Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடாவில் கஞ்சாவின் ஊடுருவல்! காரணம் என்ன? பின்னணி யாது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kerala_ganja_01.jpg

யாழ். குடாநாட்டில் தினமும் கஞ்சா கைப்பற்றப்படுவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சாக்களை கைப்பற்றுவது என்பதற்கப்பால், கைப்பற்றப்படாத கஞ்சாக்கள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது நியாயமே.

என்றும் இல்லாதவாறு கஞ்சா யாழ். குடா நாட்டிற்குள் ஊடுவருவதற்கான காரணம் என்ன? இதன் பின்னணி யாது? என்ற கேள்விக்கான விடை கண்டறியப்பட வேண்டும். இல்லையேல் கஞ்சாவால் எங்கள் தமிழ் இனத்தின் எதிர்காலம் பாழாகும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

பொதுவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கக் கூடிய மக்கள் ஒருவரை ஒருவர் இனங்காணக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். எனினும் சமகால சூழ்நிலையில் குடாநாட்டிற்கு வெளியில் இருக்கக் கூடியவர்கள் வந்து போகக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

இருந்தும் வெளியிடத்தைச் சேர்ந்த ஓரிருவர் வித்தியாசமான முறையில் நடமாடுவாராக இருந்தால் அவர்கள் தொடர்பில் சந்தேகம் கொள்ளக்கூடிய சூழ்நிலை இன்னமும் இருக்கவே செய்கிறது.

அந்தளவுக்கு யாழ்.குடாநாட்டில் நடமாடுகின்றவர்கள் எந்த இனத்தவர், எந்த சமயத்தவர், அவர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவரா அல்லது வெளியிடத்தைச் சேர்ந்தவரா என்பதை அடையாளப்படுத்துவதில் அதிக சிரமம் இல்லை என்றே கூறவேண்டும்.

நிலைமை இவ்வாறாக இருந்த போதிலும் போதைப் பொருள் கடத்தல்கள் மிக தாராளமாக நடக்கின்றன என்றால் இதற்கான மூல காரணம் யார்? என்றே கேள்வி எழுவது அவசியமானதே.

போருக்குப் பின்பான தமிழர் தாயகம் எந்த வகையிலும் மீண்டெழக் கூடாது என்றவாறு சில தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டால் அன்றி இது போன்ற போதைப்பொருள் பயன்பாடு இந்தளவு வேகமாக நடப்பது சாத்தியம் இல்லை என்றே கூறவேண்டும்.

எது எவ்வாறாயினும் ஆரம்பக் கட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தவறினால், இதன் எதிர்காலம் தென்பகுதியில் இருந்த பாதாள உலக கோஷ்டிக்கு ஒத்ததான சம்பவங்களே நடக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும்.

ஆகையால் யாழ் குடாநாடு உள்ளிட்ட வடபுலம் தனது இழப்புகளைக் கடந்து ஓர் உயர்நிலைக்கு தன்னை உட்படுத்த வேண்டுமாயின் போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்கள் அடியோடு வேரறுக்கப்பட வேண்டும். இல்லையில் எங்கள் இளம் சந்ததியை காப்பாற்றுவது எங்ஙனம் என்ற ஏக்கத்தோடு வாழ்கின்ற சூழ்நிலையே உருவாகும்.

ஆகையால் நாம் அனைவரும் விழிப்பாக இருப்போமாக இருந்தால், எங்கள் மண் மீது, மக்கள் மீது எங்களுக்கு பாசம் இருந்தால் நிச்சயமாக போதைப்பொருள் பாவனையை அடியோடு வேரறுப்பதுடன் அதில் சம்பந்தப்பட்டவர்களையும் மனம் திருந்த வைக்க முடியும்.

http://www.tamilwin.com/show-RUmuyETbSXkozA.html

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப வடக்குக் கிழக்கு சிங்கள ஆதிக்கத்துள்ள போச்சோ.. எப்ப முஸ்லீம் காடைகள் ஆதிக்கம் கூடிச்சோ.. எப்ப ஒட்டுக்குழுக்கள் சுதந்திரமா சுத்த முடிஞ்சுதோ.. அப்ப இருந்தே இதெல்லாம் நடக்கும் என்பது தெரிந்து விட்டது. 

இதனை மக்கள் எவ்வளவு தான் விழிப்பாக இருந்தாலும் தடுக்க முடியாது.. இது ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் ஏஜென்டுகளுக்கும் அவசியமான வியாபாரம். 

இருந்தாலும் மக்கள் தாமே முன்வந்து இதனை இனப்பாதுக்காப்புக் கருதி பாவிப்பதை தடுக்கனும்.. அல்லது தவிர்க்கனும். அப்ப தான் இந்த திட்டமிட்ட வியாபாரிகளை வேறு இடம் நோக்கி நகர்த்தலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போதை மயக்கங்கள் மூலம் எமது இனத்தின் எழுச்சிகளை மழுங்கடிக்க செய்கின்றார்கள். துப்பாக்கி வேட்டுக்கள் இல்லாமல்.......துர்ப்பாக்கிய சம்பவங்கள் இடம் பெறாமல் அமைதியாக எமது இனத்தை அழித்தொழிக்கப்போகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

95 இல் இருந்து அரசு எடுத்த முயற்சி இப்போ சிறிது சிறிதாக அறுவடை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் முக்கியமான காரணம், புலம் பெயர்ந்த உறவுகள் அனுப்புகின்ற பணம், சரியான மேற்பார்வையின்றிச் செலவு செய்யப்படுவது என்றே நினைக்கிறேன்!

உடன் பிறந்த சகோதரங்கள் வெளி நாட்டில் இருக்கும் போது ஊரிலுள்ள சகோதரர்கள கஷ்டப்படக் கூடாது எனவும், அவர்களைத் தங்களால் வெளியே எடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மேலோங்கிய நிலையிலும்..நல்ல நோக்கத்துடன் தான் பணமனுப்புகின்றனர்! எனினும்... மன வளர்ச்சியடையாத மாணவர்கள் கைகளுக்குப் பணம் போகும்போது... வழியெங்கும் வல்லூறுகள் காத்திருப்பதைப் பணமனுப்பும் உறவுகளோ, ஊரிலிருக்கும் உறவுகளோ கவனத்தில் எடுப்பதில்லை!

அத்துடன் என்ர பிள்ளை ஒரு நாளும் அப்படிச் செய்யாது என்ற மனநிலையில் பல பெற்றோர்கள் வெகு அப்பாவித் தனமாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு அப்பாவித் தனமும் முக்கிய காரணமாகும்!

சட்டங்களும், ஒழுங்குகளையும் தொலைத்து நிற்கின்றது எமது சமூகம்! போர் தின்ற பூமியில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் தோன்றி விட்டன!

வெளி நாடு ஒன்றில் இருக்கும் உறவின் உறவு ஒன்று படம் காட்டுகையில்...ஊரிலுள்ள உறவு ஒன்று ஏக்கம் கொள்வது மிகவும் சாதாரணம்! அந்த ஊரிலுள்ள உறவின் விரக்தியையும், வேட்கையும் நாம் கவனத்திலெடுக்கத் தவறி விடுகிறோம்! அதனாலேயே அவர்கள் முதலில் போதைப் பொருள்களை நாடுகின்றார்கள்! பின்னர் நாளடைவில் அது அவர்களை அடிமைப் படுத்தி விடுகின்றது!

அதைத் தவிர...அங்குள்ளவர்கள் சொத்துக்கள், மற்றும் உறவுகளை இழந்தவர்கள்! அந்த வெறுமை கூட ஒரு காரணமாக இருக்கக் கூடும்!

அந்தக் காலத்தில்  அர்ஜுன் 'பிறை நைலோன்' சேட்டோட திரியிற நேரம் நாங்கள் டிப்ளோமற்  சேட்டோட  திரியிற போது எங்களுக்குள் ஒரு ஏக்கம் இருந்தது உண்மையே! அவரை அண்ணார்ந்து பார்ப்பதைத் தவிர நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை!

அர்ஜுன்...கோவிக்கக் கூடாது... ஒரு உதாரணமாக மட்டும் பதிகிறேன்! வேறு ஒரு உள் நோக்கமும் இல்லை!

எனவே இன்னும் காலம் கடந்து விடவில்லை! 

போர் தின்ற சமூகமொன்று மெல்ல ..மெல்லத் தான் .. விழித்தெழ வேண்டும்!

பாதிக்கப் பட்டவர்களுக்கும்..இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும்!

சாந்தி போன்றவர்கள்..ஏதாவது இவர்களுக்கு...கவுன்சிலிங் செய்யும் அமைப்புகள் இருந்தால் அறியத் தாருங்கள்!

அவர்களின் இப்போதையே தேவை..அனுதாபத்துடன் அவர்களை அணுகி உதவி செய்வதே!

சாம, பேத, தான தண்டங்கள் ஒன்றும் பயன் தராது! எதிர் மாறாக அவர்களை..இன்னும் இந்தப் பழக்கத்தை நோக்கியே தள்ளும்!

என்னாலான உதவிகளை நிச்சயம் செய்வேன்!

அரசிடம் அதிக உதவிகளையும், அனுசரணைகளையும் எதிர் பார்க்க முடியாது! அது கிடைக்கும் போது காலம் கடந்து போயிருக்கும்!

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப குறுந்திரைப்படங்கள் எடுக்கிற கூட்டம் இப்படி பட்ட பப்படங்கள் தானே எடுக்கிறாங்கள் சமுதாயத்தை திருத்துகிறதா அல்லது திரும்பி தான் பார்க்க வைக்கிறதா 

ஈழத்தில் வெளியாகின்ற குறும்படங்கள் எதை உணர்த்த முற்படுகின்றன என்று சமுக சாளரம் பகுதியில் கேட்டேன் ஆனால் ஒரு பதிவு கூட வரவில்லை பின்னர் நமக்கு வீண் வேலை என்று விட்டு விட்டேன் 

இதற்கு அரசை குற்றம் சாட்டிட முடியாது ஏனெனில் ஒருவரின் வாயில் கொண்டு போதை யை திணிக்க வில்லை அவனவன் குஞ்சில் பழகிவிட்டு போதைக்கு  அடிமையாக இருப்பதால் இதை அவர்கள்  உணர்ந்து திருந்தி  விடுவார்கள் ஆனால் தான் வெற்றி அதுவரை?? 

Edited by முனிவர் ஜீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.