Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் போர்

Featured Replies

  • தொடங்கியவர்
3 hours ago, arjun said:

12814380_1003269476386241_12498595619578

முரளிக்கு முதல் பந்து வீச்சில் உலக சாதனை படைக்க வேண்டிய தமிழர் இவர் .

எனது கிரிக்கெட் வாழ்கையில் சந்தித்த மிக சிறந்த பந்து வீச்சாளர் .

யாழ் மாவட்டத்தில் இப்படி ஒரு பந்துவீச்சாளர் இதுவரை உருவாகவில்லை.

  • Replies 153
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Sjc 22/0

JCC 1st INN 161 all out.
JCC 2nd INN 264 all out
SJC 1st INN 163 all out.
Kirupakaran 103

  • தொடங்கியவர்

Q.jpg

வடக்கின் மாபெரும் சமர் என அழைக்கப்படும் யாழ் பரியோவான் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 110 வடக்கின் சமரில் கிருபாகரனின் சதத்துடன் (104) யாழ்   வலுவான நிலையில் உள்ளது.

34 minutes ago, நவீனன் said:

Sjc 22/0

JCC 1st INN 161 all out.
JCC 2nd INN 264 all out
SJC 1st INN 163 all out.
Kirupakaran 103

Jcc 264 /9 

Sjc 5/0 2 overs at lunch 

  • தொடங்கியவர்

Sjc 35/0

40/1

JCC 1st INN 161 all out.
JCC 2nd INN 264 all out
SJC 1st INN 163 all out.
SJC 2nd INN 40/1

யாழ் மத்திய கல்லூரின்  23 முன்னைநாள் அணிதலைவர்கள் இந்த போட்டிக்காக  யாழ்ப்பாணம் வருகை தந்து உள்ளார்கள்..

  • தொடங்கியவர்

பங்குனி மாத நிகழ்வுகள்
***************************
1). பெருந்துடுப்பாட்டம் 10.11.12.ம் திகதி
JCC Vs SJC

2). மத்தியின் இரவு 12ம் திகதி

3). பழைய மாணவர் வாரம் 14ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை.

4). யாழ் மத்திய கல்லூரி எதிர் பரியோவான் கல்லூரி 50 ஓவர் துடுப்பாட்டம் 19ம் திகதி.

  • தொடங்கியவர்

JCC 1st INN 161 all out.
JCC 2nd INN 264 all out
SJC 1st INN 163 all out.
SJC 2nd INN 64/2 AT TEA

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
6 hours ago, arjun said:

12814380_1003269476386241_12498595619578

முரளிக்கு முதல் பந்து வீச்சில் உலக சாதனை படைக்க வேண்டிய தமிழர் இவர் .

எனது கிரிக்கெட் வாழ்கையில் சந்தித்த மிக சிறந்த பந்து வீச்சாளர் .

1976 ம் ஆண்டு 89 விக்கெட்களை  வீழ்த்தி உள்ளார்  நகுலேஸ்வரன்.

அந்த சாதனையை  இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

 Nagu was born in Jaffna and was educated at Central College, Jaffna, where he took up cricket. He made steady progress at school and later at the Under-13, 15 and 17 levels. He became a vital member in college’s senior team. In 1976, Nagu claimed 89 wickets in a calendar year and broke the Jaffna Schools record held by Anton Benedict.

He was awarded the Outstation Schoolboy Cricketer Award in 1976 and retained the title the following year.

 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

sjc 91/ 3 --- 47.

  • தொடங்கியவர்

130 /5

  • கருத்துக்கள உறவுகள்

169 / 5 --- 61. ஆட்டம் நன்றாகப் போகின்றது...!  ஆறும் நாலும்  சீறுது...!!

  • தொடங்கியவர்

Sjc 168/5

JCC 1st INN 161 all out.
JCC 2nd INN 264 all out
SJC 1st INN 163 all out.
SJC 2nd INN 179/5

 

  • தொடங்கியவர்

6783_10209031395885790_49212318467463666

12798965_10209031396285800_1511326177015

 

1918852_10153565794323823_21731993586715

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம்  சமநிலையில் முடிவடைந்துள்ளது.

JCC 1st INN 161 all out.
JCC 2nd INN 264 all out
SJC 1st INN 163 all out.
SJC 2nd INN 179/5  End

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பங்குனி மாத நிகழ்வுகள்
***************************
1). பெருந்துடுப்பாட்டம் 10.11.12.ம் திகதி
JCC Vs SJC

2). மத்தியின் இரவு 12ம் திகதி

3). பழைய மாணவர் வாரம் 14ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை.

4). யாழ் மத்திய கல்லூரி எதிர் பரியோவான் கல்லூரி 50 ஓவர் துடுப்பாட்டம் 19ம் திகதி.

  • தொடங்கியவர்

11219400_10209031558729861_1177180292523

12814367_10209031558849864_5404049440790

10274338_10209031559449879_1280101671644

1957971_10209031559649884_80278507991369

944846_10209031560089895_649787953731448

12809780_10209031560409903_8562411857928

 

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி தோல்வியை விடுங்கள்! இரண்டு தரப்புமே எங்கள் பிள்ளைகள் தான். போன முறை போல கசப்பான சம்பவங்கள் இடம்பெறாமல் நடத்தி முடித்த இரண்டு தரப்புக்கும் பாராட்டுக்கள்! tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

இதில யாழ்ப்பாண ஜட்ஜ் ஐயாவுக்கும் நன்றி சொல்ல வேணும்

  • தொடங்கியவர்

ஆட்டநாயகனாகன், சிறந்த துடுப்பாட்ட வீரர் – சதம் விளாசிய கிருபாகரன் (யாழ். மத்திய கல்லூரி )

சிறந்த பந்துவீச்சாளர், சகல துறை வீரர் – யதுசன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த களத்தடுப்பாளர் – பிரியலக்சன் ( யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த இலக்குக்காப்பாளர் – தேவபிரசாந் (சென்.ஜோன்ஸ் கல்லூரி)

  • கருத்துக்கள உறவுகள்


படங்கள் எல்லாம் அந்த மாதிரி. பழைய மாணவர்கள் எல்லாம் ஒன்றாக சந்தித்தாலே கொண்டாட்டம்தான்.

நல்லாட்சியில் எல்லாம் நல்லபடி என்ஜாய் பண்ணுங்கள்

Edited by colomban

  • தொடங்கியவர்

Jaffna Central College

 

Thanaskanthan sris நினைவில் நின்ற

தொலைக்காட்சியின் அலைகளுக்குள் நாம் தொலைந்து போகாத தருணங்கள். அந்த 90களின் தசாப்தங்கள். மெருகேறிப் போயிருந்த தாயக துடுப்பாட்டத்தின் தன்நிகரால் ஒவ்வொரு மணித்துளியும் மகிழ்வாய் மனதில் புதைக்கப்பட்ட காலங்கள்..
1990ம் ஆண்டு பெருஞ்சமரில் பரியோவான் கல்லுாரி இதுவரை முறியடிக்கப்படாத சுரேன் குமாரின் இமாலய ஒட்டக்குவிப்பால் மத்தியத்தை இருமடங்கு இடைவெளியில் வெற்றி
SJC 311/5d
JCC 156 all out 1St INN
JCC 145 all out 2nd INN

1991.....
அசாதாரண சூழ்நிலையால் அவலங்கள் எம்மை ஆக்கிரமித்த காலம்...
ஆபத்துக்கள் அகலக்கால் உன்றிய நேரம்....மத்திய கல்லூரி அணி பலமாய் கட்டமைக்கப்பட்டிருந்த போதும் அந்த அழகான நாட்கள் இல்லாதே போனது..
ஆனாலும் அடுத்த ஆண்டு வான் அதிரும்படி மேளதாளங்களோடு திடல் முழுவதும் சனத்திரள் திரண்டிருக்க மத்தியின் நட்டத்திர ஆட்டக்காரன் ரகுதாஸின் 100 யும் தாண்டிய ஒட்டங்களால் அணியின் ஒட்ட எண்ணிக்கை 300 ஐ தாண்டிய அதே நேரத்தில் சுரேன் குமாரின் 145 சாதணையை முறியடிக்கும் முனனைப்பை,பரியோவான் அணித்தலைவன்
காண்டீபனால் ஒட்ட ஆட்ட இழப்பிற்காய் எறியப்பட்ட பந்து மத்தியின் மைந்தர்களின் நெஞ்சில் பாய்ந்த அம்பாக அன்று அமைந்தது..
இரண்டு ஓட்டங்களால் சாதனையும் தவறிப்போக
முடிவு இன்றி போட்டியும் முகம் சலிப்போடு முடிந்து போனது....

JCC 344 all out
SJC 226 all out and 126/8
ராகுதாஸ் அண்ணா 143 run out

தொடரும் எம் பெருந்துடுப்பாட்ட சமர் 93ம் ஆண்டும் வழமைக்கு மாறாது அன்றைய அதிபரின் வெற்றித்திலகத்தை நெற்றியில் பற்றிக்கொண்டு சகலதுறை ஆட்டகாரனாய் தன்னை ஆக்கிக்கொண்ட ஆகாஷின் தலைமையின் கீழ், ஒட்டங்களை அணிக்காய் உயர்த்திக் காட்டுவதில் உறுதியாய் ஆடும் திறமை கொண்ட மணிவதனன், சுரேஷ், சதீஸ், ரமேஷ் ஆகியோருடன் , தன் சுழல்பந்தால் சுலபமாய் இலக்குகளை சாய்க்கக் கூடிய லக்சுமிகாந்துடனும் அன்றை ய அணியின் தோற்றம் வெற்றியின் வெளிப்பாடாய் தெரிந்தது...
பந்துகளை பக்கத்தில் தட்டி
ஒட்டங்களை ஒவ்வொன்றாய் உயர்த்த விரும்பாது எல்லைக்கோடுகளை கடந்தும், பலர் வீட்டு ஓடுகளை உடைத்தும் ஓட்டங்களை குவிக்கும் சுரேஷின் அதிரடி சதம் அணியின் மொத்தத்தை 350ஜ தாண்ட வைத்து பரியோவானுக்கு பயத்தை தூண்ட வைத்தது..
1990
ஆம் ஆண்டின் தோல்வியை அப்படியே திருப்பிக் கொடுக்கும் அரிய வாய்ப்பை பல பிடிகளை மத்தியம் தவறவிட்டதன் விளைவாய் சஞ்சீவ் , சிறிதரனின் இணைப்பாட்டம் இல்லாதாக்கியது...

Jcc 354/9d
SJC 106
SJC 196/8

இரண்டு ஆண்டுகளாய் எட்டாத வெற்றிக்கான தாகம்..
வெற்றியே முடிவென்று பெரிதும் மாற்றமில்லா வீரர்களோடு அணி அமைக்கப்பட்ட வியூகம்...
காலனின் அவரச கட்டளையால் எமைவிட்டுச் சென்ற மணிவதனனின் மகத்தான 1994ம் ஆண்டு தலைமைத்துவம்..
ஆட்டத்தில் ஆண்டு பல அநுபவத்தினால் அணியை உயர்வுக்கு கொண்டு சென்ற ஆகாஷின் 79ஓட்டங்கள்..
நேரத்தின் வேகம் கண்டு விரைவாய் அணியின் ஒட்டங்களைப் 250ஐ தாண்டி பெற விரைந்து சென்ற மணிவதனன் மற்றும் சுரேஷின் அரைச்சதங்கள்...
ஆகாஷ் மணிவதனன் ஆகியோரின் ஆகோஷப் பந்துவீச்சுக்களில் அடிபணிந்து போன பரியோவாண் அணி...
41பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாம் இனிங்ஸில் மத்தியம் விரைவில் 4இலக்குகளை இழந்தபோதும் மனிவதனன் ரவிசங்கரின் இணைப்பாட்டம்
மத்திய கல்லூரியின் 24ஆண்டு கனவை நனவாக்கியது....

JCC 262/6d
SJC 164
SJC 138
JCC 41/3

முகநூல்   யாழ். மத்திய கல்லூரி

  • தொடங்கியவர்

வடக்கின் சமர் 110ஆவது அத்தியாயம் வெற்றி தோல்வியின்றி நிறைவு

வடக்கின் சமர் 110ஆவது அத்தியாயம் வெற்றி தோல்வியின்றி நிறைவு

வடக்கின் சமர் 110ஆவது அத்தியாயத்தின் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையில்  யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்தது.

 Visit the March Madness Hub 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். மத்திய கல்லூரி அணியின் தலைவர் எஸ்.அலன்ராஜ் தாம் முதலில் துடுப்பெடுத்தாட போவதாக கூறி இருந்தார். இதற்கமைய முதலில் தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி தமது முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. இவ்வணி சார்பாக ஜெரோசன் 51 ஓட்டங்களையும் கோமேதகன் 39  ஓட்டங்களையும் அதிக பட்ச ஓட்டங்களாகப் பெற்றனர். யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணியின் சார்பில் பந்துவீச்சில் ஜதூசன் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும், நிலோஜன் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இனிங்ஸிற்காக துடுபெடுத்தாடிய யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கட்டுகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. பின் தனது ஆட்டத்தை தொடர்ந்த யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி நேற்றய 2ஆவது நாள் மதிய போசன இடைவேளைக்குள் தனது மிகுதி 6 விக்கட்டுகளையும் இழந்தது. இதன் படி தமது முதல் இனிங்ஸில்  யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி, யாழ். மத்திய கல்லூரி அணியை விட 2 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்று 163 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கிருஷாந்தூஜன் 31 ஓட்டங்களையும் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய ஜதூசன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர். யாழ். மத்திய கல்லூரியின் சார்பில் பந்துவீச்சில் தீபன்ராஜ் 74 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும் தஸோபன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் கைபற்றினர்.

அதன் பின் 2 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி  2ஆவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 162 ஓட்டங்கள் முன்னிலையில் 6 விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று இருந்தனர். பின்பு 3ஆம் நாளில் தமது ஆட்டத்தைத் தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி அணி வீரர்கள் மதிய போசன இடைவேளைக்கு 2 ஓவர்கள் இருக்கும் நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது. இவ்வணியின் 2ஆவது இனிங்ஸில் சகலதுறை வீரர் கிருபாகரன் மிகச் சிறப்பாக பொறுப்பாக துடுபெடுத்தாடி 130 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்சர்கள் அடங்கலாக 103 ஓட்டங்களைப் பெற்றார். இந்த

சதத்தின் மூலம் கிருபாகரன்  வடக்கின் சமர் கிரிக்கட் வரலாற்றில் சதம் பெற்றவர்கள் பட்டியலில் 20ஆவது வீரர் என்ற பெருமையை தன் வசப்படுதினார். கிருபாகரனைத்  தவிர அணியின் தலைவர் அலன்ராஜ் மற்றும் உப தலைவர் கோமேதகன் ஆகியோர் 34 ஓட்டங்களைப் பெற்றனர். யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணியின் சார்பில் பந்துவீச்சில் ஜதூசன் மற்றும் கபில்ராஜ் ஆகியோர் 3 விக்கட்டுகளை தம்மிடையே பரிமாற அணியின் தலைவர் கானாமிர்தன் மற்றும் நிலோஜன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைபற்றினர்.

பின்பு இந்த போட்டியில் 263 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ் புனித ஜோன்ஸ் கல்லூரி அணி இன்றைய 3வதும் இறுதியுமான நாள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று இருந்தார்கள். இவ்வணி சார்பாக ஜெனி ப்லெமின் 37 ஓட்டங்களையும் கபில்ராஜ் 31 ஓட்டத்தை ஆட்டமிழக்காமலும் ஜதூசன் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர். யாழ். மதிய கல்லூரியின் மதூசன் 2 விக்கட்டுகளைக் கைபற்றினார். இறுதியில் வடக்கின் சமர் 110ஆவது அத்தியாயப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான ஒரு போட்டியை கொண்ட ஒருநாள் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளமை ஒரு முக்கிய விடயமாகும்.

http://thepapare.com/sjc-vs-jcc-110th-battle-of-north/

  • தொடங்கியவர்

 

 

 

  • தொடங்கியவர்

3 ம் நாள் ஆட்ட படங்கள்

10264108_1043496432390588_14550681219755

10286989_1043495862390645_32072260704127

10258991_1043496792390552_21193195271408

10848826_1043500009056897_74615521996624

12819385_1043494862390745_33372476019938

11046417_1043496769057221_64913184275767

12823263_1043494932390738_85474799422748

12823450_1043496009057297_68812721532394

12496523_1043496439057254_61868158094099

12829476_1043499049056993_70563046499442

12841452_1043498089057089_40817803672206

12829235_1043498882390343_82192584010052

12593722_1043499749056923_34058208171351

12079823_1043500412390190_52303938551473

12829517_1043500519056846_38010698561891

12828924_1043500025723562_37603153254969

12841284_1043495565724008_44624532329171

12829226_1043495199057378_66608231980320

 

12829130_1043507265722838_18316983722807

10604593_1043506755722889_11979097893315

10295109_1043507039056194_76881588871451

1410904_1043507515722813_666359681418005

12841177_1043506919056206_57518398995554

12828434_1043506732389558_48941299115644

12823353_1043506715722893_29727798226724

12829323_1043506989056199_64923529564117

1421130_1043507139056184_610109030276433

1899843_1043507255722839_670993585450266

10604067_1043507279056170_66805684697799

10321152_1043507619056136_71039907782938

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.