Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் முன்னேற முயற்சி

Featured Replies

வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் முன்னேற முயற்சி [திங்கட்கிழமை, 4 டிசெம்பர் 2006, 17:27 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]

மட்டக்களப்பு வாகரைப் பகுதியை நோக்கி டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள படை நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

வாகரைப் பிரதேசத்தின் மேற்கே உள்ள காட்டுப்பகுதியை அண்டிய கட்டுமுறிவுக்கு ஊடாக வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் இன்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக நகர்வை மேற்கொண்டனர்.

இந்நகர்வு முயற்சி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமடு, கரடிக்குளம் படை முகாம்களிலிருந்து படையினர் இந்நகர்வை ஆரம்பித்தனர்.

விடுதலைப் புலிகள், தமது முன்னரங்கப் பகுதிகளில் இவர்களுக்கு எதிரான தீவிர தாக்குதலை தொடுத்தனர்.

படைத்தரப்பினருக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்திய வண்ணம் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

http://www.eelampage.com/?cn=30032

ஓமந்தையில் படையினரின் நகர்வு முயற்சி முறியடிப்பு.

வவுனியா ஓமந்தைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர்.

ஓமந்தை போக்குவரத்துப் பாதையை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மூடிய படையினர், இந்நகர்வு முயற்சியினை மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து படையினர் தமது முயற்சியினை கைவிட்டு பின்வாங்கிச் சென்றனர்.

www.puthinam.com

தற்சமையம் கடும் சம்ர் நடந்து கொண்டு இருகிறது

ஒட்டுன்னிகலும் இனைந்து ( என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை)

அதே நேரம் சில ஒட்டுன்னிகளை புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உடுருவ பன்னி

புலிகளின் உதவி வழங்கும் தொடரணிகளையும், மேலதிகமாக புலிகளின் படையனிகள் வரும் போது கிளைமோர் தாக்குதல் செய்யவும் இராணுவம் திட்டம் தீட்டிவிட்டு சண்டையை ஆரபிச்சு இருக்கிறார்கள் ஆனால் எதிர் பார்த்து காத்து இருந்த

புலிகள படு பயங்கராமான தாக்குதல் தொடுப்பதால் ஒரு அடி கூட முன்னுக்கு போக முடியவில்லையாம்( இது தனிப்பட்ட அறிந்த தவகல்)

புலிகளை தடை செய்தா யுத்தத்துக்கு போக மாட்டார்கள் என்று தடை செய்த ஜரோப்பிய கூட்டமைப்பு இன்று சிங்கள அரசு வலிந்த தாக்குதல்கள் செய்யும் போது

என்ன செய்வோம் என்று கூறவில்லையே :rolleyes::lol::lol:

Heavy fighting breaks out in Vaharai region

[TamilNet, Monday, 04 December 2006, 15:09 GMT]

Heavy fighting broke out between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and Sri Lanka Army (SLA) at Kattumurivu, located 5 km inside the LTTE controlled Vaharai region in Batticaloa district Monday morning around 10:00 a.m. The fighting continued amid heavy artillery and mortar shelling at 5:00 p.m.

The SLA troopers launched a two-pronged troop movement from Thirukkonamadu, recently occupied by the SLA and Karadikkulam southwest of Kattumurivu.

Casualty details were not available.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20491

  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதியில் தாக்குதல் இடம்பெறும் என அச்சம் தடுப்பதற்கான ஒத்திகைகளில் கடற்படையினர்

தீவுப் பகுதி மீதான மீண்டுமொரு தாக்குதல்கள் நடவடிக்கையை எதிர்பார்த்து கடற்படை பெருமெடுப்பிலான ஒத்திகை நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர், கடற்படை தளங்களிலேயே இவ்வாறான ஒத்திகைகள் முன்னெடுக்கப்படுகின்றன.கடல் வழியான தரையிறக்க முனைப்புகளை எதிர்கொள்ளும் வகையிலேயே இவ் ஒத்திகைகளில் பெருமளவிலான கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த ஆகஸ்ட் 11 ஆம்திகதி விடுதலைப் புலிகளது தாக்குதலிற்குள்ளான மண்டைதீவு படைத்தளம் பெரும் சேதங்களை சந்தித்திருந்தது. எனினும் அக்கடற்படைத்தளம் முன்னைய நிலைக்கு கடற்படையினரால் மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இத்தகையதோர் பின்னணியிலேயே மீண்டுமொரு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் கடற்படை பெருமெடுப்பிலான ஒத்திகைகளை நடத்தி வருகின்றது. இந்நிலையில் ஊர்காவற்றுறை கடற்படைத்தளத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கடற்படையின் இவ்வாறான நடவடிக்கைகளின் போது பரவலாக தீர்க்கப்பட்ட வேட்டுக்களால் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களினது குடியிருப்புக்களில் கூரைகள் யாவும் சேதமடைந்தன.

பெண்ணொருவரும் படுகாயமடைந்துள்ளார். மூகாம் வீதியைச் சேர்ந்தவரான யோகன் திருவருட் செல்வி (வயது 31), காயமடைந்தநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-வீரகேசரி

B) ஒட்டுண்னிகள் என்ற பதம் அவ்வளவு சரியான பதம் இல்லை. முன்னால் பிராடுகள், களிசடைகள் என்பதே சரி. B)

பிராடுகள்! அடேயப்பா எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை. என்ன தமிழ் சினிமா வாசனையா? கயவர்கள், கோடரி காம்புகள் என்று சொல்வர் தமிழர்.

B) மன்னிக்கவும்.....வாயில வந்துத்து.....இந்தியா பேப்பர் என்னை பழுதாக்கிபோட்டுட்டுதுங்கோ....

பூவுடன் சேர்ந்த நாருக்கும் வாசம் வரும் எண்டெல்லோ சொல்லுறவ.....அனா பாருங்கோ

ஒரு விசயம் கடிக்குது.....உவர் கருணா இருகிறான் எல்லோ....முந்தி அம்மாண் என்று கன தரம் கூப்பிட்ட படியால் ஒரு ஆசையா ஒருமையில எழுதிறன்....

இவன் விசரன்.....பூவிற்கு கிட்ட மசிற இருந்தான்......எங்கேயோ தூர இருந்திருக்கிறான்.

அது தன் நாத்தல் மணம்.....நாறுது.....இலாட்டி....எப்பட

:D ஓமோம் ஒப்பரேசன் சுணாமி.....வரேக்க அவைக்கு துவக்கு பிடிக்க விட்டாத்தானே....நான் அறிந்தமட்டில்......4 வருட உலக முதலாவது கடும் பயிற்சி பெற்ற கடல்+தரை சுணாமி அணிதான்..வர வேண்டிய கட்டாயம். கமாண்டருக்கு தெரியாம நேவி ஓட ஒத்திகை பாத்திருப்பீனம் எண்டு தான் நான் நினைகிறன்..... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.