமாகச் செய்ய முடியும். இரண்டாவதற்கு உதாரணங்கள் ‘ராம்போ’ வரிசைப் படங்கள், முதலாவதற்குக் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் அதன் உயரிய விருதான ‘தங்கப்பனை’யை வென்ற ‘தீபன்’ படத்தைச் சொல்லலாம்.

‘ராம்போ’ - வரிசைப்படங்களின் கதை பெரும்பாலும் எதிரிகளிடம் சிக்கி வதைப்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க போர்க் கைதிகளை ஒற்றை ஆளாகச் சென்று மீட்கும் நபரின் சாகசமாகத்தான் இருக்கும். ஒரு படத்தில் அவர் எந்த நாட்டில் எதிரிகளை மீட்கப் போகிறாரோ அந்த நாட்டில் அடுத்த சில வருடங்களில் அமெரிக்க ராணுவம் கால் வைக்கும். அதற்கான உளரீதியிலான தயாரிப்புகளை உள்நாட்டில் ஏற்படுத்தும் வேலையில் நாயக வழிபாட்டுடன் கூடிய ரகசிய பிரசாரமாக அந்த வகைப்படங்கள் உருவாக்கப்பட்டன ஆனால், ‘தீபன்’ யதார்த்த நடைமுறை அரசியலைப் பேச முற்படுகிறது. லட்சியவாதத்துடன்கூடிய விடுதலைப் போராட்டக் களத்தில் தன் சொந்த குடும்பத்தையும், இனத்தையும் தன் நாட்டில் பறிகொடுத்த ஒருவன் புலம்பெயர்ந்தபோது எதிர்கொள்ளும் வாழ்க்கையே ‘தீபன்’ படத்தின் கதை. ஐரோப்பாவில் இந்தப் படம் அதிகம் கவனம் பெற்றதற்கான காரணமாக அங்கு நான்கைந்து ஆண்டுகளாக அதிகரித்து வரும் அகதிகளின் வருகையும், அவர்கள் குறித்து அந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும் கருதலாம்.

எழுத்தாளர் ஷோபாசக்திதான் இதில் தீபன் (சிவதாசன்). பொதுவாக ஷோபாசக்தியின் சிறுகதைகள் மீண்டும் மீண்டும் வாசிப்புக்கு உள்ளாகும். காரணம் அதில் ஒவ்வொரு முறையும் விடுவிக்கக் கிடைக்கும் குறியீடுகள்தான். இந்தப் படத்தை ஒரு தமிழ்ப் பார்வையாளனாக எதிர்கொள்ளும்போது நமக்குப் படத்தின் பன்முகத்தன்மை இன்னும் விரிவு பெறுகிறது. தீபன் திரைப்படம் சென்னையில் திரையிடப்பட்ட அன்று படம் முடிந்ததும் நாயகன் ஷோபாசக்தியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒரு கேள்வி “இந்தப் படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களில் உங்களின் பங்களிப்பு இருந்ததா?” அதற்கு அவர் ‘இல்லை, சில தமிழ் மொழிபெயர்ப்பு தவிர வேறந்த வேலையிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால், அதில் சில இடங்களில் என்னுடைய ‘டச்’ இல்லாமல் இருக்காது” எனக் கண் சிமிட்டித் தெரிவித்தார்.

தீபன், நீலமுயல்


இயக்குநர் ஒடியார்ட் மனித உணர்வுகளை அற்புதமாகப் படமாக்கக் கூடியவர்தான் என்றாலும் தமிழ் சமூகத்தின் உள்அரசியலை இவ்வளவு நுட்பமாகப் பதிவுசெய்ய இயலுமா என்றச் சந்தேகம் தவிர்க்க இயலாமல் எழுகிறது. சூழ்நிலை உந்தலில் குடும்பமாகும் மூவர் பிரான்ஸுக்கு தப்பிச் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்படும் குடியிருப்பும், அந்தச் சூழல் ஏற்படுத்தும் மனஉணர்வுகளும், அவர்களுக்கு இடையிலான உறவுநிலையும் அதில் உருவாகும் உணர்வுகளும்தான் கதை.

போரில் இறந்த தன் வீரர்களை சிவதாசன் (ஷோபாசக்தி) எரியூட்டும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. அழுத்தமான மனதுடன் தன் சீருடையைச் சிதையில் போட்டு எரிக்கிறான் போராளி சிவதாசன். நாட்டிலிருந்தும் ராணுவப் பிடியிலிருந்தும் தப்பிக்க அவனுக்கு ஒரு குடும்பம் வேண்டும். அதே நோக்கத்திலிருக்கும் யாழினி,  இளையாள் என்கிற ஓர் ஆதரவற்ற பெண் குழந்தையைத் தேர்வுசெய்து அழைத்து வருகிறாள். மூவரும் ஒரு குடும்பமாக நாட்டை விட்டுத் தப்பிக்கின்றனர். இந்த இடத்தில் இருளும் திரையில் பிரான்ஸ் நாட்டுக்கொடியின் நிறமான சிவப்பும், நீலமும் வெளிறி மின்னியபடி ஒளிர்ந்து நெருங்கி வருகிறது. அது தீபனின் தலையில் இருக்கும் முயல் காதுகளின் வெளிச்சம். குறுகிய காலத்தில் மிகுதியான இனப்பெருக்கத்தைச் செய்துவிடும் ‘நீல முயல்’ பொம்மைக் காதுகளை பாரீஸின் வீதிகளில் தீபனும் அவனைப் போன்ற சட்டவிரோதமாகக் குடியேறிய இன்னும் சில அகதிகளும் விற்றபடி வருகின்றனர். இந்த ‘நீல முயல்’ எப்படிப் புகுந்த இடத்தில் விரைவில் அதிக இனப்பெருக்கத்தைச் செய்யும் நபர்களுக்கான குறியீடோ அதே போல ‘பலவீனமான’ விலங்கு என்பதற்குமான குறியீடும்கூட. நாட்டிலிருந்து ஆயுதம் வாங்க பணம் திரட்ட பிரான்ஸ் வந்திருக்கும் சேரன் மாஸ்டரிடம் அடிவாங்கிய தீபன் குடித்துவிட்டு தனியே அழுது அரற்றும்போது அவனது தலையில் அந்த ‘நீல முயல் காதுகள்’ வந்துவிடுகின்றன.

பிரான்ஸ் அரசு வழங்கும் அகதிகளுக்கான வீடு , தீபனின் ‘குடும்பத்துக்கும்’ கிடைக்கிறது. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுடன் அந்தக் குடியிருப்பை சுத்தப்படுத்தும் வேலையும்  தீபன் வசம்  ஒப்படைக்கப்படுகிறது. பாரீஸின் சேரிப் பகுதியில் இருந்து புறநகர்ப்பகுதியில் இருக்கும் ‘ல ப்ரே’ என்கிற சுதந்திர அகதிகள் முகாமில் தீபனின் குடும்பம் குடியேறுகிறது. அங்குக் குடியேறியவுடன் முதல் வேலையாக யாழினி, பிள்ளையாரிடம் “சங்கத் தமிழ் மூன்றையும் தா” என வேண்டுகிறார். சொந்த நாட்டில் குடும்பத்தை இழந்து, உறவுகளை இழந்து அகதியாய் இன்னொரு நாட்டில் வாழக் காரணமான மொழியையே கடவுளிடம் வரமாக வேண்டுவது ஓர் அரசியல் பகடிக் காட்சி. அந்தக் காட்சி முடிந்த பிறகு புதிய வீட்டில் மூவரும் இரவு உணவில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது இளையாள் கைகளால் சாப்பிடுகிறாள். தீபன் ஸ்பூனால் சாப்பிட வற்புறுத்துகிறார்.

தீபன்

தந்தை என்கிற பாத்திரம், ஒருவகையில் சூழல்சார்ந்த ஒப்பந்தம்தான் என்றாலும் அவனது தந்தைமையிலிருந்து ஒருபோதும் விலகாமல் இளையாளின் மீது அன்பு கொள்கிறான் தீபன். அதேசமயம் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் தாய்மை குறித்த பிம்பம் ஏதுமற்றவளாக இருக்கிறாள் யாழினி. எப்போதும் தான் மட்டும் அந்தச் சூழலில் இருந்து விலகி இங்கிலாந்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறாள். புகலிட கோரிக்கையுடன் தஞ்சம் கேட்கும் இடத்திலும் இளையாள் மீது தமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுபோல் நடந்துகொள்ளும் யாழினி, பிரான்ஸ் வந்த பிறகு இளையாளை ஒரு வேண்டாத நபராகவே கருதுகிறாள். பள்ளியில் சேர்ந்த முதல்நாள் அழுது அடம்பிடித்து ஓடிவரும் இளையாளை தீபன் சமாதானப்படுத்திக்கொண்டிருக்க இந்த நிகழ்வில் தமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் மூடிய கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் நின்று பார்க்கிறாள் யாழினி. மற்ற பிள்ளைகளின் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளியின் வாசலில் முத்தம் கொடுப்பதால் தமக்கும் அவ்வாறே கொடுக்கச்சொல்லும் இளையாளுக்குப் பட்டும் படாமலும் யாழினி முத்தமிடும் காட்சி கற்பிக்கப்பட்ட குணமாகவே தாய்மையை முன்வைக்கிறது. ஒரு காட்சியில் ‘உங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும் உங்கள் இளைய சகோதரர்களுடன் காட்டிய பாசத்தை என்னிடம் காட்டலாமே’ என இளையாள் நேரடியாகவே யாழினியிடம் கேட்டுவிடுகிறாள்.

அந்தப் பொய்யான குடும்பத்தில் தீபன் என்கிற ஆண் செலுத்தும் ‘நுண் அதிகாரம்’ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் கவனம்கொள்ள வேண்டிய ஒன்று. யாழினியும் இளையாளும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்ளும் நேரங்களில் தீபன் வந்துவிட்டால் அவர்களிடையே ஒரு அமைதியும் ஒழுங்கும் வந்துவிடுகிறது. ஓய்வு நேரங்களில் ‘ஈழமுரசு’ படித்தபடியே இருக்கும் தீபன் ஒரு காட்சியில் அதை இளையாள் படிக்கத் தொடங்கும்போது தடுத்துவிடுகிறான். யாழினியோ பாயின் அடியில் பாலியல் புத்தகங்களை மறைத்து வைத்துப் படிக்கிறாள். தொலைக்காட்சியில் அவலமான போர்க்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சமயத்தில்கூட யாழினி குளிக்கும் சத்தம் தீபனை தொந்தரவு செய்வதாகக் காட்டப்படும் யதார்த்தக் காட்சி மனித வாழ்வின் அசலான ஓர் பகுதி. மூவரின் இந்தப் பொய்யான இணைப்பைக் குடும்ப அமைப்புக்குள் இழுத்துச் செல்கிறது தீபன் - யாழினி இடையே ஏற்படும் பாலுறவு.

இவர்கள் குடியிருக்கும் முகாமுக்கு எதிரே இருக்கும் குடியிருப்பில் அரசால் கண்காணிக்கப்படும் குற்றவாளிகளும்  ‘கேங்’களும் உள்ளனர். அங்குள்ள முக்கிய தலைவன் ஒருவனின் உறவினருக்கு யாழினி வீட்டு வேலைகள் செய்யப்போகிறாள். அந்தக் குற்றவாளிகளுக்குள் நடக்கும் துப்பாக்கிச் சண்டைக்குப் பயந்து இளையாளையும் தீபனையும் விட்டு யாழினி இங்கிலாந்துக்குச் செல்ல முயற்சிக்கிறாள். அவளை மீண்டும் வலுக்கட்டாயமாக அழைத்துவரும் தீபன் அங்கு ஒரு “நோ ஃபயர் ஸோன்” அமைக்கிறான். அந்தக் ‘கேங்’, தீபனின் பகுதி ஆட்களையும் அடிப்பதால் தீபன் எதிர்க்க, குடியிருப்பில் சின்னக் குழுவின் தலைவனாகிறார் தீபன். இதன்மூலம் எதிர்த் தரப்புக்கு எதிரியாக மாறுகிறான். எதிர்த் தரப்பில் முக்கிய ஆளான ப்ராஹிம், யாழினியை அழைத்து எச்சரிக்கிறார். இதனால் மேலும் கோபமடைகிறான் தீபன்.

அகதி

ப்ராஹிம்மை கொல்ல வந்தவர்கள் சுட்டதில் மாட்டிக்கொண்ட யாழினி, தீபனை அழைக்க, போரில் தாய் மண்ணை இழந்து, அகதியாய் அந்நிய மண்ணில் நிற்கும் தீபன், யாழினியை மீட்கத் துப்பாக்கியை மீண்டும் கையில் எடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு யாழினியை அடைகிறான். ஆனால், உண்மையில் யாழினி யாராலும் பிடித்து வைக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சிறிய குழப்பத்தால் அப்படி தீபன் நினைக்கும்படி ஆகிறது.

படத்தின் தொடக்கத்திலிருந்தே  காட்டுக்குள் செடிகளுக்கு இடையே மறைந்து நிற்கும் யானை ஒன்று குறியீடாகக் காட்டப்பட்டுவருகிறது. தீபன் துப்பாக்கியைக் கையிலெடுத்து வன்முறைக்குள் நுழையும் சமயம், யானை காட்டுக்குள் இருந்து வெளியேறுவது கவித்துவமான காட்சிப்படுத்தல்.

வரலாற்று ரீதியில் ஈழப்பிரச்சினைக்கு மூல காரணமான ஒன்றாகச் சொல்லப்படும் இங்கிலாந்து நாட்டில் தீபன் குடும்பம் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதான நகை முரணுடன் படம் நிறைவடைகிறது. தீபனாக வரும் ஷோபாசக்தி தன்னியல்பாய்  அந்தப் பாத்திரத்துக்கு பொருந்திப் போகிறார். 

இந்தப் படம் தமிழ் பார்வையாளருக்குப் புலம் பெயர்ந்த அகதிகளின் தனிப்பட்ட உணர்வுகளை மட்டுமல்லாது அதற்கு அப்பால் நம் கண் முன்னால் கண்ட ஈழ விடுதலைப் போராட்டமும் அதன் முடிவும், முடிவுக்குப் பிறகும் எழுப்பப்பட்டு வரும் அரசியல் முழக்கங்களையும் சேர்த்து ஒரு தமிழ்ப் பார்வையையும் ஏற்படுத்தி அதீத நெருக்கத்தையும் கவனத்தையும் உருவாக்குகிறது.

http://www.vikatan.com/news/life-style/83709-article-about-golden-palm-winning-french-film-dheepan.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.