Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் யோசிதவும், பிரபாகரனின் அன்டனியும் - உபுல்ஜோசப்பெர்ணாண்டோ:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் யோசிதவும், பிரபாகரனின் அன்டனியும் - உபுல்ஜோசப்பெர்ணாண்டோ:

03 பெப்ரவரி 2016
  மகிந்தவின் யோசிதவும், பிரபாகரனின் அன்டனியும் -  உபுல் ஜோசப் பெர்ணாண்டோ:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச 2006 ம்ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்துகொண்டார்,அவ்வேளை ஏனைய உலக தலைவர்களை போல இல்லாமல் தான் தனது மகனை யுத்ததில் ஈடுபடுவதற்கு வழங்கியுள்ளதாக மகிந்த பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.மகா சங்கத்தினர் அவரை புகழ்ந்து பாராட்டினர்,மகிந்தவை உண்மையான தேசப்பற்றாளன் என வர்ணித்தனர்.

மகிந்த தனது மகனை கடற்படைக்கு வழங்கிய அதேகாலப்பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்டனி ஏற்கனவே இலங்கை இராணுவத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். நோர்வே தலைமையிலான சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து மகிந்த விடுதலைப்புலிகள் மீது வாழ்வா சாவா யுத்தத்தை ஆரம்பித்திருந்தார், பிரபாகரன் அந்த யுத்தத்தில் தனது மகனை களமிறக்கினார்.விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சார்ல்ஸ்  அன்டனி அதிஉச்ச பங்களிப்பை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் அளித்த வாக்குமூலமொன்றின் போது குமரன்பத்மநாதன் என  அழைக்கப்படும் கே.பி சார்ல்ஸ்  அன்டனி தனது தந்தையையும் குடும்பத்தினரையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை வெளிநாடொன்றில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லுமாறு அவர் கே.பியை கேட்டுள்ளார். தாங்கள் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் பிரபாகரன் யுத்த களத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு இணங்குகின்றார் இல்லை என சார்ல்ஸ் அன்டனி  கேபியிடம் குறிப்பிட்டுள்ளார். இது விடுதலைப்புலிகள் அமைப்பிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. இறுதியாக மோதலின்போது கொல்லப்பட்ட சார்ல்ஸ் அன்டனியின் உடலை இராணுவம் கண்டுபிடித்தது.

இதற்குமாறாக மகிந்த யோசிதவை அரசியல் நோக்கங்களிற்காவே கடற்படையிடம் வழங்கினார்,நாட்டை பாதுகாப்பதற்காக, யுத்தத்தில் ஈடுபடுவதற்காக யோசிதவை அவர் தியாகம் செய்யவில்லை. ஜிரிஎன். யுத்தத்தின்போது யோசித எங்கிருந்தார் என்பதே தெரியாது, அவர் யுத்தகளத்தில் கால் வைத்தமைக்கான அறிகுறியே இல்லை, பிரபாகரன்பயங்கரவாத தலைவராகயிருந்தாலும்  தனது சமூகத்திற்கு ஓருபோதும் துரோகமிழைக்கவில்லை என்பது தெளிவாகின்றது. பிரபாகரனின் நிலைப்பாட்டிற்கு மாறாக மகிந்தவின்போலியான தேசப்பற்று தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையில் இணைத்துகொள்ளப்படுவதற்கான அனைத்து விதி முறைகளையும் மீறி யோசிதராஜபக்ச உக்ரின்மார்சில் 13 மாதகற்கை நெறியை பின்பற்றினார், அரச செலவில். இது உக்ரைன் அரசாங்கத்தின் நிறுவனமாகும்,இதன் பின்னர் அவர் வேறு கற்கை நெறிகளையும் பயின்றுள்ளார் என மூவர் கொண்ட குழுவொன்றின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கற்கை நெறிகளை உக்ரைனிற்கான முன்னாள் தூதுவரும் யோசிதவின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க ஏற்பாடு செய்தைமயும் தெரியவந்துள்ளது.வீரதுங்க ஏற்கனவே விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார், தலைமறைவாகியுள்ளார்,உக்ரைன் கிளர்ச்சியாளர்களிற்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட உதயங்க வீரதுங்க மகிந்தராஜபக்ச குடும்பத்தின் அங்கீகாரத்துடனேயே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பது தெளிவாகியுள்ளது.

மைத்திரி-ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா  யோசித குறித்து ஆராய்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்தார்,2015 ஜனவரியில் பாதுகாப்பு அமைச்சு விடுத்த உத்தரவின்பேரிலேயே இந்த குழு ஏற்படுத்தப்பட்டது. ஜிரிஎன். குறிப்பிட்ட குழுவின் அறிக்கை மிகுந்த அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது,கடற்படைக்கு ஓருவரை இணைக்கும்போது கட்டாயமாக பின்பற்றவேண்டிய விடயங்கள் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள்,நடைமுறைகள் மற்றும் ஏனைய தேவைகள் என்பன யோசித விடயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

வசந்தகரணாகொட யோசித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துகொள்வதற்கு பின்பற்றப்பட்ட சட்டவிரோத நடைமுறைகளிற்கு அப்பால் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்தகரனாகொடவினால்,யோசித ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட சிறப்புசலுகைகள் மற்றும் சிறப்பு பரிசுகள் குறித்தும் விசாரணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பிரிட்டனின் கடற்படையின் பயிற்சிக்கல்லூரிக்கு அனுப்பப்படாத யோசித அந்த சந்தர்ப்பத்தை பணத்தை செலுத்திபெற்றுக்கொண்டுள்ளார்,அது அவரிற்கென்றே விசேடமாக உருவாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது, அதன் பின்னர் அவர் பிரிட்டனின் கடற்படையின் பயிற்சிக்கல்லூhயி ல்  வேறு இரண்டு கற்கைநெறிகளை பின்பற்றியுள்ளார்.அவ்வேளை மிகவும் கனிஸ்ட தரத்தில் காணப்பட்ட பின்னர் பிரிட்டனில் இன்னொரு சர்வதேதரத்திலான கற்கைநெறியை பயின்றுள்ளார் என்பதும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் யோசித சப்லெப்டினன்ட் தரத்தை எட்டியதும் அவரது நெருங்கிய உறவினரான உதயங்கவீரதுங்க அவரை உக்ரைனின் பாதுகாப்பு தொடர்பான தேசிய பல்கலைகழகத்தில் கற்கைநெறியொன்றை பயில்வதற்கு  ஏற்பாடுசெய்துள்ளார்.ஜிரிஎன் 2009 ஓக்டோபர் 29 முதல் 2010 ஆகஸ்ட் 31 ம் திகதி வரை.அக்காலப்பகுதியில் யோசிதவிற்கு தினசரிவெளிநாட்டு உதவித்தொகை,போக்குவரத்து மற்றும் தொலைபேசி செலவுகளை வழங்குமாறு பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இதனைவிட அதிர்ச்சிகரமான தகவல்களும் உள்ளன. யோசிதவின் பயிற்சிமுடிவில் திருகோணமலையில் இடம்பெற்ற அணிவகுப்பில் கடேட் ராஜபக்சவிற்கு அவ்வருடத்தின் சிறந்த மிட்சிப்மென் விருது வழங்கப்பட்டுள்ளது.மேலுத் கௌரவ வாள் விருதும் வழங்கப்பட்டுள்ளது.இவை அனைத்தும் முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொடவின் ஏற்பாட்டிலேயே இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின்பேரில் யோசித ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.கடற்படை தலைமையகத்தின்  வழமையான பணிகளிற்கு பின்னர் அவர் ஜனாதிபதி  பாதுகாப்பு பிரிவு கடமைகளிற்காக அலரிமாளிகைக்கு சென்றுள்ளார்.இதற்காக அவரிற்கு விசேட அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது.

யோசித ராஜபக்சவினதும், சார்ல்ஸ் அன்டனியின் அத்தியாயங்கள் தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு என்ற விடயங்களில் பிரபாகரனிற்கும், மகிந்தராஜபக்சவிற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை வெளிப்படுத்துகின்றன.

யுத்தத்திற்காக பிரபாகரன் தனது மகனை தியாகம்செய்தார்,யோசித யுத்த களத்திற்கு அருகில் கூட வரவில்லை.

எனினும் மகிந்த தனது மகனை யுத்தத்திற்கு அனுப்பியதாக தெரிவித்து அரசியல் ஆதாயம் பெற முயன்றார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128563/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை வாசிக்க அழுகை,அழுகையாய் வருது

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காகத்தான் மகிந்தவை  தேசியத்தலைவர் என்கிறார் சம்பந்தர் ஐயா.....

பாம்பின் கால் பாம்பறியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, விசுகு said:

அதற்காகத்தான் மகிந்தவை  தேசியத்தலைவர் என்கிறார் சம்பந்தர் ஐயா.....

பாம்பின் கால் பாம்பறியும்.

விசுகர்! நீங்கள் எங்கையோ போயிட்டீங்கள்!!!! வாவ் :) tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா,விசுகு அண்ணா உங்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On February 3, 2016 at 0:41 PM, ரதி said:

இந்த செய்தியை வாசிக்க அழுகை,அழுகையாய் வருது

எனக்கு வாசிக்கச் சிரிப்புச் சிரிப்பா வருகுது ரதி அக்கா!tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிரபாகரன் தனது பிள்ளைகளை போராட்டத்துக்கு அனுப்பவில்லை என கேட்ட ஆட்களும் இதே களத்தில் தான் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஏன் பிரபாகரன் தனது பிள்ளைகளை போராட்டத்துக்கு அனுப்பவில்லை என கேட்ட ஆட்களும் இதே களத்தில் தான் உள்ளார்கள்.

சிறு திருத்தம்

கரும்புலியாக்கவில்லை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, nunavilan said:

ஏன் பிரபாகரன் தனது பிள்ளைகளை போராட்டத்துக்கு அனுப்பவில்லை என கேட்ட ஆட்களும் இதே களத்தில் தான் உள்ளார்கள்.

அவர்கள் தான் இன்று மறு உருவில் உலாவுகின்றார்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2016 at 7:35 AM, வாலி said:

எனக்கு வாசிக்கச் சிரிப்புச் சிரிப்பா வருகுது ரதி அக்கா!tw_blush:

எனக்கும் அப்படித்தான். யாராவது அழுதால், எனக்கு சிரிப்பு வரும், அதே யாராவது சிரித்தால் வயிறெரிஞ்சு அழுகை அழுகையாய் வரும். இது எனது எதிர்ப்புக்குணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.