Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரியகுற்றம் புரிந்தவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், ஏனையோரை விடுவியுங்கள்! - அரசிடம் கோருகிறார் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாரிய குற்றங்கள் புரிந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் கூறினாலும், ஏனையோரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாரிய குற்றங்கள் புரிந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் கூறினாலும், ஏனையோரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

   

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தின் நிறைவில், பாரிய குற்றங்களை புரிந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். இது குறித்து ஊடகவியலாளர்கள் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பினார்கள். அவர் மேலும் தெரிவிக்கையில், ’85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது. அதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. 85 பேரில் 3 பேருக்கு உடனடியாக புனர்வாழ்வு அளிக்கக் கூடியதாக இருந்தது. அந்த விடயத்தினை உடனடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுக்கும் அறிவித்திருக்கின்றேன். அதனைத் தொடர்ந்து 20 பேரை பிணையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த அரசியல் கைதிகளுக்கு பிணை விண்ணப்பம் செய்யுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாகவும் அறிவுறுத்தல்கள் சென்றிருப்பதாக நான் அறிந்துள்ளேன். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படும் 30 அரசியல் கைதிகள் எவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார்களோ, அதேபோல் மேல் நீதிமன்றில் விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற கைதிகளும் கூட பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாங்கள் இவை எவற்றினையும் எதிர்க்கவில்லை. ஏனெனில் முதற்கட்டமாக பிணையில் சென்றதுடன், கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவதும் வரவேற்கத்தக்க விடயங்கள்.

இதை இந்த பிரச்சினைக்குரிய தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. முழு அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கை. ஒவ்வொரு கட்டமாக ஒவ்வொரு நிலையில், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதை முன்னேற்றகரமான விடயமாக கருதுகின்றோம். பாரிய குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தவிர ஏனையோருக்கு தான் இந்த பிணை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும், நானும் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போது, அரசியல் கைதிகளிற்கு விளக்கமாக தெரிவித்திருந்தோம்.

சில வழக்குகளை பாரிய குற்றங்களாக அரசாங்கம் பார்க்கின்றார்கள் என்றால், அதை அப்படியே வைத்து விட்டு, ஏனையோர்களை முதலில் விடுவிக்க வேண்டும். மற்றவர்களின் விடுதலையை உறுதி செய்து விட்டு, அதன் பின்னர் பாரிய குற்றங்கள் என்ன, ஏன் பாரிய குற்றங்கள் என்பது பற்றி ஆராய வேண்டும். பாரிய குற்ற வழக்குகள் என 15 வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் சொல்லியிருக்கின்றார்கள். பாரிய 15 வழக்குகளிலும் 30ற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இருக்கலாம். ஆனைத்து சந்தேக நபர்களுக்கும் ஒரே மாதிரியான ஈடுபடுகள் அந்த குற்றச்செயல்களுடன் இருக்காது.

உதவி செய்தவர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யாதவர்கள் எனப் பலர் இருக்கின்றார்கள். ஆகவே, சந்தேக நபர்களின் ஈடுபாட்டினையும் அடிப்படையாக வைத்து, அந்த வழக்குகளை பற்றி பேசுகின்ற போது, அவர்களையும் கட்டம் கட்டமாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்போம். இறுதியில், எவ்வளவு தான் பாரிய குற்றமாக இருந்தாலும், அவர்கள் நீண்டநாள் சிறையில் இருந்தவர்களாக இருந்தால், இவர்கள் இதுவரை சிறையில் இருந்த காலத்தினை கணக்கில் எடுத்து எவ்விதமான பாரிய குற்றமாக இருந்தாலும், அவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுப்போம். ஒரே நடவடிக்கையில் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையாக இருக்கப் போவதில்லை. இது பகுதி பகுதியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கையாக இருக்கப் போகின்றது.

இந்த நடவடிக்கையில் அனைவரும் சற்று பொறுமை காக்க வேண்டும். கடந்த 6 வருட காலமாக ஒரு அரசியல் கைதியும் கூட விடுவிக்கப்படாத நிலை இருந்தது. ஆந்த 6 வருட காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான பல முற்சிகளை மேற்கொண்டிருந்தோம். பழைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம். சிறைச்சாலைகளுக்கு கடிதம் கொடுத்திருந்தோம். அரசாங்கம் வெளிநாடுகளுக்கும் கூட உறுதியளித்திருந்தது. ஆனால், இவை எதுவும் நடக்காமல் இருந்தது.

சிறிது சிறிதாக ஏதோ நடக்க ஆரம்பித்துள்ளது. அதில் எமக்கு திருப்தியில்லை. திருப்தியில்லாமல் இருந்தாலும் கூட ஏதோ ஒன்று நடக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் கைதிகள் இப்போது சரி வீட்டிற்கு செல்ல ஆரம்பித்துள்ளார்கள் என்பதனையும் நாங்கள் மறந்துவிடக்கூடாது’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=145916&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழரசு said:

பாரிய குற்றங்கள் புரிந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் கூறினாலும், ஏனையோரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

இந்த காமெடி சீன் நினைவுக்கு வந்து தொலைக்குது...தருமி :cool:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடி மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் .....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமே இல்லப் போலுள்ளது. இது சுமந்திரன் போன்ற முட்டாள்களுக்குப் புரியாது. இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டே மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் போல் தெரிகின்றது!

நாட்டில் மக்கள் சுமந்திரனை தமது பிரதிநிதியாக தெரிவுசெய்ததே இதற்காத்தான் .கொழும்பில் இருந்து தமிழர்களை ஒருநாளில் வெளியேற்ற கோத்தா முடிவெடுத்தபோது சட்டரீதியில் அதை அணுகி அதை தடுத்தவர் சுமந்திரன் .இதை கனேடிய டி வி பேட்டியில் சிறிதரனே சொன்னார் .

கூட்டமைப்பில் படம் காட்ட நாலு எம்பிமாரும் உண்மையாக மக்களுக்கு செயலாற்ற சிலரும் இப்போ இருக்கினம் .

சுமந்திரனின் சேவை நாட்டுக்கு தேவை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ...வரும் முன் காத்த வீரன் சுமந்திரன்....ஆகா ஓகோ.

பழைய வரலாறு தெரியாத பாப்பாக்கள் அருவரி நிலாக்கதையுடனே காலத்தை கழிக்கின்றார்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருமுறை ஆஸி வழங்கினால் ......
இதுக்கு மேலையும் செய்வார்.

நிலாகதை காரருக்கும் நல்ல களிப்பாக இருக்கும்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.... போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 

ஜந்துக்கள் பூசிக்ளையும் கொசுக்களையும் 
கடந்ததுதான் மனித வாழ்வு.
இதை புரிந்துகொண்டாலே போதுமானது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.