Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் இலங்கை வந்தடைந்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் இலங்கை வந்தடைந்துள்ளார்

குளோபல் தமிழ்ச் செய்தியாளா் கொழும்பு

பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர்  இலங்கை வந்தடைந்துள்ளார்



பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் ஹியுகோசுவயர் மூன்று நாள் உத்தியோகபூர்வபயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்கள், அரசியல்தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளதுடன்,நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பொங்கல்நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.


இதேவேளை அமைச்சர் இலங்கைவிஜயத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில்  நான் எனது இலங்கைவிஜயம்குறித்து பெருமகிழ்ச்சியடைந்துள்ளேன்,என்னுடைய இறுதிவிஜயம் ஓருவருடத்திற்கு முன்னர் இ;டம்பெற்றது. இன்று இலங்கையை, அனைத்து இனங்களைசேர்ந்த இலங்கையர்களும் 12மாதங்களிற்கு முன்னர் காணப்பட்டதைவிட சிறப்பான எதிர்காலம் குறித்து எதிர்பார்க்கும் ஓரு நாடாக பார்க்கிறேன்.


இலங்கை ஜெனீவாவில் தீர்மானத்திற்கு இணைஅனுசரனைவழங்கியவேளை முக்கியமான உறுதிமொழிகளை வழங்கியது, அவற்றை 2016 ஜெனீவா அமர்வி;ற்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்,நான் ஜனாதிபதிசிறிசேனவின் அர்ப்பணிப்பு,நீண்டகாலமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கையின் மோதல்களிற்கானபாரம்பரியங்களிற்கு தீர்வை காண்பது ,ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆர்வம் ஆகியவை குறித்து நாங்கள் கவரப்பட்டுள்ளோம், என குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127874/language/ta-IN/----.aspx

யாழ். பொங்கல் விழாவில்  கலந்துகொள்வது எனக்கு கௌரவம் :  நாட்டில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது

 

 
 
 

எல்லோரையும் போலவே, நானும் தைப்பொங்கலுக்காக ஆர்வத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் காத்திருக்கின்றேன். ஆனால் இந்த வருடம் இலங்கைக்கான புதிய அத்தியாய ஆரம்பத்தின் தருணமாக இவ்வருடம் கொண்டாடப்படவிருக்கின்றது. இதற்காக, ஆசியவுக்கான ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) அமைச்சர் என்ற வகையில் மூன்றாவது விஜயமாக இலங்கை வருகிறேன். கடந்த 12 மாதங்களில் நாடு கடந்து வந்த பாதை என்னை அதிசயிக்க வைத்துள்ளது. இன்று, பெரும்பாலான இலங்கையர்களும், அனைத்து இன பிரிவினரும் ஒன்றிணைந்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன் கற்பனை செய்ததைவிட பிரகாசமான எதிர்காலத்தை நோக்குவதை நான் பார்க்கின்றேன் என பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்தார்.Hugo-Swire-pongal-jaffna.jpg

இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர்  தனது இலங்கை விஜயம் தொடர்பில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் மாற்றத்தை காணும் பொருட்டு ஜனாதிபதி  சிறிசேனாவை தெரிவு செய்து சிறிது காலத்தின் பின்னர் நான் கடந்த விஜயத்தை மேற்கொண்டேன். முக்கியமாக மூன்று விடயங்களால் ஊக்குவிக்கப்பட்டு ஈர்க்கப்பட்டேன்.  

இதில் முதலாவதாக, இதுவரை நாட்டில் பல வருடங்களாக நிழலாக காணப்படும் புரையோடிப்போன இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு  அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பு, இரண்டாவதாக, ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்கு அவசியமான சோதனைகள் மற்றும் சமநிலைகளை மீள கட்டியெழுப்பதற்கான அரசாங்கத்தின் ஆர்வம், மூன்றாவதாக, பல வருடகால கசப்பான உறவின் பின்னர்  தமது பழங்கால தோழர்களுடனான உறவு புத்துயிர் அளித்தல் என்பனவற்றை  கூற முடியும்.

http://www.virakesari.lk/article/2036

12417832_1547614312228737_59558834987906

2 hours ago, arjun said:

12417832_1547614312228737_59558834987906

எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் படம் ஆயிரம் சொல்லும் - நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பமே ஸ்காட்லாந்து மக்கள்.. தமது பழங்கால உறவுகளான இங்கிலாந்து மக்களை எப்படி பார்க்கினம் என்று. பிரிந்து போவதைப் பற்றியா.. ஒன்னா இருக்கிறது பற்றியான்னு.

அடுத்தவனுக்கு வேதம் ஓதுவது இலகு. நமக்கு அதையே அப்பிளை பண்ணுறதுன்னா கஸ்டமுங்க. tw_blush:

லண்டனில் தெருவிலை வைச்சு தமிழர்கள் பொங்கினம்.. அவைக்கு பொங்க ஒரு இடம் ஏற்பாடு பண்ணிக்கொடுக்க ஆக்களில்ல. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஜீவன் சிவா said:

எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் படம் ஆயிரம் சொல்லும் - நன்றி 

ஜீவன்! உள்ளதை சொல்லுங்கள். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இப்போது என்ன பிரச்சனை? தமிழர்கள் எதை செய்ய முடியாமல் இருக்கின்றது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.