Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இஸ்லாமிய நாடுகளிடம் உதவிக் கோரிக்கை

Featured Replies

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இஸ்லாமிய நாடுகளிடம் உதவிக் கோரிக்கை

 
160420162639_acmc_sri_lanka_512x288_bbc_
 விக்கினேஸ்வரன் வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருவது முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஏ.எம். ஜெமீல் கூறுகின்றார்

இலங்கையில் அறிமுகமாகக் கூடிய புதிய அரசியல்சாசனத்தில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளின் உதவியை நாடுகின்றது.

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சவுதி அரேபியா சென்று 57 முஸ்லிம் நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் இருப்பும் சர்வதேச மத்தியஸ்தம் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புதிய அரசியல் சாசனத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வாக வடக்கு-கிழக்கு இணைப்பு இருக்கக் கூடாது, தற்போதுள்ளது போன்று இரண்டு மாகாணங்களும் தனித் தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது.

அண்மைக் காலமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருவது முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இச் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.எம். ஜெமீல் கூறுகின்றார்.

இதனை முறியடிப்பதற்கான முன் நடவடிக்கையாகவே இலங்கைக்கு உதவும் நாடுகள் உட்பட முஸ்லிம் நாடுகளின் உதவியை தாங்கள் நாடியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பின்புலம் இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது.

இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரேயொரு சர்வதேச சக்தி இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு என தங்களின் சந்திப்புகளின்போது வலியுறுத்திக் கூறியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக செவிமடுத்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் இருப்பும் உறுதிப்படுத்தப்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என உறுதிமொழியும் உத்தரவாதமும் அவர்களால் தரப்பட்டதாகவும் ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/04/160420_muslims_lanka

 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையெண்டால் ..உங்கடை அரசியல் கேள்விக்குறிதானே......மாத்திப்போடுற மந்திரிப்பதவியும் இல்லாமல் போயிடும்...

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கெடுத்தாலும் இறைமையையும், தன்னாதிக்கமும் பாதிக்கப்படுகின்றது என்று கவலைப்படும்... ஹெல உறுமைய தான் இதற்கான பதிலைக் கூற வேண்டும்!

உள்நாட்டுப் பிரச்சனைகள் முஸ்லிம் நாடுகள் தலையிடுவதை. ஹெல உறுமைய அனுமதிக்கக் கூடாது!

காவியுடையைக் கழட்டிக் கச்சையாகக் கட்டிக்கொண்டு போராடப் புறப்படுங்கள் பிக்குகளே!

உங்கள் நாடு உங்களை அழைக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை நீங்கள் இப்படி சொல்லிப்போட்டியள்..டிப்ப கனடா ஜம்பாவான் ஓடிவரப்போறார்...முசுலீமுக்கு  ஆதரவு தர...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

புங்கை நீங்கள் இப்படி சொல்லிப்போட்டியள்..டிப்ப கனடா ஜம்பாவான் ஓடிவரப்போறார்...முசுலீமுக்கு  ஆதரவு தர...

ஏன் கனடாவுக்கு ஓடுறியள்..! சம் சுங் போன்றவர்கள் உள்ளூரில் இருப்பதை மறந்ததேனோ...?? :(

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் சர்வதேசம் என்று போனால்.. நாங்கள் முஸ்லீம்களை மத்தியகிழக்கின்னு அனுப்புவம்.. இது சிங்களம்.

நீங்க மத்தியகிழக்குன்னு அனுப்பினால்.. நாங்கள் மலையகத் தமிழர்களை இந்தியாவுன்னு அனுப்புவம்.. இது சம்பந்தன்.

இப்படியே மாறி மாறி சொல்லி காலத்தை இழுத்தடித்து.. கடைசியில் யாருக்கும் எதுவும் இல்லாமல் சிங்களவன் எல்லாத்தையும் அனுபவிக்க வழி செய்வது தான் நடக்குது. tw_blush:

முஸ்லீம்களுக்கு மந்திரிப் பதவியும் வடக்குக் கிழக்கில் காணி பிடிப்பும் போதும். சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி போதும். மிச்சம் எல்லாம் வாய்சவடால்.. மக்களை ஏமாற்ற. tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.