Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ பிரகடனம் பற்றிய இரகசியப்பேச்சுக்கள் லண்டனில்

Featured Replies

தமிழீழ பிரகடனம் பற்றிய இரகசியப்பேச்சுக்கள் லண்டனில் மூடியறைக்குள் நடப்பதாக நிதர்சனம் தெரிவிக்கிறது இதன் பின்னணியில் அரசு நிபந்தனையற்ற பேச்சுக்குச் செல்லலாம்

இவரு யாரப்பா தண்ணீல பினாத்திறது?

இப்படியான கட்டுக்கதைகள் மூலம் மக்களின் துன்பங்களை சிறிது நேரம் மறக்கலாமே ஒழிய மறைக்கவோ அல்லது தீர்க்கவோ முடியாது!

இல்லை சானக்கியன் நிதர்சனம் ஆசிரியர் வந்துவிட்டார் என்பதற்கான ஒரு விசேட பதிவு அவ்வளவுதான் :rolleyes: .

http://nitharsanam.com/?art=21759

Srilankan Government must accept to talk about Tamil Separate State on negotiating table without any Condition ? British Politician.

.

london.jpg

Minister of State, Foreign and Commonwealth Office

Ministerial Responsibilities

Middle East; South Asia; International security (including counter terrorism, counter narcotics, counter proliferation); United Nations

Electoral history

Member for Pontypridd since 23 February 1989 by-election

Commons Career

Opposition Spokesperson for:

Development and Co-operation 1993-94,

Foreign Affairs 1994,

Home Affairs 1994-95,

Trade and Industry 1995-97;

Parliamentary Under-Secretary of State:

Department for Education and Employment (Lifelong Learning) 1997-98,

Department of Trade and Industry 1998-2001 (Consumer and Corporate Affairs 1999-2000, Competition and Consumer Affairs 2000-01);

Parliamentary Under-Secretary of State, Department for Culture, Media and Sport (Minister for Tourism, Film and Broadcasting) 2001-03;

Minister of State:

Department for Transport (Transport) 2003-04,

Department for Education and Skills 2004-05,

Foreign and Commonwealth Office (Middle East) 2005-

Commons Select Committees

Member: Welsh Affairs 1989-90,

Public Accounts 1993-94

Current posts

Minister of State, Foreign and Commonwealth Office 2005-

Political interests

Energy, environment, foreign affairs, transnational broadcasting, arts, intellectural property, small businesses

Countries of interest

Germany, Italy, Latin America, Switzerland, USA, South Africa, Austria, Romania

Region (GNN)

Wales

http://nitharsanam.com/?art=21759

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

Srilankan Government must accept to talk about Tamil Separate State on negotiating table without any Condition ? British Politician.

இது ஒரு அரசியல்வாதியின் கருத்து. நம்ம தயாஇடைக்காடருடையதாக கூட இருக்கலாம்.

எனவே பிரித்தானிய அரசின் கருத்தாக இருக்க முடியாது.

இது போன்ற அவசர அரைவேக்காட்டு செய்திகள் தான் எதிரியை விழிக்க செய்து இத்தனை தடைகளை கொண்டு வ ந்து இருக்கிறது.

இ ந்த செய்தியை அரசு பார்த்தால் பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை தூதர் ஊடாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிடம் விளக்கம் கேட்கும், அழுத்தம் கொடுக்கும்.

தமிழரிற்கு சார்பான அப்படி ஒர் எண்ணம் பிரித்தானிய அரசுக்கு லேசாக தோன்றி இரு ந்தாலும், அழுத்தம் காரணமாக, கை விடப்படும்.

இது எல்லாம் தேவையா? திரு ந்தவே மாட்டார்களா? விடுதலை என்பது, பரபரப்பாக பேசி, பரபரப்பாக சண்டை போட்டு 3 மணி நேரத்தில் முற்று பெரும் ரஜினியின் படையப்பா படம் அல்ல.

"திண்று தினவெடுத்து தினம் நூறு கதை பேசி

பிறிதொரு நாள் இழி கூற்றுக்கு இரையாகும்

வேடிக்கை மனிதரை போல் என் தலைவன்

இருப்பான் என்று நினைத்தாயோ"

எல்லாம் சுத்துமாத்து எண்டு நினைக்கிறன்

தனி தமிழ்நாட்டு (தமிழ்ஈழ) கோரிக்கை தொடர்பாக பேசுவதற்கு நிபந்தனையற்ற (பேச்சுமேசை) உடன்பாட்டிற்கு இலங்கை அரசு வரவேண்டும் என்கிறது பிரித்தானியா.

(செவ்வாய்கிழமை, 5 டிசெம்பர் 2006) (யோகராஜன்)

பிரித்தானியாவின் பாராளுமன்றத்தின் முக்கிய இடம் ஒன்றில் நேற்று தமிழர் தாயகக்கோட்பாடு தொடர்பாக இரகசிய பேச்சு ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவில் முதல் தடவையாக தென்கிழக்காசிய மற்றும் இலங்கைக்கு பொறுப்பான வெளியுறவுத்துறை அமைச்சரான கிம் கோவல் ஈழத் தமிழர்களை சந்தித்து தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் தமிழ் மக்களுடைய தேவைகள் அவர்களின் விருப்பம் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் குடிவரவு குடியகல்வு சிக்கல்கள் பிரித்தானியா ஈழத்தமிழருக்கு தாயகத்தில் செய்யவேண்டிய உதவி தவறவிட்ட விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் பிரித்தானிய சார்வதேச அபிவிருத்தி அமைச்சர் கெரத் தோமஸ் வடஅயர்லாந்து சமாதான உடன்படிக்கையில் முக்கிய பங்காற்றிய போல் மேபி தொழில் கட்சியின் முக்கியஸ்தர்கள் வேறு பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழ் கவுன்சிலேஸ் அமைப்பின் தலைவர் தயா இடைக்காடர் தலைமையில் ஈழத்தமிழர்களின் சார்பில் 17 தமிழர்களும் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்களும் பெண்களுமாக இதில் கலந்துகொண்டனர்.

நீண்ட வாதப்பிரதிவாதங்களுடன் ஈழத்தமிழர்களின் பிரச்சினை ஆரோக்கியமான முறையில் ஆராயப்பட்டதாக இதில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். இந்த பேச்சுகளில் இலங்கையில் யுதத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினரும் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று பிரித்தானிய அரச தரப்பால் சுட்டிக்காட்டபட்டபோது இலங்கை அரசு யுத்த நிறுத்ததை மீறி வருவதாகவும் நிபந்தனைகளை உருவாக்கி இனப்பிரச்சினையை தீர்க்காது இழுத்தடிப்பதாகவும் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட கருத்தை பிரித்தானிய அரச பிரதிநிதிகள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

தமிழ் மக்களுடைய அரசியல் சுய உரிமைகளை பிரித்தானிய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும் மாற்றுக் குழுகள் சிறுவர்களை கடத்துதல் கப்பம் பெறுதல் மிரட்டுதல் கொலைகளிலும் இடபடுவதால் அவர்களின் சார்வதேச நடமாட்டங்களை தடைசெய்ய பிரித்தானியா முன்வரவேண்டும் என்று தயா இடைக்காடர் கேட்டுக்கொண்டார்.

ஜ.ஆர்.ஏ அமைப்பு பிரித்தானியாவில் அரசியல் காரணத்திற்காக தடைசெய்யப்பட்டபோது ஜஆர்.ஏ சின்பெயின் என்ற அரசியல் பிரிவை பிரித்தானியாவில் அரசு இயங்க அனுமதித்தது அதே போன்று விடுதலைப் புலிகளின்மீது தடை போட்டுள்ள நீங்கள் அதனை அகற்றவேண்டும் அல்லது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிதிநிதிகள் குழுவினரை சுதந்திரமாக பிரித்தானியாவிற்கு வந்து தமது கருத்துக்களை சொல்லுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை தூதுவராலயத்தையும் அவர்களின் பின்னால் இருக்கும் 50ஆயிரம் சிங்கள மக்களின் கருத்துக்களை மட்டும் கேட்காமல் பிரித்தானியாவில் வாழும் அண்ணளவாக 5 இலட்சம் தமிழ் மக்களின் கருத்துகளையும் அவர்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளின் கருத்துகளையும் கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த அமைச்சர் கரத் தோமஸ் உப்பட பல தொழில் கட்சி உறுப்பினர்கள் அமைச்சரானமைக்கும் பாராளுமன்றம் சென்றமைக்கும் தமிழ் மக்களின் உழைப்பும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது என்பதையும் கிம் கோவலிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை அரசு நிபந்தனையற்ற பேச்சுக்கு வரவேண்டும் என்றும் தனித்தமிழ் நாடு எனப்படும் தமிழீழம் பற்றிய விவாதமும் அந்த பேச்சுகளில் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்றும் கிம்கோவில் பகிரங்கமாக அறிவித்தார்.

கிம் கோவில் மத்திய கிழக்கு தென்கிழக்காசியா தெற்காசியா சார்வதேச பாதுகாப்பு ஜ.நா போன்றவற்றிற்கான பிரித்தானிய பிரதிநிதியாவார்.

இந்த பேச்சுகளுக்கான விசேட செய்தியாளராக நிதர்சனத்தின் பிரத ஆசிரியர் றஞ்சன் கலந்துகொண்டார்.

நன்றி : நிதர்சனம்.கொம்

ஈழத்திலிருந்து

ஜானா

நல்ல விடையங்கள் நடந்தாள் நமக்கும் நண்மைதான் ஆனால் கெட்ட விடையங்கள் நடந்துவிடக்கூடாது பாருங்கள் அதனால் தான் நாம் புத்தி சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும் அதனால் நாம் பொறுத்து சிந்தித்து வாய் விடுவது நலம் என்று எண்ணுகின்றேன்.

இரகசிய பேச்சு என்று சொல்லி விட்டு, இத்தனை விடயங்களையும் இணைய தளங்களில் போட்டு உடைத்தால்? தவளைக்கு கேடு தன் வாயால் என்பார்கள். தமிழருக்கும் தான்.

இறைவா எதிரியின் பீரங்கியை விட ஆபத்தான இ ந்த செய்தி பீரங்கிகளிடம் இரு ந்து தமிழர்தம் விடுதலை இயக்கத்தை காப்பாற்று!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையள் இப்படித்தான் எதுக்கோ முந்தின அதுவாக தான் இருப்பினம்.

தமிழர்களை ஏமாற்றுபவர்களில் இரண்டு வகையுண்டு. முதலாமவர்கள் திட்டமிட்டு ஏமாற்றுபவர்கள். மற்றவர்கள் வேறு வழியின்றி இயலாத்தனத்தால் ஏமாற்றுபவர்கள். இப்படியொரு செய்தியை வெளியிட்டவர்கள் இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது சந்தேகத்திற்கிடமற்ற ஒன்று.

ஆகவே மன்னித்து விட்டு விழிகளை அகல விரிப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திவானின் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

இதிலே ஈடுபடுபவர்களில் சிலர் "நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்களுக்கு" ஒப்பானவர்கள். இவர்கள் தற்புகழ்ச்சியை விரும்பியும், தம்மைப் பெரியவர்கள் என்று உலகுக்குக் காட்டவுமே இடையிடையே இப்படியான கூட்டங்களைக் கூட்டி வீரியம் பேசுகிறார்கள். இலண்டனிலே அண்மைக்காலமாக இப்படிச் சிலர் தம்மை சமூக சேவகர்கள் என்று பட்டங்களும் வாங்கிக்கொள்கிறார்கள்.

பாலஸ்தீனம் தனிநாட்டாக அங்கீகரிக்கப்பட்டபோது அதன் இரகசியப் பேச்சுக்கள் முதலில் இலண்டனிலேதான் ஆரம்பமாகின. ஆனால் அதுபற்றிய செய்திகளை சில வருடங்களின் பின்னர்தான் வெளியிட்டார்கள். இராஜதந்திரங்களிலே இதுவும் ஒன்று. ஆனால் எம்மவர்களில் பலருக்கு இவையெல்லாம் பூச்சியம். எதனை இரகசியமாக வைத்திருப்து என்று அறியமாட்டார்கள். சந்தர்ப்பம் பார்த்து தமது தலைகளை மட்டும் காட்டத் தயங்கமாட்டார்கள். அப்போது அதனைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள

Edited by Selvamuthu

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடிப் பல கூட்டங்கள் பிரித்தானியாவில் முன்பும் நடந்துள்ளன. 97,98ம் ஆண்டிலும் அமெரிக்காவில் இருந்து வந்த தமிழர்கள் சிலருடன் லண்டனில் மூடிய அறையில் பிரித்தானியா அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது. பிரித்தானியா அதிகாரிகள் உப்படி அடிக்கடி தமிழ் மக்கள் சிலருடன் கதைத்து அவர்களின் கருத்துக்கள் கேப்பினம். ஆனால் ஒன்றும் செய்ய மாட்டினம். தங்களுக்கு எதாவது லாபம் இருந்தால் மட்டுமே செய்வினம். தமிழர்களின் ஆட்சியையும், சிங்களவர்களின் ஆட்சியையும் தங்களது சுயலாபத்துக்காக ஒன்றாக்கி விட்டு, களவெடுத்து, மதம் பரப்பி எல்லாம் முடிஞ்சதும் போனது மட்டுமல்ல, புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததும், ஐரோப்பாவில் புலிகளைத்தடை செய்யக்காரணமாக இருந்தவர்களும், சிங்கள அரசுக்கு ஆயூத உதவிகள் செய்வதும், அப்பாவி ஈராக் மக்களைக்கொலை செய்வதும் உந்த பிரித்தானியர்களே தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரகசியமெண்டா இதுதான் இரகசியம்.

கொஞ்சநாள் தள்ளாடின நிதர்சனம் பழையபடி form க்கு வந்திட்துது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தின்ர எழுத்துக்கள் உடைந்துடைந்து தெரிகின்றனவே.

ஒருங்குறி சிக்கலைக்குடுக்குதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.