Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு

Featured Replies

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ~தமிழ் மக்கள் பேரவை| என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல, எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ அல்லது போட்டியானதோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டபோதிலும், அந்த அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உறுப்பினர்கள், அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவை அந்த அமைப்பின் நோக்கம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

இந்தப் பேரவையின் கூட்டுத் தலைவர்களில் ஒருவராகச் செயற்படும் மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிற்றம்பலம் உட்பட பெரும்பாலானோர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் கூட்டமைப்பு பிளவுபட்டுவிடுமோ என்ற கவலை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. பொதுத் தேர்தலில் 16 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது கூட்டமைப்பு. நான்கு மாதத்துக்குள் கூட்டமைப்பு இப்படியான நெருக்கடியை எதிர்நோக்கவேண்டி வரும் என்பது எவரும் எதிர்பாராததொன்றாகும்.
கூட்டமைப்பு மூலம் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தும் பொதுத் தேர்தல் பிரசாரங்களின்போது கூட்டமைப்பு மேடைகளில் ஏற மறுத்தவர் முதல்வர் விக்னேஸ்வரன். அத்துடன் நின்றுவிடாது, கூட்டமைப்புக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டவர். அப்படி இருந்தும் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பொறுமை காத்தார். அன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்ய நிலைமை ஏற்பட்டிருக்காது. கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு தலைவர் சம்பந்தனுடன் ஒரு வார்த்தைகூட பேசாது பேரவை அமைத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் இணைந்துகொண்டதுதான். போதாக்குக்கு கருணா அம்மானும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டவர்கள், கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், எம்.பியாக முடியாது ஏமாந்து போனவர்கள், பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோற்றுப்போனவர்கள் ஆகியோரின் சங்கமமாகவே இந்தப் பேரவையை நாம் கருதமுடியும்.
இந்தப் பேரவை அரசியல் கட்சி அல்ல, எந்தக் கட்சிக்கும் மாற்றீடானது அல்ல என்று கூறப்பட்டாலும் பேரவை நிச்சயமாகக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் ஒன்றாகவே இருக்கப்போகிறது என்பது வெளிப்படையான உண்மையாகும். ~தமிழ் மக்கள் பேரவை| கூட்டமைப்பை உடைக்கக்கூடிய, சிதைக்கக்கூடிய ஓர் அமைப்பு என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்கமுடியாது.

இப்படியான நிலையில், கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் நேற்றுமுன்தினம் ~சுடர் ஒளி|க்குக் கருத்துத் தெரிவிக்கையில், கூட்டமைப்பை எவரும் பிளவுபடுத்த முடியாது என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு பிளவுபடுமானால் முதலில் மகிழ்ச்சி அடைபவர்கள் விமல் வீரவன்ஸ போன்ற தென்னிலங்கை இனவாதிகள்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
இந்தப் பேரவை அமைக்கப்பட்டது தொடர்பாக கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். இது குழப்பத்துக்கே வழி வகுக்கும்” என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ‘தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்துக்கு இப்போது என்னால் பதிலளிக்க முடியாது. பொறுத்திருந்துதான் பதில் வழங்குவேன்” – என்றும் தனது வழமையான பாணியில் தெரிவித்துள்ளார் தலைவர் சம்பந்தன். ஆனால், கூட்டமைப்புத் தலைவர் தொடர்ந்து அமைதி காக்க முடியாது. கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பின்பு ஓர் அமைப்பை உருவாக்குவது வேறு விடயம். ஆனால், கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டே கூட்டமைப்பின் எதிரிகளையும் உள்வாங்கிக் கொண்டு செயற்படுவது கூட்டமைப்புக்கு மட்டுமல்ல, கடந்த தேர்தலில் கூட்டமைப்பைத் தமது ஏக பிரதிநிதிகளாகத் தெரிவு செய்த வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் அனைவருக்கும் விடுக்கப்படும் சவால் ஆகும்.

தமிழ் மக்களுக்கான ஒரு விடுதலையை எட்டக்கூடிய வகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் சூழ்நிலைகள், சந்தர்ப் பங்கள் தற்பொழுது ஓரளவு உருவாகி வருகின்றன. அதனை இல்லாமல் செய்வதற்கு, குழப்புவதற்கான முயற்சியாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.
 

Edited by Sooravali
முதலில் பதிந்த செய்தி ஏற்கனவே இணைக்கப்பட்டதனால் அதை அகற்றி இந்த கட்டுரையை இணைக்கிறேன்.

ஒன்றுமே இந்தப் பேரவையால் செய்ய முடியாது. வேண்டுமானால் பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த தேர்தலில் சைக்கிள் காரர்கள் இந்த அமைப்பை தமது நலன்களுக்காகப் பிரமாதமாகப் பயன்படுத்துவார்கள். கருணாவைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனாலும் கூட்டமைப்பை வீழ்த்துதல் என்பதில் இவர்களுக்குள் ஒரு பொதுவான உடன்பாடு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் வியத்தகு சாதனைகளின் முன்னாள் பேரவையை பற்றி கவலைப்படுவது நேரவிரயம் இறைவன் 

18 minutes ago, பெருமாள் said:

கூட்டமைப்பின் வியத்தகு சாதனைகளின் முன்னாள் பேரவையை பற்றி கவலைப்படுவது நேரவிரயம் இறைவன் 

கூட்டமைப்பின் சாதனையல்ல வியத்தகு விடயம். எதற்க இவையெல்லாம்? என்பதுதான் கேள்விக்குரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவாகிய ஜனநாயகவாதிகள் ஓடி ஓடி தீர்வு பற்றி ரகசியமாய் கதைப்பதுக்கு பெயர் வியத்தகு என்பது இன்றுதான் கேள்விபடுகின்றன் மன்னிக்கனும் இறைவன் எனக்கு இந்தளவுக்கு தமிழ் அறிவு இல்லை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

உதிரிக்கட்சிகளால் தான் சிங்கள கட்சிகளுக்கும் டக்ளஸ் போன்றவர்களுக்கும் வடக்கு கிழக்கில் ஆசனங்கள் கிடைத்தன. இதனை இட்டு புதிதாக முளைக்கும் கட்சிகள் , கூட்டமைப்பு என்பன சிந்தித்து பொறுப்பாக செயலாற்ற வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.