Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகளின் விடுதலை குறித்து இலங்கை அரசும் ஆலோசனை நடத்துமாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டால், அதன் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று பாதுகாப்பு  செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தமிழக அரசினால் விடுதலை செய்யப்படுவோர், தமது தாயகப் பிரதேசமான வட மாகாணத்திற்குச் சென்று வாழமுடியுமா என்பது குறித்தும் அரசாங்கம் ஆலோசிக்கும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டால், அதன் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தமிழக அரசினால் விடுதலை செய்யப்படுவோர், தமது தாயகப் பிரதேசமான வட மாகாணத்திற்குச் சென்று வாழமுடியுமா என்பது குறித்தும் அரசாங்கம் ஆலோசிக்கும் அவர் குறிப்பிட்டார்.

   

நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு விடுதலை வழங்குவது தொடர்பில் தமிழக அரசு கவனம் செலுத்திவருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டும் அவர்கள் மீது காணப்படுகின்றது. அவ்வாறு அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிப்பது தொடர்பிலும், அதற்கு அடுத்தபடியாக நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்கும்.

மேலும் அவர்கள் மீது விசேட விசாரணை ஒன்று நடத்தப்படுவது தொடர்பிலும் அரசாங்கம் தமிழக அரசின் அறிவிப்பின் பின்னர் கவனம் செலுத்தும். அத்துடன் அந்த 7 பேரும் தமது தாயகத்திற்குத் திரும்பி வாழ்க்கையை தொடர்வதற்கு அனுமதிக்கப்படுவது குறித்தும் ஆராயப்படும்.இதேவேளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட 4 ஆயிரம் ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அறியமுடிகின்றது. இது குறித்து எனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் நாடு திரும்பும் பட்சத்தில் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் – என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152787&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் விடை கொடுத்தாலும், பூசாரிகள் விடை கொடுப்பார்களா? அவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஒவ்வொரு துரும்பு வேண்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

பூசாரிகள் வழி விடத்தானே வேண்டும். இலங்கைப்பிரசைகள் தானே.

அடுப்பில் இருந்து சட்டிக்குப் போவது போல, சிறையிலிருந்து முகாமுக்கு போவதிலும், இலங்கை திரும்புவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையில மட்டும் சும்மாவா விடப்போகிறார்கள் முனி? அதுதான் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன கட்டியம் சொல்லிவிட்டாரே.  சந்தோசப்படவும் முடியேல்லை, அழவும் முடியேல்லை. சிறையில  இருக்கிறவர்களோட அவர்களையும் சேர்த்துபோட்டு அவனுக்கென்ன உலகம் சுத்துவான். 

  • கருத்துக்கள உறவுகள்

7பேருடைய விடுதலையும் இலவுகாத்த கிளியின் கதைதான். அப்படி விடுதலை கிடைத்தாலும், கிடைக்கும் நேரத்தில் யாழிலும் சர்வதேச விமானநிலையம் தோன்றிவிடலாம். கட்டுநாயக்கா செல்லத் தேவையிருக்காது. 

கரு என்ற சொல் கலங்கவைக்கிறதே....! அது பெயரின் முன் வந்தால் அவர்களை மிருகங்களாக மாற்றிச் சிந்திக்க வைத்துவிடுகிறதே...!!:shocked::shocked:

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்காத பிள்ளைக்கு பெயர் வைப்பதிலும் பார்க்க, பிறக்கட்டும் முதலில் பிறகு பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.