Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடபெஸ்டிலுள்ள ரயில் நிலையத்தை மூடியது ஹங்கேரி

Featured Replies

புடபெஸ்டிலுள்ள ரயில் நிலையத்தை மூடியது ஹங்கேரி

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

குடியேறிகள், ஹங்கேரி ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதை தடுக்கும் நோக்கில், அந்நாட்டு தலைநகர் புட்டாபெஸ்டிலுள்ள மிகப் பெரிய ரயில் நிலையத்தை அதிகாரிகள் மூடியதையடுத்து , நூற்றுக்கணக்கான குடியேறிகள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

150901111924_budapest_station_refugees_6Image copyrightAPImage captionகெலெடி ரயில் நிலையம் முன்பாக தடுத்து நிறுத்தப்பட்ட குடியேறிகள், தங்களை உள்ளே அனுப்ப வேண்டுமென கோரி வருகின்றனர்.

"ஜெர்மனி மற்றும் சுதந்திரம்" என்று கோஷமெழுப்பிய குடியேறிகளை, அங்கிருந்து செல்லும்படி அதிகாரிகள் கூறிவருகின்றனர். ஆனால், தங்களுக்கு ரயில் பயணத்திற்கான டிக்கட்டுகளை தரும்படிகோரி தொடர்ந்தும் குடியேறிகள் கோஷமெழுப்பினர்.

யாருக்கு வேண்டுமானாலும் தங்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற அவல நிலை ஏற்படலாம் என்று கூறிய குடியேறிகளில் ஒருவர், ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கும்படி வேண்டுகோள்விடுத்தார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் எரித்திரியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்கள், தமது நாடுகளிலிருந்து வெளியேறி ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்துவருகின்றனர்.

150901152943_budapest_hungary_migrants_pImage copyrightAFPImage captionஜெர்மனிக்குச் செல்ல கெலெடி ரயில் நிலையத்தில் குவிந்திருக்கும் குடியேறிகள்.

இவ்வாறு வரும் குடியேறிகள், ஹங்கேரியின் வழியாக ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குள் நுழைய முற்படுகின்றனர்.

இவர்களில் ஒரு பகுதியினர் இன்றைய தினம் ஹங்கேரி புடாபெஸ்ட் கெலாட்டி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஹங்கேரி நாட்டு அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றிய விதிகளை முறையாக செயல்படுத்தவே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, திங்கட்கிழமையன்று 3650 குடியேறிகள் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவை வந்தடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அந்நாட்டு காவல்துறையினர், அவர்களில் பலர் ஜெர்மனிக்கு செல்வதற்காகக் காத்திருக்கின்றனர் எனவும் கூறினார்.

ஜெர்மனி வேண்டுகோள்

இதற்கிடையில், குடியேறிகளை ஐரோப்பிய நாடுகள் நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என ஜெர்மனி ஆட்சித் தலைவி ஏங்கலா மேர்க்கல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டின்படி குடியேறிகள் எங்கு வந்து இறங்குகிறார்களோ அங்கு அவர்களை பதிவு செய்வதற்கான நிலையம் அமைக்கப்பட வேண்டும்" என்று ஜெர்மனி ஆட்சித் தலைவி ஏங்கலா மேர்க்கல் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், மூடப்பட்டிருந்த கெலெடி ரயில் நிலையத்தை குடியேறிகள் தவிர்த்த பிறருக்கு அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர்.

ஐரோப்பாவுக்குள் நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 7500 குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர்.

150901061819_austria_train_migrant_640x3Image copyrightReutersImage captionவியென்னா ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் ஒரு குடியேறி. திங்கட்கிழமையன்று ஹங்கேரியிலிருந்து ரயில்களின் மூலம் பல குடியேறிகள் ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் வந்திறங்கினர்.

இவ்வருடத்தில் சுமார் எட்டு இலட்சம் குடியேறிகள் தமது நாட்டுக்குள் வருவார்கள் என்று ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகமாகும்.

மறுபுறத்தில், ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான ஆபத்தான பயணங்களின்போது குடியேறிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அந்தவகையில் , கடந்த வாரம் ஹங்கேரி - ஆஸ்திரிய எல்லையில் கடந்தவாரம் கைவிடப்பட்டடிருந்த லாரியொன்றிலிருந்து குடியேறிகள் 71 பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டனர்.

அதேபோல, குடியேறிகளை ஏற்றிய படகுகள் இரண்டு லிபியாவிலிருந்து ஐரோப்பா செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்த சில மணி நேரங்களில் மத்திய தரைக்கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த நூற்றுக்கணக்காணவர்கள் உயிரிழந்தனர்.

http://www.bbc.com/tamil/global/2015/09/150901_hungary

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பயணிப்பது தடுக்கப்பட்ட குடியேறிகள்

1 செப்டம்பர் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:34 ஜிஎம்டி

ஹங்கேரியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பயணிக்க முயன்ற குடியேறிகள் சிலர் புடாபெஸ்ட் ரயில் நிலையத்தில் தடுக்கப்பட்டதை நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்த்தனர்.

அதேவேளை, ஜெர்மனிய தலைவி அங்கேலா மெர்க்கெல், அகதிகள் தொடர்ச்சியாக பயணிக்க முயற்சிப்பதற்கு ஜெர்மனியை குறை கூற முடியாது என்றும், அனைத்து ஐரோப்பிய நாடுகளும் விதிகளுக்கு அமைவாக நடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2015/09/150901_migrantvt

 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் அகதிகள் மீதான அனுதாபம்.

மறு பக்கம் அவர்கள் முஸ்லிம் மக்கள், அவர்களில் யாரவது தமது நாட்டில் மதவாத தாக்குதல் செய்யலாம் என்ற பயம்.

இந்த பயத்தினால் ஜேர்மனி உள்ளூர் மக்கள் எதிர்ப்பு.

ஒரு அவல நிலை. இதை ஆங்கிலத்தில் catch 22 என்பார்கள்.

மேற்குலகின் தடியைக் கொடுத்து அடி வாங்கும் கதை....

தள்ளி இருப்பதால் அமெரிக்காவும், தீவாக இருப்பதால் பிரித்தானியாவும் (ஓரளவுக்கு) தப்பி இருகின்றன. எவ்வளவு நாளைக்கு....?

  • கருத்துக்கள உறவுகள்

பணக்கார இஸ்லாமிய நாடுகள்.(சவுதிரேபியா,ஒமான்,அபுடாபி போன்ற நாடுகள்) ஏன் இவர்களை உள்வாங்கவில்லை..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

 

 

தேன்கூடு மாதிரி சும்மாகிடந்த நாடுகளை குழப்பிப்போட்டு அவர் தன்ரைபாட்டிலை இருக்கிறார்.......ஜேர்மனி பொதி சுமக்குது..tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

எனது அகதி பயணத்தில் ....
இந்த ரயில் நிலையத்தில் ஆறு நாட்கள் படுத்திருந்தேன்.
அங்கிருந்து செச்கொசெலோவாக்கியா எல்லைக்கு சென்றால்...?
அங்கிருந்து செச்கோ எல்லையை கட்டக்க ஒருவரின் உதவியும் இருக்கவில்லை.

அவர்களுடைய வலி என்னால் உணரபடுகிறது ..
என்னுடைய சொந்த வலிதான். 

பணக்கார இஸ்லாமிய நாடுகள்.(சவுதிரேபியா,ஒமான்,அபுடாபி போன்ற நாடுகள்) ஏன் இவர்களை உள்வாங்கவில்லை..........

இந்த நிலையை சிரியா மக்களுக்கு ஏற்படுத்தியவர்களே அவர்கள்தான் .....
சியாட் முஸ்லிம்களை அழிப்பது அவர்களது இலக்கு 
இப்போ எஞ்சி இருப்பது ஈரானும் சிரியாவும்தான். 

Refugee child drowned

Young boy washed up on the beach.

  • தொடங்கியவர்

எனது அகதி பயணத்தில் ....
இந்த ரயில் நிலையத்தில் ஆறு நாட்கள் படுத்திருந்தேன்.
அங்கிருந்து செச்கொசெலோவாக்கியா எல்லைக்கு சென்றால்...?
அங்கிருந்து செச்கோ எல்லையை கட்டக்க ஒருவரின் உதவியும் இருக்கவில்லை.

அவர்களுடைய வலி என்னால் உணரபடுகிறது ..
என்னுடைய சொந்த வலிதான். 

இந்த நிலையை சிரியா மக்களுக்கு ஏற்படுத்தியவர்களே அவர்கள்தான் .....
சியாட் முஸ்லிம்களை அழிப்பது அவர்களது இலக்கு 
இப்போ எஞ்சி இருப்பது ஈரானும் சிரியாவும்தான். 

 நானும் 1990க்களில் செக்கோஸ்லாவேக்கியா பிராக் ரயில் நிலையத்தில்(பிராகா லாவனி நாதரஸி) 17 நாட்களை மார்பியா கூட்டத்தின் மத்தியில் தனிமையாகக் கழித்திருந்தேன்.தெரிந்த ஒரேயொரு வார்த்தை (ப்றொஷிம்) ஒரு நாள் மாஸ்கோவிலிருந்து பாரிஸ் செல்லும் கடுகதிப் புகையிரதம் என்னைச் சுமந்து சென்று நூர்ன்பேர்க்கில் இறக்கிவிட்டது. மருதங்கேணியின் மூலம் பழைய நினைவை மீட்டுக்கொண்டேன். நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாரமாரியாக வரும் அகதிகள் அனைவரையும் ஜேர்மனி அரவணைத்துக்கொண்டிருக்கின்றது.

கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்தபோது இருந்த நிலையினை ஒருசில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.

ஜேர்மனியில் உள்ள உலக புகழ் பெற்ற நிறுவனங்கள் புதிதாக வரும் அகதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க முன் வந்துள்ளன.:innocent:

 

 

இதே நிலை அவுஸ்ரேலியாவுக்கு வந்தால் எல்லாரும் தண்ணிக்கை கோவிந்தா...:grin:

 

 

 

 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் இராணுவத் தளத்தை கட்டமைக்கிறது ரஷ்யா

http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/11846382/Russia-is-building-military-base-in-Syria.html

russia01_3430324b.jpg

அண்ணன் தான் எல்லா வேலையையும் செய்யுறார் போலிருக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Refugee child drowned

எச்சில் கையால் காகம் துரத்தாத புலம் பெயர் பீய்த்தமிழன்......
குண்டுகள் வீழ்ந்து சிதறிப்போன எம்மவரின் உடல்களை கண்டும் கலங்காத புலம் பெயர் புண்ணாக்குகள்..
கற்பிணியின் மேல் குண்டு விழ்ந்து சிசுவின் கை வெளியே தெரிந்தும் கலங்காத ஈனத்தமிழன்...

இந்த படத்தை பார்த்து பேஸ்புக்கில் கதறுகின்றான்...குமுறுகின்றான்...செய்தியை உடனடியாக உலகிற்கு நண்பர்களுக்கு தெரிவிக்கின்றான்....

இதற்குள் குழந்தையின் முகத்தையும் மூடி மறக்கின்றான். அகோரம் தெரியக்கூடாதாம். tw_dizzy:

 

  • தொடங்கியவர்

வளைந்து கொடுத்த எல்லைகள் !!

FYR Macedonia - Greek border mayhem

https://www.facebook.com/euronews/videos/10153322712118110/

 

சிரியாவில் இராணுவத் தளத்தை கட்டமைக்கிறது ரஷ்யா

http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/11846382/Russia-is-building-military-base-in-Syria.html

russia01_3430324b.jpg

அண்ணன் தான் எல்லா வேலையையும் செய்யுறார் போலிருக்கு..

ஒரு குட்டிக்கதை

  சிரியாவுக்கு ரஸ்யா வழங்கிய சொப்பர்கள் மலைகளுக்கு சென்றால் செயலிழந்து விடுமாம்.இப்படி பல ஹெலிகப்டர்களை சிரிய ராணுவம் தொலைத்துவிட்டது.பின்னர் ரஸ்ய தொழில் நுட்பப் பிரிவினர் விசாரணை மேற்கொள்ள சிரியா சென்றனர்.பின்னர் சொப்பர்கள் விழுந்த மலைப்பகுதியை பார்வையிடச் சென்றனர்.அங்கு அவர்களுக்கு திகிலான அனுபவம் காத்திருந்தது.மலையின் மேல் உச்சிப்பகுதிக்கு போகும் போது மிதமான குளிராகியது,அப்போது விமானி காற்றாடிகளை நிறுத்த முற்பட்டுள்ளார்.அத்துடன் விசாரணை முடிவுற்றது.தெய்வாதீனமாக உயிர் பிழைத்து மீண்டுள்ளார்கள்.

Edited by BLUE BIRD

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ein Flüchtling am Grenzzaun zwischen Serbien und Ungarn. Er hat einen Stein zum Wurf in der Hand

Migrants-react-on-the-Serbian-side-of-th

thumb900_phpslrguddc_download_6makd8ovpx

அரசியல் தஞ்சம் கிடைக்க முன்பே இவர்களது அடாவடித்தனங்களை பாருங்கள். சிறிது காலம் நாட்டில் இருக்கவிட்டால் இன்னும் கொடூரமாக களத்தில் இறங்குவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.