Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎24‎/‎2018 at 11:29 AM, குமாரசாமி said:

அது மிசின் செய்யுதெண்டு இஞ்சை கதைக்கினம்.  ?

மெஷின் வெட்டி ஓட்டுறது என்டால் ஒரு குறிப்பிட்ட் இணையத்தில் இருந்து மட்டும் தான் வெட்டி ஓட்டும் 
 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை இருதலை பாம்பு

விஷமுள்ள அரிய இரட்டை தலை பாம்பு ஒன்று வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆக்ரோஷமானது அல்ல. ஆனால் தலைகளை கொண்டு தாக்கக்கூடியது. இந்த இருதலை பாம்பு வனவிலங்கு மையத்தில் விடப்படும் என்று நம்பப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

மெஷின் வெட்டி ஓட்டுறது என்டால் ஒரு குறிப்பிட்ட் இணையத்தில் இருந்து மட்டும் தான் வெட்டி ஓட்டும் 
 

அப்ப.... என்ரை தங்கச்சிக்கு எல்லா விசயமும் தெரியும்.

  • தொடங்கியவர்
‘காதலை அகௌரவப்படுத்தலாகாது’
 

image_879fef08f2.jpgபூங்கா ஒன்றில் காதல் ஜோடி, மிக அந்நியோன்னியமாக காதல்மொழி பகிர்ந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு யுவதி அங்கே வந்தாள். இவர்களைப் பார்த்தவள், அதிர்ச்சியடைந்தாள். “ஏன்டா, நீ இன்னமும் திருந்தவேயில்லையா” என்றவள், கோபாவேசத்துடன் முறைத்தபடி, நடக்க ஆரம்பித்தாள்.

அவள் போனவுடன் “அட, இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கிறதா? நீ என்ன மனுஷன்” என்றபடி, கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டு, அருகில் இருந்தவளும் நகர்ந்தாள்.

கன்னத்தைத் தடவியபடி, மிகவும் பரிதாபமாக அவன் நிற்க, அங்கு வந்த இன்னொரு யுவதி, “என்னடா, உன்னைக் காணுவதே அரிதாக இருக்கிறது. எங்கே போனாய்” என்று கேட்க, உடனே அவனும் தனது பாணியில், “அடி, உன்னை மறப்பேனா, பரீட்சைக்குப் படித்துவிட்டு இன்றுதான் வருகிறேன்” என்றான்.

“சரி சரி, வா மச்சான்” என்றபடி, அவன் இடையில் தனது கரத்தை இணைத்து நடக்க, இருவரின் பொழுதுபோக்கு ஆரம்பமானது.

தெருவில் காதல் மயக்கத்துடன் உலா வருபவர்கள் உண்மையான காதலர்கள் என்றா நீங்கள் எண்ணுகின்றீர்கள்? இளவயதில் அல்ல, முதுமையிலும் ஸ்திரமான காதலை எண்ணுபவர்கள் வீதியோரம் அலைந்து திரியமாட்டார்கள். களவியல் புதுமையல்ல;  அது கற்புடன் அமையவேண்டும். காதலை அகௌரவப்படுத்தலாகாது.

  • தொடங்கியவர்

20 வயதை நிறைவு செய்த கூகுள் ...ஸ்பெஷல் டூடுல்கள் ஒரு ரீவைண்ட்! #HBDGoogle

3274_thumb.jpg
 

'நானும் 90ஸ் கிட்தான் டா' என்பதை நினைவுபடுத்திக்கொண்டே டீன் ஏஜ்ஜை கடந்து 20வது வயதில் காலடி எடுத்து வைக்கிறது கூகுள்.

20 வயதை நிறைவு செய்த கூகுள் ...ஸ்பெஷல் டூடுல்கள் ஒரு ரீவைண்ட்! #HBDGoogle
 

'ஈட்... கூகுள்... ஸ்லீப்...' - இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் மாறிப்போயிருக்கிறது. அந்த அளவுக்குக் கூகுள் நம் வாழ்வோடு ஒன்றிப் போய்விட்டது. எந்த மொழியில், எந்தக் கேள்வி கேட்டாலும் அடுத்த நொடி அதை நமக்கு கற்றுத தரும் கூகுள், இன்று, 'நானும் 90ஸ் கிட்தான்டா' என்பதை நினைவுபடுத்திக்கொண்டே டீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறது. 1998, செப்டம்பர் 4-ம் தேதி இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், செப்டம்பர்  27-ம் தேதியைத்தான் பிறந்தநாளாக கொண்டாடுகிறது கூகுள். கூகுளின் சிறப்பான விஷயங்களில் முதலிடம் பிடிப்பது டூடுல்கள்தாம். பிரபலங்களின் பிறந்தநாள், வரலாற்றின் முக்கிய தினங்கள், பிரபல விளையாட்டுப் போட்டிகள் என அனைத்திற்கும் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் டூடுல் ஒன்றை வைத்துக் கௌரவிப்பது வழக்கம். இது எப்போது இருந்து தொடங்கியது?

கூகுள் டூடுல்

முதன்முதலில், 1998-ம் ஆண்டு கூகுள் ஹோம் பேஜ்ஜில் 'பர்னிங் மேன்' டூடுல் வைக்கப்பட்டது. கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் நொவாடா பாலைவனத்தில் நடைபெறும் 'பர்னிங் மேன் பெஸ்டிவல்' என்ற திருவிழாவில் கலந்து கொள்ள  விரும்பினார்கள். அந்த நேரத்தில் கூகுளின் சர்வர் கிராஷ் ஆகிவிட்டால், தாங்கள் அலுவலகத்தில் இல்லை, சர்வர்கள் கிராஷ் ஆனாலும் இப்போது சரி செய்ய இயலாது என்பதைக்  கூகுள் வாடிக்கையாளர்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று யோசித்தனர். அந்த யோசனையின் பலனாக வந்ததுதான் இந்த 'பர்னிங் மேன்' டூடுல். பர்னிங் மேன் லோகோவை  கூகுள் லோகோவில் உள்ள இரண்டாவது 'O' விற்குப் பின்னால் குறியீடாக வைத்து முதல் டூடுலை வடிவமைத்தனர். வாடிக்கையாளர்களும் இந்தக் குறியீட்டை புரிந்துகொண்டனர்.  அதன்பிறகு பல்வேறு டூடுல்களை உருவாக்கியது கூகுள் நிறுவனம், அவற்றுள் சிறப்பான சிலவற்றை இங்கே காணலாம்...

 

 

பேக்மேன், 2010

                 கூகுள் டூடுல்
இன்று பப்ஜி போன்ற வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டிருக்கும் 90-ஸ் கிட்ஸ்க்கு விதை போட்ட வீடியோ கேம்களில் முக்கியமான ஒன்று பேக்மேன் கேம். மே 21, 2010ம் ஆண்டு பேக்மேன்  கேமின் 30-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்த டூடுல் அமைக்கப்பட்டது.  'க்ளிக் டு ப்ளே' என்ற வாசகத்தோடு இடம்பெற்ற இந்த டூடுலுக்கு மிகப்பெரிய வரவேற்பை மக்கள் வெளிப்படுத்தினர். இது ஏரோ கீ-க்களைக் கொண்டு விளையாடுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பல நாள்கள் கழித்து பேக்மேன் விளையாட வைத்து தனது வாடிக்கையாளர்களுக்கு அதை நாஸ்டாலஜிக் மொமென்ட்டாக மாற்றியமைத்தது கூகுள். இதேபோல் ஸ்னேக் (Snake) கேம் டூடுலையும் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்லி சாப்ளின், 2011

ஏப்ரல் 16, 2011ம் ஆண்டு 'நகைச்சுவை உலகின் பிதாமகன்' சார்லி சாப்ளினின் 122-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் டூடுல் ஒன்றை வடிவமைத்தது கூகுள். அதுதான் கூகுளின் முதல் லைவ் டூடுல்.      

                                                

 

 

கையில் கூகுள் என்ற செய்தித்தாளுடன் சாப்ளின் இருக்கும் டூடுலில் ப்ளே பட்டன் ஒன்று இருந்தது. அந்த பட்டனை க்ளிக் செய்தவுடன் 2 நிமிட ப்ளாக் & ஒயிட் படம் ஒன்று ஓடும். நகைச்சுவை உலகில் புரட்சி செய்த சார்லி சாப்ளினுக்கு கூகுள் குறும்படம் வெளியிட்டு கௌரவித்தது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. லைவ் கூகுள் டூடுல்களுக்கு ஆரம்பமாக இருந்ததும் இந்த டூடுல்தான்.

பீத்தோவன், 2015 

கூகுள் டூடுல்

டிசம்பர் 17, 2015-ம் ஆண்டு இசையுலகின் மகாக் கலைஞன் பீத்தோவனின் 245-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான டூடுல் ஒன்றை வடிவமைத்தது கூகுள். பீத்தோவன், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் இசையின் அற்புதங்கள் ஆகியவற்றை சுமார் 5 நிமிடத்திற்கு இசையுடன் கூடிய இன்ட்ராக்டிவ் வீடியோவாக செதுக்கியிருந்தது கூகுள். ஆகஸ்ட் 22, 2013-ம் ஆண்டு Claude Debussy என்ற பிரெஞ்ச் இசைக் கலைஞனின் 151-வது பிறந்தநாளன்றும் இதேபோல ஒரு டூடுலை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

மை ஆஃப்ரோசென்ட்ரிக் லைஃப், 2016 (My afrocentric Life)

                கூகுள் டூடுல்

2009-ம் ஆண்டு முதல், 'டூடுல் 4 (ஃபார்) கூகுள்' என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு போட்டியை நடத்தி வருகிறது கூகுள். இதில் நன்றாக வரையப்பட்டுள்ள படங்களை கூகுள் நிறுவனம் டூடுல்களாக மாற்றிவருகிறது. ஆரம்பத்தில் அமெரிக்க பள்ளிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்ட இந்தப் போட்டி, பின்னர் உலகம் முழுவதுமுள்ள குழந்தைகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் போட்டியின் மூலம், 2016-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டதுதான் இந்த 'மை ஆஃப்ரோ சென்ட்ரிக் லைஃப்' டூடுல். 'ப்ளாக் லிவ் மேட்டர்ஸ் மூவ்மென்ட்' என்று சொல்லப்படும் கறுப்பின மக்கள் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி வரையப்பட்டது இது. அமெரிக்காவைச் சேர்ந்த அகிலா ஜான்சன் என்ற பள்ளி மாணவி, பென்சில், க்ரேயான்ஸ் மற்றும் மார்க்கர்கள் பயன்படுத்தி இரண்டு வாரங்களில் வரைந்ததுதான் இந்த டூடுல் புகைப்படம். இந்த டூடுலின் மூலம், சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியது மக்கள் மத்தியில் கூகுளுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

என்ஜாய் எவ்ரி மொமென்ட் ஆஃப் யுவர் லைஃப், 2016 (Enjoy Every Moment Of Your Life)

                               கூகுள் டூடுல்
இந்தியாவில், நடத்தப்பட்ட 'டூடுல் 4 கூகுள்' போட்டியில் தேர்வானதுதான் இந்த 'என்ஜாய் எவ்ரி மொமென்ட் ஆஃப் யுவர் லைஃப்' டூடுல். புனேவைச் சேர்ந்த 11 வயது மாணவி அன்விதா பிரசாந்த் (Anvita Prashant) என்பவர் இந்த டூடுலை வரைந்திருந்தார்.
இந்த டூடுலில் கூகுளின் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு குழந்தை, வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பது போன்று வரைந்திருந்தார். மரத்தில் படுத்திருப்பது போலவும், நீச்சல் அடிப்பது போலவும், பலூன் வைத்து விளையாடுவது போலவும் வரையப்பட்டிருந்த இந்த டூடுல், 'குழந்தைகள் தினமான' நவம்பர் 14, 2016 அன்று கூகுளின் ஹோம் பேஜ்ஜை அலங்கரித்தது.

சுதந்திர தினம், 2018

                   கூகுள் டூடுல்
இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தைக் கௌரவிக்கும் வகையில் வண்ணமயமான ஒரு டூடுலை வடிவமைத்திருந்தது கூகுள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த டூடுல் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் வைக்கப்பட்டது. இதில், இந்தியாவின் தேசிய பறவையான மயில், தேசிய விலங்கான புலி, தேசிய பழமான மாம்பழம், தேசிய மலரான தாமரை மற்றும் யானை ஒன்றும் இடம்பெற்றிருந்தன. டூடுலின் நடுவில் இரண்டு மயில்கள் இருக்க, இடதுபுறம் யானையும் வலதுபுறம் புலியும் நின்று டூடுலை அழகுபடுத்தின. டூடுலின் நடுவில் தாமரைகளும், மேல் பக்கம் வரிசையாக மாம்பழங்களும் இருந்தன. இந்த வண்ணங்கள் நிறைந்த டூடுல் இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்தது.  

கடந்த 20 வருடங்களில் 2000 டூடுல்களுக்கு மேல் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் இடம்பெற்றிருக்கின்றன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

1.23 பில்லியன் செலவில் தயாரான பாதணி

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி பாதணி தயாரிக்கப்பட்டுள்ளன. 

துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி பாதணி தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான பாதணியின்  சுமார் 1.23 பில்லியன்  மதிப்பிடப்பட்டுள்ளது.

 இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த  பாதணி என்ற பெருமை பெற்றுள்ளது. குறித்த பாதணியில்  நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன. அதற்கு 9 மாத காலம் ஆனது.

 

புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலில் இன்று இது அறிமுகப்படுத்தப்படுகிறது. 

https://www.ibctamil.com

  • தொடங்கியவர்

ஊர் சுற்றலாம் வாங்க!- இன்று உலக சுற்றுலா தினம்


 

 

world-tourism-day

 

 

ஆதி மனிதன் உணவுக்காகவும் தோதான உறைவிடத்துக்காகவும் ஒவ்வோர் இடமாக சுற்றித்திரிந்து பின்னர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் பொருந்திய ஓரிடத்தை தேர்வு செய்து அங்கே நாகரிகத்தை வளர்த்தான் அவனும் வளர்ந்தான்.

ஆதலால்.. பயணம் என்பது ஒவ்வொரு மனிதனின் மரபணுவிலுமே பொதிந்து கிடக்கிறது. அதன் பரினாம வளர்ச்சிதான் சுற்றுலா. இருக்குமிடத்தைவிட்டு ஓய்வுக்காகவோ இல்லை ஆன்மீகத் தேடலுக்காகவோ இல்லை ஆராய்ச்சிக்காகவோ நாம் வேறிடத்துக்கு செல்வதுதான் அகராதி சொல்லும் சுற்றுலாவுக்கான அர்த்தம்.

21-ம் நூற்றாண்டில் பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்கு இடையே யாருக்குத்தான் குறைந்தது 4 நாட்களாவது ஓய்வு எடுக்க சுற்றுலா செல்ல விருப்பம் இருக்காது.

தனி மனிதனின் வருமானம் பெருக பெருக இப்போதெல்லாம் கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் அண்டை நாடான இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமாவது செல்வது இயல்பாகிவிட்டது. ஐரோப்பியர்கள் சுற்றுலா செல்வதில் கை தேர்ந்தவர்கள். தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வெளிநாட்டு சுற்றுலாக்காகவே என சேர்த்து வைக்கும் பழக்கம் அவர்களுக்கு உண்டு. கண்டம் விட்டு கண்டம் சுற்றிப் பார்ப்பது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. அது வேறு ஒரு புதிய கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு. ஒரே உலகம் ஆனால், எத்தனை பாஷை எத்தனை உணவு எத்தனை எத்தனை பண்பாடுகள்.

அண்மையில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது. அது ஒரு தனியார் விமான நிறுவனத்தின் விளம்பரம். அதில் முதல் கேள்வியே Why do you love the world? உனக்கு ஏன் உலகத்தைப் பிடிக்கும்? அதற்கு பயணிகளாக வரும் பலரும் கூறும் பதிலகள் இந்தக் கட்டுரைக்கு மிகவும் பொருத்தமானது.

பதில் 1: அது மிகவும் தத்துவார்த்தமான கேள்வி

பதில் 2: அதை எப்படி விவரிக்க முடியும்

பதில் 3: உலகம் மிக அழகானது

பதில் 4: ஏனென்றால் அதில் அத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள். சேக்ஸ்பியரின் வார்த்தைகளைப் போன்றது..

பதில் 5: உலகை நீங்கள் சுற்றிப் பார்க்கும்போதுதான் உங்களது மனது திறக்கும். பரந்துபட்ட பார்வை கிடைக்கும்.

பதில் 6: உலகை சுற்றிப் பார்த்த பின்புதான் எனக்கு ஒரு புதிய நம்பிக்கை வந்திருக்கிறது. நான் எங்கிருந்தாலும் என்னை நானாகவே அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.

பதில் 7: இந்த உலகம் அற்புதமானது. நாம் அனைவரும் நம் தலைக்கு மீதான வானத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதில் 8: இந்த உலகம் மிகவும் பெரியது.

பதில் 9: இந்த உலகம் சிறியது

பதில் 10: இந்த உலகம் ஆச்சர்யங்களால் நிரம்பியது.

பதில் 11: உலகை சுற்றிப் பார்த்தால்தான் இந்த உலகம் உருண்டை என்பதே எனக்குத் தெரிகிறது.

பதில் 12:ஒவ்வொரு பகுதியிலிருக்கும் ஒவ்வொரு விதமான மக்கள் என்னை வசீகரிக்கின்றனர்

பதில் 13:மொத்த உலகமும் ஒரே குடும்பம்

பதில் 14: அப்படியே கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

பதில் 15: இந்த உலகில் அவ்வளவு அழகு இருக்கிறது. ஒரே ஒரு வாழ்க்கை அத்தனையையும் பார்க்க போதுமானதல்ல.

பதில் 16: எந்த மனிதனும் தனியாக இல்லை. உலகில் அத்தனை ஆயிரம் கலாச்சாரங்கள் இருக்கின்றன. அதில் நமது பங்கும் இருக்கிறது என்ற உணர்வைத் தருகிறது.

பதில் 17: நீங்கள் தனித்துவமானவர். உங்களைப் போல் யாருமில்லை. இதை நீங்கள் இந்த உலகைச் சுற்றிப் பார்க்கும்போது உலகு உங்களுக்கு உணர்த்தும்.

இந்த பதில்கள் ஓவ்வொன்றும் என்னைப் பொருத்தவரை ஒரு தத்துவம். மனிதன் ஏன் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு இதைவிட அழகாக தெளிவுரை கொடுக்க இயலாது.

சுற்றுலா வெறும் புத்துணர்ச்சிக்காக மட்டுமல்ல புதிய படிப்பினைகளுக்கானது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் உலகை விட்டு விண்வெளியை சுற்றிப்பார்க மக்கள் ஆயத்தமாகிவிட்டனர்.

அதனால்தானோ என்னவோ இந்த ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்துக்கான கருப்பொருள் "Tourism and the Digital Transformation" சுற்றுலாவும் தொழில்நுட்ப வளர்ச்சியும் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

உலா சுற்றுலா நாளின் வரலாறு:

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவோடு செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979-ல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்து சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன. 

1538024786.jpg

சுற்றுலா என்பது பொருளாதாரம்:

சுற்றுலாவை மேம்படுத்த எல்லா நாடுகளும் தனித் துறையை வைத்திருக்கின்றன. ஏனெனில் சுற்றுலா என்பது பொருளாதாரத்தை வளர்க்கக் கூடியது. ஆசிய நாடுகளான இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சுற்றுலா பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. 

1538024839.jpg

ஊர் சுற்றலாம்..
சுற்றுலா செல்வது அவசியம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் பள்ளிகளில் சிறு வயதில் ஆண்டு தேர்வு விடுமுறை விடும்போதெல்லாம் ஆசிரியர்கள், "விடுமுறை முடிந்து வரும்போது நீங்கள் சுற்றுலா சென்ற இடத்தைப் பற்றி கட்டுரை எழுதி வாருங்கள்" என்று சொல்வார்கள்.
இப்போதெல்லாம் பயணங்கள் கேட்ஜட்ஸ்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. ரயில் ஸ்நேகம் என்றொரு வார்த்தைக்கே இடமில்லாமல் போய்விட்டது. காரணம் பஸ், ரயில் என எதில் ஏறினாலும் யாரும் யாரையும் பார்ப்பதில்லை. பேசுவத்திலை. செல்போன், லேப்டாப், டேப் என ஏதாவது உபகரணத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அருகில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. இவ்வளவு ஏன் இறங்குமிடத்தைக் கூட தவறு விடச் செய்துவிடுகிறது இந்த உபகரணங்களின் ஆதிக்கம்.

1538024924.jpg

சுற்றுலா என்பது நீங்கள் வீட்டை விட்டு அந்தப் பயணத்துக்காக வாகனத்தில் ஏறுவதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. வழி நெடுகிலும் காணும் மக்கள், பார்க்கும் விவசாய நிலங்கள், கேட்கும் வார்த்தைகள் பேச்சுக்கள் எல்லாமே சுற்றுலாவின் ஓர் அங்கமே.சுற்றுலா செல்லும்போது கண்களையும், காதுகளையும், மனதையும் திறந்து வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

சுற்றுலா செல்ல மிக முக்கியமானது பணம். எனவே, வாழ்க்கையில் தேவைகள் குறையப் போவதில்லை ஆனால் அதற்கும் இடையில் சேமிக்கும் பழக்கம் அவசியம். சேமிக்கும் பணத்தில் சிறிய தொகையை சுற்றுலாவுக்காக பயன்படுத்துவது அதைவிட அவசியம்.

குயின் போல சுற்றலாம்..

இந்தியில் குயின் என்றொரு படம் வந்தது. கங்கனா ரனாவத் நடித்திருப்பார். நின்று போன திருமணத்தின் சோகத்தை மறக்க தனியாக ஹனிமூன் செல்வார். உலகம் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும். உள்ளத்துக்கு ஆறுதல் தரும். புதிய தேடல்கள் புதிய வழிகளைக் காட்டும். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. உலகம் பெண்களுக்கானதும்தான். பெண்களும் சுற்றுலா செல்கின்றனர். தனியாக செல்கின்றனர். 

1538024996.jpg

2007-ல் இலங்கையில் கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள்  "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன". இப்போது 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. பெண்களின் சுற்றுலாக்களும் பெருகிவிட்டன. சுற்றுலாவில் பாலின பேதம் வேண்டாம்.

ஒரு சினிமாப் பாடலில் வருவதுபோல் 'உலகம் அழகு கலைகளின் சுரங்கம்'. உலகைச் சுற்றுவோம். முடியாவிட்டால் நம்மூருக்கு அருகிலிருக்கும் இடங்களுக்காவது சுற்றுலா சென்று உடலுக்கு உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியைக் கொடுப்போம்.

 

https://www.kamadenu.in

  • தொடங்கியவர்

860 கிலோ ‘யானைப் பறவை’தான் உலகின் மிகப்பெரியது: ஆய்வாளர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது

 

 

 
varombi

யானைப் பறவை என்று சொல்லப்படும் வரோம்பி டைட்டான்.   -  படம்:ஏஎப்பி

உலகிலேயே மிகப்பெரிய பறவை எது ஆய்வாளர்கள் மத்தியில் நீண்ட விவாதம் எழுந்துவந்த நிலையில், மடகாஸ்கரில் வாழ்ந்த 860 கிலோ எடை கொண்ட யானைப் பறவைதான் உலகின் மிகப்பெரியது என்று தெரியவந்துள்ளது.

இதன் மூலம் ஆய்வாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக நீடித்து வந்த வாதம், ஆய்வுகள் முடிவுக்கு வந்துள்ளது.

 
 

உலகின் மிகப்பெரிய பறவையாக கருதப்படும் யானைப் பறவை வரோம்பி டைட்டான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இந்தப் பறவை வாழ்ந்திருக்கலாம், அங்கு மனிதர்கள் மெல்லக் குடியேறியபின் அந்தப் பறவை அழிவைச் சந்தித்து இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வரோம்பி டைட்டான் பறவையின் எலும்புகள், முட்டைகள், எச்சங்கள் ஆகியவற்றை கைப்பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தப் பறவையின் எடை ஏறக்குறைய 860 கிலோ இருந்திருக்கலாம், சராசரியாக 650 கிலோ எடை வரை இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதாவது ஒட்டச்சிவிங்கியின் உயரம் வரை இந்தப் பறவை இருந்திருக்கும், ஆனால், பறக்கும் சக்தி இந்தப் பறவைக்கு இருந்திருக்காது. இந்த யானைப் பறவையின் முட்டை, கோழி முட்டையைக் காட்டிலும், 160 மடங்கு பெரிதாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

தற்போது வாழ்ந்து வரும் நெருப்புக் கோழியைக் காட்டிலும் 20 மடங்கு பெரிதாக வரோம்பி டைட்டான் பறவை வாழ்ந்திருக்கலாம். இந்தப் பறவை 19-ம் நாற்றாண்டில் மடகாஸ்கர் தீவில் வாழ்ந்திருக்கலாம்,

bonesjpg

மடகாஸ்கர் பகுதியில் ஆய்வாளர்கள கண்டுபிடித்த யானைப் பறவையின் எலும்புகள்

 

இந்த யானைப் பறவை அப்யோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் 15 வகையான பறவைகள் இருந்த நிலையில் அதில் ஒருவகை வரோம்பி டைட்டான். இந்த பறவைக் குடும்பத்தில் மிகவும் பெரிதானது இந்த வரோம்பி டைட்டான் ஆகும். இந்த அப்யோர்னிதிடே வகைக் குடும்ப பறவைகள் மடகாஸ்கர் தீவில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம், இந்தப் பறவை இனம் அழிந்து ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வரோம்பி டைட்டான் பறவை குறித்த ஆய்வுகளை லண்டனில் உள்ள ஜுவாலிஜிக்கல் சொசைட்டியின் பேராசிரியர் ஜேம்ஸ் ஹேன்ஸ்போர்டு மேற்கொண்டார். இந்தப் பறவை குறித்த ஆய்வு அறிக்கை ராயல் சொசைட்டி ஓபன் சையின்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

இந்த வரோம்பி டைட்டான் பறவை குறித்து ஆய்வாளர் ஜேம்ஸ் ஹேஸ்போர்டு கூறுகையில், ‘‘17-ம் நூற்றாண்டில் இந்தப் பறவை மடகாஸ்கர் தீவில் வாழ்ந்திருக்கலாம். உலகிலேயே இதுதான் மிகப்பெரிய பறவை இனம் வரோம்பி டைட்டான் என்பது நாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இலைகள், காய்கறிகள், சிறு உயிரினங்கள், ஆகியவற்றைத் தின்று இந்த டைட்டான் வாழ்ந்திருக்கிறது.

மனிதர்களின் செயல்பாடுகள், வேட்டையாடுதல் இயற்கை சீற்றங்களால் டைட்டான் பறவை அழிவைச் சந்தித்தது. வரோம்பி டைட்டானின் எச்சம்தான் தற்போதுள்ள நெருப்புக்கோழி, வாத்து’’ இவ்வாறு ஹென்றி தெரிவித்தார்.

https://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

அனுஷ்கா  உடுத்தும் பனாரஸ் சில்க் புடவைகளின் பின்னிருக்கும் சமூக அக்கறை!

 

 
red_banaras

பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தும் அனுஷ்கா ஷர்மா!

anushka_banaraS_chanderi.jpg

பாலிவுட் பிரபல நடிகையும், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் ப்ரியதர்ஷினி குளோபல் அகாதெமி விருது விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அனுஷ்கா ஷர்மாவிற்கு ஸ்மிதா பட்டீல் விருது வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அமைச்சர் பியூஷ் கோயலிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார் அனுஷ்கா.

விழாவின் ஹைலைட் அனுஷ்கா விருது பெறுவது அல்ல. விருது பெற்றுக் கொள்வதற்காக அவர் அணிந்து வந்த புடவை தான். அன்றைய தினம் அடர் பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தினார் அனுஷ்கா. பச்சை நிற பனாரஸில் உடல் முழுவதும் தங்கப் பொட்டு சரிகை வேலைப்பாடுகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தன. பனாரஸ் நெசவே கொள்ளை அழகென்றால் இதில் பனாரஸ் நெசவுடன் சந்தேரி ஸ்டைலையும் கலந்திருந்தார்கள் நெசவாளர்கள். எனவே புடவை லைட் வெயிட்டுடன் கண்களுக்கு விருந்தானது. அழகான ராயல் பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவைக்குத் தோதாக கிளாஸிக் ஸ்டைலில் தலைமுடியை வகிடெடுத்துப் படிய வாரிக் கொண்டையிட்டு  பொருத்தமான ஒப்பனைகளும் பச்சை நிற பிந்தியுமாக அனுஷ்கா உள்ளம் கவர்ந்தார். அன்று அவரது ஒப்பனை மொத்தமும் புடவையின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவதாகவே இருந்தது. அழகான பச்சை நிற குந்தன் கற்கள் பதிக்கப்பட்ட கைவளைகள், கழுத்தை ஒட்டினாற் போல பச்சை நிறக் கற்கள் பதித்த சோக்கர் (நெக்லஸ்), புடவை கிராண்டாக இருப்பதால் காதுகளுக்கு ஒற்றை மரகதக்கல் தோடு என்று ஆடம்பரத்தில் எளிமை என அசத்தினர் அனுஷ்கா ஷர்மா.

green_banaras.jpg

விருது விழாவிற்கு மட்டுமில்லை. அனுஷ்கா, விராட் தம்பதியினர் இத்தாலியில் திருமணம் முடிந்து இந்தியாவில் தங்கள் மும்பை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளித்த ரிஷப்சனிலும் கூட அனுஷ்கா அழகான சிவப்பு நிற பனாரஸ் கைத்தறி சில்க் புடவையே உடுத்தி வந்து பாந்தமாக தரிசனம் தந்தார். முன்பெல்லாம் வட இந்திய ஸ்டைலில் வெஸ்டர்ன் உடைகளிலும், காக்ரா சோளி, லெஹங்காவிலும் மட்டுமே பார்க்க வாய்த்த அனுஷ்கா ஷர்மா தற்போது இந்தியப் பாரம்பரிய உடையான புடவைகளில் வலம் வருவது அவரது ரசிகர்களுக்கு இனிய சர்ப்ரைஸ். அதற்கேற்றார் போல அடுத்து வரவிருக்கும் அவரது புதிய திரைப்படமான ‘சுய் தாஹியின்’ தீம் மேட் இன் இந்தியா என்பதாகவே இருப்பதால் அதற்குப் பொருத்தமாக இப்போதெல்லாம் அடிக்கடி இந்திய கைத்தறிப் பட்டுப் புடவைகளை உடுத்திக் கொண்டு வலம் வரத் தொடங்கி இருக்கிறார் அனுஷ்கா.

http://www.dinamani.com/lifestyle

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அப்ப.... என்ரை தங்கச்சிக்கு எல்லா விசயமும் தெரியும்.

 

எனக்குத் தெரிஞ்சு நவீனன் என்னும் ஒரு உறவு வேலை மினக்கெட்டு செய்திகளை இணைக்கிறார்.அவ்வளவு தான் ?

  • தொடங்கியவர்
அறிவுடன் ஞானம் என்றுதான் அழிந்தது?
 

image_1312344358.jpgஓர் அறிஞரை மட்டுமல்ல, பல அறிஞர்களின் முகம் எதுவெனப் பலருக்கும் தெரியாது. அவர் ஊர், அவர் குடும்பம் எங்கே உள்ளது? எப்படி அவர் சிருஷ்டிகளை உற்பத்தி செய்தார் என்பதையே அறியாது, முகம் அறியாது, அவர் சொன்னவற்றை மட்டும் உள்வாங்கி இரசிக்கிறார்கள். 

அறிவாளிகள் தாம் இறந்த பின்னரும், பேசிய வண்ணம் இருக்கின்றனர். இந்த ஞான உற்பத்தி இயந்திரம் பழுதடைவதேயில்லை.பெருமையுடன் பேச மட்டும் அவர்கள் வாய் மௌனிக்கிறது. 

மெழுகென உருகித் தேய்ந்தாலும், அவள் தந்த ஒளி மட்டும், அணையாமல் இருப்பது விந்தையல்ல. 

காலம் என்றும் கரைவதில்லை. ஏனெனில், அது வாழ்வாங்கு வாழ்வோரைத் தொடர்ந்து உருவாக்குகின்றது.

எனவே, காலம் தீர்க்காயுசுதான். சுற்றிக் கொண்டே ஓடியபடி சடங்கள் தான் அழியும். அறிவுடன் ஞானம் என்றுதான் அழிந்தது? அது பலராலும் எமக்கு வழங்கப்பட்டதால்த்தான், இன்று சாதாரணமானவர்கள் கூட, உண்மை தேடும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் கூட அருவம்போல்த்தான் இயங்குகின்றார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.