Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் அமையணுமா..? B.R. மகாதேவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் அமையணுமா..? B.R. மகாதேவன்

9789384149116_b

 

கிழக்குப் பதிப்பகத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள புத்தகத்திற்கான அறிமுக விமர்சனம்

 

 

•••••

 

 

 

காசித்தேவர்-பட்டம்மாள் தம்பதியின் மகன் அய்யநாதன் எழுதிய நூல் ”ஈழம் அமையும்’.

2002-2008 காலகட்டத்தில் வெப் துனியா இணைய இதழின் ஆசிரியராக அவர் இருந்தபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்: ஈழத் தமிழர்களின் வேதனைக்கும் விடுதலைப் புலிகளின் தோல்விக்கும் இந்திய வல்லாதிக்கமே காரணம்.

அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, ஐரோப்பா, ஈரான் ஈராக், ஐ.நா சபை, மத்யஸ்தம் செய்ய வந்த நார்வே, மருத்துவ சேவை செய்யவந்த செஞ்சிலுவைச் சங்கம் என ஒட்டுமொத்த உலகமும் ஈழ விடுதலையை முடக்கி சிங்கள அரசுக்குத் துணை புரிந்திருக்கின்றன என்பதை நூலில் அழுத்தமாகச் சொல்லியிருக்கும் நிலையிலும் இந்தியா நினைத்திருந்தால் போரை நிறுத்தி ஈழத் தமிழர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்… திட்டமிட்டே வஞ்சித்துவிட்டது என்கிறார்.

”இலங்கையில் சிங்களப் பேரினவாதம் பூர்விகக் குடிகளான தமிழர்கள் மீது பெரும் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டது; அமைதி வழியில் ஆரம்பத்தில் போராடிய ஈழத் தமிழர்கள் புலிகளின் தலைமையில் வன்முறைப் பாதையில் போராடத் தொடங்கினார்கள். இந்தியா ஆரம்பத்தில் அதாவது இந்திரா காந்தியின் காலகட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டது. ஆனால், ராஜிவ் காந்தி தவறான முடிவுகளை எடுத்தார்.

1990களில் இந்தியாவின் பொருளாதாரம் உலகுக்குத் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்ப்பா உள்ளிட்ட மேற்குலகம் இலங்கை விஷயத்தில் இந்தியாவின் விருப்பத்துக்கு ஏற்ப நடக்கத் தொடங்கின. ஈழத் தமிழர்கள் பால் அன்பும் அமைதித் தீர்வில் நம்பிக்கையும் கொண்டிருந்த முன்னாள் மனித உரிமைப் போராளியான ராஜபக்சேயை ராணுவத் தீர்வு நோக்கித் தள்ளியது இந்திய அதிகாரவர்க்கமே. அந்த ராணுவத் தீர்வுக்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுத்தரும் நோக்கில் புலிகளை தீவிரவாத இயக்கமான அறிவித்து முன்கை எடுத்தது இந்தியாவே… இந்தியாவின் பிரமாண்ட பொருளாதாரத்தின் மீது கண் வைத்திருந்த அமெரிக்கா இலங்கை விஷயத்தில் இந்தியா சொன்னதைக் கேட்டு நடந்து கொண்டது. அமெரிக்கா சொன்னதைக் கேட்டு உலகம் நடந்துகொண்டது. அப்படியாக புலிகளைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்து இலங்கையின் ராணுவ நடவடிக்கைகளுக்கு நியாயத்தை இந்தியாவே ஏற்படுத்திக் கொடுத்தது. இரு தரப்பும் பேசித் தீர்வுகாண வேண்டும் என்று வெளிக்கு சொல்லிவந்தாலும் புலிகளை அழித்து ஈழத் தமிழர்களைக் கொன்று ஒரு விடுதலைப் போராட்டத்தை தோல்வியுறச் செய்து இந்தியா என்ன பயனை அடைந்திருக்கிறது’

- என்று நூலாசிரியர் வேதனையுடன் கேட்கிறார்.

அரவிந்தர் போன்று மானுட மீட்சிக்காகப் போராடியவர்கள் தோன்றிய இந்தியா இலங்கை விஷயத்தில் ஏன் இப்படி ஒரு மானுடப் படுகொலைக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று கலங்கும் ஆசிரியர், மானுட சக்திகள் தங்கள் அட்டூழியங்களைச் செய்துவிட்டிருக்கின்றன. இனி இறைவனின் கரம் தன் வேலையைத் தொடங்கும். ஈழத் தமிழர்களும் புலிகளும் சிந்திய கண்ணீரும் செந்நீரும் குறிப்பாக ஈழப் பெண்கள் அனுபவித்த வேதனைகள் ஒருபோதும் வீண் போகாது. இலங்கையையும் உள்ளடக்கிய ஒரு தமிழ் தேசமான ஈழம் நிச்சயம் அமையும் என்று ஆணித்தரமாக நம்புவதாக நூலை முடித்திருக்கிறார்.

இந்த நூலில் அவர் தொகுத்திருக்கும் அரசியல் நிகழ்வுகள் மிகவும் விரிவானவை. துல்லியமானவையும் கூட. அந்தவகையில் நூலாசிரியரின் கடின உழைப்பு பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால், அந்த அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில் அவர் வந்தடைந்திருக்கும் தீர்மானம் மிகவும் பலவீனமானதாக, இட்டுக்கட்டியதாக இருக்கிறது.

இந்தியா எடுத்த இரண்டு மிகப் பெரிய முடிவுகள் இலங்கைப் பிரச்னையின் தலையெழுத்தையே மாற்றிவிட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

முதலாவதாக, இலங்கையின் புனரமைப்புக்காக வாஷிங்டனில் 2003-ல்நடைபெற்ற சர்வதேசக் கொடை மாநாட்டில் இந்தியா அழையா விருந்தாளியாகக் கலந்து கொண்டது; அதோடு நில்லாமல் புலிகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று சொன்னது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வு எட்டப்படவிருந்த ஒரு கட்டத்தில் இந்தியாவின் இந்தத் தலையீடு புலிகளை சர்வதேசம் ஓரங்கட்ட வழி அமைத்துக் கொடுத்துவிட்டது.

இரண்டாவதாக, தேவசகாயம், சாம் ராஜப்பா போன்ற இந்திய தமிழர்கள் சிங்கள அதிகாரவர்க்கத்துடன் கலந்து பேசி ஒரு அமைதித் தீர்வை கொண்டுவர முயன்றனர். மணி ஷங்கர் ஐய்யர் மூலமாக அந்த தகவலைத் தெரிந்துகொண்ட சோனியா காந்தி நார்வேஅல்லது சர்வதேசம் அங்கீகரித்த மத்தியஸ்த அமைப்புகளுடன் தான் இலங்கை பிரச்னையைப் பேசித் தீர்க்க வேண்டும். தனி நபர் முயற்சிகளை ஊக்குவிக்ககூடாது என்று சொல்லி இலங்கையை அந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்க வைத்துவிட்டார்.

இந்த இரண்டு செயல்களைச் செய்ததன் மூலம் இந்திய அரசு, இலங்கை அரசை ராணுவத் தீர்வை நோக்கித் தள்ளிவிட்டது. அந்தவகையில் அதன் பின் நடந்த போருக்கும் மனிதப் படுகொலைக்கும் இந்தியாவே காரணம் என்று சொல்கிறார்.

நாம் தமிழர் இயக்கத்தின் களமாடும் போராளி சீமான் என்றால் அந்த இயக்கத்துக்கு அறிவு சார்ந்த வழிகாட்டுதலை வழங்கியவர் கா.அய்யநாதன். வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் ஜனதா தளத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கிய அய்யநாதன் கட்சிப் பணியாளராகவும், பத்திரிகையாளராகவும், களப் போராளியாகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருப்பவர். குறிப்பாக 2002 காலகட்டத்தில் இருந்து 2009  மே 17-ல் துப்பாக்கிகள் மவுனிக்கப்பட்ட காலம் வரையில் ஈழ அரசியலின் அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ச்சியாக நெருக்கமாகக் கவனித்து வந்தவர்.  அவரால் கூட இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் துரோகமாக இப்படி பலவீனமான காரணங்களைத்தான் சொல்ல முடியும் என்றால், இந்தியா இலங்கைப் பிரச்னை விஷயத்தில் சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறது என்பதே உறுதிப்படுகிறது. அப்படியாக, இந்திய தேசியத்தின் மீது குற்றம்சாட்டும் நோக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் இந்திய தேசியத்தை இந்தப் பிரச்னையில் இருந்து விடுவிக்கவே செய்கிறது.

முதலாவது குற்றச்சாட்டை எடுத்துக் கொள்வோம்.

அந்தக் கொடை மாநாடு 2003-ல் வாஷிங்டனில் நடைபெற்றது. அதை அங்கு நடத்தத் தீர்மானித்தது இலங்கை அரசு. இலங்கையைப் புனரமைக்கத் தேவையான நிதியை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்குத் தரத் தீர்மானித்திருந்தன. புலிகள் தரப்பு தாமும் ஒரு தனி தேசத்தின் தலைவர்கள் என்றும் தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் என்றும் சொல்லி அந்தக் கூட்டத்தில் பங்குபெற முயற்சி செய்தது. அந்தக் கூட்டத்தில் புலிகள் தரப்பு பங்கெடுத்தால், அவர்கள் தனியான தேசத்தின் தலைவர்கள் என்ற அவர்களுடைய நிலைப்பாட்டை அங்கீகரித்ததாக ஆகிவிடும். எனவே, இலங்கை அதை ஒருபோதும் விரும்பாது. மேலும் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா அப்போது தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் வைத்திருந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் தமது நாட்டில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள விசா தர இடமில்லை என்று அமெரிக்கா சொன்னது. இதுதான் அந்தக் கூட்டத்தில் புலிகள் தரப்பு பங்கெடுக்க முடியாமல் போனதற்கான உண்மைக் காரணம்.

செப் 11 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் தலைமையிலான உலக நாடுகள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை சந்தேகக் கண் கொண்டே பார்க்கத் தொடங்கியிருந்தன. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தன. இலங்கை அரசுக்கு புலிகளை தீவிரவாத அமைப்பு என்று நிறுவுவது அப்படியொன்றும் கடினமான பணி அல்ல. அந்நிய மண்ணில் நடந்த ராஜிவ் கொலையில் ஆரம்பித்து இலங்கையிலேயே கொல்லப்பட்ட சிங்களத் தலைவர்கள், அப்பாவி சிங்களர்கள், சிங்கள ராணுவத்தினர், கூண்டோடு வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள், மசூதியில் தொழுகையின் போது கொல்லப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்ட சக தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் என நீண்ட பட்டியல் புலிகளின் மார்பில் பதக்கங்களாக மின்னிக் கொண்டுதான் இருந்தன (இறுதிப் போரில் மக்களையே கேடயமாகப் பிடித்துக் கொண்டது, சிறுவர்களைப் போர்க்களத்தில் நிறுத்தியது, ராணுவத்தின் பக்கம் போக விரும்பிய மக்களை ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது என்பதற்கெல்லாம்கூட வலுவான ஆதாரங்கள் எத்தனையோ உண்டு).

இது மட்டுமல்லாமல் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தனி நீதி மன்றம் அமைத்து தாங்கள் துரோகிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் கருதுபவர்களுக்கு மரண தண்டனையும் சகஜமாக நிறைவேற்றித்தான் வந்தனர். இப்படியான நடவடிக்கைகளை புலிகள் உடனே நிறுத்தவேண்டும் என்று சொல்லித்தான் அமெரிக்கா அந்த வாஷிங்டன் மாநாட்டில் புலிகள் பங்கெடுக்க அனுமதி மறுத்தது. அமெரிக்க தரப்பில் சொல்லப்பட்ட இந்தக் காரணத்தை ஆசிரியர் சுட்டிக்காட்டவும் செய்திருக்கிறார். இருந்தும் இந்தியா பங்கேற்றதாலும் புலிகளைப் பங்கேற்க விடக்கூடாது என்று ரகசியமாக அமெரிக்காவுக்கு நிபந்தனை விதித்ததாலும்தான் புலிகள் ஓரங்கட்டப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்.

புலிகள் அமைப்பு கூட இந்தக் கூட்டத்தில் பங்கெடுக்க முடியாமல் போனதற்கு அந்தக் கூட்டத்தைத் திட்டமிட்டு அமெரிக்காவில் நடத்தச் சொன்ன இலங்கை அரசும் மத்தியஸ்தம் பேசிய நார்வேயின் பிரதிநிதியும்தான் காரணம் என்றுதான் வெளிப்படையாகப் பழித்திருந்தது. அமெரிக்காவைக் கூட எதுவும் சொல்லியிருக்கவில்லை. ஆனால், அய்யநாதன் புதிதாக புலிகளுக்கே தெரிந்திராத ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து இந்த நூலில் முதல் முறையாகச் சொல்லியிருக்கிறார்!

அடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த சாம் ராஜப்பா, தேவ சகாயம் என்ற ஊர் பேர் தெரியாதவர்கள் ராஜபக்சேவுடனும் சிங்கள அதிகார வர்க்கத்துடனும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்களாம். அதில் புலிகள் பிரிவினைவாதக் கோரிக்கையை விட்டுக் கொடுத்ததாகவும்இறையாண்மை மிகுந்த ஒற்றை இலங்கைக்குள் கூடுதல் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஈழ அரசு அமைக்க இலங்கை அரசு முன்வந்ததாகவும் சோனியா காந்தியின் அரசு அதிகாரபூர்வமற்றவர்களுடன்  ஏன் பேசுகிறீர்கள் என்று சொல்லி அந்தப் பேச்சுவார்த்தையை முடக்கிவிட்டது என்றும் சொல்கிறார். இது ஒரு வேடிக்கையான காரணம்.

ராஜபக்சே இந்த இந்திய தமிழர்களின் குழுவைச் சந்தித்துப் பேசியது உண்மைதான். ஆனால், அவர் மிகத் தெளிவாக, புலிகளை அழித்தொழித்த பிறகுதான் அரசியல் பேச்சுவார்த்தையே நடக்க முடியும்; அவர்கள் இருக்கும் வரையில் ராணுவத்தீர்வுதான் ஒரே வழி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டுத்தான் இந்தக் குழுவினரின் கோரிக்கைகளைக் கேட்கவே முன்வந்திருக்கிறார். இதை சாம் ராஜப்பாவும், தேவசகாயமும் ஏற்றுக் கொள்கிறார்களா?

மேலும் தனி நாடு கோரிக்கையை புலிகள் விட்டுக் கொடுத்ததாக சாம் ராஜப்பாவும் தேவ சகாயமும் சொல்கிறார்கள். ஆண்டன் பாலசிங்கமோ நடேசனோ அதைச் சொல்லவில்லை. புலிகள் சர்வ தேச அளவில் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தபோது ஆரம்பம் முதல் கடைசி வரையும் தங்களைத் தனி இனமாகவும் தனி நாடாகவும்தான் பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டிருந்தார்கள். போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்ட 2002-ல் ஈழத்தில் புலிகளின் ராஜ்ஜியம்தான் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் அதை எங்கும் எதிலும் விட்டுக் கொடுத்திருக்கவே இல்லை. அதுபோல் இலங்கையும் ஒற்றை ஆட்சி என்ற கொள்கையை எங்கும் விட்டுக் கொடுத்திருக்கவில்லை. தமிழர் மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவது தொடர்பாகப் பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகத்தான் இந்தக் குழுவிடமும் ராஜபக்சே சொல்லியிருக்கிறார். அப்படியாக புலிகளும் இலங்கை அரசும் தமது நிலைப்பாட்டில் எந்தப் பெரிய மாற்றத்தையும் கொண்டுவரத் தயாராக இல்லாத நிலையில் இந்த அதிகாரபூர்வமற்றவர்களின் பேச்சுவார்த்தையினால் என்ன மாற்றம் வந்திருக்கக்கூடும்?அந்தப் பேச்சுவார்த்தை உண்மையில் போகாத ஊருக்கு வழி காட்டும் கதைதான்.

அதோடு நார்வே பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்து வந்தது. அந்தப் பேச்சுவார்த்தை லேசாகச் சுணங்கியிருந்தது. புதிதாக சர்வ தேசியத்தின் சார்பில் வேறு ஏதேனும் மாற்று அமைப்பு உருவாக்கப்படாதவரையில் நார்வேமூலமான பேச்சுவார்த்தைதான் ஏதேனும் தீர்வைத் தந்திருக்க முடியும். அப்படியாக, அதிகாரபூர்வமற்ற நபர்களுடனான பேச்சுவார்த்தையை இந்திய அரசு ஊக்குவிக்காததில் எந்தக் குறையும் இருக்கமுடியாது. அறிவிஜீவிப் போராளிகளிடம் நகைச்சுவை உணர்வு இருக்கலாம். ஆனால், அவர்களுடைய கோட்பாடுகள் நகைப்பிற்கிடமானவையாக இருக்கக்கூடாது.

இறுதிப் போர் தீவிரமாக நடக்கத் தொடங்கிய நேரத்தில் அமெரிக்க பிரதிநிதி ஒருவர் ஐ.நா.விடம் இதுபற்றிப் பேசிப் பார்க்கலாமா என்று இந்திய வெளியுறவு அதிகாரி ஒருவரிடம் விருந்து ஒன்றில் கேட்டாராம். அதற்கு அந்த இந்தியப் பிரதிநிதி ஐ.நா.விடம் பேசிப் பலனில்லை. நேரடியாக இலங்கை அரசிடம் பேசுங்கள் என்று ஆலோசனை சொன்னாராம். இது நியாயமான விஷயம்தானே. ஆனால் ஆசிரியருக்கு இது திட்டமிட்ட சதியாகப்பட்டிருக்கிறது. அதாவது ஐ.நா.விடம் சொல்லியிருந்தால் அவர்கள் போரை நிறுத்தியிருப்பார்களாம். இந்தியா அதைத் தடுத்துவிட்டதாம்.

இந்திய அதிகார வர்க்கத்தில் குறிப்பாக அயல் உறவுத்துறையில் இருந்த மலையாளிகள்தான் புலிகள் தொடர்பான இந்தியப் பார்வையைத் தீர்மானித்தவர்கள் என்கிறார் ஆசிரியர். அவர்களுக்குப் புலிகள் மேல் இவ்வளவு கோபம் வந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக எதைச் சொல்கிறார் தெரியுமா..? ஒரு மலையாள அதிகாரிக்கு அமெரிக்க தூதரகத்தில் ஒரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பு இருந்ததாம். அதை புலிகள் இந்திய உளவுத்துறைக்குத் தெரிவித்து அவருக்குத்தண்டனை வாங்கித் தந்தார்களாம். அதனால் மலையாள அதிகாரவர்க்கம் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாம்.

தமிழகத்தில் இறுதிப் போர் தொடர்பாக எழுந்த எதிர்ப்புணர்வைப் பார்த்து கருணாநிதி தன் பங்குக்கு உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், 2-ஜி வழக்கைக் காட்டி மிரட்டி அவரைப் பின்வாங்க வைத்துவிட்டார்கள் என்கிறார் நூலாசிரியர். உண்மையில் புலிகள் திமுகவையும் கருணநிதியையும் ஆரம்பத்தில் இருந்தே விலக்கியே வைத்திருந்தனர். எம்.ஜி.ஆர். மீதான நட்பு, வைகோவைக் கொம்பு சீவிவிட்டது என புலிகள் திமுகவை எதிர்த்தே அனைத்தையும் செய்தன. இருந்தும் தமிழர் நலனில் இயல்பாகவே அக்கறை கொண்ட கருணாநிதி அவரால் முடிந்த அனைத்தையும் செய்துதான் வந்திருக்கிறார்.

தனி நாடு கோரிக்கையை முன்வைத்த அவர் மைய நீரோட்டத்தில் கலந்து தமிழகத்துக்கு இந்தியாவின் பிற மாநிலங்களைவிட அதிக அளவில் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார். கூட்டாட்சிக்குள் சுய ஆட்சி என்பதுதான் தி.மு.க.வின் கொள்கையாக ஆகிவிட்டிருக்கிறது. எனவே, தனி நாடு என்ற கோரிக்கையை அவர்கள் அனுபவபூர்வமாக எதிர்க்கவே செய்கிறார்கள். புலிகளுக்கும் அவர்களுடைய வன்முறைப் போருக்கும் தி.மு.க. ஆதரவு தராததை இந்தக் கோணத்தில்தான் பார்க்கவேண்டும். ஆனால், அவரையும் தமிழின விரோதியாகச் சித்திரிப்பதே புலி ஆதரவாளர்களின் செயல்திட்டமாக இருக்கிறது. உண்மையில் 2-ஜியைக் காட்டி மிரட்டியிருந்தால் தமிழினத் தலைவராக வேடம் போட்டுக்கொண்டு தப்பிக்கத்தான் பார்த்திருப்பார்.

இதுபோன்ற பலவீனமான காரணங்களே நூல் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

ராஜிவ் காந்தியும் சில அப்பாவி தமிழர்களும் படு கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, இந்திய மண்ணில் ஈழ இயக்கங்களின் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கத் தொடங்கிய பிறகு, இந்திய விமான நிலையத்தில் ஈழ இயக்கங்களின் வெடிகுண்டுகள் வெடிக்கத்தொடங்கிய பிறகுதான் இந்தியா புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தது என்பது வரலாறு. அதிலும் இந்தியாவில் இருக்கும் மத்திய மாநில ஆட்சி போல் ஒரு அரசியல் பகிர்வுக்கு ஒப்புக்கொள்ளும்படியாக புலிகள் தரப்பை இந்தியா கேட்டுக்கொண்டிருந்தது. சில ஈழ இயக்கங்கள் அதற்கு சம்மதமும் தெரிவித்தன. மலையகத் தமிழர்கள், இஸ்லாமிதத் தமிழர்கள், கொழும்பு போன்ற சிங்களப் பகுதிகளில் வசித்த தமிழர்கள், ஏன் யாழில் கூட பல தமிழர்கள் கூட்டாட்சிக்கு ஆதரவாகவே இருந்தனர். ஆனால், புலிகள் மட்டுமே தனி நாடு ஒன்றே தீர்வு என்று பிடிவாதமாக நின்றனர். பெரும்பாலான ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்ததற்கான காரணங்களில் ஒன்று புலிகளின் இந்தப் பிடிவாதமே. சக தமிழ் இயக்கத்தினரை கொன்றொழித்து புலிகள் மட்டுமே ஒரே மீட்பர்கள் என்று ஆக்கினார்கள். ஆனால், அந்த தமிழ் இயக்கத்தினர் எல்லாம் இந்திய அரசுடன் சேர்ந்துகொண்டு புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் செய்ததாதால் தான் கொல்லப்பட்டார்கள் என்று புதிய கதையை உலவவிடுகிறார்கள் புலிகளின் ஆதரவாளர்கள். அப்படியாகத் தனி நாடு என்ற தங்களுடைய கோரிக்கையை ஏற்காதவர்களை எல்லாம் துரோகிகள் என்று முத்திரை குத்தியதுதான் புலிகள் இயக்கத்தின் மிகப் பெரிய தவறு. கருணாநிதி கூட சகோதர யுத்தமே ஈழ விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று சொன்னது இதைத்தான்.

அதிலும் ஈழமும் தமிழகமும் அருகருகே இருக்கின்றன… இலங்கையில் ஈழத்தைப் பிரித்து தனி நாடாக அமைக்க உதவினால், நாளை அந்தத் தமிழர்களும் தாயகத்துத் தமிழர்களும் சேர்ந்து இந்தியாவை உடைத்து தனித் தமிழ் நாடு ஒன்றை உருவாக முனையக்கூடும். எனவே, இலங்கையில் புலிகளின் கை ஓங்குவதை இந்தியா எந்த நிலையிலும் அனுமதிக்கவே முடியாது. அதிலும் புலிகள் வன்முறையைத் தேர்ந்தெடுத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவுவது என்பது பாம்புக்குப் பால் வார்ப்பதைப் போன்றதுதான். எனவேதான் இந்தியா ஆரம்பம் முதலே கூட்டாட்சிக்குள் சுய ஆட்சி… ஈழ மக்களுக்கு ஆதரவு… புலிகளுக்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தது. புலிகள்தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்று சொல்லும் நபர்கள்தான் புலிகள் மீதான எதிர்ப்பை ஈழத் தமிழர்கள் மீதான எதிர்ப்பாகத் திரித்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய அரசு இலங்கைக்கு புலிகளின் தீவிரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் மட்டுமே உதவி செய்தது. புலிகள் ஈழ மக்களைக் கேடயமாகப் பிடித்துக் கொண்டதால், புலிகள் மீதான தாக்குதல்களில் அப்பாவிகளும் கொல்லப்பட்டுவிட்டனர்.

சில பகுதிகளை பாதுகாப்பு வளையம் என்று அடையாளப்படுத்துகிறோம். அந்தப் பகுதிக்குள் ராணுவம் தாக்குதல் நடத்தாது… அதற்கு வெளியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள். இதுதான் இறுதி யுத்தத்தில் சிங்கள அரசின் கறாரான அறிவிப்பு. ஆனால், என்ன நடந்தது… புலிகள் வீரத்துடன் வெளியில் இருந்து போராடுவதற்குப் பதிலாக பாதுகாப்பு வளையத்துக்குள் மக்களோடு மக்களாகப் பதுங்கிக்கொண்டு ராணுவத்தைத் தாக்கினார்கள்.ராணுவத்துக்கு வேறு வழியில்லாமல் போனது. அப்படியாக புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் மக்கள் சிக்கிக்கொண்டு மடிந்தனர். அந்தப் படுகொலைகளுக்கு சிங்கள அரசு எந்த அளவுக்குக் காரணமோ அதே அளவுக்கு புலிகளும் காரணமே. இந்தியாவும் சரி… சர்வ தேசியமும் சரி… இந்த விஷயத்தில் செய்வதற்கு ஒன்றுமே இருந்திருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் எதிர்ப்பு மன நிலை இருப்பதற்கு முக்கிய காரணமான ராஜிவ் படுகொலை தொடர்பாக நூலாசிரியர் துணிச்சலாக சில விஷயங்களை முன்வைக்கிறார். அந்தப் படுகொலையிலும் இந்திராகாந்தியின் கொலையிலும் சோனியா காந்திக்கு இருந்த தொடர்புகளைக் கேள்விக்குட்படுத்தும் நூலாசிரியர் இலங்கை முன்னெடுத்த இறுதிப் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவி செய்ததற்குத் தன் மீதான கொலைப் பழிகளை மறைக்க சோனியா முயன்றதுதான் காரணம் என்றும் சொல்கிறார். இந்தச் சதிக் கோட்பாடுகள் உண்மையென்றே வைத்துக் கொள்வோம். ராஜிவ் கொலையில் மாட்டிகொண்ட புலிகள் தரப்பு சோனியாவுக்கும் அந்தப் படுகொலையில் பங்கு உண்டு என்பதை அம்பலப்படுத்திவிடுவோம்; இலங்கை அரசுக்கு உதவாதீர்கள் என்று மிரட்டியிருக்க முடியுமே.. ஏன் அதைச் செய்யவில்லை? ஈழத் தமிழர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவை மிரட்டிப்பணிய வைக்கக் கிடைத்த வலுவான துருப்புச் சீட்டு அல்லவா..? அதை ஏன் பிரபாகரன் பயன்படுத்தவில்லை? அப்படி மிரட்டியிருந்தால் இந்தியா அமைதித் தீர்வுக்கு முன் முயற்சி எடுத்திருக்கும் அல்லவா?

ராஜபக்சே பதவி ஏற்றதுமே இந்தியாவுக்கு வருகிறார். அதன் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்று ஏராளமான ஆயுதங்களை வாங்கிக் கொள்கிறார். இது சரித்திர நிகழ்வு. இதை நூலாசிரியர் எப்படிப் பார்க்கிறார் என்றால், ராஜபக்சே இந்திய அரசைச் சந்தித்து தன்னுடைய ராணுவத் தீர்வுக்கு அனுமதி கேட்கிறார். இந்தியா ஆசி வழங்குகிறது. அதன் பிறகே உலக நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை வாரி வழங்கினஎன்கிறார். அது முற்றிலும் தவறான அரசியல் பர்வை.

பாகிஸ்தான் மட்டுமல்லாமல் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, ஈரான், ஈராக் என பல நாடுகள் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியிருக்கின்றன. ஒவ்வொரு நாடுமே ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் இலங்கைக்கு உதவி செய்திருக்கின்றன. இலங்கையின் பூகோள முக்கியத்துவம் அப்படியானது.

அமெரிக்காவுக்கு இந்தியப் பெருங்கடலில் ஒரு கடற்படைத் தளம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. இலங்கை அதற்கான பொருத்தமான இடம். அமெரிக்காவுக்கு இந்திய சந்தை தேவைதான் என்றாலும் அதைப் பிடிக்க உலக வங்கிப் பணியாளரான மன்மோகன் சிங்கை நாட்டின் பிரதமராக ஆக்கிவிட்டிருந்தார்கள். எனவே இந்திய சந்தைக்காக இந்தியா சொல்லியதைக் கேட்டுத்தான் இலங்கைக்கு உதவ வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு இல்லை. அது ஏற்கெனவே அவர்கள் கைப்பிடிக்குள் வந்துவிட்டிருக்கிறது. இலங்கையின் ராணுவ முக்கியத்துவமே அமெரிக்கா இலங்கைக்கு உதவியதன் முக்கிய காரணம்.

சீனாவுக்கு இந்தியாவைத் தாக்க இலங்கை மிகவும் தோதான இடம். பாகிஸ்தானுக்கும் அப்படியே. இஸ்லாமியர்கள் மீது புலிகள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதால் ஈரான், ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவின. அந்தவகையில் இந்த நாடுகள் எல்லாம் ராணுவரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை அரசுக்குத்தான் இயல்பாகவே உதவுவார்கள். இது உலக அரசியலை மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவருக்குக்கூட எளிதில் புரியும் விஷயமே. அப்படியான நிலையில் இந்தியாதான் உலக நாடுகளை இலங்கைக்கு ஆதரவாகத் திருப்பியது என்பது மிகையான, பொய்யான குற்றச்சாட்டே. உண்மையில் இலங்கைதான் தனது பூகோள முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு உலக நாடுகளைத் தனக்கு ஆதரவாக அணி திரட்டியது. உண்மையில் இலங்கையின் இந்த சாதக அம்சங்களை புலிகள் உணர்ந்துதான் இருந்தனர். அவர்கள் இறுதி யுத்தத்தின்போது வேறு ஒரு வியூகம் வகுத்திருந்தனர். அது மிகவும் அருமையான திட்டமும் கூட. ஆனால், வலை விரித்த வேடனே வலையில் சிக்கியதுபோல் ஆகிவிட்டது.

பிரபாகரன் இறுதி யுத்தத்தில் தடுப்பு ஆட்டம் மட்டுமே ஆடினார். ராணுவத்தை முன்னேறிச் சென்று தாக்கி விரட்ட முயற்சி செய்யவில்லை. ராணுவம் மெள்ள் மெள்ள தமிழ் பகுதிகளுக்குள் நுழைய நுழைய மக்களோடு மக்களாக அவரும் புலிகளும் பின்வாங்கினார்கள். மக்களைக் கேடயமாகப் பிடித்து நடத்திய போரில் கொல்லப்பட்டவர்களை இணையத்தின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்றார்கள்.

உலகம் முழுவதும் தீவிரவாத இயக்கம் என்று தமது இயக்கம் முத்திரை குத்தப்பட்டிருப்பதை மாற்ற வேண்டுமென்றால் சிங்கள ராணுவத்தின் கோர முகம் உலகுக்கு அம்பலப்பட்டாகவேண்டும். ராணுவத்தின் வன்முறைக் காட்டி தமது வன்முறையை நியாயப்படுத்திக் கொள்ளவேண்டும். கடைசியாக முள்ளிவாய்க்காலில் இருந்து கப்பல் வழியாகத் தப்பித்துவிடவேண்டும். ராணுவத்தின் படுகொலைகளைப் பார்த்து சர்வ தேசம் புலிகள் பக்கம் சாயும். அதை வைத்து தனி நாடு ஒன்றே தீர்வு என்ற இலக்கை அடைந்துவிடவேண்டும் என்பதே பிரபாகரன் இறுதிப் போரின் போது வகுத்த திட்டம். அதனால்தான் அவருடைய ஆதரவாளர்களில் பலர் அவர் ராணுவத்தின் கையில் சிக்கவில்லை. வியூகத்தை ஊடறுத்துக் கொண்டு கடல் வழியாகத் தப்பிவிட்டார் என்று உறுதியாகச் சொல்லிவந்தார்கள்(இன்றும் கூட அதை நம்புபவர்கள் உண்டு). ராணுவத்தை வன்முறையாளனாகச் சித்திரிக்கவேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியது. ஆனால், திட்டமிட்டபடி அவரால் முள்ளிவாய்க்கால் வழியாகத் தப்பிக்க மட்டும் முடிந்திருக்கவில்லை. இந்த இடத்தில்தான் அவரை அப்படியாகக் காப்பாற்றுவதாக வாக்களித்த நபர்கள் குறுக்குச் சால் ஓட்டி அவரை இலங்கை ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

வைகோ, சீமான் போன்ற ஈழத் தமிழ் ஆதரவாளர்களிடம் காணப்படும் இந்திய வெறுப்பை வைத்துப் பார்க்கும்போது அந்த துரோகம் அல்லது சாணக்கிய தந்திரத்தை மேற்கொண்டது இந்தியாவாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. அல்லது இந்தியாவை வலையில் விழவைக்க சர்வ தேசம் நடத்திய சதியோ என்ற சந்தேகமும் வருகிறது. உண்மையில் முள்ளிவாய்க்கால் ஸ்கெட்ச் பிரபாகரனுக்குப் போடப்பட்டதா.. இந்தியாவுக்குப் போடப்பட்டதா..? தெரியவில்லை.

எது எப்படியானாலும் நாம் தமிழர் இயக்கத்தின் பிரதான ஊடகத் தொடர்பாளரான கா.அய்யநாதனாலேயே இந்திய அரசின் மீது இப்படியான வலுவற்ற குற்றச்சாட்டுகளைத்தான் வைக்க முடியுமென்றால், இந்தியா இந்தப் போரில் நியாயமாகவே நடந்துகொண்டிருக்கிறது என்பதே உறுதிப்படுகிறது. அந்தவகையில் இந்திய அரசு புலிகள் விஷயத்தில் செய்தது சரிதான். ஆனால், ஈழத்தமிழர் விஷயத்தில் அது செய்தது தவறு. இந்திய அரசு புலிகளை மட்டும் கட்டம் கட்டி அழிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பை முன்பு கோட்டைவிட்டுவிட்டது. அமைதிப்படை இலங்கைக்குச் சென்ற அன்று மட்டும் அதைத் துணிந்து செய்திருந்தால் இலங்கையில் இவ்வளவு கண்ணீரும் ரத்தமும் பெருக்கெடுத்திருக்காது. இலங்கையின் பிரதான மாகாணமாக வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழம் எவ்வளவோ மேலானநிலையில் இருந்திருக்கும். பங்களாதேஷைத் தனி நாடாகப் பிரித்துக் கொடுத்ததில் எவ்வளவு உயர்வான பணியை இந்தியா செய்ததோ அதற்கு இணையான பெருமையை இந்தியா இலங்கையிலும் பெற்றிருக்கவேண்டும். அதைச் செய்யாதுபோனதால், ஓர் இந்தியனாக, ஒரு தமிழனாக இந்திய தேசியத்தின் மீது எனக்கு வருத்தமே. இந்தியா மட்டுமே தனியாக அதைச் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது என்றாலும் இந்தியா நிச்சயம் அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக எடுத்திருக்கவேண்டும்.

http://malaigal.com/?p=7384

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரபாகரன் இறுதி யுத்தத்தில் தடுப்பு ஆட்டம் மட்டுமே ஆடினார். ராணுவத்தை முன்னேறிச் சென்று தாக்கி விரட்ட முயற்சி செய்யவில்லை. ராணுவம் மெள்ள் மெள்ள தமிழ் பகுதிகளுக்குள் நுழைய நுழைய மக்களோடு மக்களாக அவரும் புலிகளும் பின்வாங்கினார்கள். மக்களைக் கேடயமாகப் பிடித்து நடத்திய போரில் கொல்லப்பட்டவர்களை இணையத்தின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்றார்கள்.

உலகம் முழுவதும் தீவிரவாத இயக்கம் என்று தமது இயக்கம் முத்திரை குத்தப்பட்டிருப்பதை மாற்ற வேண்டுமென்றால் சிங்கள ராணுவத்தின் கோர முகம் உலகுக்கு அம்பலப்பட்டாகவேண்டும். ராணுவத்தின் வன்முறைக் காட்டி தமது வன்முறையை நியாயப்படுத்திக் கொள்ளவேண்டும். கடைசியாக முள்ளிவாய்க்காலில் இருந்து கப்பல் வழியாகத் தப்பித்துவிடவேண்டும். ராணுவத்தின் படுகொலைகளைப் பார்த்து சர்வ தேசம் புலிகள் பக்கம் சாயும். அதை வைத்து தனி நாடு ஒன்றே தீர்வு என்ற இலக்கை அடைந்துவிடவேண்டும் என்பதே பிரபாகரன் இறுதிப் போரின் போது வகுத்த திட்டம்.

இந்த இடத்தில்தான் அவரை அப்படியாகக் காப்பாற்றுவதாக வாக்களித்த நபர்கள் குறுக்குச் சால் ஓட்டி அவரை இலங்கை ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

உவர் எல்லாத்தையும் நேரா பார்த்தவர் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு நல்லாவே வக்காலத்து வாங்கியிருக்கிறார்..

  • கருத்துக்கள உறவுகள்

எவளவு உண்மைகளை கொட்டி இருக்கிறார் ....
யாழில் 4 பச்சை உடனேயே விழவேண்டும் 
இன்னும் விழவில்லை ......... 
இதுதான் தற்போதைய என்னுடைய கவலை. 

மக்கள் மரணங்கள் அதை நியாய படுத்த யாரோ ஒரு எமன் இருந்துகொண்டே இருப்பான்.
அமெரிக்காவின் தற்போதைய கவலையெல்லாம் ....
ஐ ஸ் ஐ ஸ் இற்கு எதிராக ரசியா நடத்தும் வான் தாக்குதலில் 
மொடரெட் பயங்கரவாதிகள் இறந்துவிடும் சாத்தியம் இருக்கிறதாம்.
(அவனும் ஜிஹாடிஸ் தத்துவமே பேசுகிறான். அல்லா ஒ அக்பர் என்றுதான் வெடிக்கிறான்) 

மூன்று வாரங்களாக அமெரிக்கா ஒரு புதிய நகர்வை தொடங்கி இருக்கு 
யாராவது கவனித்தீர்களா ?
ஐ ஸ் ஐ ஸ் இற்கு எதிராக போராடுகிறார்கள் என்பதனால் 
குர்திஸ் பி கே கே யினர் முதன்மையாக இருந்தார்கள் ....குர்திஸ் மக்களே பெரிய பாதிப்பை சந்தித்தவர்களும் கூட 
பெண்கள் பாலியல் கொடுமையால் துடிக்கின்றார்கள். 
இப்போ பேஷ் புக்  யூடுப் கூகிள் போன்றவை பி கே கே சர்பானவற்றை தூக்கி விட்டார்கள்.
குர்திஸ் மக்களின் அவலங்களை கூட எங்கும் யாரும் பதிய முடியவில்லை. 

புதிய காட்சி ஒன்று அறிமுகமாகி இருக்கிறது .....
இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் இடையே முறுகல் நிலை ஒன்றை இச்ரேல் திடமிட்டு செய்கிறது.
சிரியா செய்திகளை திசை திருப்ப ..... பாலஸ்தீனியம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும். 

தமது தோல்வியை ஒப்புகொள்ள முடியாத மேற்கு 
துருக்கி அரசை பாராட்டி குர்திஸ் மக்களை கொல்ல போவதோடு 
பாலஸ்தீனியர்கள் காஸா பகுதியில் மீண்டும் ஒரு கோரத்தை எதிர்கொள்ளலாம். 

இதை எல்லாம் நிஜாய படுத்த அரக்கர்களுக்கும்  பஞ்சமா உலகில் ?  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மகாதேவன் என்பவர் எப்பவுமே புலிகளுக்கும்,எமது போராட்டத்திற்கும் எதிராகத் தான் எழுதுபவர்...ஆனால் இந்த நூல் எவ்வள்ளவு தூரம் உண்மை பேசுமோ தெரியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவளவு உண்மைகளை கொட்டி இருக்கிறார் ....
யாழில் 4 பச்சை உடனேயே விழவேண்டும் 
இன்னும் விழவில்லை ......... 
இதுதான் தற்போதைய என்னுடைய கவலை. 

 

தமிழ்த்தேசியத்தில் பற்றுக்கொண்டவர் இணைத்ததால் பச்சை விழவில்லை!

 

ஈழம் அமையுமா? என்ற கேள்வியை விட அய்யநாதன் ”ஈழம் அமையும்" என்பதற்குச் சொல்லும் காரணங்கள் இந்த விமர்சனத்தை இணைக்கத் தூண்டியது.

இனி இறைவனின் கரம் தன் வேலையைத் தொடங்கும். ஈழத் தமிழர்களும் புலிகளும் சிந்திய கண்ணீரும் செந்நீரும் குறிப்பாக ஈழப் பெண்கள் அனுபவித்த வேதனைகள் ஒருபோதும் வீண் போகாது. இலங்கையையும் உள்ளடக்கிய ஒரு தமிழ் தேசமான ஈழம் நிச்சயம் அமையும் என்று ஆணித்தரமாக நம்புவதாக நூலை முடித்திருக்கிறார்

தமிழர்களின் இயலாமையை இதைவிட வேறு எப்படிக் குறிப்பிடமுடியும்?

பச்சையும் இல்லை பின்னூட்டமும் இல்லை காரணம் .அய்யானாதன் ஒரு புழுகு மூட்டை .இலங்கை தமிழரின் பணத்தில் உலகம் சுற்றும் சிலரில் இவரும் அடக்கம் .நெடுமாறனின் தம்பி என்று சொல்லலாம் .கனேடிய வானொலியில் பல வருடங்களாக அரசியல் விமர்சனம் செய்பவர் .புதிய தலைமுறை தொலைகாட்சியிலும் பல தடவைகள் பார்த்திருகின்றேன் .சிந்திய கண்ணீருக்கு எல்லாம் நாடு கிடைக்காது .தமிழ் சீரியல் பார்க்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கு சரியான ஆள் .

விமர்சகர் மகாதேவன் இந்திய விசுவாசி .அவர் விமர்சனம் இப்படித்தான் இருக்கும் .

தமிழ் நாட்டில் இருந்து ஆக்கபூர்வமான அரசியல் வராது நடிகர் சங்க அரசியல் தான் அவர்களுக்கு சரி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.