Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் பலி

Featured Replies

விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் பலி

 

விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற அதிமுகவின் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

160409164716_jayalalitha_640x360_bbc_noc
 ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி இருவர் பலி ( ஆவணப் படம்)

கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிதம்பரம் நகரப்பகுதியை சேர்ந்த கருணாகரன் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள்தான் பலியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று விருத்தாச்சலத்தில் நடைபெற்ற அதிமுகவின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று உரையாற்றினார்.

மிகப்பெரிய மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த கூட்டம் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் நடத்தப்பட்டது. அப்போது பெண்கள் கூடியிருந்த பகுதியில், ஆண்கள் கூட்டம் உள்நுழைந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண்கள் உள்ளிட்டோர் மயக்கமடைந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் ஜெயலலிதா உரையாற்றி கொண்டிருந்த காரணத்தால், அப்பகுதிக்கு மருத்துவ உதவிப் பணியாளர்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அப்போது மயக்க நிலையில் கீழே விழுந்திருந்த பெண்கள் உள்ளிட்ட 19 பேரும், கடும் வெயிலில் தரையிலேயே போடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

கூட்டம் முடிந்து ஜெயலலிதா அந்த மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகே அந்த பெண்கள் உள்ளிட்ட 19 பேரும் சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இந்த 19 பேரில், பலியாகியுள்ள கருணாகரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அப்போது ஆபத்தான நிலையில் இருந்த காரணத்தால், கூடுதல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

மற்ற 17 பேருக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

http://www.bbc.com/tamil/india/2016/04/160411_jayacampaigndeath?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப அபசகுனமாக இருந்கின்றதே

 

1 hour ago, நவீனன் said:

அப்போது பெண்கள் கூடியிருந்த பகுதியில், ஆண்கள் கூட்டம் உள்நுழைந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண்கள் உள்ளிட்டோர் மயக்கமடைந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு மிகவும் கீழ்த்தரமான ஆண் வர்கத்தின் செயற்பாடு - இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் 

ஜீவன் ஒன்று கவனித்தீர்களா, இறந்த இரண்டு பேரும் ஆண்களே.

4 minutes ago, பகலவன் said:

ஜீவன் ஒன்று கவனித்தீர்களா, இறந்த இரண்டு பேரும் ஆண்களே.

அதை வாசித்துவிட்டுத்தான் எழுதினேன் . சிமைலி போட மறந்து விட்டேன் 

:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

ரொம்ப அபசகுனமாக இருந்கின்றதே

இந்தியாவிலை இதுதான் நல்லசகுனம் :cool:

  • தொடங்கியவர்

பிரசார கூட்டத்தில் 2 பேர் இறந்தது எப்படி?- ஜெயலலிதா விளக்கம்

 

jayacampaignviruthachalam.jpg

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் இருவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே இறந்ததாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா,  விருத்தாசலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, வெயிலில் மயங்கிய 2 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்துல் கலந்து கொண்ட சிதம்பரம் நகர 31-வது வார்டைச் சேர்ந்த எஸ்.கருணாகரன், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரைச் சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தற்போது தேர்தல் நடத்தை, விதிமுறைகள் அமலில் இருப்பதால், மரணம்டைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் முடிந்த பிறகு கழகத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

http://www.vikatan.com/news/politics/62299-dead-in-admk-meeting-jayalalithaa-description.art

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

முடியல, அம்மா இருந்து பேசுறாங்க... அதால, அந்த வேட்பாளர்களும் ஒககாதிட்டாங்க :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

 

 

jayacampaignviruthachalam.jpg

 

 

 

ஆறறிவு மனிதன் 6ஆயிரம் முன்பே பூமியில் உலாவ தொடங்கிவிட்டான் ....

தமிழகத்தில் .....???

  • தொடங்கியவர்

ஜெயலலிதா பிரசாரக் கூட்ட மரணங்கள்: தலைவர்கள் கண்டனம்

 

விருத்தாசலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

160409164716_jayalalitha_640x360_bbc_noc
 ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு காலையிலேயே ஆட்கள் அழைத்துவரப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, திங்கட்கிழமையன்று விருத்தாசலத்தில் கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

இந்தக் கூட்டத்திற்கென சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காலையிலேயே வந்திருந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா பிற்பகல் 3 மணிக்கு மேடைக்கு வந்து பேச்சைத் துவங்கினார்.

இதனால், காலையிலேயே கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் வெயில் மற்றும் நெரிசலின் காரணமாக கடுமையாக அவதியுற்றனர்.

இதனால் சுமார் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. 2 பேர் பலியானார்கள்.

தலைவர்கள் கண்டனம்

இந்தச் சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் வைகோ, இதில் 4 பேர் இறந்திருப்பதாகவும் உடல்நலம் குன்றியவர்களை பேட்டியெடுக்கவிடாமல் தடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் இந்தச் சம்பவம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்கு கட்சியின் சார்பில் நிவாரணத் தொகை அளிக்கப்படுமெனவும் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/india/2016/04/160412_jayalalitha

 

விருத்தாசலத்தில் என்ன நடந்தது?

 

ஜெயலலிதா பொதுக் கூட்டம். ஆண்களும் பெண்களும் அழைத்து வரப்பட்டார்கள். 11 மணி முதல் திடலுக்குள் விடப்பட்டார்கள். வெயில் கொளுத்தியது. தண்ணீர் தீர்ந்து விட்டது. தாங்க முடியாமல் சிலர் வெளியேற முயன்றார்கள். போலீஸ் தடுத்து விட்டது.

சீயெம் வந்து விடுவார்; இப்போ போகக் கூடாது என்றது போலீஸ். அம்மா பேசிட்டு போகும் வரை அசையாமல் இருக்கணும்னுதானே கூட்டியாந்தோம் என்றனர் கட்சிக்காரர்கள். பலவீனமானவர்கள் மயங்கிச் சாய்ந்தார்கள்.

முதல்வர் மேடையேறிப் பேசும்போது மூன்றரை மணி ஆகிவிட்டது. மயக்கமான பெண்களை பார்த்து பதறிய ஆண் உறவினர்கள் உதவிக்கு போக முயன்றனர். சவுக்கு கட்டிகளும் லத்திகளும் தடுத்து விட்டன. நெரிசல் ஏற்பட்டது.

50 பேர் மயங்கி விழுந்ததாக தினத்தந்தியே சொல்கிறது. முதல்வர் பார்வையில் பட்டால் பிரச்னையாகும் என்று போலீசும் கட்சிக்காரர்களும் தடுப்பு வளையம் அமைத்தார்கள். நாலு மணிக்கு ஜெயலலிதா கிளம்பிய பிறகுதான் மயங்கி கிடந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல போலீஸ் அனுமதித்தது. அதே நேரம், யாரையும் உள் நோயாளியாக அனுமதிக்காமல் முதல் உதவி அளித்து உடனே அனுப்பிவிட ஆஸ்பத்திரிகளுக்கும் ஆணை பறந்தது.

இரண்டு பேர் மரணம், 7 பேர் கவலைக்கிடம் என்பது செய்தி.

ஜெயலலிதா என்ன சொல்கிறார்?

"பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கருணாகரன் என்பவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டேன். எம்.ராதாகிருஷ்ணன் என்பவர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியில் உடல் நல குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டேன். வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்துக்கு தேர்தல் முடிந்த பிறகு நிதி வழங்கப்படும்," என கூறியுள்ளார்.

வெயில், மயக்கம், நெரிசல், பதட்டம் குறித்த எந்த தகவலும் இல்லை. ஏன் என்றால் போலீசும் சொல்லவில்லை, கலெக்டரும் சொல்லவில்லை. ஆகவே ஜெயாவைப் பொருத்தவரை அப்படி எதுவும் நடக்கவே இல்லை. அவர் பத்திரிகை வாசிப்பதில்லை. செய்திகள் கேட்பதில்லை. ஏனெனில் ஊடகங்களை நம்புவதில்லை. எனவே உண்மைகள் அவரை எட்டுவது இல்லை.

சட்டசபையில் ஜெயா பேசுவதும் இந்த அடிப்படையில்தான். அதிகாரிகள் ஆலோசனைப்படி காவல் துறை கொடுக்கும் அறிக்கையின் பேரில்தான் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்கள் குறித்த முதல்வரின் பதில் அல்லது விளக்கம் அமைந்திருக்கும். அத்தனையும் பச்சைப்பொய் என்பது அங்கே அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் ஊடகர்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால் 110ன் கீழ் முதல்வர் சொல்வதை எவருமே கேள்வி கேட்க முடியாத நிலையில் பாவம் ஊடகர்கள் மட்டும் என்ன செய்துவிட முடியும்? மீறி உண்மையை எழுதினால் அவதூறு வழக்கு, அரசு விளம்பரம் நிறுத்தம், செய்தியாளர் அங்கீகார அட்டை மறுப்பு, நூலகங்களுக்கு பத்திரிகை நிறுத்தம்... என்று அரசின் அம்பரா தூளியில் இருக்கும் அத்தனை அம்புகளும் அடுத்தடுத்து ஏவப்படும். பத்திரிகை முதலாளி எங்காவது பஞ்சாயத்து துணையுடன் பல ஏக்கர் வாங்கியிருப்பார். ஏதேனும் வரியைக் குறைத்து செலுத்தியிருப்பார். பிடித்தம் செய்த பி.எஃப் பணத்தை வங்கியில் கட்ட மறந்திருப்பார். ஊழியர் வேலை நேரப் பதிவேடுகளை பராமரிக்காமல் விட்டிருப்பார். இவை எதுவும் இல்லையென்றால் அவரது மகன் ஆல்கஹால் வாசனையுடன் காரோட்டி சோதனையில் சிக்கி, தலைமை நிருபர் மூலம் துணை கமிஷனரிடம் பேசியிருப்பார்.

கொளுத்தும் கோடை வெயிலில் நிழலுக்கு வழி செய்யாமல் பொதுக் கூட்டம் நடத்துவதே மனித உரிமை மீறல்தான். அப்படி ஒரு கொடுமை நடந்து அதில் சில உயிர்களும் பலியான நிலையில் வெகுஜன ஊடகம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நடிப்பதும், அது ஏதோ தவிர்க்க முடியாத விபத்து என்பதை போல இட்டுக்கட்டி எழுதுவதும் வெட்கக்கேடு அல்லாமல் வேறில்லை.

(எடிட்டர் கதிர் வேலின் முகநூல் பக்கத்திலிருந்து)



Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/what-happened-viruthachalam-kathir-251109.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.