Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கட காரும் அதன் சூழலைப் பாதுகாக்கும் ஒற்றை இயல்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் உள்ள வாகனம்.. குறைந்த காபன் வெளியீட்டைக் கொண்டது. வாங்கும் போதே தெரிவு செய்து வாங்கினோம். 

 

பொதுவாக... இயற்கைச் சூழலை கெடுக்கும் முக்கிய காரணிகளில் காரும் ஒன்று என்பதால்..

சூழலை பாதுக்காக்கக் கூடிய அல்லது சூழல் மீதான குறைந்த தாக்கத்தை தரும் கார்களை பற்றி அறியவும் பாவிக்கவும்.. மக்களை ஊக்குவிக்கும் முகமா இது.

அண்மைய ஆண்டுகளில் வெளியான கார்களில்..

99 கிராம்/மைல் க்குள் காபன் வெளியீடு கொண்ட கார்களுக்கு பிரித்தானியாவில் வீதி வரிவிதிப்பு (road tax) இல்லை.

இந்த வகை கார்களில்..

smart fortwo

Toyota iQ

Ford Fiesta

MINI hatchback

இப்படிப் பல வகைகள் உண்டு..

இந்த வகையில்... உங்கள் காரில் உள்ள சூழலைப் பாதுக்காப்பதற்கான அல்லது பாதிப்பைக் குறைப்பதற்கான அம்சம் என்ன.. அதில் நீங்கள் அக்கறை செலுத்தி தானா காரை வாங்குறீங்க என்று சொல்லுங்க. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனி மின்சாரக் கார்கள் பார்ப்போம்... எதிர்காலத்தில் பிரித்தானியாவில் முழு வீதி வரிவிதிப்புக்கு விலக்குப் பெறும் கார்களாக இவை அமையும்..

விலை உயர்ந்த அமெரிக்க ரெஸ்லாவில் இருந்து பல கார் உற்பத்தியாளர்களும்.. மின்சாரக்கார்களை சந்தையில் அறிமுகப்படுத்த துடிக்கிறார்கள். எனி அவை சிமாட் கார்களாக வலம் வரும் காலம் கைக்கு எட்டிவிட்டது. குறிப்பாக ரெஸ்லா சிமாட் கார்களின் அறிமுகம்.. பிற உற்பத்தியாளர்களையும் பைத்தியம் பிடிக்கச் செய்துள்ளது. இந்தப் பைத்தியம் சூழலுக்கு நன்மையாக அமையின் இன்னும் நல்லம்.

ரெஸ்லா...

Tesla-Model-s-P85D-exterior.jpg

hero-01-RHD.jpg?20151030

மின்சாரக்கார்கள்.. பூச்சிய காபன் வெளியேற்றம் உடையவை என்பதால்.. சூழலுக்கு நன்மை பயப்பன ஆகும். tw_blush:

 

அதுசரி.. நீங்கள் யாருமே சூழலுக்கு ஆதாயம் தரும் கார்களை பாவிக்கவே இல்லையா.. இல்ல அப்படி ஒரு அக்கறை இன்னும் உங்களுக்கு வரவே இல்லையா.. ஒருத்தரையும் இங்கு.. கருத்துச் சொல்லக் காணம். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மின்சார கார் வாங்குவது பற்றி எப்போதும் அக்கறை உண்டு 
அதைமீண்டும் சார்ஜ் பண்ணுவதில் எல்லா இடத்திலும் இல்லாத 
வசதி குறைபாட்டால்  அதை பின்னடித்து வருகிறேன்.

டெஸ்லா குறைந்த விலையில் ஒரு காரை தயாரித்து வருகிறது 
அது சந்தைக்கு வரும்போது .......
வாங்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த பூமியை பாதுக்கக்க வேண்டியது இதில் வாழும் 
எங்கள் எல்லோருடைய கடமை என்றே எண்ணுகிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

மின்சார கார் வாங்குவது பற்றி எப்போதும் அக்கறை உண்டு 
அதைமீண்டும் சார்ஜ் பண்ணுவதில் எல்லா இடத்திலும் இல்லாத 
வசதி குறைபாட்டால்  அதை பின்னடித்து வருகிறேன்.

டெஸ்லா குறைந்த விலையில் ஒரு காரை தயாரித்து வருகிறது 
அது சந்தைக்கு வரும்போது .......
வாங்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த பூமியை பாதுக்கக்க வேண்டியது இதில் வாழும் 
எங்கள் எல்லோருடைய கடமை என்றே எண்ணுகிறேன். 

ரெஸ்லாவை வீட்டிலும் வைச்சு சார்ச் பண்ணலாம். ஆனால் கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். tw_blush:

பூமியின் நலன் நோக்கிய.. நல்ல மாற்றம் தேடும் தங்கள் சிந்தனைக்கு வரவேற்பு மருதர். 

  • கருத்துக்கள உறவுகள்

ரெஸ்லாவின் விலை 65 ஆயிரம் டெலர்.நடுத்தனவர்கத்தினர் வாங்கமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

Confirmed: The $35,000 Tesla Model 3 Will Be Unveiled in March 2016

 

Pre-orders start then, though production won't begin until 2017.

o-TESLA-MODEL-3-570.jpg?6

tesla-model-s-ocean-small.jpg

tesla-cost.jpg

எண்ணெய் (பெட்ரோல்) விலை 2012 இன் படி இருக்கிறது ...
இப்போது குறைவு ..... மீண்டும் ஏற தொடங்கி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பூமி என்பது நம் உரித்தல்ல அதை நாம் வருங்கால சந்ததியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளோம் என்பார்கள்.

அந்த வகையில் சீரோ எமிஷன் கார்களை பாவிக்க ஆசைதான். ஆனால் இது இப்போ தொடக்கப் படியில் நிக்கும் டெக்னோலொஜி என்பதால் தயங்குகிறேன். 

தவிரவும் சுற்றுசூழல் கரிசனை v செலவு மற்றும் இலகு என்றும் பார்க்க வேண்டி இருக்கு.

இப்போ ஒரு 2 லீட்டர் டீசல் கார் ஓடுகிறேன். அண்மைய காலத்து கார் என்பதால் அதிக co2 இல்லை. வருடத்துக்கு 145 வீதி வரியில் போகுது.

புதிய கார் வேண்டும் போது செலவு இதை விட பலமடங்கு எகிறும்.

பார்க்கலாம். நிசான் லீவ் பற்றி மீனா முன்பு ஒரு திரி போட்டிருந்தார். இப்போ நிசான் NV 200 வான் இல் பேட்டரி கார் வந்துளது. பார்க்க நல்லாய் இருக்கு. வாங்கி ஒரு கேம்பர்வான் செய்ய வேண்டும் என்பது நெடுநாள் ஆசை.

2 லீட்டர் டேர்போ டீசல் என்ஜினை முறுக்கும் போது வரும் 0-60 இதில் வருமா? இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

பூமி என்பது நம் உரித்தல்ல அதை நாம் வருங்கால சந்ததியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளோம் என்பார்கள்.

அந்த வகையில் சீரோ எமிஷன் கார்களை பாவிக்க ஆசைதான். ஆனால் இது இப்போ தொடக்கப் படியில் நிக்கும் டெக்னோலொஜி என்பதால் தயங்குகிறேன். 

தவிரவும் சுற்றுசூழல் கரிசனை v செலவு மற்றும் இலகு என்றும் பார்க்க வேண்டி இருக்கு.

இப்போ ஒரு 2 லீட்டர் டீசல் கார் ஓடுகிறேன். அண்மைய காலத்து கார் என்பதால் அதிக co2 இல்லை. வருடத்துக்கு 145 வீதி வரியில் போகுது.

புதிய கார் வேண்டும் போது செலவு இதை விட பலமடங்கு எகிறும்.

பார்க்கலாம். நிசான் லீவ் பற்றி மீனா முன்பு ஒரு திரி போட்டிருந்தார். இப்போ நிசான் NV 200 வான் இல் பேட்டரி கார் வந்துளது. பார்க்க நல்லாய் இருக்கு. வாங்கி ஒரு கேம்பர்வான் செய்ய வேண்டும் என்பது நெடுநாள் ஆசை.

2 லீட்டர் டேர்போ டீசல் என்ஜினை முறுக்கும் போது வரும் 0-60 இதில் வருமா? இல்லையே.

astCars-1940x1302.png

tesla-chart-time.jpg

2018 வந்து விடும் என்றே எண்ணுகிறேன் ...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

M 1

ஊருக்கும் விக்கனமில்லை
உலகுக்கும் விக்கனமில்லை
மக்களுக்கும் விக்கனமில்லை
சுகாதாரத்துக்கும் விக்கனமில்லை
விண்வெளிக்கும் விக்கனமில்லை
செலவும் பெரிசில்லை
ஒரு கட்டு வைக்கல் போதுமடி
இது இயற்கை தந்த சொத்தடி tw_blush:

1 hour ago, குமாரசாமி said:

ஊருக்கும் விக்கனமில்லை
உலகுக்கும் விக்கனமில்லை
மக்களுக்கும் விக்கனமில்லை
சுகாதாரத்துக்கும் விக்கனமில்லை
விண்வெளிக்கும் விக்கனமில்லை
செலவும் பெரிசில்லை
ஒரு கட்டு வைக்கல் போதுமடி
இது இயற்கை தந்த சொத்தடி tw_blush:

இதைப் பதிந்துவிட்டு கெக்கட்டம் விட்டு சிரிக்கும் குமாரசாமி அண்ணை.

sunny emoticon

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

M 1

ஊருக்கும் விக்கனமில்லை
உலகுக்கும் விக்கனமில்லை
மக்களுக்கும் விக்கனமில்லை
சுகாதாரத்துக்கும் விக்கனமில்லை
விண்வெளிக்கும் விக்கனமில்லை
செலவும் பெரிசில்லை
ஒரு கட்டு வைக்கல் போதுமடி
இது இயற்கை தந்த சொத்தடி tw_blush:

பெரும்போக்கா பார்த்தால்.. சூழலுக்கு பாதிப்பு இல்லைப் போலத்தான் இருக்கும்.tw_blush::rolleyes:

ஆனால்.. மாடுகள்.. மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து வரும் மீதேனும் சூழல் வெப்பமாதலில் (புவி வெப்பமாதலில்) குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

இதில  நாம் தமிழர் சீமான் அண்ணா.. ஜேசி மாட்டைப் புகுத்தாத.. நாட்டு மாட்டைப் பாவின்னு கத்திறதிலும் விசயம் இருக்கு. மேற்குலக தெரிவு விருத்தி ஜேசி மாடுகள்.. கூடிய காபன் எமிசன் கொண்டவை. நம்ம சூழலுக்கு ஆபத்தைக் கொண்டு வரவும் கூடியவை.  நாட்டு மாடுகளை விட ஜே சி மாடுகள் இரண்டு மடங்கு அதிக மீதேனை வெளிவிடுகின்றன.

_46629048_methane_gas2_466in.gif

methane_break_3.gif

infographic-cow-methane-reduction-projec

MethaneCow-300x214.jpg

Causes_of_global_warming.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரெஸ்லா மாடல் 3.. 35,000 அமெரிக்க டாலர் கார் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

இது முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும்.. குறைந்த விலை செகுசுக் கார்களில் அடங்குகிறது.

 

https://www.teslamotors.com/en_EU/model3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.