Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்முகக் கலைஞர் அரசையா காலமானார்

Featured Replies

பன்முகக் கலைஞர் அரசையா காலமானார்

கலைஞர் அரசையா

  • கலைஞர் அரசையா

யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த அரசையா என அனைவராலும் அழைக்கப்படுகின்ற, பன்முகக் கலைஞர் திருநாவுக்கரசு தனது 90 ஆவது வயதில், புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

தமிழ்ப்பற்றாளராக அறியப்பட்ட அரசையா, தமது இளமைக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் அபிமானியாக இருந்தார். கட்சி நடத்திய சட்டமறுப்பு உண்ணாவிரதப் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டார்.

பின்னாளில், அவர் மேடை நாடகங்களை எழுதும் எழுத்தாளராக, மேடை நாடக நெறியாளராக, திரைப்பட நடிகராக, புகைப்படக் கலைஞராக, வில்லுப்பாட்டுக் கலைஞனாக, சிற்பியாக, ஒப்பனைக் கலைஞனாக மிளிர்ந்தார் என்று பேராசிரியர் மௌனகுரு தெரிவித்தார்.

கடந்த நூற்றாண்டின் எழுபதுகளுக்கு முந்தைய காலகட்டங்களில் இவர் தனியாகவே நாடகங்களை இயக்கினார். அவற்றில், திப்புசுல்தான், வீரமனிதன், வீரத்தாய் போன்ற நாடகங்கள் ஓரளவிற்கு அன்னிய எதிர்ப்பையும், தமிழ் உணர்வையும் காட்டிய நாடகங்களாக பார்க்கப்பட்டன.

எழுபதுகளுக்குப் பின் இவரது நாடக வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டதாகக்கூறும் பேராசிரியர் மௌனகுரு, இந்தக் காலத்திலே அவர் ஒரு ஒப்பனைக் கலைஞராகவும் பரிணமித்து மிளிர்ந்ததாக தெரிவித்தார். அவரது இறுதிக் காலங்களில் ஒப்பனைக் கலைஞராகவே அவர் அறியப்பட்டார் என்று நினைவுகூர்ந்தார் பேராசிரியர் மௌனகுரு.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160218_arasiah_jaffna

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

ஓரளவு இவரை தெரிந்த மாதிரிக் கிடக்கு....!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசையா இல்லாத யாழ்ப்பாணம் அரசையா நினைவுகள் பேர்ராசிரியர் சி.மௌனகுரு:

19 பெப்ரவரி 2016
அரசையா இல்லாத யாழ்ப்பாணம் - அரசையா நினைவுகள் பேர்ராசிரியர் சி.மௌனகுரு:-


 ஒரு வாரத்தின் முன் தொலை பேசியில் அந்தக் கிழட்டுச் சிங்கம் தள தளத்த குரலில் என்னுடன் பேசியது.


குரலின் கம்பீரம் குறையவில்லை
“சேர் என் நிலைமை சரியில்லை.உங்களைக் காணவும் கன கதைகள் சொல்லவும் ஆசையாக இருக்கிறது”
“அரசையா நான் தற்சமயம் நீண்ட பயணம் செய்யமுடியாத நிலை உடனேவரமுடியாத நிலையிலுள்ளேன். முடியுமான நிலை வந்தவுடன் வருவேன்”
“இல்லை சேர் நான் அதுவரை இருக்க மாட்டேன்.நாம் சந்திப்போமோ தெரியாது”
இல்லை அரசையா நீங்கள் இன்னும் பல ஆண்டுகாலம் இருப்பீர்கள் நானும் இருப்பேன்’ அவசியம் சந்திப்போம்”
சில முக்கிய விடயங்கள் உங்களிடம் சொல்ல வேண்டும் சேர்”
அவர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்
நாடகஉலகு பற்றியே அவர் பேசினார்
கம்பீரம் குறையாவிட்டாலும் தள தளத்த குரல்
அவர் மறு பக்கத்தில் அழுகிறார் என்பது தெரிந்தது
என் மனமும் கண்ணீர் விட்டது
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்
அனைத்தையும் நான் பதிவு செய்திருக்க வேண்டும்
அந்தக் குணம் என்னிடத்தில் இல்லை
இன்றா நேற்றா, ஏறத்தாள 40 வருட நெருக்கமான உறவு.
1975 களில்அவரும் குழந்தை சண்முகலிங்கமும் என்னை நாடக அரங்கக் கல்லூரியில் அங்கத்தவனாக்க திருநெல்வேலியில் நான் குடியிருந்த வீடு தேடி ஒரு காலைப் பொழுது வந்தமை 
பசுமையாக ஞாபகம் இருக்கிறது
வெள்ளை வேட்டி,,
நீண்ட கதர் ஜிப்பா
காதில் ஜிவ் என நிற்கும் மயிர்கள்
சந்தனப் பொட்டு.
கம்பீரமான மீசை
அகன்ற நெற்றி,
கம்பீரமான நடை,
சிம்மக் குரல்,
ஆஜானுபாகுவான தோற்றம்
அவர் இப்படித்தான் என் மனதில் பதிந்தார்
குழந்தை சண்முகலிங்கத்தை அவர் “மாஸ்டர்” என அழைப்பார்
என்னை அவர் “சேர்” என அழைப்பார்
என்னைவிடப் 15 வயது மூத்தவர்
நாம் அவரை “அரைசய்யா” என அழைப்போம்
அவர் கதை சொல்வது ஒரு தனி அழகு
விறு விறு என்று போனான் என்ற சொற்தொடரும்
அவர் இந்தியஇராணுவத்தில் இருந்து 2ஆம் உலக யுத்ததில் பங்கு கொண்ட கதைகளும் அவசியம் அவர் உரையாடலில் வரும்
பிரான்ஸிஸ் ஜெனமும் குழந்தை சண்முகலிங்கமும் அதனைக் கிண்டல் அடிப்பார்கள்
.நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்.
அவர் மீது எனக்குமஹா மரியாதை
.
மூவரின் உரையாடல்களும் வலு
சுவராஸ்யமாக இருக்கும்
நான் ரசிப்பேன்
யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலம் 1975-1992
,பதினேழு வருடங்கள்
அரசையா நெருக்கமான குடும்ப நண்பரானார்
.
அடிக்கடி எனது வீடு வருபவர்களுள் ஒருவர்
அவர் என்னோடு உரையாடிவயற்றை மீட்டுப்பார்க்கிறேன்
யாழ்[ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்,சென்ட் ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றவர் இளம் வயதில் இந்திய இராணுவத்தில் இணைந்து 2ஆம் உலக மகாயுத்ததில் பங்களிப்புச் செய்தவர்.தமிழ் நட்டில் வாழ்ந்த பண்டைய காலங்களில் திரவிடக் கழகக் கருத்துக்களால் கவரப்பட்டு சீர்திருத்தவாதியாயும் தமிழ் பற்றாளராயும் மாறியவர். பெரியார் ,அண்ணா ஆகியோரின் தீவிர ஆதரவாளர். சமூக எற்றத் தாழ்வுகளைக் கண்டு மனம் கொத்தித்தவர். பின்னர் யாழ்ப்பாணம் வந்து தமது பகுத்தறிவுவாத சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்க நாடகத்தை ஒரு கருவியாகக் கொண்டவர்.
1950 களின் பிற்பகுதியில் தமிழரசுக்கட்சியின் அர்ப்பணிப்பு மிக்க தொண்டர்களுள் ஒருவராகி அன்று சட்ட மறுப்பு சத்தியாக் கிரகம் முதலிய போராட்டங்களில் பங்கு கொண்ட அன்றைய போராளி.
அக்காலங்களில் தமிழுணர்வு மிக்க வீரத் தாய் வீர மைந்தன் போன்ற நாடகங்களயும் ,திப்பு சுல்தான் போன்ற அந்நியருக்கு எதிரானஉணர்வூட்டும் நாடகங்களையும் போட்டவர். .கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகங்களில் நடித்தவர்,
பின்னால் மேடை நாடக  நடிகராக, ,நாடக நெறியாளராக,நாடக எழுத்தாளராக,புகைப்படப் பிடிப்பாளராக,இசையாளராக,திரைப்பட நடிகராக,வில்லுப்பாட்டுக் கலைஞராக ஒப்பனையாளராகப் பரிணமித்தவர்
நாடக உலகில் 1950 கள் தொடக்கம்,தனியாகவும்,கலையரசு சொர்ணலிங்கம்,சுந்தரலிங்கம் தாசீசியஸ்,மௌனகுரு,குழந்தை சண்முகலிங்கம் ஆகியவர்களின் நெறியாள்கையில் நடித்தும் அவர்களின் நாடகங்களுக்கு  ஒப்பனையாளராகவுமாக சேர்ந்து இயங்கியவர்,அவர் செயற்பாடுகளுக்காக மாமனிதர் பட்டம்,கலாபூஸண பட்டம் போன்ற  பட்டங்கள் பெற்றவர்.
பல்திறன் கொண்ட ஆற்றல் மிக்கதோர் கலைஞர்
மறைந்த நாடகக் கலைஞர் நா..சுந்தரலிங்கத்தின் தாய் மாமன்
.சுந்தரலிங்கத்தின் நாடக ஆளுமை மாமன் வழி முதுசம்
மாமனின் நாடகங்களைப் பார்த்தும்,அவர் நாடகங்களுக்கு உடைஅமைப்பில்உதவி செய்தும் தான் வளர்ந்த கதைகளை என்னிடம் சுந்தா கூறியுள்ளார்
சுந்தாவின் நாடகமான அபசுரத்தை சுந்தா அரங்கக் கல்லூரிக்காப் பழக்கிக் கொண்டிருந்தார். 
சுந்தாவும் தஸிஸியஸும் நைஜீரியா பயணமாகினர் அபசுரம் நெறியாள்கை செய்யும் பொறுப்பை குழந்த சண்முகலிங்கம் என்னிடம் ஒப்படைத்தார்
அரசையாவுடனான நெருக்கம் கூடியது

அபசுரத்தில் அவர் சிவாயர் பாத்திரத்தை அற்புதமாகக் கொணர்ந்தார்.
சிவாயர் ஒரு போலிச் சாமியார் பத்திரம்
ஆரம்பத்தில் இதற்கு நடித்தவர் சுந்தரலிங்கம்
வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த ஆழமாகச் சிந்திக்க வைத்த அபத்த பாணியிலான நாடகம் அபசுரம்
பின் எனது எல்லா நாடகங்களுக்கும் அரசையா ஒப்பனை கலைஞரானார்
முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நான் நெறியாள்கை செய்த எனது நாடகங்களான
அபசுரம்
சங்காரம்
அதி மானுடன்
குருஸேத்ர உபதேசம்
தப்பி வந்த தாடி ஆடு
வேடனை உச்சிய வெள்ளைப்ப் புறாக்கள்
நம்மைபிடித்த பிசாசுகள்
சக்தி பிறக்குது
பரபாஸ்
ஒரு உண்மை மனிதனின் கதை
மழை
புதியதொரு வீடு
எல்லாவற்றிற்கும் உடை, ஒப்பனை அரசையாதான்
இசை கண்ணன்தான்
இருவரும் இசை- ஒப்பனை இரட்டயர்கள்
எனது நாடக ஒப்பனை பற்றி நானும் அரசையாவும் நிறையக் கலந்துரையாடியிருப்போம்
விடிய விடிய இருந்து நுணுக்கமாக உடைகளைத் தயாரிப்பார்
.புதிய புதிய ஒப்பனைகளைக் கண்டு பிடிப்பார்
கண்டுபிடிப்புகளை ஆர்வத்தோடு வெளிப்படுத்துவார்
ஒரு விஞ்ஞானிக்குரிய கண்டுபிடிப்பு மனோபாவம் அவரிடமிருந்தது
ஒப்பனை கலைஞராகப் பரிணமித்தாலும் மேடை நடிகனான நான் ஒப்பனையாளனாக மாறிவிட்டேனே 
என்ற ஆதங்கம் அவரிடமிருந்தது
அவரிடம் நடிப்பும் ஒப்பனையும் பயின்றோர் அநேகம்
ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளார்
கடசி காலங்களில் ஞாபகங்களை இழந்து விட்டிருந்தார்
முதுமையடையும் பலருக்கு இந்நிலை ஏற்படும்
கடைசியாக நான் அவரைக் கண்டது சென்ற வருடம் காண்டவ தகனம் நாடகத்தை கைலாசபதி அரங்கில் மேடையிட்டபோது
கலை அரங்க வாசலில் அரசையாவும் குழந்தை சண்முகலிங்கமும்,பேர்மினஸும்,கண்ணனும் எம்மையும் எம் மாணவர்களயும் மகிழ்ச்சியோடு வரவேற்றது நேற்றுப் போல் இருக்கிறது
எனது யாழ்ப்பாண வாழ்க்கையை அர்த்தமும் மகிழ்ச்சியுமுடையதாக ஆக்கியவர்களுள் ஒருவர் அரசையா
யாழ்ப்பாணம் செல்கையில் அகமும் முகமுமொருங்கே மலர வரவேற்கும் யாழ்ப்பாண உறவுகளுள் ஒன்றை நான் இழந்தேன்
இந்த இழப்பை நேற்று சிதம்பரனாதனும் குழந்தை சண்முகலிங்கமும் எனக்கு போன் பண்ணிக் கூறினார்கள்
மனது ஒரு தடவை அதிர்ந்து நிமிர்ந்தது
எமது அன்புக்குரிய அரசையாவே சென்றுவருக
கனத்த இதயத்தோடு பிரியாவிடை கூறுகிறேன்
நண்பர்கள் ஒவ்வொருவராகச் சென்று கொண்டிருக்கிறார்கள்
"வாருங்கள்" என அழைத்த அரசைய்யா போய் விட்டார்
வருவேன் என உரைத்த நான் இருக்கிறேன்
நான் யாழ்ப்பாணம் செல்கையில் 
அந்த யாழ்ப்பாணம் 
அரசையா இல்லாத யாழ்ப்பாணமாக இருக்கும்
காலம் தன் கடமையச் செய்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126848/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.