Jump to content

பீர்க்கங்காய் கொத்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பீர்க்கங்காய் கொத்சு
பீர்க்கங்காய் கொத்சு

Posted By: ShanthiniPosted date: December 15, 2015in: அறுசுவை
தேவையானவை

பீர்க்கங்காய் – அரை கிலோ
புளி – நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 10
கடுகு – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள், மிளகுத்தூள்
சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை
பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும்.

அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுதூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிஸ. சாதத்துடன் பரிமாறவும்.

http://onlineuthayan.com/lifestyle/?p=10223

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் பீர்க்கங்காய் என்டால் என்ன என்று கேட்க மாட்டேன்.இணைப்பிற்கு நன்றி கறுப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இனி மேல் பீர்க்கங்காய் என்டால் என்ன என்று கேட்க மாட்டேன்.இணைப்பிற்கு நன்றி கறுப்பி

sleeping dog

பரவாயில்லை.....நாயனார் நித்திரை :cool:

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

இனி மேல் பீர்க்கங்காய் என்டால் என்ன என்று கேட்க மாட்டேன்.இணைப்பிற்கு நன்றி கறுப்பி

 

2 hours ago, குமாரசாமி said:

sleeping dog

பரவாயில்லை.....நாயனார் நித்திரை :cool:

குமாரசாமி அண்ணை சும்மா வெருட்டி இருக்கிறார். இது கடிக்கும்போல தெரியவில்லை. இது அச்சா பிள்ளை, வேற வைச்சிருந்தாலும் வைச்சிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீர்க்கங்காய் ஊரில் சந்தையில் பார்த்த நினைவு இல்லை. என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

26 minutes ago, கிருபன் said:

பீர்க்கங்காய் ஊரில் சந்தையில் பார்த்த நினைவு இல்லை. என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். :rolleyes:

கிருபன் குமாரசாமி அண்ணையின்ர கடியனிட்டை இருந்து ரதி இப்பதான் ஒருமாதிரி தப்பி இருக்கிறா. நீங்க கடிவாங்கித்தான் தீருவன் என்ன பந்தயம் என்று களத்தில குதிச்சிருக்கிறீங்க. பாவம் கடியன் வேற நித்திரை - இப்ப தப்பீட்டீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

பீர்க்கங்காய் ஊரில் சந்தையில் பார்த்த நினைவு இல்லை. என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். :rolleyes:

கிருபன் ஊரில் நீங்கள் இதைப் பாவித்திருப்பீர்கள், உணவாக இல்லாவிட்டாலும் ஊத்தை உரஞ்சுவதற்கு முத்திய காய் வேலியில் காய்ந்து கிடக்கும், பிடுங்கிவந்து முதுகு தேய்த்திருப்பீர்கள்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/16/2015 at 10:25 AM, suvy said:

கிருபன் ஊரில் நீங்கள் இதைப் பாவித்திருப்பீர்கள், உணவாக இல்லாவிட்டாலும் ஊத்தை உரஞ்சுவதற்கு முத்திய காய் வேலியில் காய்ந்து கிடக்கும், பிடுங்கிவந்து முதுகு தேய்த்திருப்பீர்கள்...!  :)

அடடா.. பொச்சு மாதிரி இருக்குமே! அதுவா!!!

ஊத்தை உரஞ்ச எல்லாம் பாவிக்கவில்லை. எங்கள் தோட்டத்துக் கிணத்தடியில் இருந்தது. நாலாம் வகுப்பில் தூக்கணாங்குருவியைப் பற்றி படித்தபின்னர் குருவிக்கூடு தேடித் திரிந்தபோது காஞ்சு மரத்தில கிடந்த இவற்றை தூக்கணாங்குருவிக்கூடு என்று நினைத்து குருவிகளைப் பார்க்க விடிய விடிய போய்ப் பார்த்த ஞாபகம். ஒருநாளும் குருவி வந்தபாடில்லை! ஆனால் பீர்க்கங்காய் என்று அறிந்ததில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே..அதே....! அதைப் பார்த்துத்தான் இஞ்ச ஸ்பான்ச்சே செய்தவங்கள் என்டால் நம்பவா போறீங்கள்....!  :)

img_9523.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அடடா.. பொச்சு மாதிரி இருக்குமே! அதுவா!!!

ஊத்தை உரஞ்ச எல்லாம் பாவிக்கவில்லை. எங்கள் தோட்டத்துக் கிணத்தடியில் இருந்தது. நாலாம் வகுப்பில் தூக்கணாங்குருவியைப் பற்றி படித்தபின்னர் குருவிக்கூடு தேடித் திரிந்தபோது காஞ்சு மரத்தில கிடந்த இவற்றை தூக்கணாங்குருவிக்கூடு என்று நினைத்து குருவிகளைப் பார்க்க விடிய விடிய போய்ப் பார்த்த ஞாபகம். ஒருநாளும் குருவி வந்தபாடில்லை! ஆனால் பீர்க்கங்காய் என்று அறிந்ததில்லை. 

இது சந்தைக்கு வராது. ஏனெண்டால் பிசுக்கங்காய்க்கு சந்தையிலை பெரிசாய் மார்க்கெட் இல்லை. சனம் வாங்கவே வெட்கப்படும். ஏனெண்டால் இது ஏழைகளின் மரக்கறி கண்டியளோ!! தோட்டக்காரனும் சாப்பிடுவான்.:(
பிசுக்கங்காயிலை பால் கறிவைக்க அந்தமாதிரி இருக்கும்.tw_thumbsup:

ஊரிலை முருங்கை இலை முசுட்டை இலை குறிஞ்சா இலை வறை சாப்பிடுற சனத்தை நக்கலாய்/பரிதாபமாய் பார்த்த சனம்....இப்ப இஞ்சை வெளிநாடுகளிலை டபுளுக்கு றிபிள் விலைகுடுத்து வாங்கி சாப்பிடினம். ஏனெண்டால் உடம்புக்கு நல்லதாமெல்லே.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் அண்ணா...ஊரிலே இருக்கேக்குள்ள இந்த இலை,குழைகளை அம்மா சமைச்சு தந்தால் சாப்பிடாமல் களவாய்க் கொண்டு போய் கொட்டுறது...இங்கே எவ்வளவு விலை கொடுத்து வாங்கி சமைச்சு சாப்பிடுறம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.