Jump to content

Recommended Posts

Posted
 
 
 
Aval Kitchens Foto.
 

மஷ்ரூம் கட்லட்

தேவையானவை:
மொட்டுக் காளான் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை மற்றும் புதினா - சிறிதளவு
கடலை மாவு - 6 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
பிரெட் கிரம்ப்ஸ் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். காளான், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். பின்பு, வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய காளான், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, புதினா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் சிறிதளவு உப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கி இறக்கவும். கலவை சூடு ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். உள்ளங்கையில் மாவு உருண்டையை வைத்து கட்லெட் வடிவத்துக்கு தட்டி, பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி, கடலை மாவை கட்லெட் மீது தூவவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கட்லெட்டை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதை தக்காளி சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

 

Aval Kitchens Foto.
 

வரகு கூட்டாஞ்சோறு

தேவையானவை:
வரகு அரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - அரை கப்
முருங்கைக்காய் - 1
வாழைக்காய் - பாதி
பீன்ஸ், கேரட் நறுக்கிக்கொள்ளவும் - பாதி கப்
பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
புளிக்கரைசல் - கால் கப் (பெரிய நெல்லிக்காய் அளவு)
கடுகு, உளுத்தம்பருப்பு
- தலா கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடி செய்ய:
மிளகாய் வற்றல் - 5
மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
வரகு அரிசி, துவரம் பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். காய்கறிகளைத் தனியே வேகவிடவும். பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும். காய்கறிகள் ஓரளவு வெந்ததும், உப்பு, புளிக்கரைசல், வறுத்துப் பொடித்ததைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்து வரும்போது வேகவைத்த சாதம் பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்துத் தாளித்து சாதத்தில் சேர்க்கவும். இதில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், வரகு கூட்டாஞ்சோறு தயார்.

 

Posted
Aval Kitchens Foto.
 

வெஜிடபள் நீல்கிரி குருமா :


தேவையான பொருட்கள் :
கேரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
காலி பிளவர் - 50 கிராம்
குடமிளகாய் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மசாலா தயாரிக்க :
மல்லி ( தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - ஒன்றில் பாதி
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 6
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 100 மி.லி
செய்முறை :
கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,காலி பிளவர் ஆகியவற்றை விரும்பும் வடிவில் நறுக்கி 10 நிமிடம் வேக வைத்துக்கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸ்யில் மையாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் , தக்காளி, குடமிளகாய்,புதினா, சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா கலவையினை இதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.இதில் வேக வைத்த காய்களை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும்.

Aval Kitchens Foto.
 
 

முருங்கக்கீரை முட்டை பொடி மாஸ் :


முருங்கக்கீரை - ஒரு கப்
முட்டை - 3
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 5
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
அடுப்பி கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்.பூண்டு,பச்சை மிளகாய்,சேர்த்து பொன் நிறமாக வதக்கி முருங்கக்கீரை சேர்த்து வதக்கி அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி அதனுடன் மஞ்சள்தூள்,மிளகுத்தூள்,சீரகத்தூள் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி பரிமாறவும். .

Posted (edited)
 
 
Aval Kitchens Foto.
 
 

நெத்திலிக் கருவாடு வறுவல்

தேவையானவை:
நெத்திலி மீன் கருவாடு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நெத்திலி மீன் கருவாட்டை அதன் தலைப்பகுதியை நீக்கி விட்டு வெந்நீரில் நன்கு அலசி எடுத்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாற வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலிக் கருவாட்டினை சேர்க்கவும். தீயை மிதமாக்கி கருவாடு வெந்ததும் கிரேவி டிரையாகி கருவாட்டோடு சேரும் அளவுக்கு நன்கு வதக்கி இறக்கிப் பரிமாறவும்.

Aval Kitchens Foto.
 
 

சில்லி பனீர்

தேவையானவை:
பனீர் - 200 கிராம்
மைதா மாவு - 75 கிராம்
கார்ன்ஃப்ளார் மாவு - 25 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
குடமிளகாய் - ஒன்று
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
செலரி தண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்
வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
சிவப்புமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன் (மாவு கலவைக்கு)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
தண்ணீர் - 50 மில்லி
செய்முறை:
பனீரை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, செலரி, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாகவும், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுரமாகவும் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, அரை டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதில் நறுக்கிய பனீரை முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சைவாசனை போனதும் செலரி, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு சிவப்புமிளகாய் சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வேகவிடவும். இந்தக் கலவை கொதித்து வந்ததும், இத்துடன் பொரித்தெடுத்த பனீரைச் சேர்த்து நன்றாகக் கிளறி கலவை பனீரோடு சேர்ந்து வரும் வரை இரண்டு நிமிடம் சிம்மில் வேகவிட்டு இறக்கவும். இதில், நறுக்கிய வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.

Edited by நவீனன்
Posted

dried-fish.jpg

நெத்தலிக்கருவாடு ரதிக்காக!! :cool:

pannir_01.jpg

பன்னீர்

:cool:

Posted
 

திருநெல்வெலி மட்டன் குழம்பு:

12819198_493201750868484_173562052827931


தேவையானவை :
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
வேகவைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
அரைக்க :
தேங்காய் -அரை முடி (துருவிக் கொள்ளவும்)
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் -2
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து , இஞ்சி - பூண்டு விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும்.பின் வேகவைத்த மட்டன் சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்க்கவும்,பச்சை வாசனை போனதும் கொத்தமல்லித்தழைதூவி இறக்கிப்பரிமாறவும்.

Posted

மஷ்ரூம் ஆம்லெட்

12814381_494253510763308_632278543709616

 

தேவையானவை:
சிப்பிக் காளான் - 200 கிராம்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
தக்காளி - 50 கிராம்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். ஒவ்வொரு காளானையும் நான்கு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய காளான், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கலவையை இறக்கி ஆறவிடவும்.
ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தேய்த்து அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி, இதன் மேல் வதக்கிய கலவையைப் பரவ விட்டு சிறிது நேரம் வேக விடவும், பின்பு, ஆம்லெட்டை இரண்டாக மடித்து, திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். ஆம்லெட்டின் மேல் மிளகுத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

Posted

டேஸ்ட்டி டேட் பால்ஸ்

12803002_494341084087884_654699862225877

 

தேவையானவை:
விதை நீக்கி நறுக்கிய பேரீச்சைப்
பழம் - ஒன்றரை கப்
நெய் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பாதாம் - ஒரு கப்
உலர்ந்த தேங்காய்த் துருவல் -
3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் தீயை மிதமாக்கி பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை கிளறி எடுத்துக்கொள்ளவும். பிறகு, பொடித்த பாதாமைத் தூவி நன்கு கிளறவும். பேரீச்சை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். பரிமாறும் தட்டில் உலர்ந்த தேங்காய்த்துருவலைத் தூவி, இதில் இந்த உருண்டைகளைப் போட்டு புரட்டி எடுத்துப் பரிமாறவும்

Posted

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு :

1170_494253634096629_5291888705714329565


தேவையானவை:
மீன் - அரை கிலோ (என்ன வகை மீன்?)
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
முருங்கைக்காய் - 2
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
காய்ந்த மிளகாய் - 7
கறிவேப்பிலை சிறிதளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - ஒன்றில் பாதி(துருவிக் கொள்ளவும்)
மல்லி(தனியா) - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் -3
செய்முறை :
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்து அத்துடன் அரைத்த விழுதினை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின் முருங்கக்காயை சேர்த்து வதக்கி கலந்து வைத்துள்ள புளிதண்ணீரை அதில் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.இறுதியாக சுத்தம் செய்த மீனை சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரைத்து வைத்த மீன்குழம்புபோல் இருக்கு....! சூப்பர்....!

Posted

 கோழி வறுவல்

12801452_494262620762397_806635771775188


தேவையானவை:
கோழி - முக்கால் கிலோ
இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
தோலுரித்த சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை :
கோழியை சுத்தம் செய்து விருப்பப்பட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் இஞ்சி -பூண்டு விழுது, உப்பு , மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு , காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் வேக வைத்த சிக்கன் சேர்த்து வதக்கி மல்லித்தூள்(தனியாத்தூள்) , உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி மசாலா வாசனை போனதும் மிளகுத்தூள் தூவி இறக்கப்பரிமாறவும்.

Posted (edited)

கீழக்கரை மீன் குழம்பு :

1934978_495569087298417_6969548923185602


தேவையானவை :
(என்ன மீன் )மீன் - அரை கிலோ
புளி - பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - 4
தக்காளி - ஒன்று
பூண்டு - 100 கிராம்
தேங்காய் - ஒன்றில் பாதி (துருவிக்கொள்ளவும் )
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :
சின்ன வெங்காயம் பத்துமட்டும் எடுத்து , துருவிய தேங்காயுடன் சேர்த்து இரண்டையும் மிக்ஸ்யில் ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும் .மீனை சுத்தம் செய்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த்ததும் கடுகு ,சீரகம் , வெந்தயம் , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம் , பூண்டு ,பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகுத்தூள் , மஞ்சள் தூள் , மல்லித்தூள்,மிளகாய்த்தூள், சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள கலவையை இத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து இதனுடன் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் மீனை இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து மீன் வெந்ததும் இறக்கி மிளகுத்தூள் ,கொத்தமல்லித்தழை தூவிப்பரிமாறவும்.

 

 

 

சோயா-65

1929362_495477737307552_4138263513946809

 

தேவையானவை:
சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) - 50 கிராம் (25 பெரிய பீஸ்)
கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 இலைகள்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:
சோயா சங்க்ஸை கொதிக்கும் வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்துப் பிழிந்தெடுத்து வைத்துக்கொள்ளவும். பெரியதாக இருந்தால், இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானவற்றில் எண்ணெய், சோயா சங்க்ஸ், கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் சோயா சங்க்ஸை சேர்த்துக் கிளறி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இதில் சோயா சங்க்ஸை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்தெடுக்கவும். பொரித்த சோயா-65 மேல் கறிவேப்பிலையைத் தூவி தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Edited by நவீனன்
Posted

சீஸ் ஃபால்ஸ்

10154019_495966560592003_281349442079309

 

தேவையானவை:

மொசிரெலா சீஸ் - 20 சிறியத்துண்டுகள்
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
பிரட் தூள்/ ரஸ்க் தூள் - ஒரு கப்
முட்டையின் வெள்ளைக் கரு - ஒரு முட்டை
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் கலந்து வதக்கி இறக்கவும். இறக்கிய கலவையை கை சூடு பதத்தில் சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். ஒவ்வொரு உருண்டைகளுக்கும் நடுவே ஒரு சீஸ் துண்டினை வைத்து அதனை மூடி மீண்டும் உருண்டைகளாக்கவும். ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கருவை உடைத்து விட்டு, அதில் தயாராக வைத்துள்ள உருண்டைகளை முக்கி எடுத்து, பின் பிரட் தூளில் உருட்டி எடுத்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும். இதனை பூண்டு சாஸ் அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

பாசிப்பருப்பு அல்வா

10405496_495950260593633_786979336580893


தேவையானவை:
பாசிப்பருப்பு மாவு - கால் கப்
பால் - அரை கப்
சர்க்கரை, நெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு சீவியது - அலங்கரிக்க‌


செய்முறை:
நான்ஸ்டிக் சட்டியில் நெய் விட்டு பாசிப்பருப்பு மாவு சேர்த்து பச்சை வாசனை போய் நன்றாக மணம் வரும் வரை வறுக்கவும். மிதமான தீயில் பயத்தம்மாவு இளம் பொன்னிறமாக வந்தவுடன் பால் சேர்த்துக் கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கவும். மிதமான தீயில் வைத்து கலக்கிக் கொண்டே 10 நிமிடங்கள் வேக விடவும். பால் சுண்டியதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை முழுமையாக கரைந்தவுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும். கடாயில் ஒட்டாமல் அல்வா பதமாக திரண்டு வந்தவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி சீவிய பாதாம்பருப்புத் தூவி அலங்கரிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎11‎/‎01‎/‎2016 at 5:50 AM, நவீனன் said:

இன்ஸ்டன்ட் போண்டா
தேவையானவை:
இட்லி மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
அரிசி மாவு, ரவை - தலா 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - பொரிக்க‌
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள்வும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை கெட்டியாக ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் இன்ஸ்டன்ட் போண்டா ரெடி.

12492032_474375216084471_843949914219449

சுலபமான முறை, இன்று செய்து பார்க்க வேண்டும்.

நன்றி நவீனன் உங்கள் நல்ல இணைப்புகள் பலவற்றிற்கு

Posted

கரண்டி ஆம்லெட்

10361570_496686777186648_307328364419187


தேவையானவை:
முட்டை - 2
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:
இரண்டு முட்டைகளையும் ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும். இதில் மஞ்சள்தூள் உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், மிளகுத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு பணியாரச்சட்டியை வைத்து சூடானதும் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு கலந்து வைத்திருக்கும் முட்டைக்கலவையை ஊற்றவும். இரண்டு புறமும் திருப்பிவிட்டு வேகவிட்டு எடுக்கவும். இல்லையென்றால் குழிக்கரண்டியை தீயில் காண்பித்து அதில் எண்ணெய் விட்டு கலக்கிய முட்டைக்கலவையை ஊற்றி வேக விடவும். கரண்டியின் உள்ளேயே முட்டைக்கலவையை திருப்பிவிட்டு வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

Posted

பன்னீர் பாயாசம்

10269138_496765733845419_532963534589743

தேவையானவை:

பன்னீர் - 100 கிராம்
பால் - 500 மில்லி லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய் - 8 (பொடித்தது)
முந்திரி - இரண்டு டேபிள்ஸ்பூன்
திராட்சை - இரண்டு டேபிள்ஸ்பூன்
நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
பேரிச்சம்பழம் - 30 கிராம்
பிஸ்தா - 2
பாதாம் பருப்பு - 3

செய்முறை:

பன்னீர், பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய் சேர்த்து, முந்திரி, திராட்சையை அதில் சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சி, அதில் நறுக்கிய பன்னீர், பேரிச்சம்பழம், ஏலக்காய் சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சவும். பிறகு அதில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட்டு இறக்கவும். சூடான பாயாசத்தில் பாதாம் பருப்பு, பிஸ்தாவை பொடியாக நறுக்கி அதனை தூவிவிட்டுப் பரிமாறலாம்.

குறிப்பு: பன்னீர் பாயாசத்தை ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்

Posted

சுறாமீன் வறை

12885826_497974343724558_380324341339108

தேவையானவை:
சுறாமீன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10
மஞ்சள்தூள் - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சுறாமீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மீன் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். வெந்தபின் மீன் துண்டுகளை தனியே எடுத்து மீன் முள்ளினை நீக்கி விட்டு அதன் தசைப் பகுதியை உதிர்த்து தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு (தட்டியது) பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், தேங்காய்த்துருவல் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். இத்துடன் உதிர்த்து வைத்துள்ள மீனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை நன்கு கிளறிப் பரிமாறவும்.

Posted

எள்ளு லட்டு:

 

12670488_500509220137737_662894955953424
தேவையானவை:
எள் - 250 கிராம்
பாகு வெல்லம் - 500 கிராம்
ஏலக்காய் -10
செய்முறை:
எள்ளை நன்றாக உரலில் இடித்துக் கொள்ளவும்.வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் பாகாகக் காய்ச்சி ,இடித்து எள் ,ஏலக்காய்த்தூள் சேர்த்து உருண்டை பிடித்தால் .எள்ளு லட்டு தயார்.

Posted

கோழியாப்பம்

12923141_502278289960830_146347125387915


தேவையானவை:
மைதா மாவு - அரை கிலோ
தேங்காய் - 1
முட்டை - 1
நெய் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
தேங்காயைத் துருவி ஒன்று அல்லது 2 டம்ளர் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். மைதா மாவில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி நெய் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு கரண்டி மாவெடுத்து தோசைக்கல்லில் ஊற்றி லேசாக ஒரு சுழற்று சுழற்றி விடவும். மூடி போட்டு வேக வைத்து வெந்ததும் இறக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன் கறி ஆனம் நன்றாக இருக்கும்.

Posted

உருளைகிழங்கு சீரக மசாலா

12936501_504174049771254_585662217430439


தேவையானவை:
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் வெண்ணெய் ஊற்றி உருகவிட்டு சீரகம் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். தேவையானவற்றில் மீதம் உள்ள அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பரிமாறவும்.

Posted

கத்திரிக்காய் பெப்பர் அண்ட் சால்ட் :

10402887_500991990089460_866819590718449


தேவையானவை:
கத்திரிக்காய் -5
பொடியாக நறுக்கிய பூண்டு- 1டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1டேபிள் ஸ்பூன்
கார்ன் பிளார் மாவு -2 டீ ஸ்பூன்
மைதா மாவு -2 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
மிளகு தூள்-2 டீ ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் -1
செய்முறை :

கத்திரிக்காயை விரும்பும் வ‌டிவில் வெட்டி வைத்து கொள்ளவும்,ஓரு பாத்திரத்தில் மைதா மாவு , கார்ன் ஃபிளவர் மாவு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவில் வெட்டிவைத்துள்ள கத்திரிக்காயைப்போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பக்கோடா போன்று எண்ணெயில்பொறித்து எடுக்கவும். அடுப்பில் கடாயைவைத்து எண்ணெய் ஊற்றிக்காய்ந்ததும், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பச்சை வாசனைப்போகும்வரை வதக்கி, ஏற்கெனவே எண்ணெயில் பொறித்தெடுத்த கத்திரிக்காயை அதனுடன் கலந்து, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அழகுபடுத்திப்பரிமாறவும்.

Posted

கருவாட்டுக் குழம்பு

12924397_502214006633925_221330389236781


தேவையானவை:
கருவாடு - 200 கிராம்
புளிக்கரைசல் - 200 மில்லி
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 மில்லி
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2 பொடியாக நறுக்கவும்
பூண்டு - 10 முழுதாக போடவும்
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
சுடுதண்ணீரில் கருவாடை சுத்தம் செய்து சிறிதளவு எண்ணெயில் லேசாக வதக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பூண்டு, மல்லித்தழை, சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புளிக்கரைசல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு கருவாட்டைச் சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேகவிட்டு இறுதியாக தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தரிக்காய் பெப்பர் & சால்ட்  சுப்பர் அயிட்டம். பஜ்ஜிபோல இருக்கும்....!

கருவாட்டுக்கு நீங்க பாட்டுக்கு வழமையாய் போடுவதுபோல் உப்பு போட்டால் அது தப்பு.

கருவாட்டிலேயே உப்பு அதிகம் இருப்பதால் சுவை பார்த்துப் போடவும்....!

Posted

10565011_1093891050669684_39467951703398

பச்சைப் பட்டாணி உருளை சாலட்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 1, பச்சைப் பட்டாணி - கால் கப், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக் கிழங்கை தோல் நீக்காமல் வேக வைக்கவும். கிழங்கு வெந்ததும் தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மசித்துக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியை கொதிக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுத்துவிடவும். உருளைக் கிழங்கு, பட்டாணி இரண்டையும் கலந்து, உப்பு, கொத்தமல்லித் தழையைப் போட்டு, கிளறிப் பரிமாறவும். தேவைப்பட்டால், எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கலாம்.

பலன்கள்: வேகவைத்த உருளைக் கிழங்கில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளன. புரதச்சதத்து குறைந்த அளவில் உள்ளது. இதனால், உடல் செல்களுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இதில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்கள் எலும்பு உறுதியாகவும், தசை மற்றும் நரம்பு செல்கள் துடிப்புடன் செயல்படவும் உதவும். பச்சைப் பட்டாணியில் வயிறு, இரைப்பை தொடர்பான புற்றுநோயை எதிர்க்கும் ஊட்டச்சத்து உள்ளது. இதில் உள்ள கெரோட்டினாய்ட்ஸ், பாலிபீனால்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள், முதுமையைத் தாமதப்படுத்தும்; வலிமையான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும்.

வேர்க்கடலை சாலட்

தேவையானவை: தோல் நீக்கிய வேர்க்கடலை - அரை கப், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையுடன், நறுக்கிய காய்கறிக் கலவை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலாக கொத்தமல்லித் தழையைத் தூவினால், வேர்க்கடலை சாலட் ரெடி. வறுத்த வேர்க்கடலை என்பதால், மொறுமொறுப்பாக இருக்கும்.

பலன்கள்: இதில் கலோரி அதிகமாக உள்ளது. 100 கிராம் வேர்க்கடலையில் 567 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் இ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.
  • 2 weeks later...
Posted (edited)

 பசலை கட்லெட்

12994421_509255462596446_849490912797519

 

தேவையானவை:
கடலை மாவு - ஒரு கப்
பொடித்த வேர்க்கடலை -
ஒரு டேபிள்ஸ்பூன்
கழுவி பொடியாக நறுக்கிய
பசலைக்கீரை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -
கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:
பச்சைமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2 துண்டு

செய்முறை:
அரைக்கக் கொடுத்தவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடலை மாவு, பொடித்த வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும். இதில் கரைத்த கடலைமாவு கலவையை ஊற்றிக் கிளறவும். கலவை திரண்டு வரும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி கிளறிய கலவையை தட்டில் கொட்டி சமன்படுத்தவும். ஆறியதும் ஃபிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்தெடுக்கவும். பிறகு, துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.
புரோட்டின், கால்சியம் சத்துக்கள் நிறைந்த இந்த கட்லெட் குழந்தைகளின் பசி நேரத்துக்கு மிகுந்த சத்தான உணவு!

 

 

 

 

கிரிஸ்ப்பி வெண்டைக்காய் ஃப்ரை

12998670_509206119268047_870427134436401


தேவையானவை:
வெண்டைக்காய் - கால் கிலோ
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:
வெண்டைக்காயை காம்பு நீக்கி மெல்லியத் துண்டுகளாக நறுக்கி தட்டி பரப்பிக் கொள்ளவும். எண்ணெய், சாட் மசாலாத்தூள் நீங்கலாக அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து வெண்டைக்காய்களை பொரித்தெடுக்கவும். பொரித்த துண்டுகளுடன் சாட் மசாலாத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறலாம். இந்த வெண்டைக்காய் கிரிஸ்பியாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மூளை வளர்ச்சிக்கு நல்லது.

Edited by நவீனன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெண்டைக்காய் ஃபிரை பண்ணினால் பல்லிடுக்குகளில் நார்கள் சிக்கிக் கொள்லாதா.....!

அந்தக் கடைசி வசனத்துக்காகச் செய்து சாப்பிடலாம்....! tw_blush:

 

..




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.