Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டு அம்மான் மீண்டும் வரவில்லை: நந்திக்கடல் விவகாரம் குறித்து பொன்சேகா விபரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
0Poddu.jpg
இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்து விட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும், கரும்புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதியுமான பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், மறைந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில், தமிழ் நாட்டிலேயே அவர், தலைமறைவாக வாழ்வதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், குருடீ என்ற பெயரிலேயே தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளையுடன் வாழ்வதாகவும் அச்செய்தி குறிப்பிடுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மான், முல்லைத்தீவு நந்திக்கடலில் பலியாகிவிட்டதாக இறுதி யுத்த காலத்தில் பிரசாரப்படுத்தப்பட்டிருந்தாலும், அவருடைய சடலத்தைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொட்டு அம்மான் மரணமடைந்ததை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளை, இந்திய அரசாங்கத்துக்கு அனுப்புவதற்கு முன்னைய அரசாங்கத்தினால் முடியாமல் போய்விட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் வினவியபோது, அது தொடர்பில் அறிக்கை கிடைக்கவில்லை என்றார்.

http://www.tamilwin.com/show-RUmuyDSbSXmo4J.html

பொட்டு அம்மான் மீண்டும் வரவில்லை: நந்திக்கடல் விவகாரம் குறித்து பொன்சேகா விபரிப்பு

(எம்.ஆர்.எம்.வஸீம்)sarath-fonseka-pottu-amman.jpg

புலி­களின் தலைவர் பிர­பா­கரன் மற்றும்  பொட்டு அம்மான் உள்­ளிட்ட  சிலர் இறுதி யுத்­தத்­தின்­போது  நந்­திக்­கடல் தென் பகு­திக்கு தப்பிச் சென்­ற­தாக கே.பி.கூறி­யி­ருக்­கிறார். அத்­துடன் பிர­பா­கரன் திரும்பி வந்­த ­தா­கவும் பொட்டு அம்மான் வர­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார். 

அந்த தகவல் மட்­டுமே எங்­க­ளுக்கு தெரியும்.   பொட்டு அம்மான் அந்த இடத்தில் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என்று நான் நினைக்­கின்றேன் என்று  முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா  தெரி­வித்தார்.

 பிர­பா­க­ரனை கொழும்­புக்கு அழைத்து வந்­தி­ருந்தால் இப் போது கே.பி.யை அரச அரண்­ம­னையில் வைத்­தி­ருந்­ததைப் போன்று அவ­ரையும் பாது­காப்­பாக வைத்­தி­ருந்­தி­ருப்­பார்கள். அத்­துடன் அவ­ருக்கு வட­கி­ழக்கு முத­ல­மைச்சர் பதவியும் கொடுக்­கப்­பட்­டி­ருக்கும் என்­பதில் எனக்கு எந்த சந்­தே­க­மு­மில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

இலங்கை மன்றக் கல்­லூ­ரியல் இன்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்சர் சரத் பொன்­சேகா கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

 யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்­தவின் பிள்­ளைகள் சுக­போ­க­மாக காலத்தை கழித்­தார்கள். காலை­முதல் மாலை­வரை ரகர் விளை­யா­டினர். போட்­டியில் தோல்­வி­ய­டை­யும்­போது நடு­வர்­களை தாக்­கினர். ரசி­கர்­களை தாக்­கினர்.  இது­தானா அபி­வி­ருத்­தியின் பிர­தி­ப­பலன்?

கடந்த அர­சாங்­கத்தில் ஊட­கங்­க­ளுக்கு உண்மை தன்­மையை வெ ளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. வெ ளிப்­ப­டுத்­தினால் தொழில் அற்­றுப்­போகும். அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்­களை பலாத்­கா­ர­மாக தங்கள் பக்கம் இழுத்­துக்­கொண்­டார்கள். 

ஊடக நிறு­வ­னங்கள் அர­சாங்கம் தொடர்பில் உண்மை தன்­மையை வெ ளிப்­ப­டுத்­தினால் அவர்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை செய­லி­ழக்­கச்­செய்­வ­தாக பகி­ரங்­க­மாக தெரி­வித்­தனர். 

நாட்டின் சட்­டத்தை கையி­லெ­டுத்­துக்­கொண்­டி­ருந்­தனர். நாட்டில் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடுத்­தார்கள்  விரும்­பி­ய­வர்­களை விடு­வித்­தார்கள்.

அதே­போன்று நீதி­மன்­றங்­க­ளுக்கு தனக்கு தேவை­யா­ன­வர்­களை நிய­மித்­தனர். அவர்­க­ளுக்கு எதி­ராக செற்­பட்­ட­வர்­களை பதவி நீக்­கி­னார்கள்.  முன்னாள் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு   என்ன நடந்­தது என்ற முழு­நாட்­டுக்கும் தெரியும் . இவ்­வாறு தான் அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்தார். மக்கள் பீதியில்  வாழ்ந்­தனர். அன்­றி­ருந்த பயம் இன்று இருக்­கின்­றதா ? இன்று அந்த நிலைமை யாருக்கும் இல்லை. அந்த வித்­தி­யா­சத்தை நாட்­டுக்கு கொண்­டு­வந்தோம்.  நாங்கள் உயிரை பணயம் வைத்து பெற்ற சுதந்­தி­ரத்தை மீண்டும் இழக்க ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.

http://www.virakesari.lk/article/4301

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி பொட்டு அம்மான் உயிருடன் வாழ்கிறார்?

pottuசண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இயற்பெயருடைய புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாகவிருந்த பொட்டு அம்மான். பொட்டு அம்மான் உயிருடன் வாழ்வதாக இன்டர்போல் நிறுவனத்தை ஆதாரம் காட்டி தமிழகத்தின் பரப்பு ஊடகங்களில் ஒன்றான ஜூனியர் விகடன் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதனை தமது வரபிரசாதமாகக் கருதிய புலம்பெயர் ஊடகவியாபாரிகள் பொட்டு அம்மான் உயிருடன் வாழ்வதாகவும் கூடவே பிரபாகரனும் எங்காவது உயிருடன் வாழலாம் என்றும் தமது வழமையான புராணத்தை ஆரம்பித்துவிட்டன.

புலிகளின் அழிவிலிருந்து மீண்டும் போராட்ட இயக்கங்கள் தோன்றுவதைத் தடுப்பதற்காகவும், தமிழகத்தில் எழுச்சிகளைத் தடுப்பதற்காகவும் வன்னிப் படுகொலைகள் முடிந்த ஆரம்ப காலங்களில் பிரபாகரன் உயிருடன் வாழலாம் என்ற மயக்கமான ஊகத்தை இலங்கை இந்திய உளவு நிறுவனங்கள் இணைந்து ஏற்படுத்தின. அதையே தமக்குச் சார்பாக மாற்றிக்கொண்ட புலம்பெயர் பிழைப்புவாதிகள் பிரபாகரன் உயிருடன் வாழ்கிறார் என்றும் அவர் வெளியே வந்ததும் தம்மிடமுள்ள புலிகளின் சொத்துக்களை ஒப்படைப்பதாகவும் கூற ஆரம்பித்தனர்.

வெறுமனே வயிற்றுப் பிழைப்பிற்காகவே நடத்தப்படும் புலம்பெயர் இணைய ஊடகங்களும் பிரபாகரன் வாழ்கிறார் என ஒத்தூத ஆரம்பித்துவிட்டன.

இவை அனைத்தும் இணைந்து, பலர் பிரபாகரனின் வரவை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முழுமையாக அழிக்கப்பட்டு அமெரிக்க, இந்திய, இலங்கை உளவுத் துறைகளிடம் இலங்கை விற்பனை செய்யப்பட்டுவிட்டது.

கடந்த சில தினங்களாக ஜூனியர் விகடன் என்ற நாலம் தர தமிழகச் சஞ்சிகை பொட்டு அம்மான் உயிருடன் வாழ்வதாக இன்டர்போல் நிறுவனத்தை ஆதரம்காட்டி வெளியிட்ட செய்திகள் புலம்பெயர் ஊடங்களுக்கு மீண்டும் வியாபாரக் கருவியாகப் பயன்பட்டிருந்தது. இன்டர்போல் பொட்டு அம்மானை மீண்டும் தேடப்படுவோரின் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் அதனால் அவர் உயிரோடு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் ஜூனியர்விகடனின் நிலாம்டீன் என்பவர் புலனாய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்டர்போல் எந்த இடத்திலும் பொட்டு அம்மான் என்பவர் இயற்பெயரையோ அல்லது அவரது புனை பெயரையோ குறிப்பிட்டு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பதுதான்.

இன்டர்போல் அவரைத் தேடுவதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

ஆக, முழுப் பூசணிக்காயை மட்டுமல்ல அதன் செடிகொடிகளையும் சேர்த்தே சோற்றுப் பருக்கைக்குள் புதைக்கும் இப் பொய்யர்களின் பின் புலத்திலுள்ள நோக்கம் என்பது ஆபத்தானது.

நக்கீரன், ஜூனியர் விகடன் போன்றவற்றோடு ஈழத் தமிழர்களின் கண்ணீரையும்ன் இரத்தத்தையும் விற்றுப் வாக்குப் பொறுக்கிக்கொள்ளும் சீமான், வை.கோ போன்ற வகையறாக்கள் இணைந்து தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதற்கு தம்மாலான அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் இந்திய உளவுத்துறையின் உள்ளூர் முகவர்களான தமிழ் இனவாதிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதும், இலங்கை ஆயுதமயப்படுத்துவதை நியாயப்படுத்துவதும் இவர்களின் நோக்கங்களில் பிரதானமானவை.

வயிற்றுப் பிழைப்பிற்காகவும், தமது சொந்த நலன்களுக்காகவும் புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் இணைய ஊடகங்களும், தென்னிந்திய ஊடகங்களும் இணைந்து கட்டவிழ்த்துவிட்ட மற்றொரு பொய் தான் பொட்டம்மான் உயிருடன் வாழ்கிறார் என்பதாகும். ஊடக சுதந்திரம் என்ற பெயரில் இப் பிரகிருதிகள் நடத்தும் சீரழிவு நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களைத் தொடர்ந்தும் அவலத்துள் வைத்திருப்பதற்கே துணை செல்கின்றன.

 

http://inioru.com/is-pottu-amman-alive/

  • கருத்துக்கள உறவுகள்

sarath-fonseka-pottu-amman.jpg

பொன்னற்றை இடது கை ரேகைகளின் படி... சாதகனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு போல தெரிகின்றது!

வலது கையையும் காட்டினால் தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும். இன்னொருவுக்கு என்ன நினைப்பு.. இப்ப அவைதான் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கினமா..?!

புலம்பெயர் வியாபாரிகளை விட கேடுகெட்டதுகள்.. தான் இந்த இன்னொருவில் கூடி இருந்து கூத்தடிக்கும் இனத்துரோகிகள். இப்ப அவை எல்லாம் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுவது கொடுமையிலும் கொடுமை. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

sarath-fonseka-pottu-amman.jpg

பொன்னற்றை இடது கை ரேகைகளின் படி... சாதகனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு போல தெரிகின்றது!

வலது கையையும் காட்டினால் தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்!

ஆயுள் ரேகை கெட்டி ஆனால் தொழில் ரேகைதான் சந்தேகமாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Ahasthiyan said:

ஆயுள் ரேகை கெட்டி ஆனால் தொழில் ரேகைதான் சந்தேகமாக இருக்கிறது 

ஆனால் ;சொத்து' ரேகை கொஞ்சம் ஆழமாக உள்ளதனால்.. தொழில் ரேகையால் பாதிப்பு அதிகமில்லை என நினைக்கிறேன்!

ஆள் பரம்பரைப் பணக்காரனோ, அகஸ்தியன்?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

பொட்டு இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும். இன்னொருவுக்கு என்ன நினைப்பு.. இப்ப அவைதான் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கினமா..?!

புலம்பெயர் வியாபாரிகளை விட கேடுகெட்டதுகள்.. தான் இந்த இன்னொருவில் கூடி இருந்து கூத்தடிக்கும் இனத்துரோகிகள். இப்ப அவை எல்லாம் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுவது கொடுமையிலும் கொடுமை. tw_angry:

துரோகிகளிலும் லெப்டினன்ட், கப்டன், மேஜர், லெப்டினன்ட் கேணல், பிரிகேடியர் என்றெல்லாம் புலத்துத் தேசியவாதிகளின் பல்கலைக் கழகங்களில் பட்டம் கொடுக்கின்றார்களாம். அப்படிப் பட்டம் கொடுப்பவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகளும் பரிந்துரைகளும் செய்ய சில வெற்றிடங்கள் உள்ளதாம். விண்ணப்பித்தால் கட்டாயம் உங்களுக்குக் கிடைக்கும்!<_<

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

துரோகிகளிலும் லெப்டினன்ட், கப்டன், மேஜர், லெப்டினன்ட் கேணல், பிரிகேடியர் என்றெல்லாம் புலத்துத் தேசியவாதிகளின் பல்கலைக் கழகங்களில் பட்டம் கொடுக்கின்றார்களாம். அப்படிப் பட்டம் கொடுப்பவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகளும் பரிந்துரைகளும் செய்ய சில வெற்றிடங்கள் உள்ளதாம். விண்ணப்பித்தால் கட்டாயம் உங்களுக்குக் கிடைக்கும்!<_<

இன்னொருவுக்கு காவடி தூக்கிறவைக்கும் கொடுக்கினமாம். நீங்களும் லைனில வாங்க.. உங்களுக்கு இன்னொரு சார்பில்  ஒட்டுப்படை லெப் ஜெனரல் என்று.. தந்தாலும் தருவினம். 

அதுசரி.. இந்த இன்னொரு 2009 க்கு முன் சாதித்தது என்னென்னு ஒரு கட்டுரை எழுதச் சொல்லுங்களன்...??! இப்ப சுயநிர்ணய முழக்கம் முழக்கினம். துரோகிகளும் காட்டிக்கொடுப்பாளர்களும்.. என்ன செய்தவை என்பதை மக்கள் அறிவார்கள். இவை என்ன தான் வேசம் போட்டாலும்.... அவைட மொழி நடை அவையைக் காட்டிக்கொடுத்திடும். tw_angry:tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.