Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுடன் பேச்சு என்ற சொல்லுக்கே இடமில்லை!

Featured Replies

ஜெயலலிதாவுடன் பேச்சு என்ற சொல்லுக்கே இடமில்லை!
 
ஜெயலலிதாவுடன் பேச்சு என்ற சொல்லுக்கே இடமில்லை!
ஜெயலலிதாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தாம் தயாரில்லை. இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் விடுதலை செய்வோம். ஆனால் படகுகளை மீளக் கையளிக்கமாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 
இந்திய மத்திய அரசுடனேயே பேச்சு வார்த்தை நடத்துவோம்.தமிழகத்துடன் “பேச்சு” என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
இது தொடர்பாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பில் அத்துமீறி ரோலர்கள் மூலம் மீன் வளங்களை அள்ளிச் செல்கின்றனர். கடற் தாவரங்களையும் அழிக்கின்றனர். இதனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
 
இதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. எனவே எமது நாட்டின் கடற் படையினருக்கும் கடலோரப் பாதுகாப்பு பிரிவினருக்கும் அத்து மீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும் அவர்களது படகுகள், வலைகளை பறிமுதல் செய்யுமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இதனால் ஜெயலலிதாவின் அச்சுறுத்தலுக்கு பயந்து மீளப் பெற்றுக் கொள்ளமாட்டோம். மீனவர்களை மனிதாபிமானத்துடன் விடுவிப்போம். ஆனால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் மீளக் கையளிக்கமாட்டோம்.
 
மேலும் இப்பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசுடனேயே பேச்சுக்களை நடத்துவோம். ஆனால் ஜெயலலிதாவுடன், தமிழக அரசுடன் பேச்சு நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
  • கருத்துக்கள உறவுகள்

 இந்திய மீனவர்களால் மட்டுமல்ல, தென்பகுதி மீனவர்களாலும் பாதிக்கப்படுவது வடபகுதி மீனவர்தான் என்பது உண்மை. அதை தடுத்து நிறுத்த முடியாதவிடத்து, பறிமுதல் செய்யும் படகு, வலைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கே கொடுப்பீர்களா? (பறியுங்கள் என்று சொல்லவில்லை, ஆனால் நீங்கள் பறித்தெடுப்பதை)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:
ஜெயலலிதாவுடன் பேச்சு என்ற சொல்லுக்கே இடமில்லை!
 
ஜெயலலிதாவுடன் பேச்சு என்ற சொல்லுக்கே இடமில்லை!
ஜெயலலிதாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தாம் தயாரில்லை. இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் விடுதலை செய்வோம். ஆனால் படகுகளை மீளக் கையளிக்கமாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 
இந்திய மத்திய அரசுடனேயே பேச்சு வார்த்தை நடத்துவோம்.தமிழகத்துடன் “பேச்சு” என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
இது தொடர்பாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பில் அத்துமீறி ரோலர்கள் மூலம் மீன் வளங்களை அள்ளிச் செல்கின்றனர். கடற் தாவரங்களையும் அழிக்கின்றனர். இதனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
 
இதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. எனவே எமது நாட்டின் கடற் படையினருக்கும் கடலோரப் பாதுகாப்பு பிரிவினருக்கும் அத்து மீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும் அவர்களது படகுகள், வலைகளை பறிமுதல் செய்யுமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இதனால் ஜெயலலிதாவின் அச்சுறுத்தலுக்கு பயந்து மீளப் பெற்றுக் கொள்ளமாட்டோம். மீனவர்களை மனிதாபிமானத்துடன் விடுவிப்போம். ஆனால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் மீளக் கையளிக்கமாட்டோம்.
 
மேலும் இப்பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசுடனேயே பேச்சுக்களை நடத்துவோம். ஆனால் ஜெயலலிதாவுடன், தமிழக அரசுடன் பேச்சு நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

முதல் முறை பிடிபடுபவர்களை மனிதாபிமானத்துடன் விடுவிக்கலாம். திரும்பத் திரும்ப வருபவர்களுக்கு வரும் ஒவ்வொரு முறையும் குறிவைத்து ஆகக் குறைந்தது 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படல் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சிக்கலான பிரச்சினை.

இதுவரை காலமும் தமிழக மீனவர்களைதஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்கிற காரணத்துக்காக சகட்டுமேனிக்குச் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்த இலங்கைக் கடற்படை, இப்போது ஈழத் தமிழர்களின் மீன்வளத்தைப் பாதுகப்பாதற்காகத்தான் கைதுசெய்கிறோம், கைப்பற்றுகிறோம் என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறது. ஈழத் தமிழருக்கும், தமிழகத் தமிழருக்கும் இடையே இல்லாத பிளவை உருவாக்கி அதற்குள் ஒரு பெரிய ஆப்பை ஓங்கி அடிக்கப் பார்க்கிறது.

இதுவரை காலமும் தம்மால் பிரிக்க முடியாமல்ப் போன இரு தமிழர்களையும், அவர்களின் கண்ணை, அவர்கள்து விரலைக் கொண்டே குத்தப் பார்க்கிறது. இந்திய மத்திய அரசுக்கும் வேண்டியது இதுதான், ஆகவே அது மெளனமாக இருந்து வேடிக்கை பார்க்க, இலங்கை புகுந்து விளையாடுகிறது.

ஆனாலும், வட இலங்கையின் கடல்வளம் இந்திய இழுவைப் படகுகளால் சூரையாடப்படுகின்றது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது நிறுத்தப்பட வேண்டியதுதான். ஆனால், இந்தப் பிணக்கு இருபக்கத்து தமிழ் மீனவர்களாலும் தீர்க்கப்படவேண்டுமே ஒழிய, இருவரையும் இதுவரை காலமும் அழித்துவந்த, தொடர்ந்தும் அழித்துவரும் இனக்கொலையாளர்களால் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.