Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போருக்குப் பின்னரே தமிழரின் கல்வி நிலை வீழ்ச்சி! - மாவை சேனாதிராஜா

Featured Replies

போருக்குப் பின்னர் வடக்கு மாகாணக்கல்வி பாரி­ய­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது 

 

வடக்கு மாகாண கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் வீழ்ச்­சி­ய­டை­யாது காணப்­பட்­டி­ருந்­தது. எனினும் போருக்கு பிந்­திய ஏழாண்­டு­களில் கல்வி வளர்ச்­சி­யா­னது பாரி­ய­ளவில் வீழ்ச்­சியை எதிர்­நோக்­கி­யுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனாதிராஜா தெரி­வித்­துள்ளார்.mavai_965s.jpg

யாழ்ப்­பாணம் இரா­ம­நாதன் மகளிர் கல்­லூ­ரியில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற வலி­காம வலய ஆசி­ரிய மாநாட்டில் பிரதம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­றி­ய­தா­வது,

எமது கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் கூட வீழ்ந்து விட­வில்லை. ஆனால் போருக்கு பிந்­திய ஏழாண்­டு­களில் பாரி­ய­ளவில் கல்வி மட்டம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. எனவே இதற்­கான காரணம் என்­வென இனங்­கா­ணப்­பட்டு அவை நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும். ஏனெனில் யாழ்ப்­பா­ண­மா­னது கல்­வியில் உயர்ந்­தது என்ற பாரம்­ப­ரி­யமும் வர­லாறும் கொண்­டது. ஆகவே அதனை நாம் இழந்து விடக் கூடாது.

தற்­போது பல்­க­லை­க்க­ழகங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­டு­கின்­ற­வர்­களில் 60 வீத­மா­ன­வர்கள் கலைத்­து­றையை சார்ந்­த­வர்­க­ளா­கவே உள்­ளார்கள். இந்­நி­லைமை மாற்­றப்­பட வேண்டும். கூடிய மாண­வர்கள் விஞ்­ஞான துறை, வர்த்­தக துறை­களில் பயி­லு­கின்­ற­வர்­க­ளாக அல்­லது அவற்றை பயி­லக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாற்­றப்­பட வேண்டும். எனவே ஒரு மாணவன் எட்டாம் வகுப்­பிற்கு பின்­ன­ரான அடுத்து மூன்று வரு­டங்கள் அவர் பல்­க­லை­க்க­ழ­கத்தில் என்ன துறை கற்­கப்­போ­கிறார் என்­பதில் ஆயத்­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இன்று அதி­க­ள­வான மாண­வர்கள் கலைத்­துறையைக் கற்று வெளி­யே­றி­யுள்ள நிலை­யிலும் அவர்கள் கற்­ற­தற்கு பொருத்­த­மான வேலைகள் வழங்­கப்­ப­ட­வில்லை. இதே­வேளை தாதியர் துறை­யிலே அதி­க­ள­வான விண்­ணப்­பங்கள் இருக்­கின்ற போதும் அதில் எமது மாண­வர்கள் உள்ளீர்க்­கப்படு­வது குறை­வா­கவே உள்­ளது.

இதே­வேளை நாங்கள் அர­சி­யலில் அடி­மைப்­பட்­ட­வர்­க­ளாக தற்­போது இருப்­ப­தில்லை.. ஆனால் போதை­வஸ்­துக்கும் மது­வுக்கும் அடி­மைப்­பட்­ட­வர்­க­ளாக மாறி­யி­ருக்­கிறோம். எனவே இந்­நி­லைமை மாற்­ற­ம­டைய வேண்டும். தற்­போது தான் சில கைதுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இன்னமும் அவற்றை வியாபாரம் செய்யும் வர்த்தக முதலாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும்  போதைக்கு முற்றுமுழுதாக அடிமைப்பட்டுள்ள மாணவ சமூகத்தை முற்றாக மீட்டெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/6903

  • கருத்துக்கள உறவுகள்
போருக்குப் பின்னரே தமிழரின் கல்வி நிலை வீழ்ச்சி! - மாவை சேனாதிராஜா
[Saturday 2016-05-28 16:00]
எமது கல்வி நிலை போர்க்காலத்தில் கூட வீழ்ச்சியடையவில்லை. ஆனால், போருக்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, இதற்கான காரணம் என்னவென இனங்காணப்பட்டு, அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணம் கல்வியில் உயர்ந்தது என்ற பாரம்பரியமும் வரலாறும் கொண்டது. அதனை நாம் இழந்து விட கூடாது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

எமது கல்வி நிலை போர்க்காலத்தில் கூட வீழ்ச்சியடையவில்லை. ஆனால், போருக்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, இதற்கான காரணம் என்னவென இனங்காணப்பட்டு, அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணம் கல்வியில் உயர்ந்தது என்ற பாரம்பரியமும் வரலாறும் கொண்டது. அதனை நாம் இழந்து விட கூடாது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

  

யாழ். இராமநாதன் மகளிர் கல்லூரியில், நேற்று இடம்பெற்ற, வலிகாமம் வலய ஆசிரிய மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'தற்போது பல்கலைகழங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றவர்களில் 60 சதவீதமானவர்கள் கலைத்துறையை சார்ந்தவர்களாகவே உள்ளனர். இந்நிலைமை மாற்றப்பட வேண்டும். கூடிய மாணவர்கள் விஞ்ஞானம், வர்த்தக துறைகளில் பயிலுகின்றவர்களாக அல்லது அவற்றை பயிலக்கூடியவர்களாக மாற்றப்பட வேண்டும். எனவே, ஒரு மாணவன், எட்டாம் வகுப்புக்குப் பின்னரான அடுத்து மூன்று வருடங்களில், அவன் பல்கலைகழகத்தில் என்ன துறை கற்கப்போகிறான் என்பதை ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்.

இன்று அதிகளவான மாணவர்கள் கலைத்துறையில் கற்று வெளியேறியுள்ள நிலையிலும் அவர்களுக்கு பொருத்தமான வேலைகள் வழங்கப்படவில்லை. இதேவேளை, தாதியர் துறையிலே அதிகளவான விண்ணப்பங்கள் இருக்கின்ற போதும் அதில் எமது மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவது குறைவாகவே உள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பின் அதற்கான தகுதி எம் மாணவர்களுக்கு இல்லையென்கிறார்கள். அதாவது விஞ்ஞானதுறையில் கணிதத்துறையில் பயிலும் மாணவர்கள் அதில் சித்தியடையும் மாணவர்கள் குறைவாக இருப்பதே காரணமாகும்.

தற்போது எமது சமூகமானது போதைவஸ்து பாவனைக்குள் அடிமைப்பட்ட சமூகமாக மாறியுள்ளது. நாங்கள் அரசியலிலும் அடிமைப்பட்டவர்களாக இல்லை. ஆனால், தற்போது போதைவஸ்த்துக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டவர்களாக மாறியிருக்கிறோம். எனவே இந்நிலைமை மாற்றமடைய வேண்டும். தற்போது தான் சில கைதுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இன்னமும் அவற்றை வியாபாரம் செய்யும் வர்த்தக முதலாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் போதைக்கு முற்றுமுழுதாக அடிமைப்பட்டுள்ள மாணவ சமூகத்தையும் சமூகத்தையும் முற்றாக மீட்டெடுக்க வேண்டும்' என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158409&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, வாத்தியார் said:

தற்போது எமது சமூகமானது போதைவஸ்து பாவனைக்குள் அடிமைப்பட்ட சமூகமாக மாறியுள்ளது. நாங்கள் அரசியலிலும் அடிமைப்பட்டவர்களாக இல்லை. ஆனால், தற்போது போதைவஸ்த்துக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டவர்களாக மாறியிருக்கிறோம். எனவே இந்நிலைமை மாற்றமடைய வேண்டும். தற்போது தான் சில கைதுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இன்னமும் அவற்றை வியாபாரம் செய்யும் வர்த்தக முதலாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் போதைக்கு முற்றுமுழுதாக அடிமைப்பட்டுள்ள மாணவ சமூகத்தையும் சமூகத்தையும் முற்றாக மீட்டெடுக்க வேண்டும்' என்றார்.

ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனை. இளம் தமிழ் சமுதாயத்தினரை மந்தைகளாக வைத்திருப்பதையே சுயநல அரசியல்வாதிகள் விரும்புவர்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொன்னாலும் யாழ்ப்பாணத்தானின் கல்வியில் எல்லோருக்கும் ஒரு இதுதான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.