Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்களை நினைவுகூர அனுமதி வழங்க வேண்டும்!

Featured Replies

மாவீரர்களை நினைவுகூர அனுமதி வழங்க வேண்டும்!
 
 
மாவீரர்களை நினைவுகூர அனுமதி வழங்க வேண்டும்!
இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம் தான் தீர்வு எனவும், போரில் உயிர்நீத்த எங்களுடைய உறவுகளையும் மாவீரர்களையும்,  நினைவு கூருவதற்கும் எந்தவித தடைகளும் இன்றி அங்கீகரிக்க வேண்டும். அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகக் கருத்தறியும் குழுவிடம் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட மக்கள்.
 
புதிய அரசமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவினுடைய 2ஆவது அமர்வு நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கருத்தறியும் அமர்வில் கலந்து கொண்டு புதிய அரசமைப்பு தொடர்பாக, தங்களது கருத்துக்களை முன்வைக்கும்போதே முல்லைத்தீவு மக்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
 
குறித்த அமர்வில் கலந்து கொண்ட மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
1983ஆம் ஆண்டு இராணுவ முகாம்கள் எங்கெங்கே இருந்தனவோ மீண்டும் அங்கேயே இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் வகையில் புதிய அரசமைப்பில் இடம்பெறவேன்டும். தற்போது உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் முறை நீக்கி புதிய அரசமைப்பில் தொகுதி ரீதியான தேர்தல் முறை கொண்டு வரப்படவேண்டும். 
 
இலங்கையில் வாழ்ந்த ஒரு இனத்தை அழித்ததை பெருமைபடுத்தி வெற்றி விழா எனக் கொண்டாடுவதை நிறுத்தும் வகையில் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும். போரில் உயிர் நீத்த எங்களுடைய உறவுகளான போராளிகளையும்,  மக்களையும் நினைவு கூருவதற்கும் எந்தவித தடைகளும் இன்றி அதற்கு அனுமதியளிக்க வேண்டும். 
 
அத்துடன்,நடந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம் தான் ஓரே தீர்வு எனவும் தெரிவித்தனர். மேலும், குறித்த புதிய அரசமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் அமர்வுக்கு வருகை தந்தவர்களில் சிலர், வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படவேண்டும். அவை அதி உச்ச அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கருத்துக்களை முன்வைத்தனர்.
 
அத்துடன் தகவல் அறியும் சட்டத்தினையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஊடகங்கள் சுதந்திரமாக  செயற்படக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான இனங்களைப் பிரித்துக்காட்டாத தேசியக்கொடி வேண்டும். 
 
இது அமைதியையும், சமாதானத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் வன்முறையான சித்தரிப்புக்கள் அற்றதாவும் இருக்க வேண்டும்  எனவும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 
 
இதேவேளை, நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த மக்கள் கருத்தறியும் அமர்வில் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் வரையானோர் குழுவாகவும், தனியாகவும் சென்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

அத்துடன்,நடந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம் தான் ஓரே தீர்வு எனவும் தெரிவித்தனர்.

என்னது கூட்டமைப்பு ஆக்களே தமிழீழத்தைக் கைவிடுறம் என்று அறிவிக்கினம்.. ஆனால் தாயக மக்கள் அதுதான் தீர்வென்று சொல்லினம்.

இவ்வளவு அழிவுகளைக் காட்டி மக்களை கொள்கையிலும் தோற்கடிக்கலாம் என்று நினைச்சவங்க முன்னாடி...மக்கள் மாவீரர்களின் இலட்சியம் சுமந்த மக்களாவே இருக்கிறார்கள் என்று புலனாகிறது.

இதுதான் மக்களின் குரல். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

என்னது கூட்டமைப்பு ஆக்களே தமிழீழத்தைக் கைவிடுறம் என்று அறிவிக்கினம்.. ஆனால் தாயக மக்கள் அதுதான் தீர்வென்று சொல்லினம்.

இவ்வளவு அழிவுகளைக் காட்டி மக்களை கொள்கையிலும் தோற்கடிக்கலாம் என்று நினைச்சவங்க முன்னாடி...மக்கள் மாவீரர்களின் இலட்சியம் சுமந்த மக்களாவே இருக்கிறார்கள் என்று புலனாகிறது.

இதுதான் மக்களின் குரல். tw_blush:

எங்க ஆட்கள்

புலம் பெயர் மக்கள் சொல்லத்தேவையில்லை

தாயகத்தமிழர் சொல்லட்டும் என்பவர்கள்

அதிலும் முல்லைத்தீவிலிருந்து சொல்கிறார்கள்

அவனவன் சில மாதம் நின்றுவிட்டு

புலிகளை மன்னிக்கவே முடியாது

அவர்களை மறந்தாச்சு என்கிறார்கள்..

கூட்டமைப்பு வெற்றி பெற்றது எங்க பிரான்சிலா ?

எழுத முதல் என்ன எழுதுகின்றேன் என்று தெரியவேண்டும் .

தனிநபர் ,நாலு பேர்கள் சொல்வதையெல்லாம் செய்தியாக்கி சுயஇன்பம் காண்பதுதான் இப்போ புலம் பெயர் புலிகளின் ஒரே தெரிவு .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, arjun said:

கூட்டமைப்பு வெற்றி பெற்றது எங்க பிரான்சிலா ?

எழுத முதல் என்ன எழுதுகின்றேன் என்று தெரியவேண்டும் .

தனிநபர் ,நாலு பேர்கள் சொல்வதையெல்லாம் செய்தியாக்கி சுயஇன்பம் காண்பதுதான் இப்போ புலம் பெயர் புலிகளின் ஒரே தெரிவு .

கூட்டமைப்பும் திமுகவும் அதிமுகவும் ஒன்று தான்..

மக்களின் அபிலாசைகளை அவை பிரதிபலிக்கவில்லை....

எனவே தான் மக்கள் பேசத்தலைப்படுகிறார்கள்....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.