Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பௌத்த மதத்தைப் பரப்பும் நடவடிக்கையில் படையினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் நிலை­ கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் பௌத்த மதத்தை பரப்பும் செயற்­பா­டு­களை மேற்­கொண்­டு­ வ­ரு­வ­தாக நவ­சம சமாஜக் கட்­சியின் பொரு­ளாளர் வல்­லி­புரம் திரு­நா­வுக்­க­ரசு தெரி­வித்தார். நவ­சம சமாஜக் கட்சி ஏற்­பா­டு­ செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு  கொழும்பில் நடை­பெற்­றது.  அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

வடக்கில் நிலை­ கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் பௌத்த மதத்தை பரப்பும் செயற்­பா­டு­களை மேற்­கொண்­டு­ வ­ரு­வ­தாக நவ­சம சமாஜக் கட்­சியின் பொரு­ளாளர் வல்­லி­புரம் திரு­நா­வுக்­க­ரசு தெரி­வித்தார். நவ­சம சமாஜக் கட்சி ஏற்­பா­டு­ செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு கொழும்பில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

   

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அப்­பி­ர­தே­சங்­களில் இன்­னமும் தமது கைங்­க­ரி­யங்­களை அதி­க­ரித்­துக்­கொள்ளும் முயற்­சி­யி­லேயே உள்­ளனர். அதனை அங்­கீ­க­ரிக்க முடி­யாது. மேலும் அண்­மை­யில்­கூட இரா­ணு­வத்­தி­னரால் கிளி­நொச்­சியில் பௌத்த விகா­ரை­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அநு­ரா­த­புரம் மகா­போ­தி­யி­லி­ருந்து வெள்ளரசு மரக்­கி­ளை­யொன்­றையும் கொண்டுசென்று அங்கு நாட்டியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி கரையோரப்பகுதியிலும் கடற்படை யினர் பௌத்த விகாரைகள் அமைக்கும் பயணியினை மேற்கொண்டு வருகின்றனர். பௌத்தமதம் புனித மான மதமாகும். எனினும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடபகுதியில் பௌத்த விகாரைகள் அமைக் கப்பபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=153671&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இனிவரும் காலங்களில் யாராலும் எதுவும் செய்ய முடியாது. சிங்கள இனம் தமது பக்க நியாயங்களை சர்வதேச வல்லமையுடன் சேகரித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜ சோழனின் படைகளினால் வந்த சைவம்,போத்துக்கீச,ஒல்லாந்த,ஆங்கிலய படைகள் மூலம் கிறிஸ்தவம் ,அரபிய வியாபாரிகள் மூலம் இஸ்லாம் அந்த மண்ணில் தற்பொழுது மக்களின் மனதில் ஆட்சி செய்யும் ஏன் சிங்கள படைகள் மூலம் பெளத்தம் அந்த மண்ணில் ஆட்சி செய்யகூடாது ......

  • கருத்துக்கள உறவுகள்

தானாக விரும்பி உண்பது அமிர்தமாகச் சுவைக்கும்.:)

திணித்து உண்ண வைத்தால் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுக்கவைக்கும்.:shocked:

மதத்தை மக்கள் விரும்பி ஏற்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பெரும்போக்காக எடுத்துக் கொண்டு எம்மவர்கள் சகித்துப் போனால்.. உலகம் இதனை கண்டுக்கவும் மாட்டுது கண்டிக்கவும் மாட்டுது. இதனை உலகின் கண்களுக்கு ஆக்கிரமிப்பின் அடையாளமாக உணர்த்த வேண்டிய எம்மவர்களே மெளனித்துச் செல்லும் போது.. அல்லது அடிமைப் புத்தியில் சகித்துக் கொள்ளும் போது. சிங்களவன் காட்டில் ஒரே பெளத்த பேரினவாத மழை தான்.

எதிர்ப்புக்காட்டினால் தான்.. பிரச்சனை. காட்டாட்டி.. அது பிரச்சனையே இல்லை. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nedukkalapoovan said:

 

எதிர்ப்புக்காட்டினால் தான்.. பிரச்சனை. காட்டாட்டி.. அது பிரச்சனையே இல்லை. tw_angry:

எதிர்ப்பு காட்டினால் பயங்கரவாதம் என்று சொல்லியினம்....

1 hour ago, Paanch said:

தானாக விரும்பி உண்பது அமிர்தமாகச் சுவைக்கும்.:)

திணித்து உண்ண வைத்தால் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுக்கவைக்கும்.:shocked:

மதத்தை மக்கள் விரும்பி ஏற்கவேண்டும்.

எல்லா மதங்களும் திணிப்பில் தான் மக்களிடையே சென்றுள்ளது .....ஒன்று அகிம்சை திணிப்பு மற்றது அதிகார திணிப்பு....சிங்களவர் விட்ட பிழை அகிம்சை மூலம் பெள்த்த மதத்தை திணிக்க தவறியமை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

எதிர்ப்பு காட்டினால் பயங்கரவாதம் என்று சொல்லியினம்....

அடுத்தவன் மண்ணில்.. அணு குண்டு போட்டவனே... தர்மவானாக உலகின் முன் தன்னைக் காட்டிக்கொள்ளும் போது.. எமது மண்ணில் நாம் எம்மை பாதுக்காக்க எதிர்ப்புக்காட்ட முடியாதுன்னு கிடப்பது போல் பேதமை எதுவுமில்லை. சொல்லுறவன் தன் தேவைக்கு ஆயிரம் சொல்லுவான். கேட்கிற நமக்கு தான் சொந்த சரக்கிருக்கனும்.. அவன் எதுக்குச் சொல்லுறான்னு கிரகித்து இயங்க. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கு சர்வதேசமட்டத்தில் நல்ல மதிப்பு இருக்கு .அதை நன்றாக புரிந்து கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள் காய் நகர்த்துகிறார்கள்.சிறிலங்கா தேசித்தையும்,புத்தரையும் சர்வதேசத்திற்கு முன்னிலைப்படுத்தி .....சிங்கள தேசியத்தை எம்மண்ணில் திணிக்கின்றார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

புத்தருக்கு சர்வதேசமட்டத்தில் நல்ல மதிப்பு இருக்கு .அதை நன்றாக புரிந்து கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள் காய் நகர்த்துகிறார்கள்.சிறிலங்கா தேசித்தையும்,புத்தரையும் சர்வதேசத்திற்கு முன்னிலைப்படுத்தி .....சிங்கள தேசியத்தை எம்மண்ணில் திணிக்கின்றார்கள்....

இது தான் அவர்களின் தந்திரம் எப்பவும். ஆனால் எம்மவர்கள் ஒற்றைத் தோல்வியில் எல்லாம் முடிந்தது என்று இன்னொரு பிரபாகரனுக்கு காத்திரக்க வெளிக்கிட்டார்கள். அது சிங்களவனுக்கு எல்லாத்தையும் இலகுவாக்குகிறது. தமிழன் தன் சொந்த இழப்பையும் தானே வலிந்து மறக்கச் செய்ய வேண்டிய சூழலுக்குள் தன்னைத் தள்ளிக் கொண்டிருப்பது தான் கொடுமை. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

மணிமேகலை சிலப்பதிகாரத்தில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததற்கான ஆதாரங்களே இருக்கின்றன. 

ஏன் தமிழர்கள் தம் பாரம்பரிய பௌத்த  மதத்தை கைவிட்டார்கள்?

சாதிப்பாகுபாட்டை முன்னிலை படுத்தி தம்மை மிகவும் பாதிக்கும் மதத்தை ஏற்று, சமஸ்கிருதத்தை தம் தெய்வீக மொழியாக தமிழ் மக்கள் ஏன் ஏற்று கொண்டார்கள்?

சிங்களவர்களே இன்று தமிழர்களின் பாரம்பரிய மதமான பௌத்தத்தை பாதுகாக்க முயல்கிறார்கள்.

தமிழர்கள் மத்தியில் கூட சிங்களவர்களே தமிழர்களின் பாரம்பரிய பௌத்தத்தை மீண்டும் பரப்ப வேண்டி உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.