Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா அமெரிக்காத் தமிழர்களிற்கு காத்திருக்கும் செய்தி என்ன? விடுதலைப்புலிகளுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தொடர்பு படுத்த முயற்சியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா அமெரிக்காத் தமிழர்களிற்கு காத்திருக்கும் செய்தி என்ன? விடுதலைப்புலிகளுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தொடர்பு படுத்த முயற்சியா?
Peter December 12, 2015 Canada

இன்று உலகின் பிரபல தொலைக்காட்சி ஊடகமொன்று ஐ.எஸ்.ஐ.எஸ் எவ்வாறு ஆயுதங்களைப் பெறுகின்றது என்பது பற்றி செய்தியை ஒளிபரப்பியது.

அந்த ஒளிப்பதிவு அவர்களது இணையத்தில் உள்ளீடு செய்யப்பட்ட போது அதனை பார்த்தவர்களிற்கு அங்கு குழப்பமான ஒரு செய்தி காத்திருந்தது. அந்தச் செய்திக்கான குரல் விவரணம் ஒலி வடிவில் வந்து கொண்டிருக்க வீடியோவிற்கு பதிலாக அங்கு இரண்டு புகைப்படங்கள் இடம்பெற்றன.

அதில் ஒரு புகைப்படம் பல நபர்களின் முகங்கள் கலந்ததாக இருந்தது. அந்தப் புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக வந்த புகைப்படமும் இதே போன்றதாகவே இருந்தாலும் அதில் காட்டப்பட்ட மற்றைய புகைப்படத்தில் மைத்திரியும் விடுதலைப்புலிகளின் தலைவரும் சில பார்சல்களும் குறிப்பாக அவற்றில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் வார்த்தைகள் விவரமாகக் காட்டப்பட்டிருந்தன.

சிவப்பு நிறப் பிண்ணனியில் மஞ்சள் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டிருந்த அந்தத் தமிழ் வார்த்தைகள் “கனடா அமெரிக்காவிற்கு மாத்திரம்” என தெளிவாக இருந்தன. எனினும் மீண்டும் அந்தச் செய்தியை ஒளிப்பதிவைப் பார்த்த போது அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய வீடியோ விவரணம் வந்தது. இந்த நிலை அந்த செய்தி பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிற்கே நீடித்தது. இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.

இது அந்த நிறுவனம் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான செய்திகள் எதனையும் வைத்திருக்கிறதா? அல்லது கனடா அமெரிக்காவிற்கு வந்த பிரச்சாரப் பொருட்களோ அல்லது வேறு ஏதோ பொருட்களோ கைப்பற்றப்பட்டனவா என்ற செய்தியை எழுப்பினாலும் மைத்திரியின் புகைப்படத்துடன் அந்தச் செய்தி முகப்பு இருந்ததால் அது பழைய செய்தியாக இருக்க முடியாது என்ற நோக்கமே ஏற்பட்டது.

அமெரிக்க இராஜாங்க அமைப்பின் 2014ம் ஆண்டிற்கான பயங்கரவாதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையில் விடுதலைப்புலிகள் செயற்பாடுகள் இலங்கையில் முற்றாக இல்லாது போய்விட்டாலும் விடுதலைப்புலிகளின் நிதிக்கட்டமைப்பு கனடா உள்ளிட்ட புலம்பெயர்ந்த தேசங்களில் இன்னமும் செயற்பட்டு வருகின்றது என்றும்,

விடுதலைப்புலிகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நிலைகள் மீதான தாக்குதல் முனைப்புக்களை மேற்கொண்டார்கள் எனவும் அது தொடர்பாக 14 பேர் மலேசியாவிலும் இந்தியாவிலும் கைது செய்யப்பட்டார்கள் என்றும் அது ஏற்கனவே தெரிவித்திருந்தது.

- See more at: http://www.canadamirror.com/canada/54011.html#sthash.YC1H6Puz.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் மொடரேட் குரூப் வளர்க்கிறம் என்று ஆயுதப் பயிற்சியும்.. இராணுவ தளபாடங்களும்.. நிதி உதவியும் அளிக்கும் அமெரிக்க எடுபிடிக்குழுக்கள் தான் ஐ எஸ் உடன் தொடர்பில் உள்ளன. இவற்றை மறைக்க அமெரிக்காவும் அதன் வால் கனடாவும் இன்னும் என்னென்னவோ திருகு தாளங்களை எல்லாம் செய்வினம். அதுவும் புலிகள் மெளனமான பின்னர்.

அமெரிக்கா சிரியாவில் வளர்த்து வரும் பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பில் வெளி வரும் மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் மெளனம் சாதிப்பதோடு.. அந்தப் பயங்கரவாதக் குழுக்களுக்கு மொடரேட் குரூப்கள் என்று பெயரிட்டு தங்கள் செல்லப்பிள்ளைகளாக பாதுகாத்து வருகின்றனர். அதன் ஒரே நோக்கம்.. சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பை அவர்கள் மூலம் அதாவது வன்முறை.. படுகொலைகள்.. தற்கொலைப்படை தாக்குதல்கள்.. குண்டுவெடிப்புக்கள் மூலம் சாத்தியமாக்குவது. இதில் அமெரிக்கா தன்னை ஜனநாயகம் போதிக்கும் நாடாக காட்டிக்கொள்ளவும் விரும்புவது தான் வேடிக்கை.

சிரியாவின் அரச படைகளை விட அமெரிக்கா வளர்த்து வரும் குழுக்கள் செய்யும் மனித உரிமை மீறல்கள் தான் சர்வதே மனித உரிமை அமைப்புக்களால் வலுவாகக் கண்டிப்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதில் இருந்து கவனத்தை திருப்ப அமெரிக்கா தேவையான நரிவேலைகளை செய்ய ஒருபோதும் தயங்காது. அமெரிக்கா என்றும் நம்பக் கூடிய நாடு அல்ல. அதன் கொள்கை யூஸ் அன்ட் துறோ. இது எல்லா ஆதிக்க சக்திகளுக்கும் உள்ள பொதுக்குணம் என்றாலும் அமெரிக்கா இதில் கைதேர்ந்த நாடு. கனடா அதன் எடுபிடி.  :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எங்கள் அர்ஜுனர் என்ன சொல்லுகிறர் என்று பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஊடகங்களில் வரும் செய்தியை எல்லாம் நம்பிக் கொண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.