Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கான நிரந்தரதீர்வு வேண்டும் ; சமந்தா பவரிடம் சம்பந்தன் வலியுறுத்து

Featured Replies

தமிழருக்கான நிரந்தரதீர்வு வேண்டும் ; சமந்தா பவரிடம் சம்பந்தன் வலியுறுத்து
 
 
தமிழருக்கான நிரந்தரதீர்வு வேண்டும் ; சமந்தா பவரிடம் சம்பந்தன் வலியுறுத்து
தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவரிடம் சம்பந்தன் வலியுறுத்தினார்.
 
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு  நிறைவடைந்துள்ளது.
 
இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின்போது தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாஇ எம்.ஏ. சுமந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் கருத்து தெரிவித்தார்.
 
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நிறைவேற்ற மனித உரிமை பேரவை மற்றும் அமெரிக்கா தமது கடமைகளை முறையாக பேண வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

samantha_tna_001.jpg

சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்;

மிகவும் திருப்திகரமான சந்திப்பு நாங்கள் பேச வேண்டிய எல்லாவற்றையும் பேசயிருக்கின்றோம். நாம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் விசேடமாக காணி சம்பந்தமான பிரச்சினைகள், கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் இராணுவமயமாக்கல் தொடர்பான பிரச்சினைகள் இராணுவ பிரச்சினை அதிகமாக இருக்கின்ற நிமித்தம் மக்களுக்கு அசௌகரியம் கௌரவம் அற்ற நிலமை இருக்கின்றது. ஆனபடியால் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கு அவர்கள் உதவ வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். மக்களின் மீள்குடியேற்றம் , புனர்வாழ்வு வீடு வசதி தொழில்வாய்ப்பு பல கஷ்டங்கள் தொடர்பில் பேசியிருக்கின்றோம். எல்லாவற்றிக்கும் மேலாக ஐ.நா தீர்மானம் உண்மையாக நிறைவேற்றப்பட வேண்டும். அந்த தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அமெரிக்காவும், ஐ.நா மனித உரிமை பேரவையும் தங்களின் கடமைகளை முறைமையாக புரிய வேண்டும்அவர்களின் உதவி தொடர்ந்தும் எங்களுக்கு தேவை அரசியல் தீர்வு தொடர்பிலும் பேசி இருக்கின்றோம். எமது மக்கள் இந்த நாட்டில் கௌரவமாக சுய மரியாதையுடன் உரிமையுடன் வாழக் கூடிய வகையில் தமிழ் பேசும் பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்.

நயினாதீவு என்ற பெயரை மாற்றுவது தொடர்பிலும் இரா சம்பந்தன் கருத்துத் தெரிவித்தார்.

நயினாதீவில் நாகபூசணி அம்மன் கோவில் உள்ளது. அது நயினாதீவாக தொடர்ந்தும் இருக்க வேண்டும். பௌத்த மக்கள் விகாரை உள்ள பகுதியை நாகதீப என்று அழைக்கின்றனர். அதனை நாங்கள் எதிர்க்க முடியாது. அது அவர்களின் விருப்பம் பௌத்த மக்களின் விகாரை உள்ள பிரதேசத்தை நாகதீபம் என்று அழைக்க அவர்கள் விரும்புகின்றார்கள். அதனை நாங்கள் எதிர்ப்பது முறை நான் கருதவில்லை. அதே சமயத்தில் நாகபூசணி அம்மன் கோவில் இருப்பது நயினாதீவில் அதனை பற்றி எவ்விதமான சந்தேகமும் இருக்க முடியாது.

மூலம் : http://newsfirst.lk/tamil/2015/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்ப் பேசும் மக்களுக்கு, நிலையான, கௌரவமான நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவரிடம், தமிழ்த் தேசியக் கூடட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில்  இன்று சந்திப்பு இடம் பெற்றது.

தமிழ்ப் பேசும் மக்களுக்கு, நிலையான, கௌரவமான நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவரிடம், தமிழ்த் தேசியக் கூடட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம் பெற்றது.

   

அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் கருத்து தெரிவித்தார். 'ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நிறைவேற்ற மனித உரிமை பேரவை மற்றும் அமெரிக்கா தமது கடமைகளை முறையாக பேண வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.]

இதேவேளை, வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

samantha-TNa-meet-231115-seithy%20(1).jp

 

 

samantha-TNa-meet-231115-seithy%20(2).jp

 

 

samantha-TNa-meet-231115-seithy%20(3).jp

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145461&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது சிறிலங்காவில் தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லை.

விதானைமார் மூலம் தீர்க்க வேண்டிய கடுகளவு பிரச்சனைகளையும் ஏன்  ஊதிப்பெருப்பிக்கின்றார்கள்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.