Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியாரும் சொற்சிலம்பமும் சுய முரண்பாடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் மறுப்பு எழுதிய தூயவனால் மேற்கூறிய எனது எழுத்துக்களை மறுக்க முடியவில்லை. இதில்தான் எல்லா சூட்சுமங்களும் அடங்கியுள்ளது. தூயவனின் மறுப்புகள் கூட அப்பட்டமான பொய்களே

இந்தக் கருத்தினை மேற்கோளாக காட்டி பதில் அளிக்கததால், ஏதோ அதற்குப் பதில் அளிக்காமல் விட்டதாக சொல்லிக் கொள்கின்றார் சமணப்பெரியார் இளங்கோ. உண்மையில் இந்து மதத்தை அவதூற்றும் சொற்பிரயோகங்களைத் தவிர, வேறு ஏதும் இதி்ல் அர்த்தபுர்ஸ்டியான கருத்துக்கள் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும், தமிழ்தேசிய ஆதரவாளர்களால், தமிழ்தேசியம் என்ற பாதையில் ஏன் போகமுடியாமல் இருக்கின்றது என்பதையும், அதற்கு இந்திய அரசு பார்க்கும் சநதேகக் கண்ணோட்டத்தையும் மேலே சொல்லியிருந்தேன்.

நெடுமாறன் ஜயாவாகட்டும், சுபவிக்கு ஆகட்டும், இதே தான் பிரச்சனை. தனித்தமிழ்நாடு கேட்டுப் போராடியதாக கொளத்தூர் மணி பல தடவை சிறை சென்று வந்தது இதற்கு நல்ல உதாராணம். ஆக வேறு வழியில்லை. தமிழ்தேசியம் என்பது இந்தியா இறைமைக்கு பங்கம் ஏற்படாது என்று நம்பும்வரை திராவிடத்தை தூக்கிப் பிடிக்க வேண்டியிருக்கின்றது.

கபிலர் சைவத்தை வளர்க்கபாடுபட்டுக் கொண்டு அதை உமிழ்ந்தவர் என்று கதை விடுவது நல்ல வேடிக்கை. அவர்களின் பாடல்களில் முழுவதையும் சொல்லாமல், அது ஏன் பாடப்பட்டது என்பதையும் மறைத்துக் கொண்டு, வெறுமனே ஒற்றை வரியைப் பிடித்து, இது தான் அவர் சொன்னது என்று கதை எழுதாதீர்கள்.

முக்கியமாக ஆரியனுக்கு கூட தமிழ் கற்பித்து, அதன் பெருமையை எடுத்துறம்பியவர் கபிலர். அது தான் உண்மையான தமிழ்பற்று. ஆனால் இந்தக் கும்பல்கள் என்ன செய்தார்கள். தமிழனின் பெருமையை இவர்களால் எவ்வளவு தூரம் வெளியுலகுக்கு சமர்ப்பிக்க முடிந்தது? தமிழனுள் பிரச்சனையைத் தூண்டுவித்து, தமிழனே, தமக்குள் அடிபடும் நிலமையைத் தோற்றுவித்தார்கள்.

மறைமலை அடிகளும் சரி, சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் ஆதரவாளர்களும் சரி, இந்தி எதிர்ப்புக்காக போராடினார்கள். ஏன் ராஜாஜி என்ற பிராமணி கூட இந்தி எதிர்ப்புக்காக போராடியவர் தான். சொல்லப் போனால் மற்றவர்களை விட, இவரது அரசியல் செல்வாக்கினால் தான், இந்தி தமிழ்நாட்டு்ககுள் வராமல் தடுக்கப்பட்டது. மகாத்மா காந்தியோடு கொண்டிருந்த அவரின் நெருக்கம், "இந்தி தமிழ்நாடு வந்தால், தமிழரின் உச்சரிப்பு முறையால் இந்திக்குத் தான் அவமானம்" என்று விளங்கவைத்து, தடுத்தவர் ராஜாஜி.

சைவமும் தமிழும் ஒன்று என்று சொல்லிக் கொண்டு, இந்தி ஆகட்டும், சமஸ்கிருதமாகட்டும் எந்தக் கலப்பையும், தமிழ் சொற்களுக்குள் கலப்பதை என்றுமே ஆதரிக்க முடியாது. மறைமலை அடிகளாரும் இதையே செய்தார். சைவ சித்தாந்த மகாசமாசம் என்று ஆரம்பித்து, அதைத் தலைமை ஏற்று நடத்திய அவர் சைவத்தை காறி உமிழ்ந்தார் என்று கதை விடும் இளங்கோவின் வக்கிரம் புரிகின்றது. அருட்பரு மருட்பா என்று வாககுவாதப்பட்டதை இவர் அறியாரா?ஆரிய எதிர்பாகட்டும், இந்தி எதிர்ப்பாகட்டும், இந்து சமயப் பெரியார்கள் தெளிவாகத் தான் செயற்பட்டு வந்தனர். சொல்லப் போனால் தமிழில் மற்றய மொழிகள் ஊடுருவாமல், பக்தியோடு தமிழையும் சேர்த்து மக்களிடம் கொண்டு சென்றவர்கள் இந்து சமயப் பெரியார்களே!

ஆனால் குழம்பிப் போயிருக்கும் சமணப்பெரியார் நண்பர் இளங்கோ, இதர மொழி எதிர்ப்பை, சைவ சமய எதிர்ப்பாக எண்ணுவது அவரின் சிற்றறிவின் பலவீனமே.

இந்தி எதிர்ப்புக்கும், தமிழ்நாட்டில் வாழ்ந்த பிராமணிகளை ஏன் பாப்பாணி என்று பட்டம் சூட்டி கேவலப்படுத்தினார் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தத்தளிக்கும் இளங்கோ, இல்லாதபொல்லாத கதைகளை விடுகின்றார் என்பதை உணர முடிகின்றது. அது தான் முன்பு சொன்னது போன்ற திராவிட ஆதரவாளர்களுக்கு ஏற்ட்ட பிரச்சனை. பெரியாரை ஆதரிக்கின்றபோது, அவர் கொண்டிருந்த தனிப்பட்ட நாஸ்திகக் கொள்கைகளுக்கும் உயிர் ஊட்டல் செய்ய வேண்டிய நிலமையை இவர்கள் சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது.

நான் தமிழர்களின் வரலாற்றை சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடங்கி (இதற்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொர்பும் இல்லை. அது சரஸ்வதி நாகரிகத்தின் தொடர்ச்சி என்று இல்லாத நதியைக் கூறி அவாள்கள் புதுக் கரடி விட்டுக்கொண்டிருக்கிறார்கள ) வள்ளுவர் இளங்கோவடிகள் என்று எழுதும்போது இவர் நான் பெரியாரில் இருந்து தொடங்குகிறேன் என்று புதுக் கரடி விடுகிறார். நான் கேட்கிறேன் நெடுமாறன் ஐயாவைப் பற்றி உயர்வாகக் குறிப்பிட்டால் தமிழன் வராலாறு அவரிடமிருற்து தொடங்குகிறது என்று அர்த்தமா?????
நேற்று வந்த ஆரியர்கள் உரிமை கோருவதற்கும், அடிப்படையில் பசுபதி வழிபாட்டு முறையோடு ஒட்டியதாக கணிக்கப்படும் இந்து நதிவழிபாட்டு முறைக்கும் வேறுபாடு உண்டு. அந்தப் பசுபதி வழிபாட்டு முறை தமிழர்களுக்கு உரியது என்பதே என் வாதம். பினனால் வந்த ஆரியர்கள் எம்மைப் பின்பற்றியது தமிழரின் வழிபாட்டு முறையின் சிறப்பு. ஆனால் அவனிடம் விட்டு கொடுத்தது தமிழின் தவறு. அந்தத் தவற்றைத் தான், பெரியாரும் செய்தார்.

பெரியாரில் இருந்து வரலாறு ஆரம்பிக்கின்றது என்று ஏன் சொன்னேன் என்றால், சங்ககாலமாகட்டும், சங்கம் மருவிய காலமாகட்டும். சைவத்தை ஒன்றியதாக, இருந்தது. ஆனால் இக்கடவுள்கள் எல்லாம் அந்நியம் என்று சொன்னால் தமிழரின் வரலாற்றை பெரியார் காலத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டி ஏற்படும் என்பதைத் தான் சொல்ல வந்தது.

இன்று தமிழகத்தில் இந்து மதத்தை தீவிரமாக எதிர்த்து வரும் திருமாவளவன், வீரமணி, நெடுமாறன், சுபவீ, அறிவுமதி, தியாகு, கொளத்தூர் மணி, மணியரசன், இன்னும் பல தமிழ் உணவாளர்கள் தமிழீழத்திற்காக உரிமைக் குரல் கொடுக்கும்போது தூயவனின் எஜமானர்களான இந்து மதக் காப்பாளர்கள் முழு முச்சுடன் அதை எதிர்க்கிறார்கள்.

தமிழீழத்துக்காக ஆதரவாளிக்கின்றவர்கள் கொள்கின்ற கொள்கைக்கும் தமிழீழத்துக்கும் என்ன தொடர்பு? இங்கே திருமாவளவன் பெளத்த மதத்தைப் பின்பற்றுகின்றார் என்பதற்காக, ஈழத்தமிழர்கள் எல்லாம் பெளத்தமாக மாற வேண்டுமா? பெருத்தமில்லாத கதையிது. அவ்வாறே பிராமணர்களும் சரி, இந்து மதம் சார்ந்தவர்களும் சரி எத்தனை பேர் எதிர்க்கின்றார்கள்? சோ, ராம் என்று எத்தனை பேரை உம்மால் சொல்ல முடியும்? அவரகளை இந்து மதத்தின் வழிகாட்டியாக யாரும் சொல்லவில்லையே! அப்படிப் பார்த்தால் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட ஜெயக்காந்தன், கூட புலிகளை எதிர்க்கின்றார் என்பதற்காக, அவர்களின் ஜாதியைப் போட்டு வாங்கலாமா?

அவ்வாறே ஈழத்தில் டக்ளஸ் தேவானந்தா, சித்தாத்தன், மாணிக்கதாசன், வரதராஜப்பெருமாள், சிறிதரன், கருணா, சுபத்திரன், ஆனந்தசங்கரி, உமாமகேஸ்வரன், தவராஜா, என்று எவருமே பிராமணிகள் கிடையாது. அதற்காக இவர்களின் ஜாதிப் பிரிவும் தமிழீழததுக்கு எதிரானது என்று வாதிடலாமா? அலல்து துரோகக் கும்பல்களில் உள்ள அனைவரும் ஜாதிப்பட்டம் சூட்டலாமா? உப்படிப் பார்த்தால் ஈரோட்டுப் பாசாறையில் பகுத்தறிவு ஞானம் பெற்ற, நீ்ர் தான் ஜாதி வெறிபிடித்த மனிதர்.

மேலும், இந்து மதக்காப்பாளர் என்று தற்போது எவரும் கிடையாது. மற்றய மதங்களைப் போல, இந்து மதத்தில் எவரையும் யாரும் கட்டுப்படுத்துவதில்லை.

மதச்சார்பற்ற இனமானத் தமிழ்த் தேசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். தூயவன் நெடுக்காலபோவான் போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தை இந்து மதத்தோடு தொடர்பு படுத்தும் இழி வேலையைச் செய்ய முனைகிறார்கள்.
மதச்சார்பு, மதச்சார்பின்மை என்பதற்கு அர்த்தம் உமக்கு விளங்கவில்லை. அதையும் ஈரோடு பாசறையில் சொல்லித் தரவில்லையா? நான் தனிப்பட்டரீதியாக மதச்சார்போடு இருப்பது வேறு. நாடு மதச்சார்போடு இருப்பது வேறு. மதச்சார்பின்மையில்லாத நாடு என்றால் எந்த மதமும் அரசாங்கத்தை கட்டுப்படுத்த கூடாது. எதற்கும் விசேட அனுமதி கொடுக்க கூடாது. இது தான் மதச்சார்பின்மை. ஆனால் ஒவ்வொருவனுக்கும உள்ள தனிப்பட்ட விருப்பத்தில் எவனுக்கும் தலையிட உரிமை கிடையாது. மற்றவர்களுக்கு மதச்சார்பின்மை காட்ட, நான் மதப்பற்றிருக்க மாடடேன் என்று சொல்லிக் கொள்வது எல்லாம் சுத்த ஏமாற்றுத்தனம்.

மதச்சார்பின்மை என்று சொல்லும் இந்தியாவில் ஒரு இந்துக் கோவில் அமைக்க, எவ்வளவு சவால்களைச் சந்திக்க வேண்டும் என்பதையும், மற்றய சிறுபான்மை மத கோவில் அமைக்க என்ன சவால்களும் என்று பாருங்கள். மற்ற கோவில் விரைவில் அனுமதி கிடைக்கும். ஆனால் இந்துக் கோவில் அமைக்க முடியாத அளவு சட்டம் இறுக்குகின்றது இதன்பெயரா மதச்சார்பின்மை?

ஆனால் அமெரிக்கா மதச்சார்பு கொண்ட நாடாக இருந்தபோதும், அங்கே எந்த வழிபாட்டு முறைகளுக்கும் விதிகள் ஒன்று தான். ஏனென்றால் ஜனாதிபதி மதச்சார்பு கொண்டவர். நாடு மதச்சார்பற்றது. ஆனால் இந்தியா மதச்சார்பில்லை என்று சொல்லிக் கொண்டு ஏமாற்றிக் கொள்கின்றது.

பார்ப்பனர்களிடம் மட்டுமல்ல பார்ப்பன வேஷம் போடும் சூத்திரனிடமும் எச்சரிக்கையாக இருங்கள் என்பதுதான் அந்த ஈரோட்டுக் கிழவன் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம், பகுத்தறிவு மற்றும் பயனுள்ள அரசியல் தத்துவம்.

ஈரோட்டுப் போக்கிரி உமக்கு மூளைச்சலவை செய்தால், அது உம் அறிவின் முட்டாள்தனம். அது பகுத்தறிவா, பன்னாடையா என்பதை பார்ப்பவர்கள் தான் முடிவு செய்வார்கள். பார்ப்பாணி பார்ப்பாணி என்று ஒரு சமூகத்தை வஞ்சம் பாடிய போக்கிரிக் கருத்துக்கள், தமிழ் தேசியமல்ல என்பது தான் நிதர்சனம்.

தூயவனே ! உமது எஜமான விசுவாசமும், ஆரிய கைக்கூலித்தனமும் ஈரோட்டுப் பாசறையில் பகுத்தறிவுப் பயிற்சி பெற்ற எங்களுக்கு புரியாமல் இல்லை.

உமது வெற்றுப் பேச்சுக்கள் எம்மிடம் எடுபடாது

ஜயோ பாவம்.! மூளைச்சலவை செய்த உம்மைத் திருத்த வேண்டும் என்றோ, அல்லது என் கருத்தை நீர் எடுக்கவேண்டும் என்றோ, நான் துளியளவும் எதிர்பார்க்கவில்லை. உம் கருத்து உம்மோடு இருந்திருந்தால் அது பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் சமூகத்தில் விதைக்கின்றபோது தான் அது பற்றி கவலைப்பட வேண்டியிருக்கின்றது. ஒரு கன்னடவெறியனுக்கு அடிபணிந்து, அவனுக்கு கைக்கூலியாக வாழ்கின்ற நிலை தமிழனுக்கு வேண்டாம். அன்று அவன் விதைத்த கன்னட ஆதிக்கம், இன்று ஜெயலலிதா, ரஜினி என்று தொடர்கதையாகப் போகின்றது.

தமிழனுக்குள் குரோதங்களை வளர்த்து, தமிழனின் கட்டமைப்பைக் குலைத்து சிதறடிக்க முயலும், கன்னடக்கும்பல்களையும், அவர்களை ஆதரிக்கும் கைககூலிகள் குறித்தும் அவதானமாக இருப்போம். அதற்கு தமிழனுக்குள் ஒற்றுமையை வளர்த்து தமிழ்தேசியமாகக் கொண்டு செல்லுதலே அவனின் வெற்றிக்கு சாத்தியமாக்கும்.

  • Replies 60
  • Views 12.3k
  • Created
  • Last Reply

தந்தை பெரியாருக்கு நிஜமான கவிதாஞ்சலி!

பெரியார் ஒருவர்தான் பெரியார்

அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி

தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்

மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்

நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்

கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை

கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை

மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை

யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனை விட நெடுக்கால போவானும், தூயவனும் புத்திசாலிகள் என்று நான் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் லக்கிலுக்

அதிலும் தூயவன் படு மோசம்.

சைவத்தையும் இந்துத்துவத்தையும் போட்டுக் குழப்புகிறார். சைவத் துறவி மறைமலையடிகள் பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும் எதிர்த்தார் என்பது வரலாறு.

அடுத்து இராஜாஜி இந்திக்கு எதிராகப் போராடினாராம். நல்ல கூத்து !!!!

இந்தியைத் திணித்ததே இராஜாஜியின் அரசுதானே இந்த வரலாற்று உண்மை கூட பாவம் அவருக்குத் தெரியவில்லை.!

நெடுமாறனோ சுபவீயோ திராவிடம் பேசவில்லை. நானும் பேசவில்லை. பெரியாராலே கைவிடப்பட்ட தேசியம்தான் திராவிடத் தேசியம்.

இந்துத்துவம் தமிழர்களின் தேசிய அடையாளங்களை அழிக்க முயலுகிறது. அதற்கு எதிரான பண்பாட்டு யுத்தம்தான் இது.

என்னை மீண்டும் மீண்டும் சமண வெறியர் என்று எழுதி தனது மதவெறியைக் காட்டுகிறார் தூயவன்

தமிழ் இலக்கியங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியவர்கள் சமணத் துறவிகள் இதைதான் நான் குறிப்பிட்டேன். அவர்களின் தமிழ்த் தொண்டு போற்றுதலுக்கு உரியது.

தூயவனே!

கிறிஸ்தவப் பாதிரியார்களான கால்டுவேல் மற்றும் ஜி.யு. போப் போன்றவர்களின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. கால்டுவேல் அவர்களின் A comperative Grammer of Dravidian Language என்ற நூல்தான் தமிழின் பெருமையை உலகறிய வைத்தது. அது வரைக்கும் சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ் இயங்க முடியாது என்று இடைத் தரகர்களான ஆரியாரால் கற்பிக்கப் பட்ட பொய்யை உடைத்து தமிழ் தனிதத்து இயங்கும் ஆற்றல் உள்ளது என்று மெய்ப்பித்தார். ஜி.யு. போப் அவர்கள் தமிழ் படித்து திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தான் இறக்கும்போது நான் தமிழ் இலக்கியத்தின் மாணவன் என்று தன்னுடைய கல்லறையில் பொறிக்கும் படி செய்தார்.

இந்த அறிஞர்களின் தமிழ்த் தொண்டை போற்றினால் என்னை தூயவன் கிறிஸ்தவ வெறியர் என்று அழைப்பாரா???????????

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழே இருக்க வேண்டும் என்று விரும்பினார். தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகிறார்.

இவர்களின் தமிழ் பற்றைப் போற்றினால் தூயவன் என்னை இஸ்லாமிய வெறியர் என அழைப்பாரா?????

சைவப் பழம் மறைமலையடிகள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு அளவிட முடியாதது. அதற்குக் காரணம் அடிகளாரின் சமையப் பற்று அல்ல. அவரின் தனித் தமிழ் மீட்சிதான் காரணம் அவரின் தமிழ்த் தொண்டை எழுதினால் என்னை தூயவன் சைவ வெறியர் என்பாரா?????

அதேபோல் பார்பனர்களான பரிதி மாற் கலைஞர், ராகுல்ஜி, பாரதி, வ.ரா போன்றவர்களிடமும் எமக்கு நல்ல மதிப்பு உண்டு. இங்கு நாங்கள் எதிர்ப்பது மத அடிப்படை வாதத்தை. பார்ப்பனாரான ராகுல்ஜியே பார்ப்பனப் பித்தலாட்டங்களை கிழி கிழி என்று கிழித்திருக்கிறார்.

இந்தநாளில் பொய்மைப் பார்ப்பார் என்று பாராதியாரே பாடி இருக்கிறார். இதே பாரதிதான் பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று ஆனந்தக் கும்மி கொட்டியவர்.

தந்தை பெரியாருக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் இருந்த நட்பை நாங்கள் வார்த்தைகளால் வருணிக்க முடியாது. இறையியலாளரான அவர் பெரியாரின் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லையா????

அந்த ஈரோட்டுக் கிழவனின் மகத்தான பணி புரியமால் இந்த ஆரிய அடிவருடிகள் பிதற்றுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பெரியாரைத் தூற்றுவதனால் அவர் ஆரம்பித்த பகுத்தறிவும்/விழிப்புணர்வும் அழிந்துவிடாது. பலருக்கு இந்திய/தமிழ்நாட்டு வரலாறு தெரியாது என்று எடுத்துக்கொண்டாலும், ஈழத்து வரலாறு கூடத் தெரியாமல் உள்ளது. சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் ஈழத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவில்லை என்று வாதிடக்கூடியவர்கள் பலர் இங்குள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பெரியாருக்கு நிஜமான கவிதாஞ்சலி!

பெரியார் ஒருவர்தான் பெரியார்

அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி

தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்

மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்

நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்

கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை

கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை

மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை

யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனை விட நெடுக்கால போவானும், தூயவனும் புத்திசாலிகள் என்று நான் நம்பவில்லை.

காசி ஆனந்தன் தமிழகத்தில் அடைக்கலம் தேடி பல ஆண்டுகள் கடந்தாயிற்று. அவருக்கு அங்கு நல்ல மரியாதையும் உண்டு. திராவிடக் கட்சிகளோடு தொடர்பும் உண்டு. அந்த வகையில் அவர் அவர்களைத் திருப்திப்படுத்த கடமைப்பட்டவர். ஆனால் தமிழகத்தில் இடம்பெயர்ந்துள்ள ஈழ அகதிகளை தீண்டத்தகாதவர்களாக கருணாநிதி அரசு கூட நடத்துகிறது. அதைக் காசியண்ணன் எழுத முடியாது. முடிந்தால் எழுதி இருப்பார்.

அவருக்கு பெரியார் மேல விசுவாசம் இருக்கு என்பதற்காக ஈழத்தமிழர்கள் எல்லோருக்கும் உண்டு என்பதும் மிகத் தவறான பார்வை. பெரியார் ஒரு சிதறு தேங்காய் என்பதே எங்கள் நிலைப்பாடு. :P :(

இரண்டு பேர் முழு ஈழத் தமிழர்களின் பிரதிபலிப்பு அல்ல. நான் என்றும் நாம் ஆக முடியாது.

தமிழர் வரலாற்றை தமிழத் தேசியத்தின் வரலாற்றை அறியாதவர்கள்,தமிழ் நாட்டின் அரசியலை அறியாதவர்கள் திராவிடத்தின் அரசியலை அறியாதவர்கள் பெரியாரின் பேராற்றலை அறியாதவர்கள் படிக்காதவர்கள், படிக்க விரும்பாகவர்களை மறைத்திருப்பது அவர்களின் அறியாமையும்,மதம் மேல் அவர்களுக்கு இருக்கும் குருட்டுத் தனமான நம்பிக்கையும் அன்றி வேறொன்றும் இல்லை.

தூயவன் இன்னும் இவை பற்றி வாசித்தால் அவருக்கும் உண்மை இறுதியில் விளங்கும் என்றே நினைக்கிறேன்.அதுவரை பொறுமையாக நிதானமாகக் கருத்தாடுங்கள்.சிறுவயதில் புகுத்தப்பட ஆள்மனத்தில் பதிந்த எண்ணங்களை களைவது என்பது சிலருக்கு கடினமானது.வயது முதிர்ச்சி அவர்களுக்கு அந்தப் பலத்தைக் குடுக்கும் என்று நம்புகிறேன்.ஆனால் சிலர் என்றும் முதிராதவர்களாகவே இருப்பதுவும் உண்டு.இவர்கள் புற நடைகள்.இவர்கள்பால் அனுதாப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.இவர்கள் தாங்கள் இதே களத்தில் பல ஆண்டுகளின் முன் எழுதியவற்றைப் பார்த்தாவது தமது முதிர்சியின்மை பற்றிய தெளிவைப் பெறுவார்களாக.

லக்கி கவிஞர் காசி ஆனந்தன் இந்தக் கவிதையை எழுதியது எழுபதுகளில். அவர் சென்னையில் பட்டப் படிப்பு படிக்கும் போதே பெரியாருடன் சேர்ந்து இயங்கியவர். வரலாறு தெரியாத ஏகாம்பரங்கள் இவ்வாறு தான் பினாத்துவார்கள் கண்டு கொள்ளாதீர்கள். <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசியானந்தன் பெரியாரோடு தொடர்பு வைச்சிருந்திருக்கலாம் விட்டிருக்கலாம். அதுவல்ல முக்கியம். பெரியாரின் பெயரால் ஈழத்தில் சாதி ஒழிப்போ இந்து மதத்திற்கு எதிரான சிலையுடைப்போ நடந்தேறவில்லை. விடுதலைப் போராட்டம் வளர்ச்சியடையும் வரை சாதியம் இருந்தது. விடுதலைப் போரின் வளர்ச்சியே அதை ஒழிக்க வகை செய்தது. பெரியார் என்ற புருடா ஈழத்தில் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இல்லை. சிலர் பெரியார் கருத்துக்களைக் கூறி இருக்கலாம். அதற்காக மக்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு பெரியார் வழியில் சென்றனர் என்பது பெரிய பொய்.

காசியானந்தனுக்கு பெரியார் விசுவாசமோ திராவிடக் கட்சி உறவுகளால் அவர் தமிழகத்தில் நீண்டகாலம் இருக்க வசதி செய்யப்பட்ட நன்றிக்கடனனோ இப்படி எழுத வைத்திருக்கலாம். ஆனால் அவரின் கருத்தையே ஈழ மக்கள் பிரதிபலித்தனர் என்பது இவ்விடயத்தில் ஏற்புடையதல்ல.

காசியானந்தன் கூட தொட்டுப் பாடாத தமிழகத்தில் ஈழ அகதிகளின் அவலம் இருக்கிறது. அவர் சில இடங்களில் சொந்த மக்களைப் புறக்கணித்துவிட்டிருக்கிறா

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் தூயவன் படு மோசம். சைவத்தையும் இந்துத்துவத்தையும் போட்டுக் குழப்புகிறார். சைவத் துறவி மறைமலையடிகள் பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும் எதிர்த்தார் என்பது வரலாறு.
ஓமோம். நான் ரெம்ப மோசம். ஆனால் நீர் சைவர்களை நோக்கித் திட்டியவை அனைத்தும், அறிஞர் வைத்து ஆராய வேண்டிய அற்புதக் கருத்துக்கள். திராவிடம் என்றால் எப்படி என்று மக்களுக்கு படம் போட்டுக் காட்டிய, சிறப்பு சிந்தனைகள். தமிழுக்கு மதங்கள் அந்நியமானவை என்று சொன்ன வாய்கள், கடைசியில் சைவத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது ஒரு வகையில் வெற்றி தான். அத்தோடு இந்து என்பதும் தமிழர் வழிபாட்டு முறைகளே, என்பதையும் ஆரியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்றும் புரிந்து கொள்வீராக.

அடுத்து இராஜாஜி இந்திக்கு எதிராகப் போராடினாராம். நல்ல கூத்து !!!! இந்தியைத் திணித்ததே இராஜாஜியின் அரசுதானே இந்த வரலாற்று உண்மை கூட பாவம் அவருக்குத் தெரியவில்லை.!

நிச்சயமாக உமக்குத் தான் வரலாறு தெரியவில்லை. தமிழ்நாட்டில் இந்தி ஆட்சிமொழியல்ல என்பதைக் கூடத் தெரியாமல் எழுதுகின்றார். இந்தி தமிழ்நாட்டுக்குள் நுழையாமல் தடுத்தற்கு ராஜாஜியின் அரசியல் செல்வாக்கு தான் காரணம் என்பதை அனைவரும் அறிவார். இன்று வரைக்கும் மற்றய மாநிலங்கள் போலத் தமிழ்நாட்டில் இந்தி அமுலாக்கத்தை மத்திய அரசால் செய்ய முடியாமைக்கு அன்று அவரின் செய்கை தான் காரணம்.

ராஜாஜியைக் குற்றம் சாட்டுவதற்காக, காங்கிரஸ் கட்சியை ராஜாஜி அரசு என்று சொல் மயக்கத்தில் எழுதியிருக்கின்றீர் என்பதை உணர முடிகின்றது. அப்படிப் பார்த்தால், "முன்னாள் பெரியார் அரசு திணித்தது", "நெடுமாறன் அரசு திணித்தது" என்று எல்லாம் சொல்லிக் கொள்ளுங்கள், ஏன் என்றால் இவர்களும் காங்கிரஸ்சில் இருந்தவர்கள் தாம்.

ராஜாஜி ஆல் அன்று தடுக்கப்பட்ட இந்தியை, சிலவருடங்களுக்கு முன் அதிமுக என்ற திராவிடக்கட்சி ஆட்சியில் இருந்தபோது, பெயர்பலகையில் வர அனுமதித்தது. அன்று இந்தி எதிர்ப்புக்கு பொராடிய கருணாநிதி அது குறித்து மெளனமாகவே இருக்கின்றார். இது தான் திராவிட இயக்கங்களின் வங்குரோத்து நிலை.

முதலில் பெரியார், பிராமணி என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ளாதே என்று வெறியூட்டியதன் விளைவு தான் உம்மை ராஜாஜியை இப்படி பேச வைக்கின்றது என்பது உண்மை.

நெடுமாறனோ சுபவீயோ திராவிடம் பேசவில்லை. நானும் பேசவில்லை. பெரியாராலே கைவிடப்பட்ட தேசியம்தான் திராவிடத் தேசியம்.

இந்துத்துவம் தமிழர்களின் தேசிய அடையாளங்களை அழிக்க முயலுகிறது. அதற்கு எதிரான பண்பாட்டு யுத்தம்தான் இது.

கழுதை தேய்ந்துக் கட்டெறும்பு ஆன கதை மாதிரி எல்லோ கிடக்கு. பெரியார் கொண்ட திராவிட தேசியம் செத்துப் போச்சு என்ற நிலைக்கு இப்போது வந்துவிட்டீர்கள்.இப்போது தமிழரின் தேசிய அடையாளங்களை இந்து சமயம் அழிக்கின்றது என்கின்றீர்கள் . நீங்கள் தமிழரின் தேசிய அடையாளங்களாக எதை நினைக்கின்றீர்கள். அது எங்கிருந்து வந்தது என்பதையும் நீங்கள் பட்டியல் போட்டால் நன்றாக இருக்கும். பரதம், கல்நாடக சங்கீதம், மயிலாட்டம், குயிலாட்டம்.......... என்று எதைச் சொல்லப் போகின்றீர்கள்?? அவை எல்லாம் சைவத்தோடு தான் வந்தன. அதனால் தான் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தன.

எனவே உங்களின் பண்பாட்டு யுத்தம் எவ்வாறாக இருக்கின்றது. அதை இந்த ஒரு நூற்றாண்டுகளில் நீங்கள் சாதித்தது என்ன?

*வடமொழியை எதிர்த்தீர்கள் நல்ல விடயம். ஆனால் இன்று வடமொழியைப் பார்க்கிலும் ஆங்கிலம் தமிழ்நாட்டில் அதிகளவு விகிதம் ஊடுருவ விட்டீர்கள்.

*கடவுள் வேண்டாம் என்று, அது கொண்டு வந்திருந்த கலைகளை அழித்தீர்கள். தமிழனின் பாரம்பரியக் கலைகள், கவனிக்கப்படாததால் அவை இன்று அழிந்து போய்க் கொண்டு இருக்கின்றன.

* இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள தொல்பொருள் காப்பகத்துக்குப் போய்ப் பாருங்கள். அங்கே ஓலைச்சுவடிகளை சாக்குகளில் கட்டி வைத்திருப்பதாக ஒரு சஞ்சிகை வேதனையோடு முன்பு எழுதியிருந்தது.

* அடிமைகளாக நாடு தாண்டிக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களை மீட்க என்ன செய்தீர்கள்? அவர்கள் தங்களுக்கு தமிழ்மொழி படிப்பிக்கச் சொல்லி பல தடவை வேண்டியும், தமிழ்நாட்டை ஆளும் திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.

இதை விட நிறையச் செய்ய வேண்டி இருந்தும், நீங்கள் செய்யமாட்டீர்கள். ஏன் என்றால் பிராமணியைத் திட்டித் தீர்க்க உங்களுக்கு நேரம் போதாது. உமக்கு வயிற்றோட்டம் என்றாலும், பிராமணி தான் வந்து சோத்தில் மருந்து கலந்தவன் என்று குற்றம் சாட்டித் திருப்தி அடையுங்கள்.

மேலும், பெரியார் கொண்டிருந்த திராவிடம் என்றதே தவறு. உண்மையில் அது தமிழ்தேசியம் என்ற கொள்கையாகவே இருந்திருக்க வேண்டும். திராவிட மொழிகள் என்ற நிலைக்கு மற்றய மொழிகளோடு தமிழ்மொழியை தரம் குறைத்தது தப்பு. கன்னடமொழியை தமிழுக்கு நிகராக கொண்டு வர முயன்ற வஞ்சச் செயலாகவே இதை எண்ணுகின்றேன்.

மற்றய திராவிடமொழிகளுக்கு தாய் நிலையில் இருக்கும் தமிழ்மொழியை எவ்வாறு இதர மொழிகளோடு ஒப்பீடு செய்ய முடியும். இது கூட தமிழரின் தேசிய அடையாளங்களை அழிக்கும் பெரியாரின் செயற்பாடாகும். அதையும் அனுமதிக்க முடியாது. ஆரியரின் சைவத்தின் மீதான ஆக்கிரமிப்பில், சைவம் தமிழருக்குரியது என, தமிழரின் செல்வாக்கை அதில் நிறுத்த முயன்றிருந்தால் பெரியாரை மதிக்கலாம். ஆனால் அது தமிழனுக்கே உரியது இல்லை என்றால் எவ்வாறு மதிக்க முடியும்?

என்னை மீண்டும் மீண்டும் சமண வெறியர் என்று எழுதி தனது மதவெறியைக் காட்டுகிறார் தூயவன்

தமிழ் இலக்கியங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியவர்கள் சமணத் துறவிகள் இதைதான் நான் குறிப்பிட்டேன். அவர்களின் தமிழ்த் தொண்டு போற்றுதலுக்கு உரியது.

சமணப்பெரியார் என்று மதிப்புக் கொடுத்தால், அவருக்கு பெரியார் என்ற வசனம் வெறியர் என்று விளங்குதாம். இதைத் தானே இவ்வளவு நாளும் நானும் பெரியார் என்பவர் ஒரு வெறியர் என்று சொல்லி வந்தேன். இம்புட்டு கோபத்தில் என்னைத் தூற்றினராரே!

................இந்த அறிஞர்களின் தமிழ்த் தொண்டை போற்றினால் என்னை தூயவன் கிறிஸ்தவ வெறியர் என்று அழைப்பாரா??????????? கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழே இருக்க வேண்டும் என்று விரும்பினார். தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகிறார்.

இவர்களின் தமிழ் பற்றைப் போற்றினால் தூயவன் என்னை இஸ்லாமிய வெறியர் என அழைப்பாரா?????

சைவப் பழம் மறைமலையடிகள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு அளவிட முடியாதது. அதற்குக் காரணம் அடிகளாரின் சமையப் பற்று அல்ல. அவரின் தனித் தமிழ் மீட்சிதான் காரணம் அவரின் தமிழ்த் தொண்டை எழுதினால் என்னை தூயவன் சைவ வெறியர் என்பாரா?????

நான் பிராமணிகள் கூடத் தமிழுக்குச் சேவை ஆற்றியபோது, அவர்களை ஏன் ஒதுக்குகின்றீர்கள் என்று கேட்ட கேள்விக்கு என்னை ஆரியவெறியன், ஆரிய அடிவருடி, என்று திட்டிய இளங்கோ இப்போது தன்னை வெறியன் என்று சொல்வீரா எனக் கேட்கின்றார். (அவர் ஆசைப்பட்டால் அந்த சின்ன உதவி கூடச் செய்யாமல்....)

உண்மையில் நிச்சயமாக சொல்லியிருப்பேன் . நீர் போற்றுகின்ற விதம் அப்படி. சமணத் துறவிகள் தமிழுக்கு பங்காற்றினார்கள் என்றால் உம் மீது மரியாதை இருந்திருக்கும். ஆனால் சமணர்கள் மட்டும் தான் பங்காற்றினார்கள் என்றும, சைவம் தமிழை அழிக்க முயன்றது என்றும் பல தடவை எழுதியிருக்கின்றீர். எம்மை எரிச்சலூட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு செய்தீர் என நம்புகின்றேன். ஆனால் மொழிப் பற்றில் எவருடைய பங்கையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

வழமையாக குறித்த மக்கள் பின்பற்றும் மதம் மீது, அவதூற்றைப் பரப்பி, மக்கள் வெறுபபுற்றிருக்கும் நேரத்தில் தங்களின் மதக் கொள்கையைப் பரப்புகின்ற விதமே, மதத்தை விற்பனை செய்வோர் கடைப்பிடிக்கும் வழி. அதைத் தான் உம் கருத்தில் அச்சம் கொள்ள வேண்டி ஏற்பட்டது.

மற்றும்படி எப்பிரிவினரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டை குறைத்து எடை போடுவது சரியல்ல. ஆங்கிலத்தில் பைபிளை படிக்க வைத்தால், அதன் ஆதிக்கம் மக்களிடம் கூடி விடும் என்று நம்பிய ஆறுமுக நாவலர் அதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். அங்கே அவர் மதத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழ் உணர்வாளராகச் செயற்பட்டார். தமிழின் முதல் நூலாம் அகத்தியம் முதல், நாளைய ஏடுகள் வரை எல்லா நூல்களிலும் அனைவரின் பங்கும் உண்டு.

அதேபோல் பார்பனர்களான பரிதி மாற் கலைஞர், ராகுல்ஜி, பாரதி, வ.ரா போன்றவர்களிடமும் எமக்கு நல்ல மதிப்பு உண்டு. இங்கு நாங்கள் எதிர்ப்பது மத அடிப்படை வாதத்தை. பார்ப்பனாரான ராகுல்ஜியே பார்ப்பனப் பித்தலாட்டங்களை கிழி கிழி என்று கிழித்திருக்கிறார்.

இந்தநாளில் பொய்மைப் பார்ப்பார் என்று பாராதியாரே பாடி இருக்கிறார். இதே பாரதிதான் பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று ஆனந்தக் கும்மி கொட்டியவர்.

தந்தை பெரியாருக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் இருந்த நட்பை நாங்கள் வார்த்தைகளால் வருணிக்க முடியாது. இறையியலாளரான அவர் பெரியாரின் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லையா????

அந்த ஈரோட்டுக் கிழவனின் மகத்தான பணி புரியமால் இந்த ஆரிய அடிவருடிகள் பிதற்றுகின்றனர்.

மேலே இவர் சொன்ன நபர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நான் அறியேன். ஆனால் பாரதியார் சொல்ல முனைந்தது, சமுதாய சீர்திருத்தம். இதைத் தான் இராமகிஸ்ணர், விவேகாந்தர் முதலானோரும் செய்தனர். சீர்திருத்தங்கள் காலத்துக்கு காலம் அவசியமானதே. அன்று பலிகொடுத்த மக்களைத் திருத்த புத்தர் கொல்லாமையைக் கொண்டு வந்தார். இன்று சைவம் அதை ஏற்று நடக்கின்றது. இது சீர்திருத்தம். ஆனால் மதங்களே அழிய வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு நபரைச் சீர்திருத்தவாதியாக எண்ண முடியாது. அது அவரின் வெறி.

அந்தக் கன்னடக்கிழவனின் மகத்தான பணி என்னவென்றால், தமிழ்மக்களைக் கூறு போட்டு முட்டி மோத வைத்த ஆரியர்களுக்கும், ஆங்கிலேயருக்கும் துணை போனது..

(பார்ப்பானராகிய ராகுல்..... பல தடவை பார்ப்பானர் என்பது பிராமணிகளை அல்ல. ஆதிக்கம் செலுத்தும் அனைவரையும் என்று நிருபிக்க நாரதர் முயலுவர். வெளிப்படையாக அப்படிச் சொல்ல முனைந்தாலும், பாப்பாணி என்பது பிராமணிகளைத் தான், என்பதை மனதளவில் இவர்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பது வெள்ளிடைமலை)

யாழ் களத்தில் பெரியாரைத் தூற்றுவதனால் அவர் ஆரம்பித்த பகுத்தறிவும்/விழிப்புணர்வும் அழிந்துவிடாது. பலருக்கு இந்திய/தமிழ்நாட்டு வரலாறு தெரியாது என்று எடுத்துக்கொண்டாலும், ஈழத்து வரலாறு கூடத் தெரியாமல் உள்ளது. சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் ஈழத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவில்லை என்று வாதிடக்கூடியவர்கள் பலர் இங்குள்ளனர்.

மேலே இளங்கோ திராவிடக் கொள்கை செத்துப் போச்சு. பெரியார் அதைக் கை விட்டுவிட்டார் என்கின்றார். நீங்கள் இப்படிச் சொல்கின்றீர்கள். யாழ்பாணத்தில் சாதியப் போராட்டங்கள் பெரியாரை அடியேற்றி கோவில் மிதிப்பு எண்டு நடந்தது. ஆனால் வெள்ளாள சாதி வெறிக்கு தீர்வு காணவில்லையே! ஏன் என்றால் அவர்கள் பிராமணிகள் இல்லை எண்டு போல. கருணா பிரியும் போது மட்டக்களப்பு போராளிகள் சிலரிடம் பேட்டி எடுத்தார்கள். அப்போது அவர்கள் சொன்னார்கள. முன்னேறிப் பாய்தலில், வந்த தங்களுக்கு சிரட்டையில் தண்ணி கொடுத்த ஆட்கள் சிலர் இருக்கினம் எண்டு. அது உண்மை எண்டு தான் நினைக்கின்றேன்.

யாழ்களத்தில் கூட, தனது ஜாதி என்ன என்று சில வருடங்களுக்கு முன், tamil.... என்ற ஒரு ஆள் சொன்னபோது, அவருக்கு நல்ல மனது என்றும், வெளிப்படையாக கதைக்கின்ற சிந்தனை என்றும் ஜாதி வாதத்தை ஊக்குவித்தார்கள். அவர் உண்மையில் அப்படியோ, இல்லையோ என்று தெரியாது. ஆனால் அவரே, தன் ஜாதி என்ன சொன்னதில் பலருக்குத் திருப்தி.

தூயவன்! நீங்கள்தான் வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள்.

1938ஆம் ஆண்டு அப்பொழுது சென்னை மாகாணத்தில் (அன்றைய தமிழகம்) காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ராஜாஜி இந்தியை கட்டாய பாடமாக்கினார்.

இதனால் உருவான போராட்டத்தைத்தான் முதலாவது மொழிப் போர் என்று சொல்வார்கள்.

(இரண்டாவது மொழிப்போர் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை முழுவதுமாக முடித்து வைத்தது)

1952 இல் இருந்து 1954 வரை ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். அப்பொழுது வர்ணாச்சிரம தர்மத்தை காப்பதற்கு குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதுவும் திராவிடர் கழகத்தின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி கைவிடப்பட்டது.

பின்பு காமராஜருடன் முரண்பட்டு காங்கிரஸில் இருந்து விலகி 1959இல் சுதந்திராக் கட்சியை ஆரம்பித்தார்.

ஆனால் அதன் பிறகு ராஜாஜி ஒரு போதும் ஆட்சி அமைத்தது இல்லை. அவர் இரண்டு தடவை முதல்வராக இருந்ததும் காங்கிரஸ் கட்சியில் இருந்த பொழுதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் சபேசன் அண்ணா.

தமிழ் நாட்டில் இந்தியைத் திணித்தது காங்கிரஸ் கட்சி என்று சொல்வதை விட இராஜாஜி என்று சொல்வதுதான் சரி. எனெனில் காங்கிரசில் இருந்த திரு. வி. கவும் சோமசுந்தரப் பாரதியாரும் (சுப்பிமணிய பாராதி அல்ல) இந்தியை எதிர்த்துப் போராடியவர்கள். அது மட்டுமல்ல அந்த பழுத்த காங்கிரஸ்காரர்கள் இந்தியை எதிர்க்கும் போது யாரோடு கூட்டு வைத்தார்கள் தெரியுமா???????

நமது பெரியாரோடுதான்.

ஆதிக்க இந்திக்கு எதிராக முதல் கிளந்தெழுந்த சிங்கம் எங்கள் ஈரோட்டுச் சிங்கம்தான். தன்னோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்த மறைமலையடிகளை இந்தப் போராட்டத்திற்கு அழைத்து வந்ததும் பெரியார்தான். பெரியார் மறைமலையடிகளுக்கு எழுதிய கடிதத்தை நான்வாசித்தேன். மிக உருக்கமான கடிதம் அது. மறைமலையடிகள் தமிழை உயிராக எண்ணி வாழ்ந்தவர் ஆனால் பெரியாரோடு சேர்ந்தால் அவரது கடவுள் மறுப்பு மத எதிர்ப்பு போன்றவற்றிலும் தான் ஈடுபட வேண்டி வருமோ என்ற அச்சம் அடிகளாருக்கு இருந்தது. அதானால்தான் அந்த அச்சம் தேவயற்றது என பெரியார் அவருக்கு விளக்கி கடிதம் எழுதினார். அதில் ஒரு வரி என் நெஞ்சைத் தொட்டது. பெரியார் இப்படி எழுதினார்

" அடிகளாரே நீங்கள் இப்படி கண்டும் காணாமல் இருக்கலாமா என்னை விட இதில் கூடுதல் அக்கறையும் உரிமையும் உங்களுக்கல்லவா இருக்கிறது"

இவர்தான் பெரியார். தமிழனுக்காக பேசி, தமிழனுக்காக வாழ்ந்து தமிழனுக்காக மடிந்தவர் பெரியார். தமிழ் பக்தி மொழி என்ற நிலையை மாற்றி அதை அறிவியல் மொழியாக மாற்ற முனைந்தவர் பெரியார். எல்லோரும் கம்பருக்கு விழா எடுத்த போது முதன் முதலாக திருக்குறள் விழா நடத்தியவர் பெரியார்.

அந்தப் பெரியாரின் கொள்கை வாரிசுகளான நாங்களும் தமிழ் அறிவியல் மொழியாகி மாபெரும் வளர்ச்சி அடைய விரும்புகிறோம் ஆனால் இந்த தூயவன் நெடுக்கால போவான் போன்ற இந்துத்துவவாதிகள் தமிழை கோவிலுக்குள் வைத்து பூட்ட முற்படுகின்றனர். ஆனால் இவர்கள் கொண்டாடும் கோவில் கருவறைக்குள்ளும் தமிழ் இல்லை. அங்கும் செத்துச் சுடுகாட்டிற்குப் போன இழவு மொழியான சமஸ்கிருதம்தான். அதை எதிர்க்கும் திரணியற்றவர்கள் இவர்கள். அங்கும் நாங்கள்தான் போராட வேண்டியிருக்கிறது.

Edited by இளங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.