Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவையின் பேச்சுக்கு சிறிதரன் பதிலடி(காணொளி)

Featured Replies

சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது
என நேற்றைய (05.09.2015) தினம் மாவை சேனாதிராசா தெரிவித்த நிலையில் இன்று(06.09.2015) ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கினை பெற்றவருமான சிறிதரன் அவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தான் ஐ.நா செல்லவுள்ளதாக உறுதியாக தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தலுக்கு முன்னர் தாம் கூறியதுபோல மக்களுக்கு உறுதியளித்த கொள்கைக்காக தொடர்ந்தும் தனக்குரிய பணியை செவ்வனே செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவால் தான் எந்த தீர்மானத்தையும் கொண்டுவரமுடியும் என்றும் அதற்காக அமெரிக்கா சொல்லும் எல்லாவற்றுக்கும் நாம் தலைஆட்டவேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தார்.
 
தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின்போது சர்வேதேச விசாரணை முடிவடைந்துவிட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த கருத்தை மீண்டும் இந்த நிகழ்வில் வலியுறுத்திய மாவை சேனாதிராசா ஆனால் சிலர் சர்வதேச விசாரணை நடக்கவில்லை என்று புரியாமல் பேசுவதாகவும் நீதியரசராக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இது புரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் தான் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு நின்றுவிடாமல் தற்போது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து போராட்டத்திற்கும் முதலமைச்சருக்கும் தொடர்பிருப்பதாகவும் அது தொடர்பில் தாம் முதலமைச்சரை அணுகுவதற்கு (கையாள்வதற்கு) திட்டமிருப்பதாகவும் மிடுக்குடன் தெரிவித்திருந்தார்.  இந்த கையெழுத்து போராட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,சிறிதரன்,சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம்,அனந்தி சசிதரன் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகள் கையொப்பமிட்டிருந்தமை சுமந்திரன் மாவை தரப்பினரை கடும் கோபம் கொள்ள வைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் கடந்த பெப்ரவரி மாதம் பல்கலை சமூகம் மற்றும் சிவில் அமைப்புகளால் நடாத்தப்பட்ட மாபெரும் பேரணியில் பேசிய மாவை சர்வதேச விசாரணையை தாம் தொடர்ந்து வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். (மேலுள்ள காணொளியில் மாவையின் இரு கட்ட பேச்சும் இணைக்கப்பட்டுள்ளது 1.46 ஆவது நிமிடத்தில்) இவ்வாறு சுமந்திரனைப்போல தேர்தலுக்கு முன்னர் வாக்கை பெறுவதற்காக சர்வதேச விசாரணை என வலுயுறுத்தி வாக்கை பெற்று வெற்றி பெற்ற பின்னர் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் மாவை சுமந்திரன் மற்றும் சம்பந்தன் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாகாணசபையில் 2ஆவது அதிகூடிய வாக்கினை பெற்ற(87,000) அனந்தி சசிதரன் அவர்களும் ஜெனீவா செல்லவுள்ளார்.
 
... ".. எமக்கு ஒன்றை கூறுவது, சிங்கள மக்களுக்கு பிறிது ஒன்றை கூறுவது .." ... நன்றிகள் நீதி அரசர் விக்கினேஸ்வரன்

சிங்கள மக்களுக்கு:

"சிறிலங்காவுக்கும், சிறிலங்காவின் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பேன்" - சம்பந்தன் உறுதி!

“சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் செய்வேன்" - சம்பந்தன் உறுதி!

தமிழர்களுக்கு:

* சர்வதேச விசாரணை - சம்பந்தர் உறுதி

* சமஸ்டி அரசு - சம்பந்தர் உறுதி

* 2016 இற்குள் தீர்வு - சம்பந்தர் உறுதி

... எம்மாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்! ...  டமிழ் டேசியம்!!!!!!!!

மாவையின் பேச்சுக்கு.........

பஸ் கண்டக்டர் அரசியலுக்கு வரக்கூடாது.ரஜினி மாதிரி இயற்கையாகவே நடித்து பணம் சம்பாதித்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கொம்பனி, ஜெனிவா செல்ல வில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற  பேச்சுக்களும்

பதில்களும்.. (அவர்கள் சொற்தொடரில் பதிலடிகளும்)

ஒற்றுமையைக்காட்டி வாக்கு வாங்கிவிட்டு

உடைக்க முயல்கிறார்கள்....

சிங்களத்துடன் பேச்சவார்த்தைக்கு போகும் போது

அவர்களே முதலில் ஒற்றுமையாக வாங்கோ என்று சொல்லவைப்பார்கள் போலுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

மாவை மதில் மேல் பூனையா இருந்தவர்.தேர்தலுக்கு பின்னாடி சேர வேண்டிய பக்கத்துக்கு தாண்டினதே பெரிய காரியம். விடுங்க.. பாவம் அதுவும் எத்தின காலம் தான் வேசம் போட்டுக்கிட்டு இருக்கிறது. பொக்கட் நிரப்ப வேண்டாம். tw_blush:

நாங்கள் பல்கலையில் படிக்கும் போது ஒரு சிங்கள மாஸ்டர் இடம் இங்கிலீஷ் படிக்க போனனாங்கள். ஒருநாள் கதையோட கதைய கேடார், படிப்பறிவு கொஞ்சமும் தேவையில்லாத 2 தொழில் சொல்லும்படி. நாங்களும் எங்களுக்கு தெரிந்த படிப்பறிவு அதிகம் தேவையில்லாத பல தொழில்களை சொன்னோம். அவர் கடைசியில் கூறினார் இங்கை (இலங்கையில்) அரசியல்வாதியாக மற்றும் பிச்சை எடுக்க எந்த தகுதியும் தேவையில்லை எண்டு.

இது அவரின் சொந்த கருத்து ...

போகிற போக்கில்

கூடடமைப்புத்தான் உடையும் என்றிருக்க

தமிழரசுக்கட்சியே உடையும் போல இருக்கே....

ஆமா, மாவையாருக்கு எத்தனை வாய்கள்? எத்தனை நாக்குகள்? ..

1. சர்வதேச விசாரணை அவசியம்

2. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது

3. கொஞ்சப்பேர் கிளம்பி இருக்கினம் சர்வதேச விசாரணை என்று

4. ..

இல்லையேல் ..

பாவம் இதுவும் டிமென்ஸ்ஹியா வருத்தத்தில் பாதிக்கப்பட்டிருகிறாரா? அப்படியாயின் பாவத்துக்கு றீட்மன்ட் அவசியம் ..

http://www.alzheimers.org.uk/site/scripts/documents.php?categoryID=200120&gclid=CK6Amb6E6McCFUHhGwodhdQEsw

முதலமைச்சர் விக்கி மீது நடவடிக்கை ஏன்?

செய்தி- விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை! 11-ம் திகதி கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு - மாவை சேனாதிராஜா

இந்தியாவில் குடியிருக்கும் தலைவர்களை தெரிவு செய்யாமல் மக்கள் மத்தியில் வாழும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று விக்கி கூறினார். இது தவறா?

மக்களுக்கு ஒரு கருத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இன்னொரு கருத்தும் சொல்லும் தலைவர்களை தெரிவு செய்யாதீர்கள் என்று விக்கி சொன்னார். அது தவறா?

உள்ளக விசாரணை வேண்டாம். சர்வதேச விசாரணையே வேண்டும் என்று விக்கி கூறினார். அது தவறா?

ரணில் விக்கிரமசிங்காவிடம் சிலர் இரகசியமாக பணம் பெற்றுக் கொண்டதை மக்களுக்கு விக்கி வெளிப்படுத்தினார். இது தவறா?

எதற்காக விக்கி மீது ஒழுங்கு நடவடிக்கை?

நீங்களே அவரை பெரும் நீதிமான் என அழைத்து வருவீர்கள். அப்புறம் நீங்களே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பீர்கள்.

உங்க கூத்துக்கு எல்லாம் ஆமாம் போட மக்கள் என்ன வெங்காயங்களா?

போகிற போக்கில்

கூடடமைப்புத்தான் உடையும் என்றிருக்க

தமிழரசுக்கட்சியே உடையும் போல இருக்கே....

அப்படி உடைந்தால் தான் ரணிலின் சித்து விளையாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். நான் ஒரு பார்வையாளன் மட்டுமே,ஏனெனில் ஒரு புலம் பெயர்ந்து அந்த நாட்டில் குடியுரிமையும் பெற்ற தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி உடைந்தால் தான் ரணிலின் சித்து விளையாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். நான் ஒரு பார்வையாளன் மட்டுமே,ஏனெனில் ஒரு புலம் பெயர்ந்து அந்த நாட்டில் குடியுரிமையும் பெற்ற தமிழன்.

 எதற்காக இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை

தாயக மக்கள் மீது எமது தீர்ப்புக்களை திணிக்கக்கூடாது என்பதில் உடன்பாடுண்டு

ஆனால் பார்வையாளன் மட்டுமே என்பதில் உடன்பாடில்லை

அவ்வாறு ஒரு போதும் இருந்ததில்லை

ஒரு அநியாயம் நடக்கும் போது

ஒரு ஏமாற்றுதல் நடக்கும் போது

பார்வையாளனாக இருப்பீர்களா??

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

இலங்கையில் உள்ள தமிழர் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிப்பார்கள் என்ற போர்வையில் தானே அதிகமான கருத்துக்கள் உலாவருகின்றது. அதன் பிரதி பலிப்புத்தான் அவ்வாறு எழுதத் தூண்டியதுஅதே நேரம் இலங்கையில் விரைவில் இன்னுமொரு அழிவு காத்திருக்கின்றது என்பது மட்டும் திடமாகத்தெரிகின்றது.அப்போதாவது அனைவரும் புரிந்து கொள்வார்கள்.அந்த நேரத்திலாவது புலம் பெயர் அகதிகளும் தமிழ் நாட்டுத்தமிழனும் தேவைபடுவான்.இலங்கையில் விரைவில் ராணுவம் சட்டத்தை கையிலெடுக்கலாம்.இதற்கான சமிக்ஞைதான் சரத் பொன்சேகாவின் பதவி மறுப்பு அறிக்கையாகவிருக்கலாம்.இதே போல கைது செய்யப்பட்ட ராணுவம்யாராவது கோத்தபாயாவை நோக்கி கை காட்டினார்களா? அவ்வளவு விசுவாசம் இன்னும் உண்டு.83ம் ஆண்டு அமிர் ஐயா பெண் வேடம் தரித்துத் தான் கொழும்பிலிருந்து வெளியேறினார்.இன்று நிலைமை அவ்வாறில்லை உடுப்புமில்லாது உயிருமில்லாதுதான் சதைப் பிண்டம் வெளியேறும்.ஏனெனில் தமிழனை துகிலுரித்து பழகிவிட்டார்கள்.பொறுத்திருந்து பார்ப்போம் 

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

என்னது புலம்பெயர் கூட்டம் அரைவாசியா? எதோடு ஒப்பிடும்போது?

உங்களின் தாயகம் என்றபதம் தனிய யாழ் மாவட்டத்தோடு மட்டுபட்டது எப்படி?

அல்லது இலங்கை தமிழ் மக்களின் எண்ணிக்கை பற்றி உங்களின் புரிதல்தான் என்ன?

அதென்ன  புலம் பெயர் கூட்டம்

புலம் பெயர் தமிழர் பற்றி ஏன் இந்த இழிவான பார்வை

அதற்க முதலில் பதில் தாருங்கள்.

அடுத்து

வடக்குக்கிழக்கு வாழ் தமிழர்களின் தொகை எவ்வளவு?

புலம் பெயர் வாழ் தமிழரின் தொகை எவ்வளவு?

தரவுகள் இருந்தால் தாருங்களேன்

தப்பென்றால் திருத்திக்கொள்கின்றேன்

கூட்டம் என்றால் இழிவா, யார் சொன்னது?

இந்த இணைப்பை நான் தான் இணைக்கவேண்டியதில்லை, நீங்களே தேடி அறிவது நல்லது.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் என்றால் இழிவா, யார் சொன்னது?

இந்த இணைப்பை நான் தான் இணைக்கவேண்டியதில்லை, நீங்களே தேடி அறிவது நல்லது.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

வடக்கு கிழக்கில் 15 லட்சத்துக்கு உட்பட்ட தமிழர்களே வாழ்கிறார்கள் 

12 லட்சத்துக்குமதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்று அண்மையில் பார்த்தேன்

அண்மைய தேர்தலின் போது கணிக்கப்பட்ட மக்கள் தொகைக்கணிப்பை யாராவது இணைத்தால் நன்று.

மேலே நீங்கள் சொன்னதும் தவறான தரவு,

2012ம் ஆண்டு புள்ளிவிபரப்படி 2,270,924 வடக்கு கிழக்கில் 

புலபெயர்ந்த கூட்டம் 450,000 to one million

According to the 2012 census there were 2,270,924 Sri Lankan Tamils in Sri Lanka, 11.21% of the population.[1] Sri Lankan Tamils constitute an overwhelming majority of the population in the Northern Province and are the largest ethnic group in the Eastern Province.[1] They are minority in other provinces. 70% of Sri Lankan Tamils in Sri Lanka live in the Northern and Eastern provinces.[1]

There are no accurate figures for the number of Sri Lankan Tamils living in the diaspora. Estimates range from 450,000 to one million.[73][74]

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

Edited by Sooravali

நன்றி  தரவுகளுக்கு சூறாவளி

உங்களது தரவு சரியாக இருந்தால்

சந்தோசப்படக்கூடிய விடயம்.....

ஆனால் எனக்கு அதில் சந்தேகமுண்டு

தெளிவடைய எவராவது உதவுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்

அதாவது ஒருவன் வந்து நீங்கள் சொன்னது சரி என்று சொல்லவேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது ஒருவன் வந்து நீங்கள் சொன்னது சரி என்று சொல்லவேண்டுமா?

முதலில்  கருத்தக்கள உறவுகளை ஒருமையில் எழுதுவது தவிர்க்கப்படணும்

மற்றது விசுகு பற்றிய தங்கள் பார்வை தப்பானது

ஏன் உண்மைத்தரவுகள் வந்தால் உங்கள் கருத்துக்கு இடைஞ்சலா??

நாலு பேரிடம் கேட்டு தரவுகளைப்பெறுதல் சரியற்ற பாதையா??

 எதற்காக இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை

தாயக மக்கள் மீது எமது தீர்ப்புக்களை திணிக்கக்கூடாது என்பதில் உடன்பாடுண்டு

ஆனால் பார்வையாளன் மட்டுமே என்பதில் உடன்பாடில்லை

அவ்வாறு ஒரு போதும் இருந்ததில்லை

ஒரு அநியாயம் நடக்கும் போது

ஒரு ஏமாற்றுதல் நடக்கும் போது

பார்வையாளனாக இருப்பீர்களா??

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

பார்வையாளனுக்கும் பங்காளிக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கு நிலைமை .

அண்ணைக்கு உடம்பு முழுக்க யுத்தத்தில் ஏற்பட்ட விழுப்புண்கள் நடக்கமுடியாமல் தான் இருக்கின்றார் . 

போராட்டம் என்றவுடன் ஓடிவந்ததுதான் உங்கள் பங்களிப்பு பிறகு பார்வையாளர்தான் .

முதலில்  கருத்தக்கள உறவுகளை ஒருமையில் எழுதுவது தவிர்க்கப்படணும்

மற்றது விசுகு பற்றிய தங்கள் பார்வை தப்பானது

ஏன் உண்மைத்தரவுகள் வந்தால் உங்கள் கருத்துக்கு இடைஞ்சலா??

நாலு பேரிடம் கேட்டு தரவுகளைப்பெறுதல் சரியற்ற பாதையா??

முதல்ல தமிழை பழகுங்க. அதுக்கு பிறகு ஒருமைக்கும் பன்மைக்கும் வித்தியாசம் விளங்கும்.

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 

விதியை நினைப்பவன் ஏமாளி ..... 

இன்னமொன்று, நான் தந்த தரவுகள் எல்லாம் சுத்த பொய். நீங்க நாலு பேருக்கிட்ட கேட்டு எழுதிகோங்க.

தேர்தல்கால வாக்காளர் கணக்குக்கும் சனத்தொகை கணக்குக்கும் வித்தியாசம் தெரியாது.. என்ன கொடுமை சரவணா.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.