Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றில் இடம் பிடிப்பாரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ?

Featured Replies

வரலாற்றில் இடம் பிடிப்பாரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ?
 
வரலாற்றில் இடம் பிடிப்பாரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ?

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகத் தமது சொந்த நிலங்களை, தொழில்களை இழந்து முகாம்களில் கையேந்தி வாழும் தமிழ் மக்களது  பிரச்சினைகளை அரசு தட்டிக்கழித்தே காலத்தைக் கடத்துகின்றது.  வலி.வடக்கு மக்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையால் மூடப்பட்டு, தமது சொந்தக்காணிகளுக்குச் செல்லவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேசம் வடக்கின் விவசாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. எவரது உதவிகளையும் எதிர்பாராது தமது சுய உழைப்பின் மூலம்  செல்வாக்குடன் வாழ்ந்த இந்த மக்கள் தமது சிறிய தேவைகளுக்குக்கூட அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்குத்  திட்டமிட்டே தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் நிலங்களில் உல்லாச விடுதிகளை அமைத்தும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் படையினர் தமது பணிக்குப் புறம்பான வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்க, தமது அன்றாட சீவியத்துக்கே இந்த மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

PresidentSirisenaProf1.jpg

 அரசுக்குத் தொடர்ச்சியான கோரிக்கைகள் தமது சொந்த இடங்களில் குடியேறத்தம்மை அனுமதிக்குமாறு அரசுக்குத் தொடர்ச் சியாகக் கோரிக்கைகளை விடுத்தபடி இருக்கும் இந்த மக்கள், அதற்காக உணவுத் தவிர்ப்புப் போர், ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் அடுக்கடுக்காக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டங்களை நடத்தி,  நீதிமன்றத்தில் தமக்கு நீதி கேட்டுத் தொடர்ச்சியான நடவடிக் கைகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், அவர்கள் அரசால் கைவிடப்பட்ட பிரசைகளாகவே உள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் என அரசுத் தலைவர்கள் அடிக்கடி வடக்கு வருகை தரும் போதெல்லாம் வலி.வடக்கு மக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடம் முன்வைத்தபோதும், எல்லாம் வெல்லலாம் என்ற ரீதியில் ஏதாவது ஒரு பதிலைக் கூறிச் சமாளித்து, வடபகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; என்றெல்லாம் மக்களை நம் பவைத்துச் சென்று விடுகின்றனர். எனினும் நிலைமையில் சிறிதளவு மாற்றம்கூட நிகழ்வதாக இல்லை. இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த ஓர் அரசுக்கு எத்தனை ஆண்டு கால அவகாசம் தேவை? எங்களுக்கு உங்களது எந்த உதவியும் தேவையில்லை. எங்களை எமது காணிகளில் குடியேற அனுமதியுங்கள் என்பது மட்டுமே அந்த மக்களின் கோரிக்கை. தென்பகுதியில் உள்ள மக்களை தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்ற வேண்டும். தமிழ் நிலங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற சிந்தனையுடன் தமிழ்ப் பகுதியில் உள்ள காடுகளை அழித்து துரித குடியேற்றங்களை மேற் கொள்ள முனைப்புடன் செயற்படும் அரசும் அதன் அதிகாரிகளும் தமிழ் மக்கள் தமது சொந்தக் காணிகளில் குடியேறுவதை மட்டும் அனுமதிக் காது எதற்காகக் காலம் கடத்தவேண்டும்? வடக்கில் உள்ள படையினர் தமது வருமா னத்தை அதிகரிக்க இந்த நிலங்களைப் பயன் படுத்திக் கொள்ளட்டும் என்பதற்காகதானா?

உயர் பாதுகாப்பு வலயம் போர் முடிவடைந்து மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறும் நிலைவந்தும்கூட, உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வள மான பூமிகளைத் தமதாக்கிக் கொண்டு ஏனைய பகுதிகளை வறண்ட தரிசு நிலங் களாக மாறும் சூழ்நிலையை உருவாக்கிய முன்னைய ஆட்சியின் அடிச்சுவட்டை தொடர இன்றைய அரசும் தயாராகிவிட்டதா? ஆட்சி மாற்றம் ஒன்றின்கீழ் மகிந்த ஆட்சியின் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளியிடக் காரணமாக இருந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, நேர்மையான, நீதியான தீர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன அரசிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை சிதைந்து கொண்டு போவதுபோல் தென்படகின்றது. தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் எந்த ஒரு பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காண்ப்பட்டதாக இல்லை. காணாமற்போன உறவுகளுக்காக அவர்களின் நிலை என்ன? அவர்களைக் காண்பியுங்கள், விடுவியுங்கள் என்று ஒரு சாரார் கண்ணீர் சிந்த, எந்தவிதக் குற்றமும் இன்றிச் சிறையில் வாடும் தமிழ்க்கைதிகள் தம்மை விடுவிக்கக் கோரி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்க, அதிகரித்துக் கொண்டிருக்கும் வன்முறைகளையும் துன்பியல்களையும் நிறுத்துங்கள் என்று கோசமும் ஊர்வலங்களுமாக மக்கள் வீதிகளில் இறங்க, இப்போது வலி.வடக்கு மக்கள் பிரச்சினைக்கு ஆறு மாதங்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதி கூறியுள்ளார்.  

1451126543_ranil.jpg

 

ஜனாதிபதியின் உறுதிமொழி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அவர் அளித்திருந்த உறுதி மொழி பின்னர் நிறைவேறமுடியாத நிலை இருந்தது. அதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காரணமாக இருந்தார். இப்போது வலிகாமம் வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியும் இறுதியில் நிறைவேறாமல் போவதற்கு பிரதமரோ இராணுவமோ காரணமாவதற்கு ஜனாதிபதி அனுமதிக்கக்கூடாது. இந்த விடயத்திலாவது நல்லாட்சிக்கான ஓர் அடையாளத்தை, சமிக்ஞையைக் காட்ட அவர் திடம் கொண்டவராக வேண்டும். மகிந்த தரப்பினர் வடக்குக்கு வந்து இங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிய வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழில் இருந்து விடுத்த அழைப்பு நியாயமானதே. காப்பெற் வீதிகளைப் போடுவித்து,  அலுங்காமல் குலுங்காமல் நகருக் குள் வந்து சென்ற முன்னைய ஜனாதிபதி மகிந்த, ஒருதடவை குடாநாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டால்தான் எவ்வளவுக்கு தமிழ் மக்கள் மீது கொடூரமாக நடந்துள்ளேன் என்பதைத் தெரிந்து கொள்ளுவார் என்ப தால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பார். ஒரு நல்ல ஜனாதிபதியாக மட்டுமன்றி, ஒரு நல்ல மனிதராகவும் வாழவிரும்பும் சாதாரண விவசாயி ஒருவரின் மகன், தமிழ் மக்களின் பிரச்சினைகளில் காலத்தை இழுத் தடிக்காது, தமது வாக்குறுதிகளை நிறைவேற்றி, மக்கள் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு காண்பதன் மூலம் படுகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையைப் பாதுகாத்த மனிதராக வரலாற்றில் இடம்பிடிக்க  வேண்டும். இடம்பிடிப்பாரா மைத்திரிபால சிறிசேன?

http://onlineuthayan.com/article/62

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் வரலாற்றில் இடம் பெற வேண்டின் அவர் தமிழருக்கு கொடுக்க வேண்டியவற்றை கொடுக்க கூடாது....தமிழ்மக்களின் வரலாற்றில் எந்த சிங்கள தலைவர்களும் இதுவரை இடம்பெறவில்லை இனிமேலும் இடம்பெறப்போவதில்லை..

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

சிங்கள மக்களின் வரலாற்றில் இடம் பெற வேண்டின் அவர் தமிழருக்கு கொடுக்க வேண்டியவற்றை கொடுக்க கூடாது....தமிழ்மக்களின் வரலாற்றில் எந்த சிங்கள தலைவர்களும் இதுவரை இடம்பெறவில்லை இனிமேலும் இடம்பெறப்போவதில்லை..

கூட நாங்களும் எங்களுக்கு இயன்ற அளவு சோரம் போய் அவரை சிங்கள் மக்கள் மத்தியில் வரலாற்று நாயகர் ஆக்கிடுவம். மகிந்தவை ஆக்கிட்டு இப்ப கருணா படுறார் பாடு.. அந்த நிலைக்கு.. சம் சும் மாவை கும்பல் மிக விரைவில் வரும். tw_blush:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

சிங்கள மக்களின் வரலாற்றில் இடம் பெற வேண்டின் அவர் தமிழருக்கு கொடுக்க வேண்டியவற்றை கொடுக்க கூடாது....தமிழ்மக்களின் வரலாற்றில் எந்த சிங்கள தலைவர்களும் இதுவரை இடம்பெறவில்லை இனிமேலும் இடம்பெறப்போவதில்லை..

நிதர்சனமான உண்மை! காலங்கடந்தேனும் வித்துவான்கள் சட்ட வித்துவான்கள் புரிந்துகொள்வார்களா?

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.