Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேருந்துகளுக்கு இடையில் போட்டி. உயிரை பணயம் வைத்து பயணிக்கும் பயணிகள்

Featured Replies

பேருந்துகளுக்கு இடையில் போட்டி. உயிரை பணயம் வைத்து பயணிக்கும் பயணிகள்

இலங்கை போக்குவரத்து  சபை  பேருந்துக்கும்  தனியார் பேருந்துக்கும் இடையில் நடைபெறும் போட்டிகளை  கட்டுபடுத்த யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு  உள்ளன.

யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பதவியேற்றதன் பின்னர் யாழில் நடைபெற்று வந்த பல குற்ற செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

கடந்த காலத்தில் யாழில் அதிகரித்து காணப்பட்ட வாள் வெட்டு சம்பவங்கள் , குழு மோதல்கள் , கொள்ளை  சம்பவங்கள் என்பன வெகுவாக  குறைந்தன.

அண்மையில்  மது போதையில் வாகனம் ஓடுபவர்களை கட்டுப்படுத்த மதுபான சாலைக்கு அருகில் வைத்தே மது அருந்திவிட்டு வாகனத்தில் வருபவர்களை கைது செய்யுமாறும் , அவர்களை உடனே பொலிஸ் பிணையில் விடுவிக்காது , நீதிமன்றில் முற்படுதும்மாறு பொலிசாருக்கு கட்டளையிட்டு உள்ளார்.

அதேபோன்று மேல் நீதிமன்ற நீதவான் , இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும், என கோரப்படுகின்றது.

அண்மைக்காலமாக , யாழில் இவ்வாறு இரு பேருந்துக்களும் போட்டி போட்டு ஓடுவதனால் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் இரு சாரர்களுக்கு இடையில் தாக்குதல் சம்பவங்களும் நடைபெருகின்றன

அண்மையில் திருநெல்வேலி பரமேஸ்வர சந்தியில் இரு பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் மோதிக்கொண்டனர். இதனால் இரு பேருந்துக்களிலும் பயணித்த பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அதேவேளை பேருந்துகள் மீதான கல் வீச்சு சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் , திருநெல்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும்  போட்டி போட்டு  ஓடியதினால் புதன்கிழமை மதியம்  விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்ததுடன் , மேலும் இருவர் காயமடைந்து இருந்தனர். அத்துடன் பெருமளாவன பொருட் சேதமும் ஏற்பட்டது.

எனவே இவ்வாறன விபத்து சம்வங்களை கட்டுபடுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை பேருந்து சாரதிகள் மீது எடுக்க வேண்டும் என கோரப்படுகின்றது.

அத்துடன் யாழில் தனியார் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் சிறிய ரக பேருந்துகள் ஆகும். அவற்றின் தரங்கள் மிக மோசமாக உள்ளன,  குறித்த பேருந்துகள் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறே பயணிகளை ஏற்ற கூடிய பேருந்துகள் , ஆனால் அந்த பேருந்துக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றார்கள்.இவை தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேவேளை பெரும்பாலான தனியார் பேருந்து சாரதிகள் சம்பளத்திற்கு சாரதியாக வேலை செய்பவர்கள் , பேருந்தின் முதலாளிகள் வேறு நபர்களாக இருப்பார்கள்.

அதானல் தனியே பேருந்து சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் , பேருந்தின் முதலாளிகள் வேறு சாரதிகளை பணிக்கு அமர்த்துவார்கள்.

எனவே போட்டி போட்டு அபாயகரமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது குறித்த வாகனத்தின் மீதும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக வாகனத்தின் வழித்தட அனுமதியினை குறிப்பிட்ட காலம் நிறுத்தி வைத்தல் அல்லது இரத்து செய்தல்  போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை தனியே தனியார் பேருந்து சாரதிகள் மாத்திரம் தவறிழைக்கவில்லை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதிகளும் சிலர் ஆபத்தான முறையில் வேகமாக பேருந்துக்களை செலுத்துகின்றார்கள். அவ்வாறானவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அவ்வாறு சட்டங்கள் கடுமையாக்கபாட்டால் மாத்திரமே இவ்வாறான விபத்துகளை குறைக்க முடியும் என்பதுடன் பயணிகள் பயமின்றி பேருந்துக்களில் பயணம் செய்ய முடியும்.

எனவே பயணிகளை ஏற்றிக்கொண்டு அபாயகரமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மீது கடும் நடவடிக்கைகளை யாழ்,மேல் நீதிமன்ற நீதிபதி எடுக்க வேண்டும் என கோரப்படுகின்றது.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128590/language/ta-IN/article.aspx

இளஞ்செழியனின் சேவைகளைப் பாராட்டாத யாழ் மக்களே இங்கு கிடையாது. அவரைப்பற்றி எழுதத் தேவையில்லை.

இன்றும் திருநெல்வேலியில் விபத்து. அரசு நினைத்தால் ஒழுங்கான முறையில், பல பேரூந்துகளை பாவனை அதிகமான இடங்களில் சேவைக்கு விடலாம். விளைவு - இந்த மினிபஸ்களை ஒழிக்கலாம். 

இன்றைய (3 பெப்) உதயன் நாளிதளில் வட மாகணசபைக்குரிய 24ஆயிரம் கோடியில் 9ஆயிரம் கோடிதான் பாவிக்கப்பட்டதாம், 15ஆயிரம் திறைசேரிக்கு மிச்சம் பிடித்து சமர்ப்பணமாம் என்று செய்தி.

உருப்பட்ட மாதிரிதான்.

யாழில் ஓட்டோவை மோதித்தள்ளியது தனியார் பேருந்து! : மூவர் படுகாயம்!
யாழில் ஓட்டோவை மோதித்தள்ளியது தனியார் பேருந்து! : மூவர் படுகாயம்!
தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பயணித்த பாடசாலை மாணவன்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இன்று பி.ப 1மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலி  பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக  எதிரே வந்த முச்சக்கர வண்டியை அருகிலிருந்த தனியார் வங்கி கட்டடத்துடன் மோதியுள்ளது.
 
மேலும் இந்த விபத்தில் என்.டி.பி வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
 
மேலும் குறித்த  சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தனியார் பேருந்து சாரதியை கைது செய்தததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
                                                  acciudent2.jpg
 
                                                  1454488710_accident3.jpg
 
                                                  1454488735_accident1.jpg
 
                                                  accident66.jpg

http://onlineuthayan.com/news/8102

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் காலத்தில் இவ்வாறான விபத்துக்கள் இல்லை எனும் அளவுக்கு குறைக்கப்பட்டிருந்தன. போட்டி போட்டு ஓடாத வகைக்கு நேர அட்டைகள் தயாரிக்கப்பட்டதோடு சொன்ன நேரத்துக்கு வரவும்.. போகவும் செய்யப்பட்டது. தவறுபவர்களுக்கு ஓட்டங்கள் குறைக்கப்பட்டன. தவறிழைத்தவர்களுக்கு ஓடத் தற்காலிக தடைகளும்.. பெரும் தவறிழைத்தவர்களுக்கு நிரத்தரத்தடையும் அமுல் செய்யப்பட்டன.

ஆனால் சொறீலங்கா சிங்கள அரச நிர்வாகத்தின் கோமாளித்தனமே.. இன்று தமிழர் தாயகம் மீண்டும் சிக்கிசிதம்பிப் போக முக்கிய காரணமாக உள்ளது. சிங்களவனுக்கு நாட்டை ஒழுங்காக நிர்வகிக்கும் தன்மை அறிவு கிடையாது. tw_angry::rolleyes:

23 minutes ago, nedukkalapoovan said:

ஆனால் சொறீலங்கா சிங்கள அரச நிர்வாகத்தின் கோமாளித்தனமே.. இன்று தமிழர் தாயகம் மீண்டும் சிக்கிசிதம்பிப் போக முக்கிய காரணமாக உள்ளது. சிங்களவனுக்கு நாட்டை ஒழுங்காக நிர்வகிக்கும் தன்மை அறிவு கிடையாது. tw_angry::rolleyes:

29 minutes ago, ஜீவன் சிவா said:

இன்றைய (3 பெப்) உதயன் நாளிதளில் வட மாகணசபைக்குரிய 24ஆயிரம் கோடியில் 9ஆயிரம் கோடிதான் பாவிக்கப்பட்டதாம், 15ஆயிரம் திறைசேரிக்கு மிச்சம் பிடித்து சமர்ப்பணமாம் என்று செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஜீவன் சிவா said:

இன்றைய (3 பெப்) உதயன் நாளிதளில் வட மாகணசபைக்குரிய 24ஆயிரம் கோடியில் 9ஆயிரம் கோடிதான் பாவிக்கப்பட்டதாம், 15ஆயிரம் திறைசேரிக்கு மிச்சம் பிடித்து சமர்ப்பணமாம் என்று செய்தி.

உதயனின் இந்தக் கணக்கு உண்மையா பொய்யான்னு முதலில் உறுதிப்படுத்த வேண்டும். உதயன் மீதான நம்பிக்கை அடியோடு தகர்ந்துவிட்டது. அது இப்போ சரவணபவனின் அரசியல் நாளேடாகி விட்டது. அதனால்.. உதயனின் குற்றச்சாட்டை ஆதரமின்றி ஆய்வின்றி நம்ப முடியாது. உதயனும்.. ஈபிடிபி ஒட்டுக்குழுவின் டன் தொலைக்காட்சியும் இப்ப ஒன்று தான். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

இளஞ்செழியனின் சேவைகளைப் பாராட்டாத யாழ் மக்களே இங்கு கிடையாது. அவரைப்பற்றி எழுதத் தேவையில்லை.

இன்றும் திருநெல்வேலியில் விபத்து. அரசு நினைத்தால் ஒழுங்கான முறையில், பல பேரூந்துகளை பாவனை அதிகமான இடங்களில் சேவைக்கு விடலாம். விளைவு - இந்த மினிபஸ்களை ஒழிக்கலாம். 

இன்றைய (3 பெப்) உதயன் நாளிதளில் வட மாகணசபைக்குரிய 24ஆயிரம் கோடியில் 9ஆயிரம் கோடிதான் பாவிக்கப்பட்டதாம், 15ஆயிரம் திறைசேரிக்கு மிச்சம் பிடித்து சமர்ப்பணமாம் என்று செய்தி.

உருப்பட்ட மாதிரிதான்.

யாழில் ஓட்டோவை மோதித்தள்ளியது தனியார் பேருந்து! : மூவர் படுகாயம்!
யாழில் ஓட்டோவை மோதித்தள்ளியது தனியார் பேருந்து! : மூவர் படுகாயம்!
தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பயணித்த பாடசாலை மாணவன்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இன்று பி.ப 1மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலி  பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக  எதிரே வந்த முச்சக்கர வண்டியை அருகிலிருந்த தனியார் வங்கி கட்டடத்துடன் மோதியுள்ளது.
 
மேலும் இந்த விபத்தில் என்.டி.பி வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
 
மேலும் குறித்த  சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தனியார் பேருந்து சாரதியை கைது செய்தததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
                                                  acciudent2.jpg
 
                                                  1454488710_accident3.jpg
 
                                                  1454488735_accident1.jpg
 
                                                  accident66.jpg

http://onlineuthayan.com/news/8102

உந்த வேன் டிரைவர் வேனில் இருந்த மாதிரியே ஏ டி எம் இல காசெடுப்பம் என்று டிரை பண்ணியிருக்கிறார் 
சனம் விபத்து என்று புடிச்சிபோட்டுதுகள் ......பாவம் அந்தாள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.