Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரனைமடுவிலிருந்த யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு செல்வது தவிர்க்க முடியாதது

Featured Replies

இரனைமடுவிலிருந்த யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு செல்வது தவிர்க்க முடியாதது

"சுண்ணாகம் நிலத்தடி நீரில் எம்மால் நியமிக்கப்பட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குழுவின் ஆய்வின்படி எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது" - அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இரனைமடுவிலிருந்த யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு செல்வது தவிர்க்க முடியாதது:



இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்  வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் திட்டத்திற்கு மாற்றுத் திட்டங்கள் இருக்கின்ற போதும் இரனைமடுவில் இருந்தும் நீர் கொண்டு செல்லப்படும்ஆனால்  அதற்கு முன்னதாக மாவட்ட விவசாயிகளின் அச்சங்கள் நிவர்த்தி செய்யப்படுவதோடு அவர்களுக்கான காப்பீடு தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.


மேலும் 2006 ஆம் ஆண்டிலிருந்தே இரனைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் சர்சைக்குரியதாக காணப்பட்டு வருகிறது குடிநீர் பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை  இதில் அரசியல் கலப்பது நியாமற்றது என்றார்

அத்தோடு கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மேலதிக நீரை கொண்டு செல்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. இரனைமடுவில் மேலதிகமாக சேமிக்கப்படுகின்ற நீரிலும்; அரைவாசி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அந்த வகையில் விவசாயிகள் பீதியடைய தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்

சுண்ணாகம் நிலத்தடி நீரில் எம்மால் நியமிக்கப்பட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குழுவின் ஆய்வின்படி எண்ணெய் கசிவுகள்  கலந்துள்ளது. எனவே அந்த நீர்குடிப்பதற்கு உகந்தது அல்ல. எனினும் வடக்கு மாகாண சபையின் குழுவின் ஆய்வின்படி அவ்வாறு எண்ணெய் கசிவுகள் நீரில் கலக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு  குழப்பகரமான நிலைமை  எனவே இது தொடர்பில் மேலதிகமாக குழுக்களை அமைத்து ஆராயவேண்டும் என்றார்.
 

இன்றைய இந்த உயர் மட்டக்க கூட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்  இராஜாங்க அமைச்சர் சுதர்சின் பெர்ணான்டோ, சிறுவர், மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன,; சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வட மாகாண அமைச்சர்களான குருகுலராஜா, ஜங்கரநேசன், சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் மன்னார், யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,அரச அதிபர்கள் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131732/language/ta-IN/article.aspx

5 minutes ago, நவீனன் said:

 

இரனைமடுவிலிருந்த யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு செல்வது தவிர்க்க முடியாதது

 

நாங்க விடமாட்டம், அதுவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கொண்டுவர நிச்சயமா விட மாட்டம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டு வாறது இருக்கட்டும் சுண்ணாகம் நிலத்தடி நீர் மாசடைந்ததற்கான காரணத்தை கூற மறுக்கிறீர்களே.

ஏற்றகனே அங்க இருக்கிற சனம் நீர் தட்டுப்பாட்டில் இருக்கிறது.  

3 hours ago, ஜீவன் சிவா said:

நாங்க விடமாட்டம், அதுவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கொண்டுவர நிச்சயமா விட மாட்டம். :grin:

இந்த விடயம் கிளியின் மைந்தன் சிறீதரனுக்கு தெரியுமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இருக்கிற தண்ணியை பாதுகாக்க வக்கில்லை.......இதுக்கை இரணைமடு தண்ணியாம்tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் றால் போடுறார் ....சுறாப்பிடிக்க.......சோழியன் குடுமி சும்மா ஆடாது.....அதுவும் கக்கீமின் தொப்பி சும்மா பேசாது....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.