Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?' -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு

Featured Replies

'ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?' -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு

seemanlong11.jpg

'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. 'நிகழ்ச்சியின் நோக்கம் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்' என வேதனைப்படுகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவனால் எழுதப்பட்ட, 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இனி என்ன செய்யலாம்?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடக்க இருக்கிறது. இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி,கெளதமன், காசி ஆனந்தன், மனித உரிமை செயற்பாட்டாளர் பால் நியூமென் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இளைய தலைமுறை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாறன் என்பவர்,

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.
 

egalaivanmeeting1.jpg

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. இத்தனை நாள் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று மேடைகளில் உணர்ச்சி பொங்க சீமான் பேசியது அனைத்தும் வெறும் வசனங்கள்தானா? இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் விழா ஏற்பாட்டாளர்கள் பிரச்சனைகுரியவர்களைத் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் இதே கேள்விகளோடு அரங்கில் உங்களை சந்திக்க வேண்டியது வரும்' என எச்சரித்திருந்தனர்.

egalaivan.jpgஇதுதொடர்பாக, நூலின் ஆசிரியர் பா.ஏகலைவனிடம் பேசினோம். " பால் நியூமென் அனைத்து நாடுகளுக்கும் சென்று ஈழ மக்களுக்காகப் பேசி வருகிறார். விழாவில், சீமானையும், நியூமெனையும் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 'சீமானை அசிங்கப்படுத்துவோம்' என மிரட்டுகிறார்கள். காவல்துறையிடமும் தேர்தல் ஆணையத்திடமும் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறோம். பால்நியூமெனின் கருத்துக்கு அவர்கள் மேடையில் எதிர்ப்பு தெரிவிக்கட்டும். அது ஜனநாய நடைமுறை. அதைவிடுத்து, 'கலாட்டா செய்து நடத்தவிட மாட்டோம்' என்பது சரியான அணுகுமுறை அல்ல.

இவ்வளவு பேசும் மாணவர்கள், கடந்த ஒரு மாதமாக ஈழ விவகாரத்தில் துரோகம் செய்த கட்சிகளுக்கு எதிராக எதாவது பிரசாரம் செய்தார்களா? நாம் தமிழர் கட்சி மீது மட்டும் பாய்வதில் உள்நோக்கம் இருக்கிறது. சீமானுக்கும் உங்களுக்குமான பிரச்னையை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். பால் நீயூமென் ஏன் அவ்வாறு பேசுகிறார்? என்பதற்கான விளக்கம் இதே மேடையில் வெளிக்கொண்டு வரப்படும். இதற்கான ஏற்பாடு எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருக்கிறது. அதைவிடுத்து நிகழ்ச்சியை நடத்த விட மாட்டோம் என்று சொல்வது ஜனநாயகப்பூர்வ நடைமுறை கிடையாது" எனக் கொந்தளித்தார்.

'எந்தப் பிரச்னையும் இல்லாமல் புத்தக வெளியீட்டு விழா நடக்க வேண்டும்' என கடைசி நிமிட பதட்டத்தில் இருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் உள்ளது பற்றி என்ட மச்சானோ அல்லது யாழில் சீமான் ஆதரவாளர்களோ வாயைத் திறக்கக் காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்து Paul Newman அப்படியான தவறான பதிவுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இவர்கள் சொல்வதுபோல் நடந்திருக்கவெல்லாம் வாய்ப்பில்லை. அவர் குறித்து புகார் ஏதும் இருந்தால் இந்த மாணவர்கள் அதை ஆதாரமாகத் தரவேண்டும். குறிப்பாக இவர் சமர்ப்பித்ததாகச் சொல்லப்படும் அறிக்கையின் பிரதியைத் தரலாமே?! இவர்கள் அதைப் படித்துவிட்டுத்தானே சொல்கிறார்கள்?!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் அடுத்தவனைக் குறை சொல்லி வயிறு வளர்க்க கொஞ்சம் இருக்குது. விடுங்க இசை. சீமான் இதற்கு எல்லாம் அசரக் கூடியவரல்ல. அந்தப் பக்குவம் வந்தாயிற்று.  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் சீமான் இது எதற்கும் அசர மாட்டார். அவருக்கு வயிறு வளர்ப்பது தானே முக்கியம்

வரி கோடுகள்  எல்லாம்  வரிப்புலி   கோடுகள்  இல்லை  வரிக்குதிரை  கோடுகளும்  உண்டு  ...மெல்ல  வருது உண்மை  வெளியில்  பொறுமை .

தமிழீழ விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி தீர்ப்பாயத்தில் அறிக்கை கொடுத்த பால் நியுமன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி கலந்து கொள்ள வேண்டாம், என்று மாணவர் அமைப்பான நாங்கள் கவிஞர் காசி ஆனந்தன் ஐயா அவர்களையும் இயக்குனர் கொளதமன் அவர்களையும், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் ஐயா அவர்களுக்கும் சந்தித்து பால் நியுமன் கலந்து கொள்வானேயாயின் நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று நாங்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று இருவரும் பால்நியுமன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

பிறேம்.. மாணவர் அமைப்பு 

  • கருத்துக்கள உறவுகள்

எலிகள் எல்லாம் புலிகள் வேசம் போடுவதைக் காட்டிலும் சீமான் நேரடியாக தமிழக மக்களின் மைந்தன் என்ற வகையில்.. அந்த மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கிறார். அவர் நேசிக்கும் தலைவனை முன்னிறுத்துகிறார். அது பல முன்னாள் போலிப் புலி இன்னாள் காட்டிக்கொடுப்பாளர்களுக்கு கடுப்பாய் இருக்குது. 

ஆனால்.. புலிகளின் வாலைப் பிடிச்சுக் கொண்டிருந்த ஈழத்து வேடதாரிங்க.. சிலதுங்க.. இப்ப தலைவரையும்  தாங்கள் மிஞ்சிட்டதா...போடுற.. வேசத்தைக் காட்டிலும் சீமானிடம் அதிக நேர்மையை காண முடிகிறது.

அது திராவிடக் கூத்தாடிகளுக்கும் வால்பிடிகளுக்கும் சகிக்கக் கூடிய ஒன்றல்ல. அதனால் இப்படிப் பல கட்டுரைகள் எனி சீமானின் வளர்ச்சியை கண்டு அதில் தாம் போலிப் புகழ்தேட.. எதிர்மறையாகக் எழுதிக்கிட்டு  சீன் போட ஒரு கூறூப் கிளம்பும். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். tw_blush:

Edited by nedukkalapoovan

11 hours ago, ரதி said:

ஆமாம் சீமான் இது எதற்கும் அசர மாட்டார். அவருக்கு வயிறு வளர்ப்பது தானே முக்கியம்

எதிர்த்தால்  வெளிநாட்டு  கிளைக்கு  எங்களை  பொறுப்பாக  போடமாடர்கள்  அப்புறம்  எப்படி  நாங்க  காசு  பார்க்கிறது ,இலக்கு  ஒன்றே  உண்டியல் .

  • கருத்துக்கள உறவுகள்

மை டியர் ‘பாய்ஸ்’.
---------------------------
மகா வணக்கம்.
இந்த மகா வணக்கத்திற்கான காரணத்தை பிறகு கூறுகிறேன்.

‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல. இனி என்ன செய்யலாம்’ என்ற நான் தொகுத்து வெளியிட்ட புத்தகத்திற்கு எதிராக மாபெரும் புரட்சி செய்தீர்கள்.

என்னவென்று?.

அந்த நிகழ்ச்சியில் பெங்களூரைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் பால்நியூமன் கலந்து கொள்கிறார். அவர் டப்ளின் தீர்ப்பாயத்தில் கொடுத்திருந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளை கொச்சைச் படுத்தியிருந்தார்.அதனால் அவர் துரோகி. அந்த துரோகி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்றீர்கள். ரொம்ப ரொம்ப சரி ???.

நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்.?

இந்த புத்தக வெளியீட்டு விழாவை நடத்தி, முக்கியஸ்தர்களை அழைப்பது எல்லாம் நான். அப்படித்தானே விளம்பரம் கொடுத்து வந்தேன். அதைப் பார்த்துதானே ‘புரட்சி’க்கு கிளம்பினீர்கள். அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட என்னிடம் பேச வேண்டும் என்ற அடிப்படை யோக்கியம்கூடவா உங்களிடம் இல்லை. என்னிடம் பேசி, நாம் மறுப்பு தெரிவித்து, அதற்கான காரணத்தை கூற,அது உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றல்லவா நீங்கள் புரட்சிக்கு கிளம்பியிருக்க வேண்டும்.

அதைவிடுத்து நாலாந்தரத் தனமாக ஏன் நடந்துகொண்டீர்கள்.? விழாவிற்கு வருபவர்களிடம் சென்று ‘போகாதே போகாதே என் கணவா’ என்ற புலம்பல் ஏன்?

சரி உங்கள் ‘கலகத்திற்கு’ வருகின்றேன்.
பால்நியூமன் குற்றம் செய்தார்? என்ன குற்றம்? புலிகளைப் பற்றி கடுமையான குற்றச்சாட்டை ஐ.நா.வில்
கூறினார்? அதுதானே?

சரி எப்போது கூறினார்?.

2010-ம் ஆண்டு நடந்த டப்ளின் தீர்பாயத்தில் அப்படி சொன்னார். எனில் அப்போது இருந்து நீங்கள் எந்த நாற்றாங்களில் நாற்று பிடுங்கிக்கொண்டிருந்தீர்கள்.
நீங்கள் எப்போதிருந்து இந்த களத்தில் மாணவர்களாக நிற்கிறீர்கள்? கிட்டத்தட்ட 2010-ல் இருந்துதானே.? அப்படி என்றால் அன்றிலிருந்து இன்று வரை ஆறு ஆண்டுகாலம் நீங்கள் இந்த டாக்டர் பால்நியுமன் பற்றி என்ன எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறீர்கள். ஒரு துண்டு பிரசுரம்? இந்த துரோகி இப்படி செய்திருக்கிறார் என்று எங்காவது ஒரு முனுமுனுப்பு…? ஏன் எதிர்ப்பை காட்டவில்லை. வாயிலும் மூளையிலும் எது அடைத்துக்கொண்டிருந்தது.?

அடுத்து என்ன சொல்கிறீர்கள்.

பால்நியூமன் என்ற துரோகியுடன் மேடையை பகிர்ந்து கொள்வதே துரோகம் என்றீர்கள்? சரி. உங்கள் வாதத்திற்கே வருகிறேன்.

2010-ம் ஆண்டுதான் பால் நியுமன் புலிகள் மீது அப்படி ஒரு பழியை சுமத்தி டப்ளின் தீர்ப்பாயத்தில் அறிக்கையை கொடுத்தார். அதன் பிறகு அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து தலையில் தூக்கி வைத்துக்கொண்டு திரிந்தது யார்? மே-17 இயக்கம்தானே. டப்ளின் தீர்ப்பாயத்திற்கு பிறகு பால் நீயூமனை ஒவ்வொரு ஊராக அழைத்து சென்றது திருமுருகன்தானே.அப்போதும் நீங்கள் மாணவர்களாகத்தானே இருந்தீர்கள்?

அப்போது ஏன் போராட்டம், புறக்கணிப்பு என்று கிளம்பி வரவில்லை.

பிறகு அந்த காணொளிகளை எல்லாம் திருமுருகனே அழித்துவிட்டார்.

இது தவிர 2011 மே மாதம் 28-ம்தேதி அன்று மே.17 இயக்கம் நடந்திய கருத்தரங்கிலும் பால் நியூமன் 
கலந்துகொண்டு பேசினார்.

அப்போது சென்னை வரும்போதெல்லாம் இப்படியாக ஒரு நிகழ்ச்சிக்கு வருகின்றேன் ஐயா என என்னுடன் உறவாடியபடிதான் இருந்தார் பால்நியுமென்.

மே-17,ன் வலைத்தளத்தில் 2011 கருத்தரங்கம் பற்றிய செய்தி, காணொளிகளும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 
ஆனால் அவை நீக்கப்பட்டு விட்டன-ஏன் என்ற விவாகரத்திற்குள் நான் போகவில்லை. ஆனால், 
இப்படியான ஒரு காரணத்திற்காக அவரது பதிவுகளை நீக்குகிறோம் என்ற காரணம்கூட சொல்லாமல் நீக்கியிருக்கிறார்கள். யாரும் எடுத்துவிடக்கூடாது என்தற்காக இருக்கலாம்.

http://may17iyakkam.com/…/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%A…/

அந்தக் கருத்தரங்கத்தின் காணொளி களில் பால் நியுமனின் காணொளி தவிர மற்ற காணொளிகள் மட்டும் மீண்டும் வேறு அக்கவுண்டில் ஏற்றப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=eb-lVqK7ZJ0
https://www.youtube.com/watch?v=sA-kNDxhXyk
https://www.youtube.com/watch?v=DL4316_ixGU
https://www.youtube.com/watch?v=kN1lqTJsSKU
https://www.youtube.com/watch?v=7pktGqT2AAY
https://www.youtube.com/watch?v=RFGRaAcbF0k
https://www.youtube.com/watch?v=OV4zKd4Pb3g

கருத்தரங்கத்திற்கான அறிவிப்பு திருமுருகனின் முகநூலில்

https://www.facebook.com/notes/thirumurugan-gandhi/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/203488749692770

கருத்தரங்கத்திற்கான அறிவிப்பு செய்தியாக 
http://tamil.oneindia.com/…/conference-on-un-report-on-lank…

கருத்தரங்கம் பற்றிய செய்தி வலைப்பூவில் 
http://mayseventeenmovement.blogspot.in/…/conference-over-u…

பால் நியூமன் பங்கேற்றது வலைப்பூவில் http://chennaihams-karadi2000.blogspot.in/…/prof-paul-newma…

இங்கே மே.17 ஏன் அப்படி செய்தது. திருமுருகன் ஏன் அப்படி தலையில் தூக்கிவைத்துக்கொண்டு திரிந்தார் என்பதை எல்லாம் நான் கேட்வில்லை. அது என் நோக்கமல்ல.அப்போது எல்லாம் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் மை டியர் பாய்ஸ்.

மே-17 இயக்கத்தை துரோக இயக்கம் என்பீர்களா? திருமுருகனை துரோகி என்று தூற்றினீர்களா?

இன்னொன்றையும் சொன்னீர்கள்.

பால்நியுமனை உடன் வைத்துக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியும் துரோகிதான் என்கிறீர்கள். இந்த கருத்தை ஏற்கிறேன்.

இதே வழியில் அந்த பால்நியுமனை அழைத்து வந்து கூட்டம் நடத்தியவர்களையும் துரோகி என்பீர்களா? நிறைய மேடைகளில் திருமுருகனை வைத்துகொண்டிருந்த வைகோ உள்ளிட்ட பலரையும் துரோகி என்பீர்களா? அவர்களையும் புறக்கணிப்போம் என்பீர்களா? அப்படித்தானே ‘பாய்ஸ்’ இருக்க வேண்டும் உங்க நியாயம்.

அடுத்த கேள்வி.
நீங்கள் சந்தித்து, ‘போகாதே போகாதே’ என்றவர்கள் எல்லாம் யார்?

முழுக்க முழுக்க ஈழவிடுதலை போராட்டத்திற்கு என்றே தியாகம் செய்தவர்கள். காசி ஆனந்தன் ஐயா. உலக அரசியலை மெத்த படித்தவர். 2010.ல் நடந்த டப்ளின் தீர்ப்பாயம் பற்றி அவருக்கு இப்போதுதான், அதுவும் நீங்கள் சொல்லித்தான் தெரியும் என்றால் எப்படி?. நம்பும்படியாக இருக்கிறதா? ஆனாலும் நீங்கள் சொன்னதை ஏற்று! அவர் விழாவுக்கு வர மறுத்துவிட்டார் என்றால், அவர் சீமான்- வைகோ என்ற ‘பிரிவினை’ போக்கிற்கு பணிந்துவிட்டார் என்றுதானே அர்த்தம்.

அப்படி எல்லாம் இல்லை என்றால் அவர் டப்ளின் தீர்ப்பாயம் பற்றி எல்லாம் அறிந்து கொள்ளாமல், தெரிந்துகொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டார். நாங்கள் சொல்லித்தான் புரியவைத்தோம் என்பது உண்மை.

இரண்டில் எது சரி என்பதை நீங்களே முடிவு எழுதிக்கொள்ளுங்கள்.

அப்படியே நீங்கள் சொல்லியிருந்தாலும் அவர் என்ன செய்திருக்க வேண்டும். இதிலிலுள்ள சூழ்ச்சியை புரிந்துகொண்டிருக்க வேண்டுமல்லவா.? பேசித் தெளிந்திருக்க வேண்டுமல்லவா? சரி போகட்டும். சந்தர்ப்பத்தை வைத்து அவரை ஏமாற்றியிருக்கிறீர்கள்.

அதேபோன்று மற்றொரு கேள்வியும் இருக்கிறது மை டியர் பாய்ஸ்.

பால்நியுமனுடன் மேடையில் நிற்பவர்களும் துரோகியே என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கு மற்றொரு காரணத்தையும் தருகிறேன்.

உங்கள் போராட்டத்தோடு அதிகம் பங்கெடுத்தவர் இயக்குனர் வ.கௌதமன். வேட்டி, புத்தாண்டு பரிசு போன்ற பல குறும்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதற்கான வெளியீட்டு விழாவும் நடந்தியிருக்கிறார். அந்த விழாக்களில் பல பிரபலங்களோடு திருமுருகன் காந்தியையும் அழைத்து உட்கார வைத்திருக்கிறார். அனேகமாக நீங்களும் அங்கேதான் இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி எல்லாமும் 2010.-க்கு பிறகு, டப்ளின் தீர்ப்பாயத்தில் டாக்டர் பால்நியுமன் அறிக்கை சமர்பித்த பிறகுதான் நடக்கிறது.

அப்படி என்றால், ‘ ‘துரோகி’ பால்நியுமனை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று டப்ளின் தீர்ப்பாயம் பற்றி மக்களிடம் பேசிவந்த திருமுருகனை புறக்கணிக்க வேண்டும். ‘விடுலைப் புலிகளைப் பற்றி அபாண்டமான குற்றச்சாட்டை சொன்ன பால்நியுமனுடன் இருந்த திருமுருகனும் துரோகிதான். அவரையும் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் இந்த விழாவை நடத்த அனுமதிப்போம் என்ற புரட்சியை ஏன் செய்யவில்லை டியர் பாய்ஸ். ஏன் இந்த பாராபட்சம். அவர்கள் செய்தால் தக்காளி சட்னி. நான் செய்தால் ரத்தமோ? அது என்ன ‘மயக்கப் பார்வை’?

எனது அந்த புத்தகமோ, அல்லது நானோ பிரச்சனை இல்லை. ‘அந்த புத்தகம் முழுக்க எங்கட மக்களுக்கானதுதான். ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கிறீர்கள். அதில் பிழை கூற முடியாது’ என்று காசி ஆனந்தனும் சொன்னார். எனில் எது உங்களுக்கு பிழையானது? சீமான்தானே. அவர் கலந்து கொள்வதுதானே.

அப்படி என்றால் உங்கள் பிரிவினைவாத சிக்கலை சீமானோடுதானே வெளியில் வைத்துக்கொள்ள வேண்டும். என்னுடைய நிகழ்ச்சியில் ஏன் கொண்டு வந்தீர்கள்?

இல்லை இல்லை என்றால் இதற்கு முந்தைய காலகட்டத்தில் பால்நியுமனை வைத்து பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக ஏன் போராட வில்லை. அந்த திருமுருகனை வைத்துக்கொண்டு வ. கௌதமன் நடந்திய விழாக்களை ஏன் புறக்க முடியவில்லை.? பதில் தாருங்கள் மை டியர் பாய்ஸ்.

எப்படியோ பெரிய தலைவர்களை எல்லாம் ‘ஏப்ரல் ஃபூல்’ ஆக்கிய உங்களுக்கு ஒரு மகா வணக்கத்தை சொல்லியாக வேண்டும் பாய்ஸ்.

குறிப்பு/இதில் தோழர்கள் திருமுருகனையோ, இயக்குனர் வ. கௌதமனையோ குறைசொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். நடந்ததை சொல்லியிருக்கின்றேன். அவ்வளவுதான். .

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரது படத்தையும்,புலிக் கொடியையும் பிடித்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளும் பச்சைக் கள்ளர்... ஆனால் இங்கே சிலர் ஒரு சில கள்ளருக்காய் குத்தி முறியினம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/22/2016 at 3:26 PM, ரதி said:

தலைவரது படத்தையும்,புலிக் கொடியையும் பிடித்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளும் பச்சைக் கள்ளர்... ஆனால் இங்கே சிலர் ஒரு சில கள்ளருக்காய் குத்தி முறியினம்.

அப்படி மேம்போக்காகவும் சொல்லிவிட முடியாது. தலைவரை அங்கே மறைத்தது ஒரு அரசியல் என்றால் அதே தலைவரை இன்று தமிழ்நாடு முழுவது நிரப்பி விடுவதும் ஒரு அரசியலே.

உங்கள் வாதப்படியே பார்த்தாலும் தலைவர் படத்தை வைக்காத கட்சி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக. இவர்கள் எல்லோரும் நேர்மையாளர்களா?

நிலைமை என்னவென்றால் தமிழ் இளைஞர்களை சாதி மத வேறுபாடு கடந்து ஒருங்கிணைப்பதற்கு ஒரு பொதுக் குறியீடு தேவைப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை தமிழர் வாழ்வு அல்ல .....
அவர்கள் பிரச்சனையே வேறு ......

தமக்கு எதிராக தாமே இருக்கிரோமேன்பது கூட அறியாத ஒரு கூட்டம்.


இங்கு அமெரிக்காவிலும் இப்படி ஒரு கூட்டமிருக்கிறது.
முதலாளி வர்க்கத்தின் தில்லு முள்ளு புரியாமல் ஈடுபட்டு போவது 
 
ப்ரோபங்காண்டா என்பது ஒரு பெரிய சிர்த்தர்தம் 
அமெரிக்க நாடு மிக சிறப்பாக கையான்ட்டு வருவதோடு 
மாற்றவர்களுக்கும் இப்போ பயிற்சி கொடுக்கிறது.

அவர்கள் எந்த  அளவில் வெல்லுகிறார்கள் எனபதற்கு யாழ் களமே சாட்சி ! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.