Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹஜ் யாத்திரை நெரிசல் பலி எண்ணிக்கை 310: காயம் 450

Featured Replies

ஹஜ் யாத்திரை நெரிசல் பலி எண்ணிக்கை 310: காயம் 450

 
 
ஹஜ் புனித யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி. | மீட்புப் படையினர் பணியில். | படம்: ஏ.பி.
ஹஜ் புனித யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி. | மீட்புப் படையினர் பணியில். | படம்: ஏ.பி.

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 310 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 310 பேர் பலியானதாகவும், 450 பேர் காயமடைந்திருப்பதாகவும் குடிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஈத் அல்-ஹதா என்ற தியாகத் திருநாளின் முதல்நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹஜ் புனித யாத்திரையில் இதற்கு முன்பாக 6 முறை கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 1990-ம் ஆண்டு 1,400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹஜ் யாத்திரை நெரிசல் பலி 453 ஆக அதிகரிப்பு: காயம் 450

 
 
ஹஜ் புனித யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி. | மீட்புப் படையினர் பணியில். | படம்: ஏ.பி.
ஹஜ் புனித யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி. | மீட்புப் படையினர் பணியில். | படம்: ஏ.பி.

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 453 பேர் பலியாகினர். மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 453 பேர் பலியானதாகவும், 450 பேர் காயமடைந்திருப்பதாகவும் குடிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஈத் அல்-ஹதா என்ற தியாகத் திருநாளின் முதல்நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹஜ் புனித யாத்திரையில் இதற்கு முன்பாக 6 முறை கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 1990-ம் ஆண்டு 1,400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/ஹஜ்-யாத்திரை-நெரிசல்-பலி-453-ஆக-அதிகரிப்பு-காயம்-450/article7684964.ece

  • கருத்துக்கள உறவுகள்
 
Mecca.jpg
 
 
Saudi%20Arabia.jpg
 
சவுதி அரேபியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 725 பேர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு வாரத்தில் இரண்டாவதுமுறையாக மெக்காவில் மிகப்பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. மெக்கா மசூதிக்கு வெளியே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இவர்கள் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஹஜ் புனித யாத்திரையின்போது கூட்டம் அதிகமானதால் திடீரென நெரிசல் ஏற்பட்டு இந்த விபரீதம் நடந்துள்ளது. 
 
கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி மெக்காவில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது. 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஹச் யாத்திரை போய் அங்கேயே இறப்பது புண்ணியமாமே! கேள்விப்பட்டேன். உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பது இயல்பாக இயற்கையாக இருந்தால் ஹஜ்ஜில்  இறந்தாலென்ன  ,காசியில் இறந்தாலென்ன புண்ணியம்தான்...!

இவைகள் அகால மரணங்கள்..., பாதுகாப்பு ஏற்பாடுகளின் பலவீனம்...!

  • தொடங்கியவர்

ஹஜ் யாத்திரை நெரிசல் பலி 717 ஆக அதிகரிப்பு: காயம் 863

 
 
 
ஹஜ் புனித யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி. | மீட்புப் படையினர் பணியில். | படம்: ஏ.பி.
ஹஜ் புனித யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி. | மீட்புப் படையினர் பணியில். | படம்: ஏ.பி.

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பலியாகினர். மேலும் 863 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

இதில் ஐதராபாத்தை சேர்ந்த இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார். இவருக்கு வயது 60 என்று கூறப்படுகிறது.

மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 717 பேர் பலியானதாகவும், 863 பேர் காயமடைந்திருப்பதாகவும் குடிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஈத் அல்-ஹதா என்ற தியாகத் திருநாளின் முதல்நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹஜ் புனித யாத்திரையில் இதற்கு முன்பாக 6 முறை கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 1990-ம் ஆண்டு 1,400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

பின்னணி மற்றும் முழு விபரம்:

சவுதி குடிமை ஆணையம் இன்னமும் இறந்தோர் உடல்களை எண்ணி வருவதாகவும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இறந்தோரை அடையாளம் காணும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சவுதி அரேபியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஈரான் தாக்கு

இந்த நெரிசலில் சிக்கி ஈரான் நாட்டைச் சேர்ந்த 43 பேர் பலியாகியுள்ளனர். சவுதி அரேபியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானவையாக இல்லை என்று ஈரான் கண்டித்துள்ளது.

இன்று காலை உள்ளூர் நேரம் 9 மணியளவில் நெரிசல் தொடங்கியது. அதாவது இந்திய நேரம் 11.30 மணியளவில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

மருத்துவமனை அதிகாரி ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு கூறும்போது, “நெரிசல் சம்பவம் ஜமாரத் பால அமைப்புக்கு வெளிப்புறத்தில் நடந்தது. அங்குதான் கல்லெறிதல் சடங்கு நடைபெற்றது. அப்போது யாத்திரிகர்களின் பெரும்பகுதியினரான ஒரு பிரிவு மற்றொரு குழுவினருடன் கலந்ததில் பெரும் நெரிசல் ஏற்பட்டது” என்றார்.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 19,52,817 ஆகும். இதில் 1.4 மில்லியன் அயல்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அயல்நாட்டு தூதரகங்கள் தங்கள் நாட்டு குடிமகன்களின் உடல்களை அடையாளம் காட்ட சவுதி அரசுடன் ஒத்துழைத்து வருகின்றன.

சவுதி அரேபியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சாடிய ஈரான் நெரிசல் பகுதியில் 2 வழிகளை அதிகாரிகள் அடைத்தனர், இதுதான் இத்தகைய பெரிய துயரச் சம்பவத்துக்குக் காரணம் என்று ஈரான் ஹஜ் யாத்திரை அமைப்பின் தலைவர் ஒஹாதி ஈரான் தொலைக்காட்சியில் சாடினார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது, “இன்றைய துயரச் சம்பவம் மோசமான நிர்வாகத்தினாலும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு குறித்த எந்த வித சீரியஸான கவனமும் இல்லாமல் செயல்பட்டதன் விளைவே. சவுதி அதிகாரிகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று கடுமையாக சாடியுள்ளார்

ஆம்புலன்ஸ்களின் அலறல்:

சம்பவ இடத்தில் இருந்த ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திலிருந்து காயமடைந்தவர்களை சுமந்து சென்ற காட்சியை பதிவு செய்தது. ஏகப்பட்ட ஆம்புலன்ஸ்கள் யாத்ரிகர்களையும், காயமடைந்தவர்களையும் ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்று கொண்டிருந்தன.

சுமார் 220 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. யாத்திரிகர்கள் வெளியேற மாற்றுப்பாதைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

ஹஜ் பயணிகளின் கட்டுக்கோப்பின்மையே விபத்துக்குக் காரணம்: சவுதி அமைச்சர்

சவுதி அரேபியாவின் மினாவில் ஹஜ் புனித யாத்திரையின் போது பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு 717 பேர் பலியானதற்கு யாத்திரிகர்களின் கட்டுக்கோப்பின்மையே காரணம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் கலீத் அல்-ஃபாலி தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு தொலைக்காட்சியான எல்-எக்பரியாவில் அவர் கூறியதாக வெளியான செய்தி வருமாறு:

யாத்திரிகர்கள் எங்களது அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடைபிடித்திருந்தால் நிச்சயம் இத்தகைய பெருந்துயரம் நிகழ வாய்ப்பில்லை. நாங்கள் கால-அட்டவணை அமைத்துக் கொடுத்தோம், ஆனால் அவர்கள் அதன் படி நடக்கவில்லை. இதுதான் இத்தகைய பெரும் விபத்துக்கு மூல காரணம்.

எங்களது கால-அட்டவணைப்படி அவர்கள் சென்றிருந்தால் நிச்சயம் இத்தகைய விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியதே.

என்று அவர் கூறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பது இயல்பாக இயற்கையாக இருந்தால் ஹஜ்ஜில்  இறந்தாலென்ன  ,காசியில் இறந்தாலென்ன புண்ணியம்தான்...!

இவைகள் அகால மரணங்கள்..., பாதுகாப்பு ஏற்பாடுகளின் பலவீனம்...!

அது மட்டுமல்ல! செய்திகளின் படி நெரிசலில் அகப்பட்ட ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் தப்பிக்க மற்றவர்கள் மேல் ஏறி நடந்ததால் தான் பலர் இறந்திருக்கிறார்களாம். உள்ளீடை விட்டு கோதைப் பற்றியது மாதிரி, சாத்தானுக்குக் கல்லெறியும் வெற்றுச் சடங்கில் ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருந்த சுய நலச்சாத்தானை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இவை மெக்காவுக்குப் போயென்ன சொர்க்கத்திற்குப் போயென்ன? சாத்தான்கள் தான்! 

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் ஸார் தன்னுடைய விளையாட்டைக் காட்டிவிட்டார் போலுள்ளது! 

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தானுக்குக் கல்லெறிகிறார்கள், மனிதர்களுக்கும் கல்லெறிகிறார்கள். இறுதியில் கல்லெறியும்போது செத்தும் போகிறார்கள். 

 

அவர்கள் எப்படியாவது போய்ச் சேரட்டும், ஆனால் சமயம் என்கிற பெயரில் பிற மதத்தவர்களைக் கொல்லும் அரக்கக் குணம் மட்டும் இல்லாமல்ப் போனால்ச் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

717 பேர் பலியான மெக்கா விபத்துக்கு ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களே காரணம்? பரபரப்புத் தகவல்கள்
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (08:34 IST)


மெக்கா விபத்துக்கு ஆப்பிரிக்க  கருப்பினத்தவர்களே காரணம் என்று சவுதி அரசர் குற்றஞ்சாட்டி இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

1443144044-6075.jpg
 மெக்கா பெரிய மசூதி மீது  கடந்த 11 ஆம் தேதி கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 115 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இச்சோகச் சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரச் சம்பவம் மெக்காவில் அரங்கேறியுள்ளது.
 
இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ்  பயணம் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களின் மதக் கடமையை ஆற்ற மெக்காவுக்கு படை எடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் மினா அருகே சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள்  நேற்று  திரண்டிருந்தனர். அப்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 830 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.
 
இந்நிலையில்  717 பேர் உயிரிழந்த கூட்டநெரிசலுக்கு ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களே காரணம் என்று சவுதி அரசரும் ஹஜ் கமிட்டித் தலைவருமான அல்பைசல் குற்றஞ்சாட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்தத் தகவலை அந்நாட்டு அரசின் ஊடகமான அல் அரேபிய செய்தித் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
 
சவுதி அரசரின் இந்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர்  அல் பைத்தும் கூறி வருகிறார். இது குறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், " அதிகாரிகள் வகுத்துக் கொடுத்த அட்டவணையை சில யாத்திரீகர்கள் பின்பற்றவில்லை. பாதுகாப்பு விதிமுறைகளை யாத்திரீகர்கள் பின்பற்றி இருந்தால் இந்த கோரச் சம்பவம் நடைபெற்றிருக்காது" என்று தெரிவித்தார்.

http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/saudi-prince-blames-black-africans-for-hajj-stampede-717-sa-far-115092500011_1.html

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் அப்பாவிகள் .....
திருப்பதியிலும் இறந்து போனார்கள் .


மூட சிர்த்தார்த்தங்களை 
எளிமையான அப்பாவிகள் மேல் மதம் என்ற பெயரில் 
கடவுள் பயத்தை காட்டி விதைக்கும் 
மதங்கள்தான் இதற்கு மட்டுமல்ல 
உலகில் போகும் பல கோடி உயிர்களுக்கு காரணம்.

இன்று மெக்கா என்றால் நாளை ஒரு காசியோ  கங்கையோ இதில் அடங்கிபோகும்.
முஸ்லீம் தீவிரவாதிகள் கூட 
ஒருபுறத்தில் அப்பாவிகள்தான் 
மூட சிர்த்தார்த்தம் ஊட்டபட்டு தீவிரவாதிகள் ஆக்க படுகிறார்கள்.

இந்தியாவில் தலித் என்று ஒரு மனிதனை உருவாக்கி 
அவனை மிதி மிதி என்று மிதித்து கொடூரமாக சித்திரவதை செய்பவன் யார் ?
ஒரு மூட சிர்தார்தத்தை தன்னோடு வரிந்து கட்டி கொண்டவனே. 

இன்று பாபரசர் அமெரிக்கவிற்கு ஆசி வழங்க வந்து நிற்கிறார்!
சும்மா இருந்த சிரியவிற்குள் தீவிரவாதிகளை ஆயுதம் கொடுத்து அனுப்பி 
இவளவு  கொலைகளையும் செய்தது யார் ? 

மனிதன் எப்போது மனிதனாக தயாரகிரானோ 
அப்போதே பாதி துன்பம் நீங்கிவிடும்.
நீ மனிதானாக இருந்தால் கடவுளை உனக்குள்தான் தேடுவாய் 
காசியிலும் மெக்கவிலும் லூர்சிலும் தேட தேவை என்ன ?
உனது கடவுள் முடம் ....
அவர் ஓரிடத்தில்தான் இருப்பார் 
பக்கத்தில் நடப்பது தெரியாது 
என்று நீதான் உன் கடவுளை முடம் ஆக்குகிறாய்.
பின்பு மனிதனும் முடமாகி போகிறான் 
அதன் முடிவுகள் இதுவாகி போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த முஸ்லீம் நண்பரிடம் முந்தி ஒரு முறை ஹச்சுக்குப் போய் இவ்வளவு பேர் வருடா வருடம் இறக்கிறார்களே அதற்கு ஒழுங்கான வழி முறைகள் செய்யக் கூடாதோ எனக் கேட்டால் அங்கு போய் இறந்தால் புண்ணியம்.இறப்பதற்காகவே அங்கு போகின்றார்கள் என சொன்னார்.இந்துக்கள் காசி யாத்திரை போனால் புண்ணியம் என நினைப்பது மாதிரி இவர்களிடமும் இப்படி ஒரு நம்பிக்கை இருக்கலாம்.

  • தொடங்கியவர்

ஹஜ் யாத்திரை கூட்டநெரிசல் விபத்து: மனிதனால் கட்டுப்படுத்த முடியாதது - சவுதி அரேபியா கருத்து

 
ஹஜ் புனித யாத்திரையை நேற்று கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்த போலீஸார். படம்: ராய்ட்டர்ஸ்
ஹஜ் புனித யாத்திரையை நேற்று கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்த போலீஸார். படம்: ராய்ட்டர்ஸ்

ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து மனிதனால் கட்டுப்படுத்த முடியாதது என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் மினா நகரில் கடந்த 24-ம் தேதி கூட்ட நெரி சலில் சிக்கி 717 பேர் உயிரிழந் தனர். இதில் 15 இந்தியர்கள் உட்பட 131 நாடுகளைச் சேர்ந்த யாத்ரீ கர்கள் பலியாயினர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹஜ் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய சவுதி அரேபிய அரசு தவறி விட்டதாக ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் புனித ஹஜ் யாத்திரை நேற்று நிறைவுப் பெற்றது. இதையொட்டி அந்த நாட்டு உள்துறை அமைச்சரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் நயீப் தலைமையில் மினா நகரில் நேற்று சிறப்பு ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சவுதி அரேபியாவின் மூத்த மத குரு ஷேக் அப்துல் ஆசிஷ் அல்-ஷேக் பேசியதாவது: கடந்த 25 ஆண்டுகளில் நேரிட்ட மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று. ஆனால் இது போன்ற கூட்ட நெரிசல் விபத்துகள் மனிதனால் கட்டுப்படுத்த முடியாதவை. அமைச்சர் முகமது பின் நயீப் உட்பட யாரையும் குற்றம் சொல்ல முடியாது. விதி வலியது என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து உயர் நிலை விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் முகமது பின் நயீப் தெரிவித்தார். இதனி டையே கூட்ட நெரிசல் விபத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டுக் கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யு மாறு மன்னர் சல்மான் உத்தர விட்டுள்ளார்.

பலி 18ஆக உயர்வு

சவுதி அரேபியாவின் மினா நகரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் 15 இந்தியர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் 3 இந்தியர்கள் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/world/ஹஜ்-யாத்திரை-கூட்டநெரிசல்-விபத்து-மனிதனால்-கட்டுப்படுத்த-முடியாதது-சவுதி-அரேபியா-கருத்து/article7694608.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.