Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி உறுப்பினர்களை விடுதலை செய்தது போன்று, இராணுவ புலனாய்வாளர்களை விடுதலை செய்யவேண்டும்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலி உறுப்பினர்களை விடுதலை செய்தது போன்று, இராணுவ புலனாய்வாளர்களை விடுதலை செய்யவேண்டும்:

16 டிசம்பர் 2015

புலி உறுப்பினர்களை விடுதலை செய்தது போன்று, இராணுவ புலனாய்வாளர்களை விடுதலை செய்யவேண்டும்:
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்தது போன்று, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்களை விடுதலை செய்யவேண்டும் என அவர்களது  உறவினர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கைதுசெய்யபட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் குடும்பத்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பொன்றின் ஏற்பாட்டாளர் மேஜர் அஜித் பிரசன்ன இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் விடுதலையின் போது நீதி நடைமுறையெதுவும் பின்பற்றப்படவில்லை, மாறாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆகவே இராணுவ புலனாய்வாளர்களையும் அதேவிதத்தில் விடுதலை செய்யவேண்டும்.

இவர்களிற்கு எதிராக குற்றப ;பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அரசாங்கம் ஏன் இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை தெளிவுபடுத்தவேண்டும். அவர்கள் என்ன பயங்கரவாத செயலில் ஈடுபட்டனர்?

தமிழ்தேசிய கூட்டமைப்பையும் புலம்பெயர் அமைப்புகளையும் திருப்திப் படுத்துவதற்காகவே அரசாங்கம் முன்னாள் விடுதலைப் புலிகளை விடுதலை செய்கின்றது, இந்த நாட்டிற்கு எதிராக பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களை அரசாங்கம் விடுதலைசெய்கின்றது. அதேவேளை நாட்டிற்காக தியாகங்களை செய்தவர்களை கைது செய்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126929/language/ta-IN/article.aspx
 

  • கருத்துக்கள உறவுகள்

சந்தியா எக்னெலிகொட மகிந்த தான் தனது கணவரை கடத்தி கொலை செய்ததாக கூறுகிறார். ஆகவே மகிந்த அரசின் அடி பொடிகள் முதலில்  விசாரிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ புலனாய்வாளர்கள் அனைவருமே மனிதகுலத்துக்கு எதிராக செயற்பட்ட குற்றவாளிகள். இவர்களைத் தப்பவிடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம்.. இனப்படுகொலை.. மனித குலத்துக்கு எதிரான செயல்களை செய்த சிங்கள இராணுவ இயந்திரமும் அதன் புலனாய்வுப் பிரிவும் வேறு வேறல்ல. எல்லாம் ஒன்று தான். இதில் முஸ்லீம்கள் பலர் இருந்தனர். இன்று அவர்கள் தலைமறைவாகி இயங்குகின்றனர். கொழும்பில் கிழக்கில்..நிகழ்ந்த பல கைதுகள் சித்திரவதைகள்.. காணாமல் போதல்களுடன் முஸ்லீம் சிங்கள இராணுவ அடிவருடி புலனாய்வாளர்கள் காரணமாக இருந்தனர். இவர்களையும் போர்க்குற்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.