Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

சுவையான கடலைப்பருப்பு சட்னி

கடலைப்பருப்பு சட்னி வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இந்த சட்னியை எப்படி செய்வது என்று இப்போது கீழே விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
சுவையான கடலைப்பருப்பு சட்னி
 
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கப்
தேங்காய் துண்டுகள் - 1 கையளவு
வர மிளகாய் - 5
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

கடுகு
கறிவேப்பிலை
உளுந்தம் பருப்பு
பெருங்காயத்தூள்
எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* அடுத்து தேங்காய், வரமிளகாய், தக்காளி, கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு நன்றாக வறுத்து குளிர வைக்கவும்.

* அனைத்தும் நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளறவும்.

* சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!
Edited by நவீனன்
Link to comment
Share on other sites

கசப்பு பாகற்காய்... இனிப்பு ரெசிப்பி!

 

பாகற்காய் சுசியம் (சுகியன்)
 * பாகற்காய்-பாலக்கீரை கார மஃபின்ஸ்
பாகற்காய் பப்படி சாட்
பாகற்காய் மினி கியாக்ரா
பாகற்காய் உருண்டை
கோவா ஸ்டஃப்டு பாகற்காய்

p85.jpg

பாகற்காய் என்றாலே பெரும்பாலும் எல்லோருக்கும் முகம் கோணும். ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் விதமாக அதில் புதுவிதமான ரெசிப்பிகளை  வழங்குகிறார், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியா சதீஷ்!


பாகற்காய் சுசியம் (சுகியன்)

தேவையானவை:
 பாகற்காய் - 1 (பொடியாக நறுக்கவும்)
 மைதா மாவு - அரை கப்
 இட்லி மாவு - அரை கப்
 கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 கொள்ளு - 2 டேபிள்ஸ்பூன்
 துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 கொண்டைக்கடலை (கறுப்பு) - 2 டேபிள்ஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2
(பொடியாக நறுக்கவும்)
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 துருவிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p85a.jpg

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, இட்லி மாவு, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கொள்ளு, துவரம்பருப்பு மற்றும் கொண்டைக்கடலையை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பிறகு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். பருப்புக்கலவை ஆறியதும் தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்து, அத்துடன் பச்சை மிளகாய், பாகற்காய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், அரைத்த பருப்புக்கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். பிறகு, பிடித்து வைத்த ஒவ்வொரு உருண்டையையும் கலந்து வைத்த மாவில் நன்கு புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.


பாகற்காய்-பாலக்கீரை கார மஃபின்ஸ்

தேவையானவை:
 மைதா மாவு - ஒன்றறை கப்
 பொடியாக நறுக்கிய பாகற்காய் - 3 டேபிள்ஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1
(பொடியாக நறுக்கவும்)
 பொடியாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பாலக்கீரை - 3 டேபிள்ஸ்பூன்
 முட்டை - 1
 பால் - முக்கால் கப்
 துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p85b.jpg

செய்முறை:
ஒரு பவுலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஆலிவ் ஆயில் சேர்த்துச் சூடானதும் பாகற்காய் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து வதக்கவும். கீரை வெந்ததும் இறக்கி ஆறவுடவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், முட்டை, பால் சேர்த்து நன்றாக அடித்து, வதக்கிய கீரைக் கலவை, சீஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை மைதா கலவையுடன் சேர்த்துக் கிளறி கப் கேக் மோல்டில் ஊற்றவும். பிறகு, மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரியில் 15 நிமிடம் வைத்து மூடி வேகவைக்கவும். பிறகு, வெளியே எடுத்து, துருவிய சீஸ் தூவி சாஸுடன் பரிமாறவும்.


பாகற்காய் பப்டி சாட்

தேவையானவை:
 பாகற்காய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 மைதா மாவு - ஒரு கப்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - சிறிதளவு
 கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 புதினா - கொத்தமல்லித்தழை விழுது - அரை கப்
 புளி - வெல்லக் கரைசல் - அரை கப்
 தயிர் - அரை கப்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
 பொடியாக நறுக்கிய தக்காளி - 2
 வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்
 ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை)- 1 கப்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையானவை

p85d.jpg

செய்முறை:
பொடியாக நறுக்கிய பாகற்காயுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து, மூன்று முறை பாகற்காயை கழுவவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், பாகற்காயை  பொரித்துக்கொள்ளவும். ஆறியதும் பாகற்காயை மிக்ஸியில் சேர்த்துத் தூளாகப் பொடித்துக்கொள்ளவும்.

பொடித்த பாகற்காயை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் மைதா மாவு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, பிசைந்த மாவினை படத்தில் காட்டியிருப்பது போல சிறிய ரொட்டிகளாகத் தேய்த்து, ஃபோர்க்கால் சில இடங்களில் குத்திவிட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் பப்டி ரெடி.
பப்டியை ஒரு தட்டில் வைத்து, பப்டியின் மீது நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி, புதினா - கொத்தமல்லித்தழை விழுது, மசித்த உருளைக்கிழங்கை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும். பிறகு
புளி - வெல்லக்கரைசல், தயிர், ஓமப்பொடி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


பாகற்காய் மினி கியாக்ரா

தேவையானவை:
 பொடியாக நறுக்கிய பெரிய பாகற்காய் - ஒன்று
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 காய்ந்த மிளகாய் - 3
 முழு மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
 புளி - சிறிதளவு
 கோதுமை மாவு - முக்கால் கப்
 சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

p85c.jpg

செய்முறை:
நறுக்கிய பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள் கலந்து சிறிது தண்ணீர் தெளித்து  15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, தண்ணீரை வடித்து 3 மூன்று முறை பாகற்காயை கழுவவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பாகற்காயைச் சேர்த்து மொறுமொறுப்பாகப் பொரித்து எடுக்கவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து காய்ந்த மிளகாய், முழு மல்லியை (தனியா)ஒன்றன் பின் ஒன்றாகச் தனித்தனியாக வறுத்தெடுத்து ஆறவிடவும். தனியாவை வறுத்தவுடன் புளியைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி எடுத்து ஆறவிடவும். பிறகு, பாகற்காயுடன் வறுத்தவற்றைச் சேர்த்து பவுடராக அரைத்தெடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்து வைத்திருக்கும் பாகற்காய் பவுடர், உப்பு, சாட் மசாலாத்தூள், தண்ணீர் அனைத்தையும் சேர்த்துக் கலந்து மிருதுவாகப் பிசைந்து, மாவை அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை சின்ன சப்பாத்திகளாகத் தேய்க்கவும், தோசைக்கல்லை எண்ணெய் விட்டு சூடாக்கி, அதில் தேய்த்தவற்றைச் சேர்த்து இரு புறமும் வேகவிட்டு எடுக்கவும். காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
சப்பாத்தி உப்பி வராமல் கிரிஸ்பியாக இருக்க, சப்பாத்தி வேகும்போது ஒரு காட்டன் துணியால் சப்பாத்தியின் மீது மெதுவாக அழுத்திவிடவும்


பாகற்காய் உருண்டை

தேவையானவை:
 பொடியாக நறுக்கிய பாகற்காய் - முக்கால் கப்
 உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 10
 பொடியாக நறுக்கிய  பாதாம் - 10
 பொடியாக நறுக்கிய  முந்திரி - 10
 சர்க்கரை - முக்கால் கப்
 இனிப்பு இல்லாத கோவா - 4 டேபிள்ஸ்பூன்
 நெய் - தேவையான அளவு

p85e.jpg

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்து உருகியதும் உலர் திராட்சை (கிஸ்மிஸ்), நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே வாணலியில் மீண்டும் நெய் சேர்த்து, நறுக்கிய பாகற்காயை நிறம் மாறும்வரை வறுக்கவும். பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை உருகியதும் கோவா சேர்த்து நன்றாகக் கிளறவும். இத்துடன் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, உலர் திராட்சை சேர்த்துக் கிளறவும். நெய் பிரிந்து வந்ததும் கலவையை அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறவைத்து,  கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி, காற்றுப்புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்து தேவைப்படும்போது ருசிக்கலாம்.


கோவா ஸ்டஃப்டு பாகற்காய்

தேவையானவை:
 பாகற்காய் - 1 (சிலிண்டர் ஷேப்பில் நறுக்கி கொள்ளவும்)
 சர்க்கரை சேர்க்காத கோவா - ஒரு கப்
 சர்க்கரை - அரை கப் (ஸ்டஃபிங்குக்கு)
 ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
 உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 15
 நறுக்கிய பாதாம் - 10
 டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை -அரைகப் வேகவைக்க
 தண்ணீர் - 2 கப்

p85f.jpg

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து கோவா, சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் சர்க்கரை உருகும்வரை கிளறவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், உலர்திராட்சை (கிஸ்மிஸ்), பாதாம், டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.

பாகற்காயின் தோலை நீக்கி, அதன் விதைகளையும் வெளியே எடுத்துவிடவும். பிறகு, பாகற்காயை அரைவேக்காட்டு அளவுக்கு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரையை கரையவிடவும். சர்க்கரை கரைந்ததும் பாகற்காயை அதில் சேர்த்து
20 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு பாகற்காயை பாகு வடித்து ஒரு தட்டில் எடுத்து வைத்து, கோவா கலவையை அதில் ஸ்டஃப்பாக உள்ளே வைத்து,  விருப்பத்துக்கு ஏற்ப அலங்கரித்துப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

காராபூந்தி ரைத்தா : செய்முறைகளுடன்...!

boonthyyyyy.jpg

தேவையான பொருட்கள் :

  • காராபூந்தி - கால் கப்
  • கெட்டியான தயிர் - ஒரு கப்
  • உப்பு - தேவைகேற்ப
  • வெங்கயம் - ஒன்று
  • சாட் மசாலா - கால் டீஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் தயிர் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

* பிறகு, அதில் சாட் மசாலா, வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடைசியாக காராபூந்தி மற்றும் கொத்தமல்லி தூவி ஸ்பூன் வைத்து பரிமாறவும்.

* சூப்பரான காராபூந்தி ரைத்தா ரெடி.

* இது அனைத்து வகை சப்பாத்தி, பிரியாணி, மற்றும் புலாவ்களுக்கு பொருத்தமாக இருக்கும். காராபூந்தியை கடைசியாக சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

தித்திக்கும் திருக்கார்த்திகை: இலை அடை

 
 
 
 
adai_3102117f.jpg
 
 
 

தீபாவளியின் தொடர்ச்சியாக விளக்குகளின் விழாவான திருக்கார்த்திகை வந்துவிடும். கார்த்திகை மாதத்தில் பகல் பொழுது முடிந்து சீக்கிரமே இரவுப் பொழுது தொடங்கிவிடும் என்பதால் அந்தக் காலத்தில் வீடுகளிலும் வெளியிலும் விளக்குகளை ஏற்றிவைப்பார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றும் மாதம் முழுவதும் மாலை நேரங்களில் விளக்கேற்றுவது வழக்கம். “கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றுவது வழக்கம். பலர் விதவிதமான நைவேத்தியங்களைக் கடவுளுக்குப் படைப்பார்கள்” என்று சொல்கிறார் சென்னை காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த விசாலா ராஜன். கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடிய பலகார வகைகள் சிலவற்றைக் கற்றுத் தருகிறார் இவர்.

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு - 200 கிராம்

வெல்லம் - 150 கிராம்

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

ஏலக்காய்த் தூள், நெய் - தலா ஒரு டீஸ்பூன்

மைதா- கால் கிலோ

உப்பு - சிறிதளவு

வாழை இலை - 2

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை வேகவைத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலை நெய் விட்டு வதக்கிக்கொள்ளுங்கள். ஒரு வாணலியில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து இளகியதும், அரைத்த கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் , சிறிது நெய் விட்டுச் சுருளக் கிளறுங்கள்.

மைதாவுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். வாழை இலையைச் சிறு சிறு சதுரங்களாக வெட்டி எண்ணெய் தடவி , பிசைந்துவைத்த மாவை மெலிதாகத் தட்டுங்கள். அதன் மேல் பூரணம் வைத்து, இரண்டாக மடித்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுங்கள். இந்த இலை அடை நாஞ்சில் நாட்டில் செய்யப்படுவது. மைதாவுக்குப் பதிலாகப் பச்சரிசி மாவையும் பயன்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரபூந்தி என்டால் என்ன?

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

காரபூந்தி என்டால் என்ன?

காரபூந்தி

காரபூந்தி

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 4 ஸ்பூன்
சோடா உப்பு -கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடலை பருப்பு - 4 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

அவ்வாறு கலக்கும் போது மாவுக் மிகவும் சாப்டாகவும் திக்காகவும் இருக்க வேண்டும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்திக் கரண்டியை எடுத்துக் கொண்டு, அந்த கரண்டியை எண்ணெயின் மேற்புறத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, அந்த கரண்டியில் கடலை மாவுக் கலவையை ஊற்ற வேண்டும்.


அவ்வாறு ஊற்றும் போது அதிலிருந்து மாவானது, துளைகள் வழியாக எண்ணெயில் விழும், அதனை பொன்னிறமாக பொரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.


இதேப் போன்று அனைத்து மாவையும் ஊற்றி, பூந்திகளாக செய்துக் கொள்ளவும்.

பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி, வேர்க்கடலை, , கறிவேப்பிலை போன்றவற்றை பொரித்து, பூந்தியுடன் சேர்த்து, கிளற வேண்டும். இப்போது சுவையான காராபூந்தி ரெடி

https://img.youtube.com/vi/lwrG7NntGLE/hqdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்.இப்படி இதில் மினக்கெடுறதிற்கு பதில் நான் கடலை சுண்டிச் சாப்பிட்டுவேன்

Link to comment
Share on other sites

சத்தான கீரை சப்பாத்தி

13659104_605132622998484_234501071502623

தேவையான பொருட்கள் :

கீரை - ஒரு கட்டு
கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை :

* கீரையை மண் போக அலசிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.,

* கோதுமை மாவுடன் கீரை, வெங்காயம், ப.மிளகாய், சீரகம், உப்பு, கரம்மசாலா தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மாவை ஒரு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

* பிறகு மாவை சப்பாத்தி போல் தேய்த்து வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விடவும்.

* கீரை வேகச் சிறிது நேரமாகுமாதலால் எண்ணெய் விட்டு இரு புறங்களிலும் மாறி மாறி வேக விட வேண்டும்.

* கீரைச்சப்பாத்தி செய்யும் போது பாதி வெந்ததும் அடுப்பில் நேரடியாக இரு புறமும் சுட வைத்துக் கல்லில் போட்டு எண்ணெய் தடவலாம். எண்ணெய் தடவி விட்டுத் தணலில் காட்டக் கூடாது, அப்பளம் போல ஆகி விடும்.

* சுவையான சத்தான கீரை சப்பாத்தி ரெடி.

* வெந்தயக்கீரையையும் இதே முறையில் செய்யலாம்.

Link to comment
Share on other sites

சேமியா வெஜிடபிள் பிரியாணி : செய்முறைகளுடன்...!

 

semiyaaaaa.jpg

தேவையான பொருட்கள் :

  • சேமியா - 200 கிராம்
  • தக்காளி - 2
  • பெரிய வெங்காயம் - 1
  • ப.மிளகாய் - 2
  • கேரட் - 25 கிராம்
  • பீன்ஸ் - 25 கிராம்
  • பட்டாணி - 25  கிராம்
  • இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  • பட்டை - 2  துண்டு
  • கிராம்பு - 3
  • கசகசா - 1/2  தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
  • தனியா தூள் - கால் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு, நெய் - தேவைக்கு
  • சோம்பு - அரை ஸ்பூன்


செய்முறை :
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சேமியாவை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

* இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், தக்ககாளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காய்கறிகளை முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

* வாணலியில் நெய் விட்டு சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* இதனுடன் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* பிறகு அதில் தேவையான அளவு உப்பு, 200 கிராம் சேமியாவுக்கு 400 கிராம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

* தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும்.

* தண்ணீர் வற்றி உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான சேமியா பிரியாணி ரெடி.

* இந்த சேமியா பிரியாணியில் சிக்கன், மட்டன், முட்டை சேர்த்தும் செய்யலாம்.

Link to comment
Share on other sites

சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா

 

பார்லியில் கஞ்சி செய்து சாப்பிடுவதற்கு பதிலாக வெஜிடபிள் உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா
 
தேவையான பொருட்கள் :

பார்லி - 1 கப் (மிக்சியில் உடைத்து கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 10
ப.மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அதில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக வதக்கிய பின் அதில் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* காய்கறிகள் சிறிது வதங்கியதும் அதில் உடைத்த பார்லியை போட்டு நன்கு வதக்கி உப்பு கலந்து 3 கப் நீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.

* பார்லி வேக சிறிது நேரம் எடுக்கும். நன்கு வெந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.

* சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா ரெடி.

* குக்கரில் அனைத்து பொருட்களையும் போட்டு மூன்று விசில் வைத்து வேக வைத்தும் எடுக்கலாம்.
Link to comment
Share on other sites

கமகமக்கும் வெண்டைக்காய் சாம்பார்

சாம்பாரில் வெண்டைக்காய் போட்டு செய்தால் சூப்பரான இருக்கும். இப்போது வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
கமகமக்கும் வெண்டைக்காய் சாம்பார்
 
தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு - 150 கிராம்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
பெ.வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
தக்காளி - 3 (மீடியம் சைஸ்)
புளி - 25 கிராம்
சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

தாளிக்க :

சி.வெங்காயம் - 5
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை :

* கொத்தமல்லி, சி.வெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பருப்பில் சாம்பார் பொடியை போட்டு புளிக்கரைசலை விட்டு தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் ஆகியவைகளை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

* பிறகு அதில் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சி.வெங்காயம், ஆகியவைகளை சேர்த்து தாளித்து சாம்பாரில் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லியை சேர்க்கவும்.

* கமகமக்கும் சுவையான வெண்டைக்காய் சாம்பார் ரெடி.
Link to comment
Share on other sites

சைவ பிரியர்களுக்கான மஷ்ரூம் பிரியாணி

அசைவம் பிடிக்காதவர்களுக்கு சிறந்த மாற்று மஷ்ரூம். இப்போது மஷ்ரூம் வைத்து எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.

 
சைவ பிரியர்களுக்கான மஷ்ரூம் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கிலோ,
பட்டன் மஷ்ரூம்  - 400 கிராம்,
வெங்காயம் - 250 கிராம்,
தக்காளி - 200 கிராம்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
புதினா - 50 கிராம்,
கொத்தமல்லித் தழை - 100 கிராம்,
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
பூண்டு - 100 கிராம்,
நெய் - 100 மில்லி,
எண்ணெய் - 100 மில்லி,
கிராம்பு, பட்டை - தலா 10 கிராம்,
ஏலக்காய் - 5 கிராம்,
பிரியாணி இலை - 5 கிராம்,
தயிர் - 100 மில்லி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, ப,.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மஷ்ரூமை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

* பாதியளவு பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து… புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கி கிரேவி பதம் வந்த பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், மஷ்ரூம் சேர்த்துக் கிளறவும்.

* பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, அதன்மீது பிரியாணி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.

* சூப்பரான மஷ்ரூம் பிரியாணி ரெடி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு .... வெள்ளிக்கிழமை பிரியாணிதான்....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

வெஜிடபிள் பிரியாணி

 

பேச்சிலர் சமையலில் இன்று எளிய முறையில் செய்யக்கூடிய வெஜிடபிள் பிரியாணியை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

 
 
பேச்சிலர் சமையல்: வெஜிடபிள் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 கப்
தேங்காய் பால் - 1/4 கப்
தண்ணீர் - 1 3/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய - 1
பிரியாணி இலை - 1

காய்கறிகள்...

கேரட் - 2
பீன்ஸ் - 6
பட்டாணி - 1/4 கப்

அரைப்பதற்கு...

புதினா - 1/4 கப்
கொத்தமல்லி - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2

செய்முறை :

* தக்காளி, பீன், கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிய பிறகு அத்துடன் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட், தயிர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.

* அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் அதில் அரிசியை கழுவி போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

* இறுதியில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

* விசில் போனதும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி பரிமாறினால், வெஜிடபிள் பிரியாணி ரெடி.
Link to comment
Share on other sites

சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி

 

வயிறு கோளாறு உள்ளவர்கள் முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி
 
தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் - கால் கிலோ,
காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு அல்லது தக்காளி - 3,
சின்ன வெங்காயம் - 10,
உளுந்தம்பருப்பு  - - 2 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* முட்டைகோஸ், சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் கொஞ்சம் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம்பருப்பை போட்டு அது பொன்னிறம் ஆனதும் அடுத்து அதில் வெங்காயம், முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.

* முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்... புளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத்தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்).

* வதக்கியவற்றை அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த கலவையில் சேர்த்து கலக்கவும்.

* சூப்பரான முட்டைகோஸ் சட்னி ரெடி.

* இந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.
Link to comment
Share on other sites

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து சத்தான சுவையான சுண்டல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

 
முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
 
தேவையான பொருட்கள் :

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 3,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும்.

* இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும்.

* சத்தான முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

குறிப்பு: வேக வைத்த தண்ணீரை கீழே கொட்டாமல், புளி ஊற வைக்க, குழம்பில் ஊற்ற, சப்பாத்தி மாவு பிசைய பயன்படுத்தலாம்.
Link to comment
Share on other sites

சத்தான பட்டர் பீன்ஸ் - கேரட் பொரியல்

 

பட்டர் பீன்ஸ், கேரட் இரண்டுமே சத்து நிறைந்தது. பட்டர் பீன்ஸ், கேரட் வைத்து பொரியல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

 
 
சத்தான பட்டர் பீன்ஸ் - கேரட் பொரியல்
 
தேவையான பொருள்கள் :

ப்ரெஷ் பட்டர் பீன்ஸ் - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு   

தாளிக்க :

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் - 1
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

* கேரட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.

* பட்டர்பீன்ஸ், கேரட் இரண்டையும் வேக வைத்துக் கொள்ளவும்.
 
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமானதும் அவித்து வைத்துள்ள பட்டர்பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறிய பின் சாம்பார் தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

* கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

* சுவையான பட்டர்பீன்ஸ் - கேரட் பொரியல் ரெடி.

* சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறவும்.
Link to comment
Share on other sites

பொடி வகைகள்

 

 

23p1.jpg 

* கொள்ளுப் பொடி
*  புளிய இலை பொடி
*  சிட்லம் பொடி
*  முருங்கை இலை பொடி
*  பாலக் பொடி
*  கற்பூரவல்லி பொடி
*  நெல்லிக்காய் பொடி
*  துளசி பொடி
*  வெள்ளரி விதை பொடி
*  வெற்றிலைப் பொடி

பொடி பிரியர்களுக்கு, சத்தான மற்றும் சுவையான பொடி வகைகளைச் செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர்.

23p2.jpg

குறிப்பு: ஈரம் அறவே இல்லாமல் சுத்தமாக காயவைத்து/அரைத்து எடுக்கிற பொடிகளை 15 நாட்கள் முதல் 1 மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சில வித்துக்கள் எண்ணெய்விடும். அவற்றை எல்லாம் 15 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.


23p3.jpg

கொள்ளுப் பொடி

தேவையானவை:

 கொள்ளு - ஒரு கப்
 காய்ந்த மிளகாய் - 6
 மிளகு - அரை டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கொள்ளு பயறைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவிடவும். அதே கடாயில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவிடவும். ஆறியதும் அதில் உப்பு, வறுத்த கொள்ளைச் சேர்த்துக் கிளறி, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.  உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்க, சுவையான கொள்ளுப் பொடி தயார்.


23p4.jpg

புளிய இலை பொடி

தேவையானவை:

 காம்புகள் உருவி, நன்கு காயவைத்த புளிய இலை - ஒரு கப்
 பொட்டுக்கடலை - அரை கப்
 கொப்பரை - கால் கப்
 வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மல்லி (தனியா) - இரண்டு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 10
 எண்ணெய் - சிறிது
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் புளிய இலையைச் சேர்த்து தீய்ந்துவிடாமல் கவனமாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, அதே வாணலியில் வெள்ளை எள், மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, கொப்பரை ஆகியவற்றை லேசாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸில் நைஸாக அரைக்கவும். கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்தப் பொடி கர்ப்பிணிகளுக்கு உகந்தது.


23p5.jpg

சிட்லம் பொடி

தேவையானவை:

 கடலைப்பருப்பு - கால் கப்
 உளுத்தம்பருப்பு - கால் கப்
 துவரம்பருப்பு - கால் கப்
 பாசிப்பருப்பு - கால் கப்
 காய்ந்த மிளகாய் - 10
 புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 கடுகு - ஒரு டீஸ்பூன்
 பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நான்கு வகை பருப்புகளையும் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும். அதே வாணலியில் காய்ந்த  மிளகாய், புளி, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து ஆறவிடவும். ஆறியதும் அதனுடன் வறுத்த பருப்புகள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, அதை அரைத்துவைத்துள்ள பொடிக்கலவையில் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டவும். சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுக்கு இந்தப் பொடி சேர்த்துச் சாப்பிடலாம்.


23p6.jpg

முருங்கை இலை பொடி

தேவையானவை:

 நன்கு காயவைத்த முருங்கை இலை - ஒரு பெரிய கப்
 வெள்ளை எள் - கால் கப்
 உளுத்தம்பருப்பு - கால் கப்
 காய்ந்த மிளகாய் - 10
 பூண்டு - 5 பல்
 புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முருங்கை இலையை வெயிலில் நன்கு காயவைக்கவும். பிறகு, கைகளால் கசக்கினாலே நன்கு பொடியாகிவிடும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் உளுத்தம்பருப்பை தனியாக வறுத்தெடுக்கவும். பிறகு, எள், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுத்து எடுத்து ஆறவைக்கவும். பூண்டு மற்றும் புளியைத் தனியாக நன்றாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும். வறுத்து ஆறவைத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் உப்பு, நொறுக்கிய முருங்கை இலை சேர்த்துக் கலந்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். இந்த முருங்கை இலை பொடி இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்தது.


23p7.jpg

பாலக் பொடி

தேவையானவை:

 பாலக்கீரை - ஒரு கட்டு
 உளுத்தம்பருப்பு - அரை கப்
 காய்ந்த மிளகாய் - 10
 கொப்பரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 பூண்டுப் பல் - 2
 புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாலக் கீரையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து, நிழலில் காயவைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும், பாலக் கீரையை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும். அதே கடாயில் எண்ணெய் சேர்த்து உளுத்தம்பருப்பு, கொப்பரைத் தேங்காய், பூண்டு, காய்ந்த மிளகாய், புளி சேர்த்து, புளியின் ஈரம் போகும்வரை பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவிடவும். இதனுடன் வறுத்த பாலக் கீரை மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.


23p8.jpg

கற்பூரவல்லி பொடி

தேவையானவை:

 கற்பூரவல்லி இலை - ஒரு கப்
 கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 கொப்பரை- ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - 2 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 10
 புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கற்பூரவல்லி இலையை நிழலில் காயவைக்கவும் (சீக்கிரம் காயாது, நான்கு நாட்கள்வரைகூட ஆகலாம்). அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும் காய்ந்த கற்பூரவல்லி இலையைச் சேர்த்து மிதமான தீயில், இலைகள் ஈரம்போக மொறுமொறுப்பாக வறுபடும்வரை வறுத்து எடுத்து ஆறவைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொப்பரை, சீரகம், காய்ந்த மிளகாய், புளி சேர்த்து புளியின் ஈரம் போகும் வரை வறுக்கவும். ஆறியதும் அதனுடன் வறுத்த கற்பூரவல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.


23p9.jpg

நெல்லிக்காய் பொடி

தேவையானவை:

 பெரிய நெல்லிக்காய் - 10
 பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 5
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 பூண்டு - 2 பல்
 எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நெல்லிக்காயின் விதையை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஐந்து நாட்கள் வரை நிழலில் காயவைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நிழலில் காயவைத்த நெல்லிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு, பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து வறுத்தெடுத்து ஆறவிடவும். இதனுடன் வறுத்த நெல்லிக்காய்த் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.


23p10.jpg

துளசி பொடி


தேவையானவை:

 துளசி இலை - ஒரு கப்
 பொட்டுக்கடலை - முக்கால் கப்
 மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - 2 டீஸ்பூன்
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 5
 புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து துளசி இலையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து பொட்டுக்கடலை, மல்லி (தனியா), சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், புளி சேர்த்து புளியின் ஈரம் போகும்வரை வறுத்து எடுத்து ஆறவைக்கவும். இதனுடன் வறுத்த துளசி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸில் பொடியாக அரைக்கவும். குழந்தைகளின் சளிப் பிரச்னைக்கு நிவாரணம் தரும் பொடி இது.


23p111.jpg

வெள்ளரி விதை பொடி


தேவையானவை:

 வெள்ளரி விதை - ஒரு கப்
(கடைகளில் கிடைக்கும்)
 காய்ந்த  மிளகாய் - 10
 புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும் வெள்ளரி விதையைச் சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்து ஆறவிடவும். அதே வாணலியில் காய்ந்த மிளகாய், புளி சேர்த்து புளியின் ஈரம் போகும் வரை வதக்கியெடுத்து, ஆறவைக்கவும். இதனுடன் வறுத்த வெள்ளரி விதை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு  இரண்டு சுற்று மட்டும் சுற்றவிட்டு எடுக்கவும் (அதிகமாக அரைபட்டால் விதையில் இருக்கும் எண்ணெய் வெளியில் வந்து பொடி பேஸ்ட் போலாகிவிடும்). இந்த வெள்ளரிப் பொடியை அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்குள் சாப்பிட்டுவிடவும்.

குறிப்பு: வெள்ளரி விதைகளுக்குப் பதிலாக தர்பூசணி விதைகள், முந்திரி பயன்படுத்தியும் இந்தப் பொடி செய்யலாம்.


23p12.jpg

வெற்றிலைப் பொடி


தேவையானவை:

 வெற்றிலை - 25
 உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
 பூண்டு - 3 பல்
 மிளகு - 2 டீஸ்பூன்
 முழுமல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெற்றிலையை தண்ணீரில் அலசி நிழலில் காயவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெற்றிலையைச் சேர்த்து  மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை, பூண்டு, மிளகு, முழுமல்லி (தனியா), சீரகம், புளி ஆகியவற்றைச் சேர்த்து புளியின் ஈரம் போகும்வரை பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவிடவும். இதனுடன் வறுத்த வெற்றிலை மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். சளி, தலைவலி, இருமல் ஆகியவற்றுக்கு அருமருந்து இந்தப் பொடி.

Link to comment
Share on other sites

விதவிதமா தொடுகறி: ஸ்வீட் ஸ்பைசி மோர்க்குழம்பு

 
 
more_3105210f.jpg
 
 
 

என்னென்ன தேவை:

புளித்த தயிர் - 2 கப்

சர்க்கரை - 5 டீஸ்பூன்

கடலை மாவு - 2 டீஸ்பூன்

உப்பு, மஞ்சள் தூள்- தேவையான அளவு

தாளிக்க

நெய் – 2 டீஸ்பூன்

பட்டை – சிறு துண்டு

லவங்கம் - 4

பிரிஞ்சி இலை - சிறிதளவு

எப்படிச் செய்வது:

கடைந்த தயிரில் அரை கப் நீர், உப்பு, மஞ்சள் தூள், கடலை மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைக் போட்டுத் தாளியுங்கள். அதில் தயிர் கலவையைச் சேருங்கள். இந்தக் கலவை லேசாக நுரைத்துப் பொங்கிவரும் போது, சர்க்கரை சேர்த்து இறக்கிவையுங்கள். காரமில்லாத இந்த மோர்க்குழம்பு ருசியாக இருக்கும்.

 
Bild könnte enthalten: Essen
 

கத்திரிக்காய் சிப்ஸ்

 

தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் 170 கிராம் ( நீளமானதாக கத்திரிக்காயை தேர்வு செய்து கொள்ளவும் )
இஞ்சி-பூண்டு விழுது 1 தேக்கரண்டி
காஷ்மீர் வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
மிளகு தூள் 1 தேக்கரண்டி
தக்காளி விழுது 2 தேக்கரண்டி
அரிசி மாவு 2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய்தேவையான அளவு

செய்முறை
1. இப்பொழுது ஒரு பாத்திரத்துல தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது கத்திரிகாயை மிகவும் மெல்லியதாக நறுக்கி அதை தண்ணீர் ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தை போட்டு கொள்ளவும்.

3. இப்பொழுது மற்றுமொரு பாத்திரத்தில் அதில் அரிசி மாவு, வரமிளகாய் தூள், மிளகு தூள் , இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து,தக்காளி விழுது, தேவையான அளவு உப்புத்தூளையும் சேர்த்து சிறிது நன்கு கலந்து வைக்கவும்.

4. பின்னர் தண்ணீரில் ஊற வைத்துள்ள கத்திரிக்காயை மற்றுமொரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம்.

5. இப்பொழுது வடச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான வேர்கடலை எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த மசாலா கலவையில் கத்திரிக்காயை போட்டு நன்றாக பொன்னிறமாக முறுகலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா

தினமும் ஒரே வகையான உப்புமாவை செய்து அலுத்துவிட்டதா? இப்போது கீரையை வைத்து சுவையான, சத்தான, கீரை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா
 
தேவையான பொருட்கள்:

கீரை - 1 கட்டு
இட்லி அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - ¾ கப்
தேங்காய் - ஒரு கைப்பிடி
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
மோர் மிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* இட்லி அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* கீரையை (சிறு கீரை, அரை கீரை, தண்டு கீரை, பாலக் கீரை, பொன்னாங்கன்னி கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.) நன்றாக சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

* இட்லி அரிசி, துவரம்பருப்பு, தேங்காய், மிளகாய் வற்றல், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று ரவை பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து கரைத்து, இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

* இட்லி ஆறியவுடன் அதை கையினால் உதிர்த்துக்கொள்ள வேண்டும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் மோர் மிளகாய் சேர்த்து, பிறகு உதிர்த்த கீரை இட்லியை போட்டு உதிரிவாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும்.

* சத்தான கீரை உப்புமா தயார்.

* இது மிகவும் ஆரோக்கியமான, சத்தான சிற்றுண்டியாகும். இந்த கீரை உப்புமாவை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
Link to comment
Share on other sites

சூப்பரான பென்னே வித் மின்ட் பாஸ்தா

இது ஒரு இத்தாலி நாட்டின் பிரபலமான உணவு வகை. இந்த பென்னே வித் மின்ட் பாஸ்தாவை வீட்டிலேயே எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

 
சூப்பரான பென்னே வித் மின்ட் பாஸ்தா
 
பெஸ்டோ சாஸ் செய்ய :

புதினா - 20 கிராம்
முந்திரி/வால்நட்/ பாதாம் - 20 கிராம்
ஆலிவ் ஆயில்/எண்ணெய் - 40 மிலி
நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
புராசஸ்டு சீஸ் (processed cheese) - 20 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து தேங்காய்ச் சட்னி பதத்திற்கு அரைக்கவும். பெஸ்டோ சாஸ் ரெடி. மார்க்கெட்டில் ரெடிமேடாக கிடைக்கும் பெஸ்டோ சாஸை கூட வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாஸ்தா செய்ய :

பாஸ்தா - 200 கிராம்
பெஸ்டோ சாஸ் (Pesto Sauce) - 50 கிராம் (தேவைப்பட்டால் அதிகரித்துக் கொள்ளவும்)
பார்ஸ்லே(Parsley) - 5 கிராம்
ஆலிவ் ஆயில்/எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - 20 கிராம்
மிளகு தூள், உப்பு - தேவைக்கு

செய்முறை :

* பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும்.

* பார்ஸ்லேவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் நான்-ஸ்டிக் கடாயை வைத்து ஆலிவ் ஆயில்/ எண்ணெய் 4 டீஸ்பூன் ஊற்றி சூடானதும் அதில் பெஸ்டோ சாஸை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

* பச்சை வாசனை போனவுடன் அதில் வேகவைத்த பாஸ்தாவைச் சேர்த்து சாஸுடன் ஒன்று சேரும் வரை வதக்கவும்.

* அடுப்பில் இருந்து பாஸ்தாவை இறக்குவதற்கு முன்பு உப்பு, நறுக்கிய பார்ஸ்லே(Parsley), மிளகுத் தூளைச் சேர்த்து கிளறி துருவிய சீஸை மேலே தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு :

* பாஸ்தாவை வேக வைக்கும்போது தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடித்து விட்டு ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கிளறி ஆறவிடவும். அப்போதுதான் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

* இந்த மின்ட் பெஸ்டோ பாஸ்தாவை முழு சுவையோடு வரவேண்டுமானால் ஆலிவ் ஆயிலில் சமைத்தால் மட்டுமே அதுசாத்தியம்.

* பொதுவாக சீஸை துருவி வைத்தால் வெப்பம் காரணமாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். எனவே சீஸை நேரடியாக பாஸ்தா மீது தூவி விடுவது நல்லது.
Link to comment
Share on other sites

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

பச்சை பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

 
சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி
 
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்,
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - அரை கட்டு,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
நெய் - எண்ணெய் கலவை,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 மணி நேரம் ஊற விடவும்.

* வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும்.

* பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து அதை கிண்ணம் போல் செய்து அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி (வெளியே விழுது வராதபடி) சப்பாத்திகளாக தேய்க்கவும்.

* தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் - எண்ணெய் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.

* சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தியை அப்படியே சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்.
Link to comment
Share on other sites

சிக்கன் மஞ்சூரியன்
சிக்கன் மஞ்சூரியன்

சிக்கன் மஞ்சூரியன்

 

எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
பூண்டு – அரை கப் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
குடை மிளகாய் – 2 பெரிதாக நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
சோயா சாஸ்- 1 கரண்டி
தக்காளி சாஸ் – 2 கரண்டி
மிளகு தூள் – 2 கரண்டி
கார்ன் பிளவர் மாவு – 2 கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
வெங்காயத்தாள் – தேவையான அளவு

ஊற வைக்க

எலும்பில்லாத சிக்கன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 கரண்டி
எலுமிச்சை சாறு – 2 கரண்டி
மிளகாய் தூள் – 2 கரண்டி
1 முட்டையின் வெள்ளை கரு
கார்ன் பிளவர் மாவு – 2 கரண்டி
மைதா மாவு- 2 கரண்டி
அரிசி மாவு – 2 கரண்டி
உப்பு – தேவைாயன அளவு

செய்முறை

முதலில் எலும்புகளை நீக்கிய சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

முட்டையை கலக்கி ஊற வைக்க கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு கடாயில் ஊற்றி சூடானதும் பொன்னிறமாக மெதுவான தீயில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.

கடாயில் 4 கரண்டி எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், குட மிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள் அனைத்தையும் போட்டு கிளறவும்.

கார்ன் பிளவர் மாவில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிக் கறியையும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள் அதில் போட்டு 3 நிமிடம் மூடிப் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.