Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அமெரிக்காவின் காலனியாக மாற்றமடைந்துள்ளது: திஸ்ஸ விதாரண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அமெரிக்காவின் காலனியாக மாற்றமடைந்துள்ளது: திஸ்ஸ விதாரண
[ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 02:45.40 AM GMT ]
tiss_viththarana_002.jpg
இலங்கை அமெரிக்காவின் காலனியாக மாற்றமடைந்துள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.

லங்கா சமசமாஜ கட்சியின் 80ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்கில் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று ஒரு வருட காலத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் மக்களின் வரிச் சுமை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அமெரிக்காவின் 5 பிரதான தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

பரக் ஒபாமா மட்டுமே இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை. இவ்வாறு சென்றால் விரைவில் பரக் ஒபாமாவும் இலங்கைக்கு விஜயம் செய்வார்.

இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் விரைவில் இலங்கை அமெரிக்காவின் காலனியாக மாற்றமடைந்துவிடும்.

பிழையான ஓர் பயணத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளினால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுவர்.

நாள்தோறும் நாட்டில் பொருட்களின் விலைகள் உயர்வடைகின்றன. வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவும் அப்பாவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் செல்வந்தர்களுக்கு 24 வீத வரி செலுத்த நேரிட்டது எனினும், தற்பொதைய அரசாங்கம் அந்த வரித் தொகையை 15 வீதமாக குறைத்துள்ளது.

கம்பனின் 28 வீத வரியை செலுத்தி வந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் அதனை 15 வீதமாக குறைத்துள்ளது.

எனினும் சாதாரண பொதுமக்கள் மீது வரிச் சுமை திணிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்pன் பிழையான வரிக் கொள்கைகளினால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தே ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டது எனினும் அந்த வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்படவில்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு அவரது தேசத்தின் உரிமைகளை கொடுக்கமறுத்ததன் விளைவு இது

தொடரப்போகிறீர்களா....??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்காலை ஜேவிபி நீலிக்கண்ணீர் வடிக்குது kks சீமெந்து  தொழில்சாலயை பாகிஸ்த்தான்காரனுக்கு வித்துபுட்டானுக என்று !

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் தவறுகளை எடுத்துக்காட்டி விமர்ச்சிப்பது எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பல்லவா..? இந்தப் பொறுப்பை பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் ஒப்படைத்தது யார்..?? :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/16/2015 at 4:45 PM, Paanch said:

அரசாங்கத்தின் தவறுகளை எடுத்துக்காட்டி விமர்ச்சிப்பது எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பல்லவா..? இந்தப் பொறுப்பை பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் ஒப்படைத்தது யார்..?? :grin::grin:

எதிர் கட்சி தலைவர் தான் அரசாங்கத்தோடு இரண்டறக் கலந்து விட்டாரே . அவர் எப்படி அரசை விமர்சனம் செய்யிறது? சுமந்திரனையும் மாவையையும் கொண்டு அப்பப்ப அறிக்கை மட்டும் தான்  விடுவார்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.