Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணத்தில் மூலிகைத் தோட்டங்கள் மலர வேண்டும் : வடக்கு முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்த மருத்துவம் அல்லது சுதேச மருத்துவ முறைமைகள் தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளன. மக்கள் அனைவரும் மேலைத்தேய மருத்துவ முறையில் நாட்டம் கொண்டவர்களாகவும் இலகுவாகத் தமது நோய்களை மிகவிரைவில் மாற்றிக் கொள்கின்ற மனோநிலையைப் பெற்றவர்களாகவும் இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது இவ்வாறு தெரிவித்தார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

இன்று கிளிநொச்சி கல்மடுநகர் பிரதேசத்தில் மூலிகைத் தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்று ECG, X-RAY, CT SCAN  என பல நவீன மருத்துவ இயந்திர முறைகள் மூலம் உடலின் உள்ளே கண்டறியப்படுகின்ற பல நோய்களை சித்த மருத்துவ வைத்தியர்கள் கைநாடி மூலம் இலகுவில் கண்டறிந்து அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்கி குணப்படுத்திய செய்திகள் எம்மிடையே உண்டு. அதே போன்று தீராத இடுப்பு வலி, முதுகு வலி போன்ற நோய்களையும் 30 நாட்கள், ஒரு மண்டலம் என தேகத்தை ஒத்தடம் கொடுக்கும் முறைமையின் மூலம் பலரைச் சுக தேகிகளாக மாற்றி இருக்கின்றனர் எமது சித்த மருத்துவர்கள். சற்று முன்னர் அந்தச் சிகிச்சை முறைகளைக் கண்காட்சியில் கண்டு வந்தோம்.


இவ்வாறாயின் ஏன் நாம் சித்தமருத்துவத்தை விட்டு மேலைத்தேய முறைமைக்கு கவரப்பட்டோம் என ஆராய்ந்து பார்த்தால் அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கின்றது. சித்த மருத்துவ முறையில் நாம் மருந்தெடுக்கச் சென்றால் வைத்தியரோ எமது நோயைப் பரிசோதித்து அதற்குரிய மருந்துகள், குளிசைகளை தந்துவிட்டு குளிகையை கற்பூரவள்ளிச் சாறு, வெற்றிலைச் சாறு, கற்கண்டு என பலவற்றுடன் சேர்த்து உண்ணுமாறு கூறுவார். அதனுடன் மட்டும் நின்றுவிட்டால் பரவாயில்லை. உணவுடன் பாகற்காய், பயற்றங்காய், பச்சைமிளகாய், வெண்டைக்காய்,வேப்பிலை, பூசணி என்பன சேர்த்தலாகாது என பல கட்டுப்பாடுகளை விதிப்பார்.

அந்தளவிலேயே நோயாளியின் அரைவாசி நோய் பயத்தினாலேயே தீர்ந்து விடும்! குளிகைச் சரையை மெல்ல வேலிக்குள் செருகி விட்டு மருந்தும் வேண்டாம் மந்திரமும் வேண்டாம் என்று வீட்டிற்கு சென்று விடுவார்கள்! இதனால் எமது வைத்தியத் துறை சார்ந்தவர்களை பரிகாசம் செய்வதாக எண்ண வேண்டாம். ஏனெனில் இது அந்தக் காலச் சம்பவங்கள்! இன்று நிலைமை முற்றாக மாறியுள்ளது. சுதேச மருத்துவ வைத்தியப் பிரிவுகள் அனைத்தும் நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கென ஒரு திணைக்களம், பல பிரிவுகள், மருத்துவக் கல்லூரிகள், மருந்து தயாரிக்கும் பிரிவுகள் எனப் பல பிரிவுகளுடன் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சுதேச வைத்திய முறைகள் இன்று மாற்றப்பட்டுள்ளன.

கடுமையான பத்தியங்கள் இல்லை. மிகவும் இலகுவாக உட்கொள்ளக்கூடிய மருந்துகளும், உடலில் பூசப்படும் எண்ணெய் வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


மருந்துகள் கூடிய மணமற்ற தன்மையுடன் வெளிவருகின்றன.  அத்துடன் மிகச் சுத்தமான முறையில் அதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட மருந்து நிறுவனங்களில் சுகாதார முறையில் காற்றிறுக்கமாக அடைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ திணைக்களத்தின் தயாரிப்புகளுக்கு மேலதிகமாகத் தனியார் உற்பத்தி நிறுவனங்களும் இவ்வகையான மருந்துகளை தயாரித்து விநியோகிப்பது இத் துறைக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது.


அது மட்டுமின்றி பல சமூக மட்ட அமைப்புக்கள் செயற்படுவதன் மூலம் இத் தயாரிப்புக்களின் தரங்கள் உறுதிப்படுத்தப்படுவதுடன் அவற்றின் பாவனைக் காலங்களும் உத்தரவாதப் படுத்தப்படுகின்றன. இம்மருந்துகளைத் தயாரிப்பதற்கு பெருவாரியான அரிய வகை மூலிகைகள், பூண்டுகள், இலை குழை என்பன தேவைப்படுகின்றன. முன்பு வைத்தியர் ஒருவருக்கு மூலிகைகள் சேகரிப்பதற்கு பல உதவியாளர்கள் முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் செயற்படுவதை நான் அவதானித்திருக்கின்றேன். அரிய வகை மூலிகைகளை பெற்றுக் கொள்வதற்காக கிராமம் கிராமமாக காடு, கரம்பை என்று அலைந்து திரிய வேண்டும்.


இப் பிரச்சினைகளுக்கு விடைகாணும் வண்ணமாகவும் மூலிகைகளைப் பெற்றுக்கொள்வதை இலகுவாக்கல் தொடர்பாகவுமே இன்று இந்த மாதிரி மூலிகைத் தோட்டம் கல்மடு நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மூலிகைத்தோட்டத்துடன் மட்டும் நின்றுவிடாது பல மூலிகைத் தோட்டங்கள் ஆங்காங்கே வடமாகாணத்தில் உருவாக்கப்பட வேண்டும். இவை மூலம் சுதேச மருத்துவ முறைகளையும் தயாரிப்புக்களையும் பொது மக்களிடையேயும் தனியார் துறைகளிடையேயும் பிரபல்யப்படுத்த வேண்டும் என்றார்.

 

http://www.onlineuthayan.com/news/566

இந்தாளும் பாவம் ... ஏதோ ஓடி ஓடி எம் சனத்துக்கு ஏதாவது செய்ய முற்படுகிரார் ... அதே வேளை சர்வதேசத்தை நோக்கியும் குரல் கொடுக்கிறார்... ஆனால் இவருக்கு ஆப்பிறுக்க சம்சும்மாவைரணில் கூட்டமைப்பு முழு வீச்சில் ..

 

வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தமக்கிடையே மோதிக் கொண்டதால் சபை நடவடிக்கைகள் நேற்று பாதிப்படைந்தன. நீண்ட நாட்கள் நிலவி வந்த பனிப்போர் நேற்றைய தினம் கடுமையாகியதாலேயே சபை நடவ டிக்கைகள் பாதிப்படைந்தன.

முதலமைச்சர் தலைமையில் அவைத் தலைவர் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்த இரு அணிகளும் நேற்று மோதிக் கொண் டன.

இதனை எதிக்கட்சியினர் அமைதியாக இருந்து பார்த்து இரசித்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

வடக்கு மாகாணசபையின் மாதாந்த கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது அதன் போது முதலாவதாக பட்டதாரிகள் பிரச்சினை யும் அடுத்து முதலமைச்சருக்கு எதிரான உறுப்பினர் பரஞ்சோதியின் கேள்விகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதனால் இது வரை காலமும் நிலவி வந்த பணிப்போர் நேற்றைய தினம் முட்டி மோதி வெடித்து கலோபரமானது.

மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், பட்ட தாரிகளின் நியமனங்கள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அவ சர விண்ணப்பக் கடிதம் ஒன்றினை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத் தார்.

தொடர்ந்து அமைச்சர் டெனிஸ்வரன் இனப்பிரச்சினை குறித்து சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதியிடம் கோரி க்கையினை முன்வைப்பது நல்லது எனக் கூறினார்.

இதன் பின்பு எழுந்த உறுப்பினர் சஜயந் தன் எப்போதும் பிரேரணைககள் நிறைவேற் றுவது நல்லதல்ல எனவும் மாகாணசபைக் குள் இருக்கின்ற 37 விடயங்களை பட்டதாரிக ளை உள்ளடக்ககப் படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தனியே பிரேரணைகள் நிறைவெற்றுவ தால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை எமது பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதற்கு ஐ.நா அறிக்கை சிறந்த உதாரணமாகும்.

நாம் இன அழிப்பு எனக் கூறினோம் அவர்கள் இதனைப்பற்றி குறிப் பிடவில்லை எனக்கூறினார்.

இதன் பின்பு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வெளிநாட்டு முதலீட்டாளர்களி னைக் கொண்டு இங்கு வேலைவாய்ப்புக் களை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை திறம்பட இயங்குவதாகவும் வேலைவாய்ப்புக் களை வழங்கி வருவதாகவும் சுகாதார அமை ச்சர் கூற மோதல் ஆரம்பமானது.

இதன்போது அமைச்சரவை தனது முடிவு களினை வெளிப்படுத்தவில்லை எனவும், சர்வதிகாரமாக செயற்படுகின்றது எனவும் அவைத் தலைவர் சிவஞானம் அமைச்சரவை மீது பகிரங்கமாக கூற்றம்சாட்டினார்.

இதன் பின்னர் முதலமைச்சரின் விசேட உதவியாளர் கூறித்து உறுப்பினர் பரஞ்சோதி யால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு இதுதொடர்பில் பொதுவெளியில் ஆராயப்படுவதனால் அவற்றின் கேள்விக ளும் பதில்களும் இராஜதந்திர ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆகையினால் இதற்குரிய பதில் உரிய நேரத்தில் கூறப்டும் என் முதலமைச்சர் பதிலளித்தார்.

எனினும் தனக்கு பதில் வேண்டும் என் விடப்பிடயாக பரஞ்சோதி நிற்க அதற்கு அவைத் தலைவரும் ஆதரவு வழங்கினார்.
எனும் முதலமைச்சர் தனது நிலைப்பாட் டிலிருந்து மாற்றமடையாமல் பதில் கூற மறுத்து விட்டார்.

இதன் போது உறுப்பினர்கள் சர்வேஸ் வரன், நான் அமைச்சர்களிடம் கேள்வி கேட் கும் போது முன் அனுமதி பெறவேண்டும் ஆனால் முதலமைச்சரிடம் கேள்வி கேட்கும் போது மட்டும் முன்அனுமதி பெறத் தேவையி ல்லை என்பது எந்த வகையில் நியாயம் அவைத்தலைவர் தனது பதவிக்கு ஏற்றாப் போல் செயற்படவேண்டும் என ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தினார்.

இதன் பின்னர் அவைத்தலைவர் அமை தியாக மோதல்கள் தணிந்தது. எனினும் அமைச்சர் ஐக்கநேரன் பரஞ்சோதியினைப் பார்த்து இவர் எவ்விட ஆதரவின்றி யாரோ ஒருவரின் ஊதுகுழலாக செயற்படுகின்றார் என் குற்றஞ்சாட்ட மீண்டும் மோதல் வெடித்தது.

என்னை இவர் அவமதித்து விட்டார் என் உரத்த குரலில் பரஞ்சோதி சத்தமிட இதற்கு விந்தனும் ஆதரவளித்தார்.

பின்பு மதியநேரத்தை அண்மித்ததும் மோதல்கள் தானாக தணிந்தது.

விக்னேஸ்வரனிற்கு எதிராக செயற்படுவதற்கு அன்மையில் கொழும்பு சென்ற பரஞ்சோதிக்கு பல லட்சம் பணம் ரணில் அரசால் இவரிடம் வழங்கப்பட்டதுடன் வட மாகாண சபையைக் குழப்பும் பணிகள் பரஞ்சோதி தலைமையில் ஒழுங்கைமைக்கப் பட்டுள்ளதுடன் இக் குழுவில் சீ.வி.கே.சிவஞ்ஞானம் சயந்தன் சுகிர்தன் அஸ்மீன் ஆர்னோல்ட் மற்றும் விந்தனும் இக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இவர்களுக்கான அனைத்து கட்ளைகளும் கொழும்பிலிருந்து வருவதுடன் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை சர்வதேசத்தில் பாரிய சிக்கலாக உள்ளது அதனைத் தவிர்க்கும் வகையில் இவற்றை செயற்படுத்துவதாகவும் வெகு விரைவில் வடக்கு முதல் கதிரையை காலியாக்கி விடுவதற்கான அனைத்து வேலைகளும் முடிவாகி விடும் எனம் உறுதிப் படுத்தியுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

இது கண்ணில் பட்டது ... 

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில் மூலிகைத் தோட்டங்கள் மலர வேண்டும் : வடக்கு முதல்வர்

இவர் கஞ்சாவைத்தான் மறைமுகமாக சொல்கிறார்.

சமூக சீர்கேடு செய்தார் என்று சொல்லி தூக்க நல்ல சந்தர்ப்பம். 

சிங்களவனுக்கு பிரச்சாரம் செய்யுற அதி உச்ச வேலை பளுவில் 
இதை உரியவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையாக கண்டிக்கிறேன்  அதென்ன  புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் எல்லாம் இங்கிலிசு மருத்துவம் செய்யும் பொழுது தாயக மக்கள் மட்டும் எப்படி  மூலிகை மருத்துவத்தை தெரிவு செய்வது?:mellow:

வட மாகாண சபைக்கு அமெரிக்க அரசு 1500 மில்லியன் டொலர்களை உதவ முன்வந்து ,அதற்காக திட்ட பொறுப்பாளரை நியமிக்கும் படிமுதலமைச்சரை  கேட்டிருந்தது .முதலமைச்சரும் இதற்கு தன்னுடைய தனிப்பட்ட உதவியாளரான நரேன் கார்த்திகேயனை  சிபார்சு செய்திருந்தார் ,நரேன் கார்த்திகேயனை முன்பு UNHCR இல் பணிபுரிந்து இடைநிருத்தப்பட்டிருந்தார் ,அதனால் இவரை அந்த நிறுவனம் ஏற்கமறுத்து,வேறு நபர்களை சிபார்சு செய்யும் படி கேட்டிருந்தது .அதற்கு முதலமைச்சர் நரேன் கார்த்திகேயனை த்தான் நியமிக்கவேண்டும் ,அப்படி நியமிக்காது விட்டால் இந்த உதவி தேவையில்லை என்ற சாரப்பட அறிவித்துள்ளார் .

 

இந்த விடயம் தான் தமிழரசு கட்சியிலும் ,வட மாகணசபையிலும் எதிரொலிப்பது .

 

அமெரிக்க நிறுவனம் தற்போது முதலமைச்சர் எழுதிய கடிதங்களை சம்பந்தன் ஐயாவுக்கு கொடுத்துள்ளார்கள் .இது சம்பந்தமாக பேசுவதாக  சம்பந்தன் ஐயா சொல்லியுள்ளார் .

 

குறிப்பு -நரேன் கார்த்திகேயன் முதலமைச்சரின் மருமகன் ,அவுஸ்ரேலியாவில் இருந்தவரை கூப்பிட்டு தன்னுடைய தனி உதவியாளராக வைத்துள்ளார் 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உறுப்பினர்களும் தமது உதவியாளர்களாக உறவினர்களையும் தெரிந்தவர்களையுமே நியமித்துள்ளனர்.

யாராவது முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் சகலருக்கும்  அறியத்தருவது 
என்ன என்றால் .......

ஒண்ணும் தெரியாத பாப்பா ......
இனி முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.